வழி காட்டிய தந்தை,
வருத்தப்பட்டால் தேற்றிய தந்தை
, உயிரின் கடைசி மூச்சு இருக்கும் வரை மக்களின் நலனையே நினைத்த என் தந்தைக்கும் என் தம்பிக்கும் என் அஞ்சலிகள். அப்பா,தம்பி உங்கள் உழைப்பு வீணாகவில்லை. முத்தான செல்வங்கள் நேர்மை வழியில் நடந்து கொண்டிருக்கிறார்கள்.
இன்னும் பல மழலைச் செல்வங்கள் வரக் காத்து இருக்கிறேன்.
உங்கள் உறவு,பாசம்
கண்முன்னால் தெரியாவிட்டாலும், அதை வலுப்படுத்த எத்தனையோ சகோதரர்களும்,தம்பிகளும்,பிள்ளைகளும் கிடைத்திருக்கிறார்கள்.
அந்தச் செல்வங்களுக்கு இன்று தந்தையர் தின வாழ்த்துகளை மனம் நிறைய
அள்ளிக் கொடுக்கிறேன்.
அணைக்கும் தந்தையைப் பெற்ற செல்வங்கள் ,நாளை அவர்களது குழந்தைகளையும் இதே அன்பு வழியில் நடத்திச் செல்லுவார்கள்.
தாத்தாக்களுக்கும்,
அவர்களது பிள்ளைகளுக்கும்,
பிள்ளைகளின் பிள்ளைகளுக்கும்(நாளைய தந்தையர்)
வாழ்த்துகள். உங்கள் அன்பு செழிக்கட்டும்.
எல்லோரும் வாழ வேண்டும்.


