Showing posts with label வளரும் பருவம். Show all posts
Showing posts with label வளரும் பருவம். Show all posts

Sunday, November 02, 2008

ஒரு விவாதம்.. அறுபதுக்கும் பத்துக்கும்





ஊருக்குக் கிளம்பப் போகிறொம் என்ற முஸ்தீபுடன் பேரனுடன் ஒரு அதிகாலை
பேச உட்கார்ந்தேன்.
அவன் தன்னுடைய காலை நேரத் தியானம் முடித்துக்கொண்டு, உடல்பயிற்சியும்
செய்த பிறகு ,என்னுடன் வந்து உட்கார்ந்தான்.
அவன் முகத்தில் கேள்வி. ஒன் மோர் அட்வைஸ் செஷனா
என்ற கேள்வி அவன் முகத்தில்.

எங்கள் அறையில் படுப்பதால் எங்களுடனேயே எழுந்திருக்கும் வழக்கம் வந்துவிட்டது.
அவனுக்கு வீட்டுப்பாடங்கள் இல்லாத நாளகப் பார்த்து,
நேரம் இருக்கும் போது, மெஷின் துப்பாக்கி, வான்வெளி, குற்றங்கள் தண்டிக்கப் படவேண்டியவை
என்று ஒரே வேகமாகப் பேசுவான்.
எனக்கோ பயமாக இருக்கும். ஒரு வேளை அதிகமாகக் கற்பனை உலகத்தில் ,இருக்கிறானோ. நிறைய வீர தீரப் புத்தகங்கள் படிப்பதால் இத்தனை தீவிர சிந்தனைகள் வருகிறதோ என்று நினைப்பேன்.
''
பையா, இவ்வளவு உணர்ச்சி வசப்பட வேண்டாம், அது உடலுக்கு நல்லதில்லை.
எதையும் தீர்மானம் செய்வதற்குள் தீர யோசிக்கணும்'' என்று நான் முடிப்பதற்குள்
பாய்ந்து வரும் பதில்கள்.

அப்படித்தான் என் பள்ளிப்பருவத்தையும் அவனுடைய தற்போதைய பாடங்களையும் நேற்று
பேசிக்கொண்டிருந்தோம். '' உனக்கு இவ்வளவு பெரிய புத்தகங்கள் இருந்ததா பாட்டி?
நீ ஆந்தையைப் பற்றி பிராஜெக்ட் செய்திருக்கியா.
ஆப்ரஹாம் லின்கன் பற்றி என்ன தெரியும்.'' என்றேல்லாம் கேட்டபோது நான் என்னுடைய ' நாலாப்பு'
எப்படி இருந்தது என்று யோசித்து முடிந்தவரை சொன்னேன்.

என்னுடைய தேடல்கள் கூகிளில் தான். மற்றும் புத்தகங்களிருந்து இப்போதுதான்
எனக்கு வேண்டும் என்பதைநிறையப் படிக்கிறேன் என்றும் சொன்னேன்

ஆந்தை சாப்பிட்ட உணவை(எலிகள்) எப்படித் திருப்பிக் கக்கிவிடும் என்றும்
அதை (எலியின் எலும்புகளை) அவர்கள்
பரிசோதனைக் கூடத்தில் அறுத்துப் பார்த்ததாகச் சொன்னதும்
எனக்கு வியப்பு தாங்கவில்லை.
''அந்த எலும்புகளை என் லாக்கரில் ஒரு ப்ளாஸ்டிக் பையில் சீல் செய்து வைத்திருக்கிறேன்' என்று
வேறு சொன்னான்.
அது நல்லதில்லையே தொத்து நோய் ஏதாவது வந்துவிடாதா என்றதும், நாங்கள் எல்லோருமே அப்படித்தான் வைத்திருக்கிறோம்,ஒன்றும் வராது''என்றான்.
எதற்கு இதையெல்லாம் தெரிந்து கொள்ளணும் என்றேன். 'சுற்றுச் சூழல் பற்றி தெரிந்து கொண்டால்தானே
நாம் ஒழுங்காகப் பிழைக்க முடியும் என்று பதில் வந்தது.

.
நீ எதையாவது டைசெக்ட் செய்திருக்கிறாயா??
நான்; ஏதோ பூக்களைப் பிரித்துப் பார்ப்போம். ஒரு தவளை, ஒரு காக்ரோச்,ஒரு எலி டைசெக்ட் செய்திருக்கிறேன்''
அதுவும் நான் கல்லூரிக்குப் போனபோதுதான் என்றதும்,

உனக்கு ரொம்ப ஸ்லோ எஜுகேஷன் இல்லை??? என்று வேறு கேட்டான்.
நான் இந்திய கல்விமுறையைச் சோதிக்கும் பாட்டிலிருந்து விடுபட ,அப்படிப் படித்தே நம் ஊரில் ஏகப்பட்ட விஞ்ஞானிகள் வளர்ந்தார்கள்,இருக்கிறார்கள் என்றும்
மேற்கோளோடு எடுத்துச் சொன்னேன்.

நான் மேம்போக்காக , ' பரிசோதனைன்னு சொல்லி கினிபிக் எல்லாம் கொல்லறாங்களே
அது தப்புனு தோணுகிறது' என்று சொன்னதும்.
அப்படிப் பார்க்கப் போனால் ''நீ செடியிலிருந்து பூவைப் பறிக்கிறதும் தப்புதான்.''
பூ செடியிலிருந்தால்தான் அந்தச் செடிக்கு நல்லது. நீ அதப் பறித்து சுவாமிக்கு வச்சு அது வாடிப் போய்க்
குப்பைக்குப் போகிறது.'' என்றான்.

ஒருவேளை மனிதர்களை வைத்துப் பரிசோதித்தால் இன்னும் பலன் கிடைக்குமோ என்னவோ என்று என்னை யோசனையோடு
பார்த்தான். என்னிடம் என்ன பதில் வருமென்று சோதனை செய்கிறான் என்று புரிந்தது:)
எனக்குச் சந்தேகம் வந்துவிட்டது. தாத்தா வாசனை பேரன் பேரில் பட்டிருக்கிறது என்று. அவருக்குத் தான் இந்தச் செடியில் பூக்களைப் பறிக்கிறது எல்லாம் பிடிக்காது.

அவனுடைய எண்ணங்கள், செயல்கள் எல்லாமே வித்தியாசமாகவே எனக்குத் தெரியும்.
கொஞ்ச வருடங்களா இருக்கின்றன அவனுக்கும் எனக்கு இடையில்.
ஐம்பது வருடங்கள்.!!!




வயதானவர்களின் கொண்டாட்ட நாள்.

வல்லிசிம்ஹன் எல்லோரும் நலமுடன்   வாழ்க. வயதானவர்கள் (சீனியர் இல்லை) தினம். அக்டோபர் 1. வயதான வயதாகிக் கொண்டிருப்பவர்கள் தினம் இன்று அக்டோபர்...