Showing posts with label Travel South. Show all posts
Showing posts with label Travel South. Show all posts

Saturday, September 18, 2021

நெல்லைக்குப் போகலாமா. ஒரு பயணம்!

முன்பு சென்ற இடங்களெல்லாம் மனதில் 
நிழலாகச் செல்ல,

அவசரப் பயணமாக நெல்லை சென்று வந்தது ஒரு 
கனவு போலத் தோன்றுகிறது.
பல நல்லவர்களின் விளை நிலமாக
இருக்கும் நெல்லைத் தாமிரபரணி தீரம் 
1995இல்  இருந்து  திட்டமிட்டு 2019இல் 
நிறைவேறியது.

திருக்குறுங்குடி, கீழ நத்தம், திருக்குருகூர் -ஆழ்வார் திரு நகரி
இவையே வரித்திட்ட ஸ்தலங்கள். 

தந்தை ஊர், தாயின் ஊர், குரு,ஆச்சார்யனின் 
ஊர் என்று திட்டம் இட்ட மனம்.

சென்னையிலிருந்து மதுரைக்கு விமானம். பழங்கா நத்தத்தில்
தங்கல்.
அடுத்த நாள் வாடகைக்காரில் திரு நெல்வேலிக்குப் 
பயணம். பழகிய இடங்கள் ஒன்றுமே கண்ணில் படவில்லை.
திருப்பரங்குன்றம் கோயிலும் ,மலையும் ,கப்பலூரும்
கண்ணில் பட்டன. திருமங்கலத்தைதாண்டி விரைந்த வண்டியின்

ஓட்டுனருக்கு சகல அரசியலும் தெரிந்திருந்தது.
வேண்டுமோ வேண்டாமோ அத்தனையையும்
காதில் திணித்தார்.

சிங்கமாயிருந்தால் ஒரு அதட்டலில் நிலமை மாறி இருக்கும். 
மகன்கள்  இருவரும் மரியாதை நிமித்தம்
பொறுத்துக் கொண்டு வந்தார்கள்:)

மனம் 71 வருட வாழ்க்கையின் ஒவ்வொரு 
சம்பவங்களையும் அசை போட்டுக் கொண்டு 
முன்னோர்கள் இருந்த இடங்களையும், கோவில்தெய்வங்களையும் மனதுருக வேண்டிக்கொண்டு 
வந்தோம்.
இதோ இன்னும் ஒரு புரட்டாசி ,ஐப்பசி வந்துவிட்டது. 



Nammazhvaar

அனைவரும் நலமுடன் இருக்க இறைவன் துணை.




வல்லிசிம்ஹன்

கற்பனையிலாவது ரயிலில் போகலாமே என்ற ஆசைதான். :)

ஷிர்டி பாபா மகிமை

வல்லிசிம்ஹன் எல்லோரும் வளமாக வாழ வேண்டும். கோவையில் சில காலம் இருந்தோம். 1970 .  மூன்றாவதாகப் பையன் உருவாகிக் கொண்டிருந்தான். திடீரென்று உடம...