எப்பொழுதும் சொல்வதுதான்.
இந்த வருடம் வெய்யில் கொஞ்சம் கூடுதல் என்னும் எண்ணமும் அலுப்பும்.
வயதும் கூடும் நேரம்.சகிப்புத் தன்மை குறையும் நேரம்.
சென்னையில் இந்த வருடம் மதிய நேரம்
மனிதர்கள் நடமாட்டம் குறைந்து தான் இருக்கிறது.
பஸ்கள் கூடக் குறைவாகவே போகின்றன.
தினம் தினம் வருகிறேன் வருகிறேன் என்று உறுமும் மேகங்கள் கூடக் கலைந்து போகின்றன.எப்பொழுதும் போலக் கூடுவாஞ்சேரி வரை வந்துவிட்டு த் தெற்கே திரும்பி விடுகின்றன.
ஒரு பத்துவருடங்கள் முன் கூட வெய்யிலின் தாக்கம் 3 மணி வாக்கில்
குறைந்துவிடும்.கடற்காற்று மென்மையாக வந்துவிடும்.
இப்பொழுதோ மாலை ஆறு மணிக்குக் கூட வெய்யிலின் சூடு தணிய மாட்டேன் என்கிறது. வீட்டுச் சுவர்கள் கூடச் சுடுகிறதோ என்று தோன்றுகிறது.
எங்களுக்காவது பரவாயில்லை காலை எட்டு மணி யிலிருந்து பத்து மணி வரைதான் மின்வெட்டு. நடுநடுவிலும் சொல்லாட மின்வெட்டும் வந்துவிடுகிறது. சுற்றிக் கட்டப்படும் வீடுகளுக்கு எப்படித்தான்
தொடர்ந்து மின்சாரம் கிடைக்கிறதோ.
இடைவிடாத சத்தம்.இந்த வெய்யிலில் அவர்கள் வேலை செய்வதைப் பார்த்தால் கஷ்டமாகத்தான் இருக்கிறது.
அவர்களின் உற்சாகத்துக்கும் குறைவில்லை.
கைபேசியில் இன்னா மச்சான் ' விசாரிப்பும்.
ட்ரான்ஸிச்டரில் 'என் ஃப்ரண்டைப் போல யாரு மச்சான்'
பாட்டும்,அவர்களுக்காகவே ,சாமர்த்தியமாகக் கடை போட்டுவிட்ட டீக்கடைக் காரரும், இளநீர் விற்கும் அம்மாவும்
வெய்யிலை லட்சியம் செய்யவில்லை.!
இதோ வாராந்திர சந்தையாக டி ஷர்ட்,அரை நிஜார்கள் என்று ஒருவர் கடை பரத்திவிட்டார். இனி ஒன்பது மணிவரை கலகலப்புக்குக் குறைவிருக்காது.
ஒருவேளை இவர்கள் பிழைக்கட்டும் என்றுதான் வருணபகவான் தள்ளி நிற்கிறாரோ:)
ஓடிப் போய்விடுகிறது.
