Blog Archive

Monday, August 27, 2012

வெற்றிகரமாக நடந்த பதிவர் மாநாடு..நன்றி

வந்துவிட்டோம்
தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா.
விருது வாங்கிய திருமதி ரஞ்சனி
சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற  பெரியவர்கள்
திரு  செந்தில் குமாரும்,கேபிள் சங்கரும்
விழா மேடை
வீடுதிரும்பல் மோகன்குமார்


 காத்திருந்து நிகழ்ந்தேறிய  பதிவர் திருவிழாவின்  படங்கள் சிலவற்றைப் பதிந்திருக்கிறேன். நெடு நாட்களுக்குப் பிறகு (இந்த வயதில்)பரிசு என்று கிடைத்ததே  என்னால் யூகிக்க முடியாத அளவுக்கு  ஒரு     மகிழ்ச்சி.

பதிவர்கள் அனைவரையும் சந்தித்த சந்தோஷம்.
பெரியவர்களை வணங்க முடிந்தது    இன்னோரு ஆநந்தம்.
நெருங்கிய தோழிகள் வரமுடியவில்லையே என்கிற ஆதங்கம்.
கச்சிதமாக நடந்து முடிந்த ஒரு கல்யாணத்தைப் பார்த்த உணர்வு.தோழிகள் ஸாதிகா,ஆமீனா, ருக்மணி,லக்ஷ்மி,ரஞ்சனி,ராஜி, சசிகலா,  சுபாஷினி
தூயாக் குட்டி,அவள் தம்பி
எல்.கே,
பாலகணேஷ்,மோஹன் குமார்,மதுமதி  ,சுரேகா,கேபிள் ஷங்கர்,செந்தில் குமார்  என்று எல்லாப் பதிவர்களையும் பார்க்க முடிந்த சந்தோஷம்
அனைத்துப் பதிவர்களுக்கும்,விழா அமைப்பாளர்களுக்கும் உளமார்ந்த நன்றி 
மறக்க முடியாத நாளாக அமைந்துவிட்டது நேற்று.
வாழிய செந்தமிழ்
வாழ்க நற்றமிழர்.
 எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Friday, August 24, 2012

சென்னைத் தமிழ்ப் பதிவர் மாநாட்டுக்கு வாழ்த்துகள்


 வரும் 26 ஆம் தேதி நடக்கப் போகும் மாபெரும் பதிவர் மாநாட்டுக்கு

எங்கள் வாழ்த்துகள்.உழைக்கும் அனைவருக்கும் நன்றி. இங்கிருக்கின்ற பூக்களால் கொத்து  ஒன்று உங்களை வந்து சேர்கிறது.
இந்த ஒற்றுமை என்றும் நிலைக்க வேண்டும்.


எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Monday, August 20, 2012

கண்ணிலே ஈரமுண்டு, கண்கள் தான் அறியும்


கண்கள்  இன்னும் சரியாகத் தெரியாததற்குக்
காரணம் தெரிந்து விட்டது.
சும்மா இருந்தவளை டபடீஸ் கண்ணைக் கெடுத்துவிடும்.
காடாரக்ட் செய்துவிடுங்கள்.
இனிமேல் கண்ணாடியே   போட வேண்டாம்.
உயர்ந்த லென்ஸைப் பொறுத்துகிறோம்.

ஒருவாரத்தில் அத்தனை டெஸ்ட்,பரிசோதனை செய்தார்கள். எல்லாம் ஓகே. நீங்கள் இந்த லென்ஸை ஏற்க்த் தகுதி உடையவர்..

இரண்டு  கண்களும் லென்ஸை ஏற்றன.
கண்  தெரிகிறது. கூடவே  கண் எரிகிறது. வலிக்கிறது.
ஏனென்று கேட்டால்  பழகிவிடும் என்ற பதில்.
உங்க கண் ஆப்பரேஷன் கம்ப்ளீட்   சக்ஸஸ்!
ஆறு மாதங்கள் கடந்தும் சரியாகவில்லை..

கண்ணாடி போட்டுக் கொள்ளச் சொன்னார்கள்.
போட்டேன். மீண்டும் சகிக்க முடியாத தலைவலி.

டாக்டர் ராஜன் ஐ கேர் போகலாம். விடுதலை கிடைக்குமா என்று பார்க்க.
போனேன்.
இரண்டு நிமிடங்களில் கண்கள் பின்னால் இருக்கும்
படலங்களை லேசர்  வைத்து   எடுத்தார்.
அம்மா இனிமே தலைவலி வராது.
அவர்கள் உங்கள் கண்களில் ஆஸ்டிக்மாடிச்ம் இருக்கு.
அதற்கு அவர்கள் வைத்த லென்ஸ் ஒத்துக் கொள்ளாது.

நீங்கள் இரண்டு வாரத்தில் என்னை வந்து பாருங்கள். வேறொரு  கண்ணாடிக்குப் ப்ரிஸ்க்ரிப்ஷன் கொடுக்கிறேன். அது ஒத்துக் கொண்டால்  சரி.
இல்லாவிட்டால் இன்னுமொரு 40000  இரண்டு கண்களுக்கும் செலவழிக்கவேண்டும்.
அவர்கள் வைத்த லென்ஸ்களை எடுத்துவிடலாம்.
:((((((((((((((((((((((((((((((((((((((((((

பார்க்கலாம்.ஏன் இப்படி நடக்கணும். ஒரு பிரசித்த வைத்தியருக்குக் கண்ணின் மஹிமை தெரியாதா.
ஏன் இப்படி யோசிக்காமல் செய்தார்கள். டயபெடிஸ் என்பதால் இன்ஷுரன்ஸும் கிடைப்பதில்லை.

இது புலம்பல் இல்லை. எல்லோரும் கண்ணின் விஷயத்தில் நல்ல வைத்தியரை அணுகுங்கள் என்று சொல்லத்தான்  பதிந்தேன்.
 
எனக்கு   இந்த ஆஸ்டிக்மாடிசம் இருப்பது
ஏன் தெரியவில்லை என்று லென்ஸ் பொறுத்தியவர் கேட்டார்.(பழைய டாக்டர்)
நான் டாக்டர் இல்லையே. .
நீங்கள் சொன்னதால் தெரியும்.   என்றேன்.
டாக்டர்  மோஹன் ராஜன் என் கண்களைச் சரிப்படுத்திவிடுவார் என்ற நம்பிக்கை வந்துவிட்டது.

 எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Sunday, August 19, 2012

பயண நினைவுகள் மாமல்லபுரம்

காலை மயங்கும் நேரம்
புலிக்குகையில் ஒரு அழகு ஊற்று
புலிக்குகை சிற்பங்கள்
Add caption
எல்லாமே  டெசர்ட்  ஐட்டம்ஸ்
இவைகளை உருவாக்கிய மேதைகள்.சீஃப் செஃப்  விஜய்யும் அவரது உதவியாளரும்  பெயரை மறந்துவிட்டேன்:(
அலைகள் அடித்த வேகம் .சிகப்பு சிக்னல் ஏற்றப்பட்டது
தூரத்தில்  மஹாபலிபுரம் கடற்கரைக் கோவில்கள்
தங்கியிருந்த  விடுதியின்  கடற்கரையும் ஒட்டி இருந்த
வசதிகளும்


எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Posted by Picasa

Wednesday, August 15, 2012

சுதந்திர தின நினைவுகள்

 


இடம் பசுமலை   மதுரை
நாள்     15/8/1965
  12  ஆம் தேதியிலிருந்தே  தபாலாபீஸ் அல்லோலகல்லப் பட்டது.
இருக்கும் நான்கு  ஜன்னல்கள் அழுந்தத் துடைக்கப்பட்டு   சுத்தம் பளிச்சிட்டது.
என்னா விசேசாம் கண்ணு .அப்பா இத்தனை பேரோட
இவ்வளா வேலை செய்கிறார் என்று கேகும் தேவானை.
தபால் ஆப்பீசைச் சுத்தம் செய்யும் பெண்மணி.
நமக்கெல்லாம் சுதந்திரம்   கிடச்ச நாள் வருது தேவானை.

அன்னிக்கு நம்ம ஆபீஸ் மேல கொடி ஏத்திப் பறக்கவிட்டுப் பாட்டுப்
பாடிக் கொண்டாடணும்.
ஏன்  என்னா  கிடச்சுதுன்னு பாடணும்?
போன வருஷமெல்லாம் என்ன செய்தீங்க. ஒண்ணும் செய்யலையே அந்த அய்யாவுக்கு உடல் சரியில்ல. எங்களுக்கெல்லாம் லீவு  விட்டுட்டாங்க.

ஏதோ தெரியாமல் சொல்கிறார் என்று தெரிந்தது.
வெள்ளைக்காரங்க  இருந்தாங்க நம்ம ஊரில.
அவங்க நம்மளை ரொம்பக் கட்டுப்பாட்டில்  வைச்சிருந்தாங்க.

நீ சினிமா போகும் போது பார்ப்பியே
நேருஜி  இந்த மாதிரி  தலைவர்களை?
நியூஸ்னு போடுவாங்களே. அவர் இறந்துட்டாரேமா.
ஆமாம் அவருக்குப் பதிலா இப்ப  ஸாஸ்திரிஜி
வந்திருக்கார். அவர்தான் நமக்குப் பிரதம மந்திரி.
அவங்களுக்கும் நமக்கும் என்ன சம்பந்தம்?

அவங்க எல்லாம் போராடி வெள்ளைக்காரங்களை விரட்டி
அடிச்சாங்க. அந்த நாள் தான் ஆகஸ்ட் மாசம் 15.

நம்ம ஊருக்கு  எல்லாம்   வந்திடுச்சா/
 எது? 
சுதந்தரம்...
எல்லாருக்கும் வந்துடுத்துப்பா.
என்ன னு சொல்லேன்பா.
இப்ப நம்மளை இங்க நில்லு. அங்க நிக்காதேன்னு சொல்ல மாட்டங்க..
என்ன வேணா சொல்லலாம். நமக்கு வேணும்கறவங்களைத் தேர்ந்தெடுக்கலாம்.
எதுக்கு?
 நம்மளைப் பத்தி நமக்கு வேணும்கற    தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பாங்க

யார்கிட்டப் போய்க் கேப்பாங்க.
  மெட்ராஸ் பட்டணம் இருக்கு இல்ல.
அங்க கூடிப் பேசி நல்லது செய்வாங்க.

யார்கிட்டச் சொல்லணும் .
 தேர்தல் வருமே அப்ப..
நீ சொல்லி இருக்கியா
இல்ல 21 வயசாகணும்(அப்பொழுது)
பாப்பா   அப்ப  நீ நான் போட முடியாது
ம்ஹூம்.
சரி நாளைக்கு வரேன்.
அப்பா கொடியை த் துவைச்சுக் கிட்டிருக்காரு. காயப் போடலாம்
இதுக்கப்புறம் தோக்கவேண்டிய அவசியம் வராது. நல்லா மடிச்சு அதுக்கான பொட்டியில் வச்சிரலாம் தேவானை.
அடுத்த நாள் காலையிலிருந்தே அப்பாவோடு எங்களுக்கும் உற்சாகம் பற்றிக் கொண்டது.
தம்பி பறந்தான் மிட்டாய் வாங்க.
தபால் ஆபீசின் மேலிருந்த கொடிக்கம்பத்தைப் போஸ்ட்மேன்
ப்ராசோ  போட்டுத் தங்கமென மின்ன வைத்தார்.
அப்பா வெள்ளைக் கயிறின் வெள்ளை போதுமான்னு பார்த்துவிட்டு
தேசியக் கொடியைக் குழந்தையைப் போலத் தூக்கி அதில் ரோஜ இதழ்களை நிரப்பினார். பிறகு  வடிவாக மடித்துத் தயார் செய்தார்.
கொடி மேலே ஏறியது கயிறு அப்பா கையில்.
அனைவரும்  வந்தாச்சா என்று கேட்டபடி சுற்றிப் பார்த்தார்.
அம்மா  கதவிற்குப் பின்னால் இருந்தபடி முகம் பூராவும் பெருமையோடு பார்த்துக் கொண்டிருந்தார்.

நாங்கள் மூவருமாபீஸ் குமாஸ்தாக்களுடனும் மற்றவர்களுடன் சேர்ந்து
சல்யூட் செய்ய ,ஏற்றப்படி  பறக்க ஆரம்பித்து ரோஜா இதழ்கள் எல்லோர் மேலும் விழுந்தது.
உடனே ஜனகணமனவும், தாயின் மணிக்கொடி பாரீரும்,வந்தே மாதரமும்

பலகுரல்களில் ஒலிக்க  அப்பா  சிறு சொற்பொழிவு நிகழ்த்தினார்..
காத்திருந்த இனிப்புப் பொட்டலங்களும் தட்டில் வைக்கப் பட்டு வந்தன.

அன்று சாயந்திரம் அப்பா கொடியை மரியாதையோடு   இறக்கும் வரை நாங்கள் நொடிக்கொருதரம்  வெளி வந்து  பறக்கும் கொடியைப் பார்த்துச் சந்தோஷப் பட்டதெல்லாம் பழங்கதையாகி விட்டது.
இந்தியா   வளம் பெறட்டும்.
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Posted by Picasa

Tuesday, August 14, 2012

மின் வேகம் கட்டப் பணவேகம்


 தொட்டுப் பார்த்தால்  விர்ருனு இழுக்கவில்லை.நல்ல  வேளை.
சமையல் ஆகணுமே.
இருட்டில இருக்கிற  சாமிரூமுக்கு  நாலு விளக்கு ஏற்றி வைத்து
அப்பா சாமி  நோ மோர் ஷாக். தாங்காதுன்னு வேண்டிக் கொண்டு
மீண்டும்   மின்வாரியத்தை உதவிக்கு அழைத்தால் அதிசயம்! அடுத்த அரைமணி நேரத்தில் கையில் வயர் , ப்ளையர் சகிதம்
ஒரு லைன்மேன்  வந்துவிட்டார்.

அசால்ட்டாக எரிந்து முடித்திருந்த ஜங்ஷன்  பொட்டியைத் திறந்தார். ஆறு இன்ச்  வயரை மாற்றி முடிச்சுப் போட்டு  படபட வென்று மூடிவிட்டு 300 ரூபாயும்  வாங்கிக் கொண்டு போய்விட்டார்.
ஐய்யா    ஷாக் அடிக்கிறதேன்னு சொல்வதற்குள்  ஆளைக் காணோம்.

பாதிசமையலை முடித்துக் கொண்டு
மைலாப்பூர்  டைம்ஸில்   தேடினேன். டிவி ரிப்பேர்,சகலரிப்பேர்   என்று ஒரு விளம்பரம். நம்பலாமா என்றேல்லாம் யோசிக்கவில்லை.  போனில் அழைத்ததும்    ஆளை அனுப்புவதாக  அவர் ஒத்துக் கொண்டார்.

சொன்ன இரண்டு மணி நேரத்தில்  இரண்டு  இளைஞர்கள் வந்தார்கள்.

யுபிஎஸ்   மாற்றணும்,
டிவி கழட்டியாச்சு.
என்ன டாமேஜ்னு ஓணர் சொல்வார்.
கவலைப் படாதீங்க சாயந்திரம் வந்துவிடுவோம்''
என்றவாறு    கிளம்பினார்கள்.

அவர்கள் சென்ற பிறகு  திகிலடித்தது. ஐய்யோ டிவியைக் கொடுத்துட்டோமே.
யாரென்றே தெரியாதே.
புலம்பாதே. பேப்பர்ல பார்த்துதானெ அழைத்தாய்.. ஒண்ணும் ஆகாது. சாப்பிட்டு  ரெஸ்ட் எடு .எல்லாம் சரியாகிவிடும்.
எங்க வீட்டு பாசிட்டிவ் சிங்கம்.
அதே போல அவர்களிடமிருந்து   ஃபோன் வந்தது.
யுபிஎஸ் 2000
டிவி ஸ்டபிலைசர் 700
டிவி ரிப்பேர்    7500....ரிப்பேர் ஆரம்பிக்கலாமா....
நான் இவரைப் பார்க்க  கம்ப்யூட்டர் இல்லாம
நீ இருக்க மாட்ட. அதே போலதான் டிவியும்..
சரின்னு சொல்லு.
சரி.
10200,.
சாயந்திரம் வந்தார்கள் யூபிஎஸ்    கேபிள் எங்கவீட்டுது அவங்க கொண்டு வந்ததற்குப் பொருந்த வில்லை.
தொலைபேசி அடாப்டர் அவுட்.மோடம் அடாப்டர் அவுட்.  ஸ்பீக்கர் அடாப்டர் அவுட்
ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பான்னு வடிவேலு மாதிரி   உட்கார முடியுமா.
இன்னும் 2000 எடுத்துக் கொடுத்தாச்சு. எல்லாவற்றுக்கும் பில் கொண்டு வந்தார்கள்.
பொருத்தினார்கள். எல்லாம் வேலை செய்ய ஆரம்பித்தது.

குளியலறை ஷாக் தான் பாக்கி. அதற்கும் ஒரு ஆள் தேடினோம். எங்கள் வழக்கமான  எலெக்ட்ர்ரிஷியன்  மந்த ஸ்ருதியில் இருந்ததால் கூப்பிடவில்லை.
 சிங்வி கடை  எலேக்ட்ரிஷியன் வந்தார்,.
எல்லா ப்ளக்லயும் வெறும் விரலை வைத்தே(!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!)
பரிசோதனை செய்தார்.
வீட்டுக்குள்  மின்வேகத்தடை   செய்யும்  ஐசொலேட்டர்  என்பதை வாங்கி வந்து மாட்டினார். அது ஒரு 3750.

இது ஷார்ட் சர்க்கியூட் ஆவதைக் கண்டதும் மின்சாரத்தை நிறுத்திவிடுமாம்.

இப்போ உங்க பாத்ரூம் ஷாக் அடிக்காது என்று சிங்கத்டிடம் சொல்லிவிட்டுக் கூலியை வாங்கிக் கொண்டு போய்விட்டார்.
பெண்கள் முகத்தைப் பார்க்க மாட்டார்  போலிருக்கு.:(
நான்   கேட்கவந்த கேள்விகள்     என் தொண்டையிலேயே நின்றன.
அவ்வளவுதான்பா கதை .
நேற்றிலிருந்துதான்  குழாயைத் தொடும் தைரியம் வந்தது.

அறிவாளி படத்தில் முத்துலட்சுமி   சுச்சு போட மறுப்பார். அது என்னைப் பிடித்துக்   கொள்ளும் என்பார்.
தங்கவேலு அதற்கு  'ஆமா அதுக்கு உம்மேல ஆசைபாரு. அப்படியே உன்னைப் பிடிச்சுக்கும்'' என்று சிரிப்பார்.
நாங்களும்அதைக்  கேட்டுச்   சிரிப்போம்.

இப்ப  மின்சாரம் எங்களப்  பார்த்துச் சிரித்துவிட்டது:(


 எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Monday, August 13, 2012

ஷாக் ஷாக்!!!!பேரைக் கேட்டாலே பதறுதே தில்லு!

அதிர்ச்சி
என்ன சார் காலில் செருப்பில்லாமல்  கம்பியைப் பிடிச்சீங்களா:)

 இதே  போல ஒரு காலை.. உணவு   மாத்திரைகள் எல்லாம்
உள்ளே தள்ளிவிட்டுக் கணினியின் அருகே வந்தேன்.
ஞாயிற்றுக்கிழமை , பழைய இண்திப்பாடல்கள் ரங்கொலியாக தூர்தர்ஷனில்  வரும்.

தர்மேண்த்ராவும் ராக்கியும் ''ஜில் மில்'' என்று வீடு கட்டப் போகும்  அழகை வர்ணித்தபடி இருக்கையில்,
கணீனியின் யுபிஎஸ் அலற ஆரம்பித்தது.
எ என்று திரும்புவதற்குள் இன்வர்ட்டர்  கர்ணகடூரமாக பலவித கர்ஜனைகள் செய்தது.
சத்தங்களைச் ஜீரணம் செய்வதற்குள்  டிவி பெட்டி   டமால்.பெட்டி வெடிக்கவில்லை. உள்ளே சத்தம்.

காம்பவுண்டுக்கு வெளியே ''சாமி ஏணிய விட்டு இறங்குங்க'உங்க பக்கத்தில மீட்டர்   பெட்டி வெடிக்குது.  சாலையோரம் போகிறவர்களைத் தொந்தரவு செய்யக் கூடாது என்று  நீட்டி இருக்கும் போகன்வில்லக் கிளைகளை
வெட்டும் வழக்கம் உண்டு இவருக்கு.

அவற்றை அள்ளிப் போட்டு உதவி செய்யும்  மாநகரத் தொழிலாளி எதேச்சையாக வந்திருக்கிறார்.

எஜமானர் கர்மமே கண்ணாயினார்.அதனால் காதுகளை மூடிக்கொள்ளலாமா. செய்வார் போல.
அவன் அலறினது எனக்கே கேட்டு நான் வெளியே வந்து தயவு செய்து உள்ளே   வருகிறீர்களா. .உலக மஹாயுத்தம் போல எல்லாம் பட் பட் என்று போகிறது என்று சொன்னேன். இரும்மா .ஏதாவது ஷார்ட் சர்க்யூட் ஆக இருக்கும் என்று இன்வர்ட்டர் பக்கத்தில் வந்தால் பொசுங்கின வாசனை.

கணீனி அவுட்,
தொலைக்காட்சி அவுட்,  காம்பவுண்ட்  சுவரை ஒட்டிய
   ஜங்க்ஷன்  பாக்ஸ் கொழுந்துவிட்டு எரிகிறது. சாலையில் அவரவர்
வேலையில் விரந்து கொண்டிருந்தார்கள்.
நான் உள்ளே வந்து ஈபியின் அவசர எண்ணை அழைத்தால் ஏதோ ஒரு வீதியில் (2 கிலோமீட்டர் தொலைவில்)      மெயிண்டினென்ஸ்.பத்துமணிக்கு வரும்மா என்கிறார். சார் வீட்ல டிவி கணினி எல்லாம் நின்னு போச்சு என்றால் பத்துமணிக்கு வந்துடும் என்று வைத்துவிட்டார்,.
அதிசயம் என்ன என்றால் எங்கள் வீட்டில் மட்டும் தான் பிரச்சினை.

அது இன்னும்கடுப்பு.:(
என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே கம்பீரமாக ஒருவர்
எங்கள்  வீட்டிற்கு இரண்டு  வீடு தள்ளி இருக்கும் கரூர்வைஸ்யா பான்K
அடுக்கு மாடிக் கட்டிடத்தின் செகரட்ரியாம், கையோடு  ஒரு மின் உதவியாளரை அழைத்து வந்தார்.
அந்தக் கட்டிடத்திலும் மின்சாரம் நின்று விட்டிருக்கிறது.
சரி பொறுப்புள்ள ஆண்பிள்ளைகள் இருக்கும் இடத்தில் நாமும் குரல் கொடுக்கவேண்டாம் என்று
உள்ளெ வந்து  குளிக்கும் அறையின் கைகழுவும் குழாயைத் திறக்கப் போனேன்.
சுர்ரீர்  என்று அடித்தது ஷாக்.
முதல் நாள் தான் புது ஹீட்டர் வாங்கிப் போட்டு இருக்கிறோம்.

ஆவீன மழை பொழிய என்று பாடிக் கொண்டே மீண்டும் வெளியே வந்தேன். என்ன ஆவின் பால் வல்லையா என்கிறார் எஜமான்.
அடிபட்ட கோபம்.
'எல்லாம் நீங்க மாட்டினீர்களே அந்த ஹீட்டர்தான் காரணம் அது ஷாக் அடிக்கிறது.
'உனக்கு எப்பவுமே அதீத கற்பனை. இதோ பார் நான் தொடுகிறேன் என்று வேறு குழாயைக் கெட்டியாகப் பிடித்தார். அடுத்த கணம்
அவசரமாக வந்தவரைப் பார்த்ததும் தெரிந்து கொண்டேன். மின் சக்தி ஆண்பெண்   பார்ப்பதில்லை என்று.

மூர்த்தியைக் கூப்பிடு.
லஸ் பவர் ஸ்டேஷனைக் கூப்பிடு.
வாசுவைக் கூப்பிடு.
கட்டளைகள் பறந்தன.
முதலில் எனக்கு   குளிக்கணும்.அப்புறம்தான் வேறவேலை.
மாடிக்குப் போய் குளி.
நான் மாட்டேன். அங்கயும் ஷாக் அடிச்சா,
சரி நான்  வெளியில் இருக்கும் வீட்டு மீட்டரையே அணைக்கிறேன்.
நீ போய்க் குளித்துவிட்டு சமையலைப் பாரு.


ம்ஹூம் எனக்கு நம்பிக்கை இல்லை.
குழாய்கள் அனைத்தும் சேர்ந்து எனக்கெதிராக சதி செய்வதாக ஒரு பிரமை.
கடைசியில் காலில் வீட்டுக்குப் போட்டுக் கொள்ளும்செருப்பைப் போட்டுக் கொண்டு,மாடிப்படி அருகில் இருக்கும் விருந்தினர்    டாய்லெட்டில்  எக்ஸ்ட்ரா     குழாய் இருப்பது நினைவுவர அங்கெ   ஒரு ஸ்டூலைப் போட்டுக் கொண்டு மஹா சுத்தமாகக் குளித்துவந்தேன்.
அதனால் என்ன எத்தனையோ பேர் கீத்துக் கொட்டகையில் குளிக்கவில்லையா. தண்ணியாவது இருக்கே என்று நினைத்தபடி
சாமி ரூமுக்கு வந்தாச்சு.
சமையலறைக் குழாயைத் தொட பயம்.
தண்ணீர் சுத்தம் செய்யும் ஆர்வோ  குழாயில்   கனெக்டாகி இருக்கே!!(தொடரும்)    :0)

 எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்Friday, August 10, 2012

ஆகஸ்ட் மாதம் ஆரஞ்சு படம்

என் மாத்திரைகள்:)  ஸ்ரீராம் சொன்னதுக்காக:)
ஸ்டபிலைசர்
ஆரஞ்சுப் புடவை
யாருக்காவது வேனுமா:)
கை துடைக்க டிஷ்யூ அண்ட் கத்திரிக்கோல்
மின்சாரத்தடை ஸ்டூல்
மஹாலக்ஷ்மி
மோஹன ஆரஞ்ச். நாங்களும் புகைப்படக் கச்சேரிக்கு வந்துட்டோம்:)


எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Posted by Picasa