Showing posts with label சமையல் குறிப்பு.. Show all posts
Showing posts with label சமையல் குறிப்பு.. Show all posts

Thursday, June 05, 2008

கானமயிலாடக் கண்டிருந்த:)










காலை யெழுந்தவுடன் காப்பி
பின்பு கண்டிப்பாக மருந்து,
ஆன பிறகு ரெண்டு இட்டிலி

பிறகு இருக்கவே இருக்கு வலைப்பதிவுகள்.
அங்கே என்ன போனா நாலு நாளா ஒரே தாளிக்கும் ஓசையும்,
பொரியல் வாசனையும்,
கொதிக்கும் ரசமும் என்று
சமையல்மணமா ஆகி இருக்கு.
ஒருத்தர் பாக்கி இல்லை.:)
இதைப் பப்ளிஷ் செய்யறத்துக் குள்ள
ஒருத்தர் வினோத வகைக்குழம்பு குறி ப்பு கொடுத்து இருக்கலாம்.!!

அதனால நான் இன்னிக்குச் செய்த சேனை கறியைப் படம் எடுத்துப் போட்டுட்டேன்.
ரொம்ப சாதாரணமா எல்லோரும் செய்கிற பொரியல்.
ஆனால் எனக்கு உலகத்திலேயே ரொம்பப் பிடிக்காத காரியம் என்றால் அது கத்தியைக் கையில் எடுப்பதுதான்.
நாமளோ அரிவாள்மணைக்குப் பழகியவர்கள்.
எங்க வீட்டு அருவாமணை எல்லா மருமகள் கைகளையும் பதம் பார்த்தது.
அத்தனை கூர்.
வாசலில் ''சாணாப் பிடிக்கிறதுனு'' போகிற கிழவன் கூட எங்க வீட்டு வாசலில் கூப்பிட மாட்டான்.

ஐய்யாவை கண்டாதான் ஆனந்தம் அவனுக்கு. அவர்தான் இந்த ஹெட்ஜ் கட்டர்,ஒரு நாலு கத்திரிக்கோல் வித விதமா கொடுப்பார். சலாம் போட்டு அருமை பேசி கூர்மையாகச் சீர் செய்து விட்டுப்போவார்.
அந்த அருமை அரிமணைய்யை விட்டு எந்தக் கத்தியும் நமக்குப் பிடிக்காமல் போய் விட்டது.
பின்ன எப்படி இப்ப இந்தச் சேன்னைக்கிழங்கு செய்தீங்கனு கேட்டால்...
இதுதான் வழி.
முழு சேனையை இந்தப் பெரிய கத்தியால நாலு போடு போட்டால் துண்டுகள் கிடைக்குமா,
அதை நல்லாத் தீர சுத்தம் செய்து, கொதிக்க வென்னீரில போட்டுடணும். மூடி வச்சா கொஞ்ச நேரத்துல சாஃப்டாயிடும்.
அடுப்பை அணைச்சுட்டு ,பொறுமையாகச் சின்னக் கத்தியால துக்கடா துண்டுகளாகச் செய்துகொண்டு, கொஞ்சமே க்கொஞ்சம் எண்ணைல வதக்கி எடுத்துட்டுப் போட்டோ எடுத்துப் பதிவும் போட்டுடலாம்:)
கானமயிலாடக் கண்டிருந்த வான்கோழித் தானும் அதுவாகப் பாவித்துத்
தானும் தன் பொல்லாச் சிறகை விரித்து ஆடி விட்டதாம்.



Posted by Picasa

நவராத்திரி பதிவு 4

வல்லிசிம்ஹன் நவராத்திரி நல் நாட்கள் வல்லிசிம்ஹன் எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்  நவராத்திரி நல்  நாட்கள்  +++++++++++++++++++++++++++++++ சின...