Blog Archive
Wednesday, September 30, 2020
Tuesday, September 29, 2020
திண்ணைப் பேச்சு வீரர்கள்.
Monday, September 28, 2020
பயங்கள் அவசியமா....
Sunday, September 27, 2020
சில சிந்தனைகள்.
SPB 50 World Tour, Detroit - S. P. B. and S. P. B. Charan sing Anbe Anbe
Saturday, September 26, 2020
இந்த நாளைய சங்கீத மேகம் பாலு சார் வாழ்க.
Thursday, September 24, 2020
Wednesday, September 23, 2020
Tuesday, September 22, 2020
வெற்றிக்கு வழி.
இந்த அழகான உலகைச் சுற்றிப் பார்க்க வந்த சுற்றுலாப் பயணிகள்தான் நாம், ஒருநாள் அனைவரும் திரும்பி செல்லத்தான் போகிறோம்,
ஆனால், தேதி மட்டும் ரகசியம்!
இன்று 22.09.2020 உலக ரோஸ் நாள்.
'அஸ்கின் ட்யூமர்' (Askin's Tumour) என்ற அரிதான இரத்த புற்றுநோயால் உயிர்ப்பலியான, கனடா நாட்டின் 12 வயதுப் பெண் குழந்தை மெலிண்டா ரோஸ் நினைவாக, ஒவ்வொரு ஆண்டும் அவர் மறைந்த செப்டம்பர் 22 ஆம் நாள், புற்றுநோயுடன் போராடும் மனித உயிர்களுக்கு,
புற்றுநோயாளிகளுக்கு நம்பிக்கையும், மகிழ்வும்
அளிக்கக் கடைப்பிடிக்கப்படுகிறது.
குழந்தை இன்னும் இரு வாரமே உயிர் பிழைப்பார்
என்ற போதும் அவர் தைரியத்தைக் கைவிடாமல்,
இறுதிவரை போராடினார். அவருக்கு நோய் இருந்து
மருத்துவமனைக்கு சென்றபோதும், அவரைச்
சுற்றியுள்ள மற்ற புற்றுநோயாளிகளுக்குக்
கவிதைகளையும், கடிதங்களையும் அனுப்பினார்.
மிக மிக ஆச்சரியப்படும் வகையில் அவர்களின்
உந்துசக்தியாக இருந்தார். அவரின் நினைவாகவே உலக ரோஸ் நாள்.
மேலும், ரோஜா மலர் என்பது, அன்பு, கருத்தாக்கம்
மற்றும் மென்மை என்பதன் குறியீடாக உள்ளது.
புற்றுநோயாளிகளுக்கு மெலிண்டாவின் கடிதம் மற்றும்
கட்டுரைகள் வாழ்வதற்கான அதீதமான நம்பிக்கையையும்,
உறுதியையும் தந்தன. எனவே, புற்றுநோயுடன்
போராடிக் கொண்டிருக்கும் மக்களுக்கு இந்த நாள் மகிழ்வைத் தரட்டும் என்பதற்காக உலக ரோஸ் தினம், மெலிண்டா ரோஸுக்காக அனுசரிக்கப்படுகிறது.
மோகனாவாகிய நானும் ஒரு புற்றுநோயாளிதான்.
நான் புற்றுநோயிலிருந்து மீண்டவள்.
சரியாக 10 ஆண்டுகளுக்கு முன் 2010, ஆகஸ்ட் 25 ஆம் நாள்
மார்பகப் புற்றுநோய்க்காக அறுவைச் சிகிச்சை செய்துகொண்டேன்.
அதன்பின்னர் கீமோதெரபி எனப்படும் வேதிசிகிச்சை 6 மாதங்களுக்குத்
தரப்பட்டது. கீமோதெரபியால் மறதி ஏற்படும். உடலிலிருந்து
கால்சியம் கரைந்து போகும். அதன் பின்னரும்கூட
இன்று என் உடல் இரும்புபோல உறுதியாகப் புற்றுநோய்க்கு முன்னர்
இருந்தததைவிட பல மடங்கு பலத்துடனும், உடல் ஆரோக்கியத்துடனும்
இருக்கிறது என்றால் யாரும் நம்பமாட்டீர்கள்.
நான் 2 கி.மீ. ஜாக்கிங் செய்கிறேன். தினமும் நடக்கிறேன்.
'தாய்ச்சி' என்ற சீனத் தற்காப்புக் கலையை செய்கிறேன்.
நல்ல நேர்மறை எண்ணங்களுடன் மகிழ்வாக இருக்கிறேன்.
மேலும், இதுவரை 11 புற்றுநோயாளிகளைச் சரியான
நேரத்தில் சரியான மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று,
தகவல் தந்து அங்கு பணிபுரியும் என் மாணவர்கள்
மற்றும் நண்பர்கள் மூலம் காப்பாற்றியும் இருக்கிறேன்.
புற்றுநோய் நண்பர்களுக்கு மனநல ஆலோசனை மற்றும் உதவியும்
செய்கிறேன்.
இதற்கெல்லாம் காரணம் என்ன தெரியுமா?
என் மன உறுதியும், தொடர்ந்த உடற்பயிற்சியும், எடுத்துக்கொள்ளும் மற்றும் எடுத்துக்கொண்ட மருந்துகளும்தான். உலகிலேயே மோசமான நோய் ஒன்று உண்டென்றால் அதுதான் புற்றுநோய். புற்றுநோய் தொற்று நோயல்ல.
புற்றுநோய் என்றால் என்ன? யாருக்காவது அது வந்த அனுபவம் இருக்கிறதா? அதைப் பற்றித் தெரியுமா? என்ன இப்படி ஒரு கேள்வி கேட்டால், துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று எல்லோரும் ஓடிவிடுவீர்கள். அவ்வளவு பயம் புற்றுநோய் பற்றி எண்ணக்கூட.
ஒரு சின்ன கேள்வி? புற்றுநோய் உங்களிடத்தில் வருவது என்று அது முடிவு செய்துவிட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்? அது என்ன உங்களைக் கேட்டுக் கொண்டா உங்களிடம் குடியிருக்க, அனுமதி பெற்ற பின்னர்தான் வர வேண்டுமா? அப்படி ஏதும் சட்டதிட்டம் உண்டா? அப்படி எல்லாம் இல்லை அதது இயல்பாய் நடக்கும். இந்த உடம்பில், புற்றுநோய் ஒரு நோய் என்றால் அது வராமல் இருக்க, அதற்கான வைரஸ்/பாக்டீரியா அண்டாமல் இருக்க ஏற்பாடு செய்யலாம். தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். தடுப்பூசிகள் எடுத்துக்கொள்ளலாம். ஆனால்...
ஆனால், புற்றுநோய் வராதிருக்க நாம் என்ன செய்ய வேண்டும். யாராவது தெரிந்தால் சொல்லுங்களேன். நம் வீட்டைச் சுற்றி ஒரு பெரியகோட்டை தடுப்புச் சுவர் எழுப்பி விடலாமா? புற்றுநோய் நம்மைத் தாக்காமல் இருக்க? அது உள்ளே நுழையாமல் இருக்க, ஒரு பெரிய அகழி தோண்டலாமா? எதனைக் கொண்டும் புற்று நோயைத் தடுத்து நிறுத்த முடியாது என்பதை நாம் தெளிவாக உணர வேண்டும். அது சரி, கடவுளை நம்பிக்கொண்டிருக்கும் மக்களாவது, புற்றுநோய்த் தாக்கத்திலிருந்து தப்பிக்கிறார்களா? மீட்கப் படுகிறார்களா? என்றால் அதுவும் இல்லை.
நீ சாமி கும்பிட்டாலும் சரி, கும்பிடாட்டியும் சரி, நீ பணக்காரனாக இருந்தாலும் சரி, ஓட்டாண்டியா இருந்தாலும் சரி, நீ படிச்சவனா இருந்தாலும் சரி, படிக்காட்டியும் சரி, எனக்கு எதுவுமே கவலை இல்லப்பா, நான் பாட்டுக்கு எனக்குப் புடிச்சா வருவேன், முடிஞ்சா நீ என்ன விரட்டிப் பாரு என்று நம்மிடம் சவால் விடுகிறது புற்றுநோய்.
சவாலைச் சந்திப்போமா, முழுத் துணிவுடன், தைரியத்துடன், பின் மருத்துவர் மற்றும் மருந்துகளின் உதவியுடன், அப்புறம்தான், அப்பா அம்மா, அண்ணன் தம்பி, அக்கா தங்கை, சுற்றத்தினர் வருகிறார்கள் துணைக்கு/காப்பாற்ற.. என்றும் உங்களின் எந்த நோயாக இருந்தாலும் முதல் மருந்து/சிகிச்சை என்பது அவரவரின் துணிவுதான்; நெஞ்சுரம்தான்; தன்னம்பிக்கைதான்.. அதன் பிறகுதான் மற்றவை எல்லாம். இதனை முதலில் நன்கு தெரிந்துகொள்ளுங்கள்.
புற்றுநோய் வந்துவிட்டால் என்ற எண்ணம்கூட நினைக்கவே பயமாக இருக்கிறது. வாய் அதை உச்சரிக்கக்கூட அஞ்சுகிறது. இதுதான் நிதர்சனம். எந்த நோய் வந்தாலும் மனிதர்கள் சொல்வார்கள். சர்க்கரை / நீரிழிவு வியாதி, இதய நோய் வந்தால் பெருமையாகக்கூட மக்கள் சொல்வார்கள். ஆனால், புற்றுநோய் வந்தால் அதை யாரிடமும் சொல்லவே மாட்டார்கள். கூடியவரை ரகசியமாகவே வைத்திருப்பார்கள். அதனை வெளியே சொல்வதை அவமானமாகவே எண்ணுகின்றனர். அதுமட்டுமல்ல புற்றுநோய் வருவது என்பது முன்வினைப் பயன். கடவுளின் சாபம் என்றெல்லாம் எண்ணுகிறார்கள். அப்படி ஏதும் இல்லை. இதுவும் ஒரு வகை நோய்தான். ஆனால், இந்நோய் மரபணுவையும் சிதைத்துவிடுகிறது. புற்றுநோய் என்பது பல நோய்களின் கூட்டு என்றுகூட சொல்லலாம்.
புற்றுநோய்.. ஒரு நோயே அல்ல.. வளர்ச்சி நிலை!
புற்றுநோய் என்பது ஒரு நோயே அல்ல. அது செல்களின் அதீத வளர்ச்சி. பொதுவாக அனைத்து உயிரிகளின் உடலும், பல ஆயிரக்கணக்கான செல்களால் ஆனவை. நம் உடலில் சுமாராக 10 டிரில்லியன் செல்கள் உள்ளன. ஒன்றின் பின்னால் 12 சுழியன்கள்/பூஜ்யங்கள் போட்டால் அது ஒரு டிரில்லியன். ஆச்சரியம்தான். அது போகட்டும். உடலில் எத்தனை வகை செல்கள் உள்ளன, நமது உடம்பில் சுமார் 200 வகை செல்கள் உள்ளன.
Baby making parotta - simple steps
Monday, September 21, 2020
2001 ஆம் பதிவு நல்ல செய்திகள் சில...
2002, இனிப்பான நாட்டு சர்க்கரை தயார்.
Sunday, September 20, 2020
இனிக்கும் சர்க்கரை.ஏன் எப்படி?
Saturday, September 19, 2020
சீர் மிகும் பாடல்கள் சில
Friday, September 18, 2020
வண்ணக்கிளி படமும் பாடலும்
Thursday, September 17, 2020
கதவுகள் சொல்லும் கதைகள் 2
2008 |
பழைய Gate
வல்லிசிம்ஹன்
எங்கள் வீட்டு 56" மின் விசிறி |
பழைய கூடம் 2007புதிய கதவும், நிலைப் படியும் மார்கழி காலை |
புதிய அறை.
Wednesday, September 16, 2020
நீயே உனக்கு என்றும் நிகரானவன்.
Tuesday, September 15, 2020
பண்ணும் பாடலும் கலந்த பழைய இசை
Monday, September 14, 2020
கதவின் பின்....1
Sunday, September 13, 2020
வேட்டியால் நடந்த அவமானம் - VKT Balan Original Viral Interview | Part 2
மிகப் பிடித்த மனிதர். பொதிகையில் இவரைப்
பார்த்து ரசித்தவர். அவரை என் பதிவில்
பதிவதை கௌரவமாகக் கருதுகிறேன்.
Friday, September 11, 2020
Wednesday, September 09, 2020
திருமதி சாந்தி ரங்கநாதன் ,மதுப் பழக்கத்திலிருந்து விடுதலை வாங்கித் தருபவர்
Tuesday, September 08, 2020
நடிகை திருமதி.பானுமதியின் சில பாடல்கள்.
வல்லிசிம்ஹன்இனிமை, நடிப்பு, கண்டிப்பு எல்லாம் கொடுக்கவல்ல
Monday, September 07, 2020
Sunday, September 06, 2020
எம்.எல் வி அம்மாவின் தாய் உள்ளம் பாடல்கள்
ஓமப் பொட்டணம்
நன்றி தினமணி.
புதுக்கோட்டை: கரோனா தீநுண்மியின் பாதிப்பால் இழந்த வாசனை முகரும் திறனை மீட்டெடுக்கும் அற்புத மருந்தாக ஓமப் பொட்டணத்தை சித்த மருத்துவா்கள் வழங்கி வருகின்றனா்.
கரோனா தாக்குதலில் குறிப்பிடத்தக்க முக்கியமான அறிகுறி மூக்கின் முகரும் திறனும்ம், நாக்கின் சுவை அறியும் திறனும் மட்டுப்படுதல். கரோனா தாக்குதலுக்குள்ளான 80 சதவிகிதம் போ் காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட எவ்வித அறிகுறியும் இல்லாதோா் என்றாலும், பெரும்பாலானோருக்கு வாசனை அறியும் முகரும் திறன் மட்டுப்பட்டிருக்கிறது.
சிகிச்சைக்குப் பிறகு கரோனா தொற்று இல்லையென மருத்துவப் பரிசோதனை அறிக்கை வந்து வீடு திரும்பிய பலருக்கும் மூக்கின் முகரும் திறன் மீளவில்லை என்ற கவலை பலரிடமும் பரவலாகக் காணப்படுகிறது.
கரோனாவுக்கான சித்த மருத்துவச் சிகிச்சை மையங்களில் இந்தத் திறனை மீட்டெடுப்பதற்காக ஓமப் பொட்டணம் வழங்கி அதை அடிக்கடி முகா்ந்து வாசனைப் பிடிக்கச் சொல்கிறாா்கள். தொடா்ந்து 5 நாள்கள் இவ்வாறு முகா்ந்து ஓமப் பொட்டணத்தின் வாசனை பிடித்தவா்களுக்கு மூக்கின் முகரும் திறன் மீட்டெடுக்கப்படுகிறது.
புதுக்கோட்டை அரசு மகளிா் கல்லூரி வளாகத்தில் செயல்படும் கரோனா தொற்றாளா்களுக்கான சித்த மருத்துவச் சிகிச்சை மையத்தில் மாவட்ட சித்த மருத்துவ அலுவலா் டாக்டா் உம்மல் ஜதிஜா, பொறுப்பு அலுவலா் மாமுண்டி தலைமைலான குழுவினா் ஓமப் பொட்டணத்தை தொடக்கம் முதலே வழங்கி வருகின்றனா்.
மூத்த சித்த மருத்துவ அலுவலா் சுந்தரேஸ்வரி தனது சொந்தப் பொறுப்பில் இந்தப் பொட்டணத்தை தயாரித்து வழங்கி வருகிறாா்.
கடந்த ஆக. 7ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த மையத்தில் வெள்ளிக்கிழமை வரை 261 கரோனா தொற்றாளா்கள் அனுமதிக்கப்பட்டு 216 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இவா்களில் பெரும்பாலானோருக்கு வாசனை முகரும் திறனை ஓமப்பொட்டணத்தை முகரச் செய்து மீட்டெடுத்துள்ளனா்.
இதுகுறித்து தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்ட தொற்றாளா் கீதா பழனியப்பன் கூறியது:
வங்கியில் பணிபுரிந்து வரும் எனக்கு கரோனா ஏற்பட்டு விருப்பத்தின்பேரில் சித்த மருத்துவச் சிகிச்சை மையத்தில் சோ்ந்தேன். வரும்போதே எனக்கு முகரும் திறன் இல்லை. இங்கு வழங்கப்பட்ட ஓமப்பொட்டணத்தைத் தொடா்ந்து பயன்படுத்தியதால் வீடு திரும்பும் முன்பே முகரும் திறன் மீண்டுள்ளது என்றாா்.
ஓமப் பொட்டணம் குறித்து சித்த மருத்துவா் சுயமரியாதை கூறியது:
சித்த மருத்துவத்திலுள்ள 32 புற மருந்துகளில் ஒன்றுதான் ஓமப் பொட்டணம். அரை கிலோ ஓமத்தை, ஒரு கவுளி (100) வெற்றிலையை அரைத்துப் பிழிந்த சாற்றில் ஒரு நாள் முழுவதும் ஊற வைக்க வேண்டும். பிறகு, நிழலில் காய வைத்து 50 கிராம் கிராம்பு, 25 கிராம் பச்சைக் கற்பூரம் சோ்த்து ஓமத்தை அரைக்க வேண்டும். இந்தப் பொடியை 5 கிராம் அளவில் துணியில் முடிந்து வைத்துக் கொண்டால் ஓமப் பொட்டணம் தயாா்.
ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை இந்தப் பொட்டணத்தை மூக்கில் வைத்து முகா்ந்தால் மிகச்சில நாள்களில் முகரும் திறன் மீட்கப்படும். சுவாசப் பாதையிலுள்ள கோளாறுகள், அடைப்புகள் சீரடைவதுடன் ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவும் சீரடையும் என்பது இந்தப் பொட்டணத்தின் சிறப்பு என்றாா் சுயமரியாதை.
மாநிலத்தின் பல இடங்களிலும் உள்ள சித்த மருத்துவச் சிகிச்சை மையங்களிலும் இந்த முறை செயல்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Saturday, September 05, 2020
வாகன யோகம்.
வல்லிசிம்ஹன் Norton Bikeசிங்கத்தின் உபயோகத்தில் கொஞ்ச நாட்கள் இருந்தது.
Friday, September 04, 2020
வில்லன் முதல் நகைச்சுவை வரை T S Balaiah பயணம் | #Balaiah | #TSBalaiah | ...
நம் பாலையா.என்றும் வாழ்க அவர் நாமம்.தூக்குத் தூக்கி ஸேட் துக்காராம் விட்டுப் போச்சே.
venkatesh bhat makes keerai vadai | tasty snacks | keerai vadai recipe i...
விருப்பம். குடும்பத்தில் அனைவரும் ரசித்து ருசிப்பது.
Thursday, September 03, 2020
Wednesday, September 02, 2020
Tuesday, September 01, 2020
நாடியை நாடி....4
நாடியைத் தேடி சுவடி கண்டு.....3
அவர்கள் படித்தார்கள் என்று சொல்வதை விட இசையுடன்
பாடினார்கள் என்றே சொல்ல வேண்டும்.
எதிரே அகஸ்திய மாமுனியின் பெரிய படம். சிவ சக்தி ,கணபதி முருகன் என்று சேர்த்த
அழகான ஓவியம்.
கூடவே பெருமாள் தாயார்,கண்ணன் என்று ஒரு சுவர் முழுவதும்
தெய்வங்கள் ஆக்ரமித்து இருந்தார்கள்.
இவரது சுவடியின் சாரம்.
700 ஆண்டுகளுக்கு முன் கலிங்கத்து நாட்டில் இவர் அந்தணர் குடும்பத்தில்
பிறந்து மிகக் கஷ்டப் பட்டு முன்னேறி அரசாங்கத்தில்
பெரிய வேலையில் அமர்ந்து
சுகமாக இருந்ததாகவும்.
தன் பெற்றோரை அலட்சியப் படுத்தியதாலும்,
பிறகு திருந்தி அவர்களை நல்ல முறையில் கடையேற்றிதானகவும்
சொல்லி,
அந்தச் சில வருடப் பிழையே காரணமாக
இப்போது சில தடைகள் ஏற்படுவதாகவும்,
சில கோவில்கள் சென்று வந்தால்,
அங்கு தீபங்கள் ஏற்றி வழிபட்டால் நிலைமை சீராகும் என்றும் படித்தார்கள்.
இவருக்கு என்னவென்று தெரியாத கோபம்,சங்கடம்.
ஓகே.மேல பார்க்கலாம் என்றார்.
அடுத்தது என் சுவடி.
பயமாக இருந்தது. அவர் படிக்கத் தொடங்கியதும்
சரி போ எல்லாம் அனுமானம் தானே என்று நினைத்தேன்.
அவர், நான் 500 ஆண்டுகளுக்கு முன் ஏதோ ஒரு வியாபாரக் குடும்பத்தில்
பிறந்து ,தனவந்தருக்கு வாழ்க்கைப் பட்டு,
கணவனை அவரது கடைசி காலத்தில்
சரியாகக் கவனிக்காமல், இருந்துவிட்டுப்
பிறகு அவருக்கு மருந்துகள் கொடுத்து அவரைத் தேற்றியதால்
இந்தப் பிறவியில் நல்ல பிறப்பை அடைந்திருப்பதாகவும்,
மக்களால் நல்வாழ்வு தொடரும் என்றும்,
ஏழு வாரங்கள் சனி பகவானுக்கு எள்ளு தீபம் ஏற்றி
ஏழு ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும் என்றும் சொல்லி
முடித்தார். பரிகார சுவடிகள் பற்றி அடுத்த பதிவில்
சொல்கிறேன்.
இவரது ரியாக்ஷன் தான் சிரிப்பு வந்தது.
என்னாயா போன ஜன்மத்துல நம்மளைக்
கவனிக்கலியா நீ. அதுதான் இப்போ
நன்றாகக் கவனிக்கிறியா என்று கலாய்த்தார்.
எனக்குப் போன ஜன்மத்தில் கணவரை அலட்சியம் செய்தேன் என்பதே
அதிர்ச்சி!!!! மீண்டும் பார்க்கலாம்.
உலகில் அனைவரும் நோய் நொடி இல்லாமல்
சுகமாக இருக்க அன்னை காமாட்சி அருள்வாள்.