என்று ஞாபகம் . பிள்ளைங்கள் வீட்டில் இருந்த நேரம். அப்பொழுது வாரா வாரம் ,ஃப்லிப்ஸ் டாப் டென் பாட்டுகள் ஒளிபரப்பாகும். வருடம் பூராவும் மிகுந்த மதிப்பெண்கள்
பெற்ற பாட்டுகள் தமிழ் சன் தொலைக்காட்சியில் வருட இறுதி நாள் இரவு
ஒளிபரப்பாகும்.
ஒட்டகத்தைக் கட்டிக்கோவா?''(ஜெண்டில்மன் படத்தில்)
இல்லை திருடா திருடா படத்தில வரும்
வீர பாண்டிக் கோட்டையிலே''வா ? எது முதலிடம் பெறும் இது ஒரு படபடப்பு;)
இப்படித் தமிழிலும், பிறகு
இந்தியில் மோஹ்ரா படம்! அதில் வந்த பாடல் ஒன்று''தூ சீஸ் படி ஹை மஸ்த் மஸ்த்'' பிறகு'' சுரா கே தில் மேரா...'' ஷில்பா ஷெட்டி அறிமுகமான படம்.
ருக்கு ருக் அரே பாபா ருக்.'' இளமைக்கால தபுவின் நடனம்..
அர்த்தம் தெரியாமலேயே வெகுவாக ரசித்து மகிழ்ந்த காலம்:0)
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.
எட்டு மணிக்கு சாப்பாட்டுக் கடையை முடித்துக் கொண்டு
தொலைக்காட்சி முன் அமர்ந்துவிடுவோம்.
சன்' சானல் மட்டும் இருந்த காலம். இந்திக்கு zee சானல்.
வாழ்க்கை எளிமையாக இருந்தது. அதுவே சந்தோஷமாகவும் இருந்தது.
12 மணிவரை ஒரு பிரார்த்தனைக் காலம் போல தொலைக்காட்சி பார்த்துவிட்டு வாசலுக்கு வந்து ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துகள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே எதிர்த்த வீட்டுச் சின்னப் பையன் பட்டாசு வெடிக்க ஆரம்பிக்கும்.
எங்கிருந்தோ வரும் மோட்டார் பைக் இளைஞர்கள்
காற்றுக்கும் வானத்துக்கும் சுற்றி நடந்து போகிறவர்களுக்கும், இன்னும் விளக்கெரியும் வீடுகளுக்கும் வாழ்த்த்துகள் சொல்லிப் பறப்பார்கள்.
அத்துடன் எங்கள் புத்தாண்டு ஆரம்பிக்கும்.
வெறும் ஆங்கிலப் பத்திரிகை மட்டுமே மாதம் 54ரூபாய்க்கு வாங்கி
வந்த காலம்.
படங்கள் போட்டுப் புத்தாண்டுக் கொண்டாட்டத்தை அறிமுகப் படுத்திய தமிழ்ப் பத்திரிகைகள் வாங்காத காலம்.
ஆனால் புத்தாண்டு அன்று வீட்டுக்கு ஒரு புது பொருள் வாங்கும் வழக்கம் வந்தது. அப்படித்தான் முதல் வாஷிங் மெஷின் வந்தது.
பிறகு எல்லாம் காலமும் புத்தாண்டும் மாறியது.
பெரியவன் வேலை மாற்றம் பெற்று மும்பை போய்விட்டான்.
சின்னவன் ஸ்விட்சர்லாந்துக்குக் கிளம்பினான்.
பெண்ணொ திருமணம் செய்து கொண்டு புதரகத்துக்குக் கிளம்பிவிட்டாள்.
பிறகு பழைய உற்சாகம் பரபரப்பு அவ்வளவாக இல்லை. பத்துமணிக்கேத் தூங்கப் போகும் பழக்கம் வந்தது.
செக் புத்தகத்தில் கையெழுத்துப் போடும்போது மட்டும் கவனமா இருக்கணும்:)
2011 என்று எழுதணும்.:)
அனைவருக்கும் மீண்டும் மனம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துகள்.



