


நிறைய விஷயங்கள் கண்ணில் பட்டது.
நல்லவங்க பிறந்திருக்காங்க.
இந்த வருடம் இன்னிக்கு மஹாலய அமாவாசை. நவராத்திரிக்கு ஏற்பாடு செய்கிற நாள்.
சென்றவர்களை நினைத்து வணங்கும் நாள்.
லதா மங்கேஷ்கர் பிறந்த நாள்.
இன்னும் கூகிளில் தேடினால் ஏகப்பட்ட பிரபலங்கள்,நடிக நடிகையர்
பிறந்திருக்கிறார்கள்.
அந்தக் கால கனவுக்கன்னி ப்ரிஜிட் பார்டொ பிறந்து மயக்கி இருக்காங்க.
தி.ரா.ச சார் 100ஆவது பதிவு போட்டு இருக்கிறார்.(கௌசிகம்)
இயற்கை, தமிழ்,சினிமா,சிவாஜி கணேசன்,மகள்,பெற்றோர்,அக்கா,அண்ணா,மனைவினு எல்லோரையும்,எல்லாவற்றையும் நேசித்த,
வாழ்க்கையை ரசித்த என் தம்பியும் பிறந்தான்.
இன்று அவனுக்கு 56 வயது பூர்த்தியாகிறது.
நீ கொடுத்த,காட்டிய அன்புக்கும், செய்த உதவிகளுக்கும் நன்றி தம்பி.
இன்னும் ஒரு உதவி செய்ய நீ மறந்துவிட்டாய்.
இன்னும் கொஞ்ச வருடங்கள் இருந்திருக்கலாம்.
வாழ்த்துக்களுடன்,
உன் அன்பு அக்கா.
