Showing posts with label மாசி மாசமும் வடாம் பிழிதலும். Show all posts
Showing posts with label மாசி மாசமும் வடாம் பிழிதலும். Show all posts

Wednesday, February 28, 2018

மாசி மாசமும் வடாம் பிழிதலும் 3

Add caption

Add caption
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.
 சீனுவும் பையனும் வரும் சத்தம் கேட்டதும் விரைந்து வந்தார்கள், ஜயம்மாவும் நாத்தனாரும்.
கீது,  நீ கனமானதைத் தூக்காதே என்றபடி,
பொருட்களை  இறக்கினார்கள் சீனுவும், ஜயம்மாவும்.
கணக்கெடுத்துக் கொண்டே வந்த , ஜயம்மா, எலுமிச்சம்பழம் எங்கே
என்றார்.

ஆட்டோவில் எட்டிப் பார்த்தால் அங்கேயும் இல்லை.
ஆட்டோ ட்ரைவர் வேணு, அம்மா, சாமி தேவதி ,தியாகு கிட்ட பேரம் பேசும் போது மூட்டையோடு வச்சிட்டார் போல. இதோ நான் போய் எடுத்து வரேன் என்று பறந்தான்.
 அவனோட என்ன பேரம். நியாயமாத்தானே கொடுப்பான் என்று அலுத்தபடி உள்ளே நுழைந்தாள்.

500 வாங்கினேன் மா. நல்ல ரசமாக இருந்தது. அவன் ஏட்ஹோ சொல்ல நான் ஏதோ
சொல்ல வெய்யிலில் ,நின்னு கோபம் வந்துவிட்டது என்ற கணவனை உட்கார வைத்து
மோரில் உப்பு சேர்த்துக் கொடுத்தாள்.
கிடைத்த வரை போதும்னா. எல்லாரும் நம் சினேகிதர்கள்,பழக்க மானவர்கள்.
இன்னிக்கு குழம்பு வடம் ஊறப் போட்டு ஆரம்பிக்கறேன்.
ஒரு ஒரு கிலோவாத் தேத்திடலாம். நீங்க சித்த நேரம் படுத்துக் கோங்கோ
என்றபடி,
பொருட்களைப் பிறித்து பெரிய பெரிய டப்பாக்களில் கொட்டினாள்.

பத்து கிலோ பொன்னி புழுங்கலரிசி,
இலைவடாத்துக்கு தனியா பச்சரிசி,
உளுந்து 2 கிலோ,
பச்சை மிளகாய்  ஒரு கிலோ,
பெருங்காயம் ரெண்டு பெரிய டப்பா,

ஜவ்வரிசி 5 கிலோ.

போதுமா. போதலைன்னால் திருப்பி வாங்கிக்கலாம் போ என்று தனக்குள்ளயே
முணுமுணுத்தபடி ,
பிள்ளையாருக்கு மஞ்சள் துணியில் முடித்துவைத்து விட்டு
வேலையைத் தொடங்கினார்கள்.
மணி பனிரண்டாகி இருந்தது.
வாசலில் ஸ்ரீவித்யா பள்ளி முடிந்து குழந்தைகள் செல்ல ஆரம்பித்தார்கள்.
 ஆயாவோடு நடந்து செல்லும் குட்டி ஹரியைப் பார்த்ததும் ,அவன் பாட்டி கேட்டிருந்த
கைமுறுக்கும்,தட்டையும் நினைவுக்கு வந்தது.

ஒரு சௌகர்யம். இந்த வேலையை அவர்கள் வீட்டிலியே சென்று செய்துவிடலாம்.இங்கே அடுப்பு
போடவேண்டாம்.
வாசலுக்கு விரைந்து முனிம்மாக் கிழவியிடம், நாளைக்கு உங்க வீட்டு வரேன்னு பெரியம்மா கிட்ட சொல்லு.
தேவையான வெண்ணெய் எல்லாம் இருந்தால் மூன்று மணி நேரம் எனக்குப்
போதும் என்று இரைந்து சொல்லிவிட்டு உள்ளே வந்தாள்.

ஏன் இதை இழுத்துவிட்டுக்கறே. இருக்கிற வேலை போறாதா என்று
கடிந்து கொண்டார் சீனு.
எவ்வளவு நாள் பழக்கம் அண்ணா. சட்டுனு விடமுடியாது.
வருஷா வருஷம் சுமங்கலிப் பிரார்த்தனைக்குப் புடவை, உங்களுக்கு வேஷ்டி எல்லாம் கொடுத்து, தாராளமாக நடத்துகிறவர் அந்த மாமி.
நாமும் கௌரவமாக இருந்துக்கணும் என்ற படி  ஜவ்வரிசியைக் கழுவ ஆரம்பித்தாள்.
முத்துமுத்தா எவ்வளவு பெரிசா இருக்கு என்று சிலாகித்தபடி. எவர்சில்வர்
அடுக்கில் ஊற வைத்தாள்.
அடுத்தது, எல்லோருக்கும் சாப்பாடு.
கீது அழகாக பெரிய பாத்திரத்தில் பிசைந்து வைத்திருந்த வத்தல் குழம்பு சாதமும்,
சீனு வாங்கி வந்திருந்த கீரை வடையும் எல்லார் வயிற்றுலும் கம்மென்று இறங்கவும், வாசல்ல் மாமி என்ற குரல் கேட்கவும் சரியாக இருந்தது.
வெய்யில்ல வருவேளோடி பொண்ணுகள என்று வரவேற்றார் சீனு.
 ஜயா, இவர்கள் தான் செங்கமலமும், வேதாவும் என்றார்.
பளிச்சென்று இருந்த அந்தக் குழந்தைகளைப் பார்த்தவுடன் பிடித்துவிட்டது
ஜயாம்மாவுக்கு.  தொடரும்.
Add caption

Thursday, February 22, 2018

மாசி மாசமும் வடாம் பிழிதலும் ...2

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
uz   C.I.T.Colony   F.C.I Old   Mylapore   V.M.Street  

Loacl Bus Routes Travel from Kennedy 2nd Street, Kattukoil Garden, Mylapore

12         ( T.Nagar - V.House )   
12B         ( Vadapalani B.S - Fore Shore Estate )   
12BET         ( Fore Shore Estate - Koymabedu Market )   
12BNS         ( Vadapalani B.S - Fore Shore Estate )   
12G         ( Anna Square - Kalaignar Nagar )   
More.. 
பழைய சென்னை லஸ் கார்னர்.
மைலாப்பூரில்  கென்னடி திரு இரு பாகம் கொண்டது. ஒரு வழி ஆலிவர் ரோடு மாரு முனை லாஸ் சர்ச் ரோடு.
 ஆலிவர் ரோடு ஆரம்பத்தில் முன்னாள் ஆந்திர நடிகர் இருந்து மறைந்தார். அவர்  வீடு  இருந்த இடத்தில்  ஒரு பாலர் பள்ளி  முளைத்தது. அவர் கார்கள் நின்ற இடம்  ஒரு ஷெட் போல மாற்றி அமைக்கப் பட்டு வாடகைக்கு விடப்பட்டது. தண்ணீர் வசதி. தகரக் கூரை , போது  மான வெளிச்சம்

ஜெயாம்மாவும், சீனுவும்  இங்கேகுடிபெயர்ந்தது 1980 வாக்கில். அதுவரை மந்தை வெளியில் தான் இருந்தார்கள்.
அங்கே இந்த வியாபாரத்துக்குப் போட்டி அதிகரிக்கவே
இந்த இடத்தைப் பிடித்தார்கள். எங்களுக்கெல்லாம் வசதியாகப் போயிற்று.


முறுக்கு, தட்டை  மிக்ஸர்,   என்று அவரவர் கேட்கும் அளவு செய்து கொண்டு கொடுப்பார் சீனு.  வற்றல் வடாம் செய்வதை வழக்கமாகக் கொண்ட பல குடும்பங்கள் இவர்களை அணுகவே அதையும் செய்ய ஆரம்பித்தார் ஜெயாம்மா/

அதிலும் அவர் செய்யும் பச்சை இலை வாடா த்துக்கு ஏகப்பட்ட டிமாண்ட். நானும் சிங்கமும் தினசரி அங்கே போய்க் காத்திருந்து 200,300 என்று வாங்கி வருவோம்..
அந்த ஷெட்டில  தண்ணீர்  வசதி இருந்தது.  காய வைக்க ஒரு முற்றம் இருந்தது..
துணைக்கு உதவியாகச் சீனுவின்  அக்காவும் அவர் மகனும் வந்து சேர்ந்தனர்.
அக்காவின் கணவர் அகால  மரணம் அடைந்ததால்  புகலிடம் தேடி இங்கே வந்தார். தம்பதிகளைப் போலவே இனிமையான குணம் கொண்டவர்கள்.உழைப்பாளிகளும் கூட.

மூலையில் சுருட்டி வைக்கப் பட்ட பாய்களே படுக்கை அறை
குளிப்பதெல்லாம் தட்டி மறைவில்.
 தெரு முனையில் பால்காரக் குடும்பம் ஒன்று இருந்தது. அதைத்தாண்டி மணியில் சிகரெட்,தினசரி,என்று பிரபலமான டீக்கடை பெஞ்சு அங்கு வரும் விவேகானந்தா மாணவர்களும்ஜயாம்மாவின் குழந்தைகள்.


 ஓகே. நாம் மீண்டும் மாசி மாதத்துக்கு வருவோம்.

சென்னை கேசவ நாடார் கடைக்கு,  ஜெயாம்மாவின் ஒரு முழ நீள  லிஸ்ட்
தயாரானது

பொன்னி அரிசி, ஜவ்வரிசி, பெருங்காயம், சுக்கு,

உளுத்தம்பருப்பு,
காய்கறி  கடையில் வாங்க   எலுமிச்சம் பழம், பச்சை மிளகாய்,  நல்ல தயிர்.
இந்திரா ஸ்டோரில் வாங்கிய பெரிய அண்டா, அப்பக்கரண்டிகல்
இன்ன  பிற பொருட்களை ஆட்டோவில்
ஏறிக்  கொண்டு  கூட்டத்தில் நீந்தியபடி  வந்தது சேர்ந்தார்கள்ன்மலர்களும்,பழங்களும் அதில் அடக்கம்.
தெய்வ வழிபாடு செய்த பிறகே உழைப்பு ஆரம்பம்.
,

Saturday, February 17, 2018

மாசி மாசமும் வடாம் பிழிதலும்

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
 மாசியும் பிறந்துவிட்டது. வெய்யிலும் ஆரம்பித்துவிட்டது.
இன்னும் பத்து நாட்கள் போனால்
காற்று அடிக்க ஆரம்பித்துவிடும்.
இலைகள் எல்லாம் வீட்டுக் கூரையில் தஞ்சம் புகும்.
அதற்கு முன்னால் வடாம், வத்தல் எல்லாம் போட்டு
முடிக்க வேண்டும்.
சாலைப் புழுதி படாமல் வீட்டின் நெடுஞ்சுவர்களை ஒட்டிக் கயிற்றுக் கட்டில்களிப்
 போட்டு,
வேஷ்டித் துண்டுகளை விரித்து நாலு வகை வடகங்களும்
பிழிந்து எடுக்க வேண்டும்.
ஜயாம்மா,கணவரின் மெலிந்த தேகத்தைப் பார்த்து
இவரை வேலை வாங்குவது சரியா என்று யோசித்தாள்.

இருபது வருட வாடிக்கையாளர்களைச் சமாளிக்க வேண்டும்.

தரையில் இதமான சில்லிப்பில் படுத்திருந்த சீனு ,மனைவியைத் திரும்பிப் பார்த்தார்.
என்னம்மா லிஸ்ட் போட வேண்டாமா.
எல்லா பொருட்கள் விலையும் ஏறிக் கிடக்கு.
ரெகுலராக வாங்குபவர்களிடம், விலை உயர்வைப் பற்றிச் சொல்ல வேணும்.

இந்த மாதம் முழுவதும் உழைத்தால் ,பிறகு கொஞ்சம்
ஓய்வெடுக்கலாம்.
 லஸ் காலனிக்குள்ளேயே  ஆறு வீட்டில் தேவையான லிஸ்ட்
கொடுத்து விட்டார்கள்.
டிசில்வா ரோடு, ஷாந்தி டவர்ஸ், ஆழ்வார்பேட்டை அபார்ட்மெண்ட்
 எல்லாம் போய்க் கேட்கணும்.
 வாரன் ரோடில் பத்மா மாமியின் பெண்கள் பச்சை வடாம் கேட்டிருக்கிறார்கள் .
உனக்கு உதவியாக இரண்டு பெண்களை ஏற்பாடு செய்திருக்கிறேன் என்று நிறுத்தினார்.
அப்பாடி இத்தனை யோசித்து வைத்துவிட்டீர்கள்.
நாள் கண க்குப் பார்த்து, வகை பிரித்து செய்ய வேண்டியதுதான் பாக்கி.
யார் இந்தப் பெண்கள். என்று கேட்டல்.
அரிசிக்காரத்தெருவில் கோதண்டராமன் பெண்கள்.
பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு, கையில் கொஞ்சம் பணம்
சேர்த்துக் கொள்ள ஆசைப் படுகிறார்கள் கல்லூரிப் படிப்பு படிக்க ணுமாம்.
இரண்டு மாதங்களில்  இரண்டாயிரமாவது சேர்க்க நாம் உதவ வேண்டும் என்றார் சீனு.
நமக்கு குழந்தைகள் இல்லாத குறை இப்போது
அதிகமாகத் தெரிகிறது.

அதனால் என்னமா. ஊரில் இருக்கும் குழந்தைகள் நம் குழந்தைகள் தான்.
முடிந்தவரை வாழ்வை நிறைவாக நடத்திச் செல்வோம்.
கற்பகாம்பாளும்,கபாலியும் துணையிருப்பார்கள் .
இப்படியாகத்தான்  வடாம் உத்சவம் தொடங்கியது.
தொடரும்.

கோவிந்தா கோவிந்தா சரணம்.

வல்லிசிம்ஹன் எல்லோரும் நலமுடன் வாழ வேண்டும். திருப்பதியில் ஏன் 'கோவிந்தா... கோவிந்தா...' என்று விண்ணதிர முழங்குகிறார்கள் தெரியுமா? ஶ...