Blog Archive

Tuesday, March 30, 2021

வாழும் வரை.......

வல்லிசிம்ஹன்செய்திகள் அலை அலையாக வந்து சேர்கின்றன. அனுபவங்கள்
ஒவ்வொன்றும் நம்மை அடையும் போது மனம் சற்றே
விரிந்து ஏற்கிறது.

வலைப்பதிவுகளால் என்ன லாபம்
என்று ஒரு உறவினர் வெகு நாட்களுக்கு முன் கேட்டார்.

தமிழ்ல எழுதறியாமே ?? அத்தனை படித்திருக்கிறாயா?
என்று கேட்கும் போது எனக்கு சிரிப்பே வரும்.
எங்கள் திண்டுக்கல் ஆசிரியர்களைப் பற்றி 
இவர்கள் அறியவில்லையே.:(

அந்தத் தங்க ஆசிரியைகள், ஒரு நிமிடம் கூட 
வீணாக்காமல் 45 நிமிடங்களில்  நம் அறிவை எத்தனை 
விசாலப் படுத்த முடியுமோ
அவ்வாறு போதிப்பார்கள். அதை முழுவதும் மனத்தில் பதிய வைத்தால்
எந்தத் தேர்விலும் வெற்றி பெறலாம்.
எங்கள் பள்ளியில் படித்தவர்கள் சோடை போனதாகச் சரித்திரமே
கிடையாது.

தம்பிகளும் நானும் வாழ்வின் நற்பாடங்களைக் 
கற்றது அங்கேதான். அன்பான ஆசிரிய சகோதரிகள்
மதம், பண வலிமை, இல்லாமை பார்க்காது
அனைவரையும் அருமையாக நடத்தினார்கள்.
இப்போது எப்படி இருக்கிறதோ 
தெரியவில்லை. நம் திண்டுக்கல் தனபாலன் சொல்வார்.

காலங்கள் கருத்துகள் கட்டிடங்கள் மாறி இருக்கலாம்.

இள வயதில் கற்பிக்கப் பட்ட ஒழுக்கம் என்றும் 
மாறுவதில்லை.
என் வலை சகோதரிகள், கீதா சாம்பசிவம், கோமதி அரசு, 
கமலா ஹரிஹரன் ,அன்பின் காமாட்சி அம்மா

எல்லோருமே தென் தமிழகத்திலிருந்து
வந்தவர்கள்.
பல சகோதர்களையும் என் வட்டத்தில் சேர்த்திருக்கிறது
நெல்லை மாவட்டம்.மற்றும் மதுரை மாவட்டம்.
 கோடை காலம் கண்கள் வறண்டு போகின்றன.

அதனால் நிறைய கதைகள் கேட்கிறேன்.
நம் கோமதி சொல்வது போல கேட்பது 
கண்ணுக்கு ஓய்வு தரும்.

வெய்யில் காலம் கடுமையானது தான். அனைவரும் 
நிறைய நீர் அருந்த வேண்டும்.
பாதுகாப்புடன் இருக்க வேண்டும்.
வாழ்வில் மகிழ்ச்சி கூட வேண்டும்.
அனைவரும் வாழ்க வளமுடன். இணையத்துக்கு நன்றி.

இப்படியும் ஒரு ரசமா?? நெஞ்சு சளி,இருமலுக்கு ஏற்ற மிக சுவையான தேங்காய் பா...

கடைசியாகச் சொன்ன வேண்டாததைச் சேர்க்கவேண்டாம்:)

Monday, March 29, 2021

Evergreen Suez Canal | Vaanga Pesalam | Pattimandram Raja | Bharathy Baskar

   தற்போதைய நிலைமை.

 29th March

Suez Canal Live Updates: The Ever Given Is Free, Clearing Way for Traffic to Resume

Aided by the moon and the tides, the giant container ship was wrenched from the shore on Monday afternoon, five days after blocking the vital trade route.

சில பழைய பாடல்கள்


Sunday, March 28, 2021

பங்குனி உத்திரக் கோலாஹலம்.

வல்லிசிம்ஹன்

ஸ்ரீரங்கம் தம்பதிகள் மகா தரிசனம்.


சண்பக மாலையும் மேலே பூப் பந்தலும் ரங்கா!!
உன்னையும் தாயாரையும் காணும் நாள் என்னாளோ.!!!!

ஸ்ரீரங்கம் தம்பதிகள் மகா தரிசனம்.
ஜகார்த்தா அதிபதி ஸ்ரீ ஸ்ரீனிவாசனும் தாயார் ஆனந்தவல்லியும் 
சேர்த்தி கண்டருளும் வைபவம்.


28-03-2021 பங்குனி உத்திரம்  

மட்டையடி, ப்ரணயகலஹம் மற்றும் நம்பெருமாள் பெரிய பிராட்டியார் சேர்த்தி நிகழ்வுகள் 

பங்குனி உத்திரம் பெரிய பிராட்டியாரின் திருநட்சத்திரம். திருவங்கத்தில் அந்த ஒரு நாள் மட்டுமே தாயாருக்கும் பெருமாளுக்கும் சேர்த்தி நடைபெறும். 

பெரிய பிராட்டியார் கருணையின் பிறப்பிடம். நம்மைப் போன்ற அடியார்களின் பிழைகளை போக்க புருஷாகாரம் செய்பவர். 

பங்குனி உத்திரம் அன்று நடைபெறும் நிகழ்வுகள்:

பெருமாள் 8 வீதிகள் எழுந்தருள்வார்
தாயார் சன்னதியில் மட்டையடி நடைபெறும்
பெருமாளுக்கும் தாயாருக்கும் நடைபெறும் வாக்குவாதம் – பிரணய கலஹம்
பெரிய பிராட்டியார் சேர்த்தி
ஸ்வாமி இராமானுஜர் சரணாகதி அனுஷ்டித்த கத்யத்ரய பாராயணம்
பெருமாளுக்கும் தாயாருக்கும் ஏக சிம்மாசனத்தில் திருமஞ்சனம்
பெருமாள் தேரில் எழுந்தருளல் கோரதம்
அதிகாலை 4 மணி பெருமாள் ராஜகோபுரத்தை தாண்டியவுடன், பெரியமேளம் (உடல்) நிறுத்தப்பட்டது. சப்தமின்றி நேரே வெளி ஆண்டாள் சன்னதியை அடைகிறார். மாலை மாற்றிக் கொண்டு சப்தமில்லாமல் மூலஸ்தானத்திற்கு எழுந்தருளி விடுகிறார்.

ஏன்? உறையூர் சேர்த்தி முடிந்து திரும்பி வருவதனால்!!!

ஏழாம் திருநாள் எப்போதும் போல் இரவு தாயார் சன்னதிக்குச் சென்று திருமஞ்சனம் கண்டருளுகிறார். எட்டாம் திருநாள் அன்று கொள்ளிடத்தில் இறங்கி பின்னர் உள்ளே செல்கிறார்.

மேலே சொன்ன விஷயங்களுக்கும் பங்குனி உத்திரத்திற்கு என்ன சம்பந்தம்? சம்பந்தம் உள்ளது, தொடர்ந்து படிக்கவும்.

பங்குனி உத்திரத்தன்று காலை பெருமாள் 8 வீதிகளும் வலம்வருதல்
காலை 6 மணிக்கு பெருமாள் தங்கப்பல்லக்கில் புறப்படுகிறார். 

முன்னே அரையர் தாளம் இசைக்க, சத்தம் இல்லாமல் மெதுவாக 8 வீதிகளும் பெருமாள் எழுந்தருளுகிறார்.

மட்டையடி வைபவம்
அதுவரை நிதானமாக வந்து கொண்டிருந்த பெருமாள், சக்கரத்தாழ்வார் சன்னதியை தாண்டியவுடன் திடீர் பரபரப்பு! பெருமானின் முகத்தில் கூடுதல் பொலிவு!!

மின்னல் வேகத்தில் தாயார் சன்னதியை அடைகிறார். பெரியமேளம் (உடல்) ஒலிக்கத் தொடங்குகிறது. விண்ணைப் பிளக்கும் வேகத்தில் தாயார் சன்னதிக்குள் நுழைய முற்படுகிறார். பெருமாள் வருவது கண்டு தாயார் சன்னதி கதவுகள் மூடப்படுகின்றன. உறையூர் சென்று வந்த பெருமாளை, தாயார் அனுமதிக்க மறுப்பதால் கதவுகள் மூடப்படுகின்றன.

கதவுகள் மூடப்படுவதை கண்ட பெருமாள் மெல்ல பின்னே செல்கிறார். தாயார் சன்னதி கதவுகள் மீண்டும் திறக்க இரண்டாவது முறையாக பெருமாள் ஓட்டத்தில் வேகமாக உள்ளே நுழைய முற்படுகிறார். இந்த முறையும் கதவுகள் மூடப்பட்டு பூவும், தயிரும் வீசப்படுகின்றன. மீண்டும் பெருமாள் பின்னே மெதுவாக சென்று விடுகிறார். (மட்டையடி வாங்கிய சிலர்)

மூன்றாவது முறையாக கதவுகள் திறக்கப்பட்டு பெருமாள் முன்னே ஓட, கதவுகள் மீண்டும் மூடப்படுகிறது. பெருமாள் மெதுவாக பின்னே சென்று நின்று விடுகிறார்!!

தாயார் தன் மீது கோபத்தில் இருப்பதால், இனி பேச்சுவார்த்தை நடத்துவது உசிதம் என்று பெருமாள் நினைக்க! மணியக்காரர் சமயம் சொல்லி அரையருடன் நம்மாழ்வார் சமாதானம் செய்ய வருகிறார்.

பிரணய கலஹம் – பெருமாளுக்கும் தாயாருக்கும் நடக்கும் வாக்குவாதம்
பெருமாள் சார்பாக அரையரும், தாயார் சார்பாக பண்டாரியும் விண்ணப்பம் செய்வார்கள். இந்த விண்ணப்பங்கள் தம்பிரான் படி வியாக்கியானத்தை கொண்டு அரையர்கள் சேவிப்பார்கள்.

இந்த விண்ணப்பங்களின் சுருக்கத்தை மட்டும் நாம் இங்கே பார்ப்போம். முழுவதுமாக அறிந்து கொள்ள கோயிலொழுகு புத்தகத்தை படிக்கவும்.

பெருமாள் அருளிச்செய்த பிரகாரம்-1:
தாம் தாயாரை காண வந்தால் தன்னை உள்ளே வரவேற்று, சிம்மாசனத்தில் அமர்த்தி உபசாரங்கள் செய்வீர். இன்று தன்னை பார்க்காமல், கதவுகளை மூடி, பூக்களை எறிந்து இப்படி அவமானம் செய்வது ஏன்?

தாயார் அருளிச்செய்த பிரகாரம்-1:
பெருமாள் எப்போதும்போல் எழுந்தருளியிருப்பது மெய்யானால்:

திருக்கண்கள் சிவந்து இருப்பானேன்?
கஸ்தூரி திலகம் கலைந்து இருப்பானேன்?
திருவதரம் வெளுத்து இருப்பானேன்?
திருமேனியில் குங்குமப் பொடி இருப்பானேன்?
தாம் நேற்று எழுந்தருளிய இடத்திற்கே செல்லலாம் என நாச்சியார் அருளிச்செய்த பிரகாரம்

பெருமாள் அருளிச்செய்த பிரகாரம் -2
திருக்கண்கள் சிவந்து இருப்பானேன்?

தாம் “செங்கோலுடைய திருவரங்கச் செல்வனார்” ஆதலால் இரவு முழுவதும் தூக்கமின்றி ஜெகத்ரக்ஷகம் செய்ததால் கண்கள் சிவந்து இருக்கிறது!

கஸ்தூரி திலகம் கலைந்து இருப்பானேன்?

சூரியனின் கிரணங்கள் காரணமாக கஸ்தூரி திலகம் கலைந்து இருக்கு!

திருவதரம் வெளுத்து இருப்பானேன்?

அசுரர்களை அழிக்க பாஞ்சஜன்யதை பயன்படுத்தியதால், ஆதரம் வெளுத்து இருக்கு!

திருமேனியில் குங்குமப் பொடி இருப்பானேன்?

தேவதைகள் புஷ்பங்கள் தூவியதால் குங்குமம் திருமேனியில் இருக்கு!

தான் வேட்டையாடி வரும்போது திருமங்கையாழ்வார் வந்து தன் பொருட்களை களவாடினார். அவரை திருத்தி, பின்னர் ஆபரணங்களை கருவூலத்தில் சேர்த்தோம். அப்போது பார்த்தால் கணையாழி தொலைந்து இருக்கு! ஆகையாலே தான் கொடுக்கும் புஷ்பத்தை ஏற்றுக் கொண்டு தன்னை உள்ளே அழைக்கச் சொல்லி பெருமான் அருளிச்செய்த பிரகாரம்.

தாயார் அருளிச்செய்த பிரகாரம்-2:
கணையாழி மோதிரம் காணாமல் போனது மெய்யல்ல. தாங்கள் அதிகாலையில் கிளம்பி உறையூர் சென்று அங்கு நாச்சியாருடன் சேர்த்தி கண்டருளிய தடயங்கள் இவை. இந்த பொய்களை ஏற்க முடியாததால், நேற்று எழுந்தருளிய இடத்திற்கே இன்றும் செல்லலாம் என்று நாச்சியார் அருளிச்செய்த பரிகாரம்.

பெருமாள் அருளிச்செய்த பிரகாரம் -3
நாம் உறையூரை கண்ணாலும் கண்டதில்லை காதாலும் கேட்டதில்லை!
யாரோ சிலர் சொன்னதை நம்பி தன்னை அவமானம் செய்கிறீர். ஆகவே தான் கொடுக்கும் புஷ்பத்தை ஏற்று உள்ளே அழைக்கச் சொல்லி பெருமாள் அருளிச்செய்த பிரகாரம்.

இதை அறிந்து தான் ஆண்டாள் பாடினால் போலும்

“ஏலாப் பொய்கள் உறைப்பான இங்கே போதக் கண்டீரே”

தாயார் அருளிச்செய்த பிரகாரம்-3:
ஏழாம் திருநாள் அன்று இங்கு எழுந்தருளிய போது நாங்கள் செய்த உபசாரங்களை சரியாக ஏற்றுக் கொள்ளாமல், தாங்கள் மிகவும் அசதியாக இருந்தீர். நாங்கள் பதறிப்போய் தங்கள் திருமேனிக்கு என்ன ஆயிற்று என்று தங்கள் அந்தரங்க பரிஜனங்களிடம் விசாரித்ததில் தாங்கள் உறையூர் சென்று வந்த விஷயம் அறிந்தோம்! ஆகையாலே தாங்கள் எதுவும் சொல்ல வேண்டாம் என்று நாச்சியார் அருளிச்செய்த பிரகாரம்.

பெருமாள் அருளிச்செய்த பிரகாரம் -4:
இந்த சந்தேகங்கள் தீர தான் சில பிரமாணங்கள் செய்து தருகிறோம்.

கடலில் முழுகுகிறோம்
அக்னிப்பிரவேசம் செய்கிறோம்
பாம்பு குடத்தில் கை இடுகிறோம்
இப்படிப்பட்ட பிரமாணங்களை ஏற்று உள்ளே அழைக்க சொல்லி பெருமாள் அருளிச்செய்த பிரகாரம்.

தாயார் அருளிச்செய்த பிரகாரம்-4:
கடலில் முழுகுகிறோம் என்று சொல்ல வந்தீரே!!

பிரளய காலத்தில் சகலத்தையும் வயிற்றில் வைத்து ஒரு ஆலிலையில் துயின்ற உமக்கு சமுத்திரத்திலே முழுகுவது அருமையா?

அக்னி பிரவேசம் செய்கிறேன் என்று சொல்ல வந்தீரே!!

பிரம்மாவின் வேள்வியில் ஆவிர்பவித்த உமக்கு அக்னி சுடுமோ?

பாம்புக் குளத்தில் கட்டுகிறோம் என்று சொல்ல வந்தீரே!!

திருவனந்த் ஆழ்வான் மீது திருக்கண் வளர்ந்திருக்கிற உமக்கு பாம்பு குடத்தில் கைவிட்டால், பாம்பு கடிக்குமா?

இப்படிபட்ட பிரமாணங்களை ஏற்கும் இடத்திற்கு செல்லவும் என்று நாச்சியார் அருளிச்செய்த பிரகாரம்.

பெருமாள் அருளிச்செய்த பிரகாரம் -5:
நாம் சொல்லும் பிரமாணங்களை பரிகாசம் செய்து, சற்றும் இறக்கம் வராமல் கோபத்தில் – “கண்கள் சிவந்து இருக்கு!” “திருமுகம் கருத்து இருக்கு!” இப்படி இருந்தால் நமக்கு என்ன கதி இருக்கிறது?

அழகிய மணவாளன் தாயார் சன்னதி வாசலில் தள்ளுப்பட்டு கொண்டிருக்கிறார் என்ற அவமானம் தங்களுக்கே!! எனவே தன்னை அழைக்கச் சொல்லி பெருமாள் அருளிச்செய்த பிரகாரம்.

தாயார் அருளிச்செய்த பிரகாரம்-5:
தாம் ஆண்டுக்கு ஒருமுறை இப்படி வழிமாறி சென்று இங்கு மீண்டும் வந்து பிரமாணங்கள் செய்வதை பொறுக்க மாட்டோம். நம்மாழ்வார் வந்து மங்களமாக சொன்னதால் பொறுத்தோம்! பொறுத்தோம்!! பொறுத்தோம்!!!
பெருமாளை உள்ளே எழுந்தருளச் சொல்லி நாச்சியார் அருளிச்செய்த பிரகாரம். 

பெருமாளின் மாலை, சந்தனம், சால்வை ஆகியவை தாயாருக்கு கொடுக்கப்படும். தாயாரிடம் அனைவருக்கும், பெருமாளிடம் பண்டாரிக்கும் விண்ணப்பம் செய்ததற்காக மரியாதை வழங்கப்படும்.

முதல் ஏகாந்தம்: பெருமாள் பல்லக்கில் தாயாரை பார்த்தபடி நேராக எழுந்தருள்வார். ஏகாந்தத்தில் நாயனம் சற்று நேரம் வாசிக்கப்பட்டு பின்னர் முதல் ஏகாந்த தளிகைகள் சமர்ப்பிக்கப்படும்.

பெருமாளும் தாயாரும் சேர்த்தியில் நமக்கு சேவை சாதிப்பார்கள்

இரவு சின்ன பெருமாள் கொள்ளிடத்திற்கு சென்று தீர்த்தவாரி கண்டு, பின்னர் தாயார் பெருமாளுடன் சேர்த்து எழுந்தருளுவார்.

ஸ்வாமி இராமானுஜர் சரணாகதி அனுஷ்டித்த கத்யத்ரய கோஷ்டி
ஸ்வாமி இராமானுஜர் இதே பங்குனி உத்திர நாளில் சேர்த்தியில் சரணாகதி அனுஷ்டித்தார். கத்யத்ரயம் சொல்லி இருவரிடம் சரணாகதிஅடைந்தார். இதற்காக கத்ய த்ரயம் பாராயணம் செய்யப்படும். இதன் பின்னர் இரண்டாவது ஏகாந்தம் நடைபெறும்

பெருமாளுக்கும் தாயாருக்கும் ஏக சிம்மாசனத்தில் நடைபெறும் திருமஞ்சனம்
திருமஞ்சன நேரத்தில் வசந்தனுக்கு அருளப்பாடு ஆகும். அதன் பின்னர் 18 முறை பெருமாளுக்கும், தாயாருக்கும் ஈரவாடை (வஸ்திரம்) மாற்றி திருமஞ்சனம் நடைபெறும். உடையவர் திருக்கோஷ்டியூருக்கு ரகசியங்களை அறிய 18 முறை நடந்ததை எடுத்துக் காட்டுவதற்காக, இந்த திருமணத்தில் 18 முறை ஈரவாடை மாற்றப்படுகிறது.

இதன் பின்னர் மூன்றாவது ஏகாந்தம் முடிந்து தாயார் உள்ளே செல்ல பெருமாள் பிரிய மனமில்லாமல், தாயார் சன்னதி வாசலில் சற்று நேரம் நின்று பின்னர் கோரதTHதிற்க்கு எழுந்தருளுவார்.

 இந்தப் பதிவிற்கு முழுக்காரணம்
என் தோழி பி எஸ் சந்த்ரா.
அன்புடன் அனுப்பி வைத்தவளுக்கு மிக நன்றி. எனக்கு இந்தக்
கோயில் பரிபாஷை எல்லாம் தெரியாது. காணொளி கண்டிருக்கிறேன்.
நன்றி அன்பு சந்திரா.Thursday, March 25, 2021

அன்பு,பாசம் தபால் அலுவலகம்வல்லிசிம்ஹன்
அனைவரும் ஆரோக்கியமாக இணைந்திருப்போம்.

திண்டுக்கல்


இங்கே....

  ஆழ்வார்பேட்டை
இங்கு ஆரம்பித்த எழுத்துகள் அரிச்சுவடியிலிருந்து இன்று வலைப் பதிவு வரை தொடரும் எண்ணங்கள்.
அறியும் செய்திகள் ,தொடரும் நட்புகள்
எல்லாவற்றுக்கும் அடிப்படையான நம் தமிழ்.

1963,64,65,66  இந்த வருடங்கள் தபால் துறைக்கு என்னால் வருமானங்கள்
அதிகரித்தன என்று நான் பெருமையாகச் சொல்லிக்
கொள்வேன்.
1963இல் சென்னை வந்து பள்ளியில் சேர நினைத்து மீண்டும்
 திண்டுக்கல்லுக்கு வந்த போது
என் தோழிகளிடம் வாங்கிக் கொண்ட செல்லக் கோபங்கள்
கொஞ்ச நஞ்சம் இல்லை.
அந்த ஒரு வருடத்தை முடித்து சென்னை திரும்பி
கல்லூரியில் படித்த அந்த ஒரு வருடம்
தொடர்ந்து தொடர்பில் இருக்க 
உதவியது கடிதங்களே.

நட்பில் இருக்கும் போது எப்படி காலையிலிருந்து
இரவு வரை கணமும் பிரியாது
பேசிக்கொண்டிருந்தோமோ,
அந்தத் தோழமையைப் பிரிவது மிகக் கடினம்.

வாழ்க்கையின் அடுத்த கட்டம் நம்மை எல்லாவிதத்திலும்
பழக்கி விடுகிறது இரு கோடுகள் தத்துவம் போல
மகிழவைக்கும் நிகழ்வுகள், புதுத் தோழமைகள்
புதிய உறவுகள் வந்தாலும், அந்தப் பதினாறு வயதுvarai கூடவே வந்த பிம்பங்கள் அவ்வளவு
எளிதாக நம்மை விட்டு நகர்வதில்லை.


இப்பொழுது ஒரே ஒரு தோழி வாட்ஸாப்பில் 
தொடர்பில் இருக்கிறாள்.
பழையபடி மூச்சு விடாமல் பேச நேரம் இல்லை. 
எல்லோருமே மாறி விடுகிறோமோ.??

ஆனால் பெற்றோர் மாறுவதில்லை . எப்பொழுதும்
நம்முடன் யார் வடிவத்திலாவது
நிரூபித்துக் காட்டிக் கொண்டே இருக்கிறார்கள்.Tuesday, March 23, 2021

கடிதங்கள்.1

குடும்பம் ஆரம்பித்த பொழுது

எங்கள் வீட்டின் வீட்டுக்காரம்மா லக்ஷ்மி.என் அன்புத் தோழி.
நலன் விசாரித்து எழுதிய கடிதம். 1066
என் பள்ளித்தோழி ஆறுமுகத்தாய்,
திண்டுக்கலிலிருந்து இருந்து எழுதிய
உயிர்க் கடிதம். வருடம் 1965

பாட்டி எழுதின கடிதம்.1967
 பாட்டியின் பக்கத்து வீட்டு பகவதி மாமியும், ராமகிருஷ்ண மாமாவும்
நான் மதுரை வந்த பிறகு எனக்கு எழுதிய 
கடிதம்.1965
அப்பாவுக்கு உடல் நலம் இல்லாத போது
தாமதமாக அம்மா எழுதிய கடிதம். 
''நீ கவலைப் படுவாயே என்று சொல்ல வில்லை'':(       1969 year.
கொண்டு போய் விட அம்மா, மீண்டும் கொண்டு வந்துவிட பாட்டி.
அந்தக் காலம்1966
  அம்மாவின் அழகான கையெழுத்து.வல்லிசிம்ஹன்

Friday, March 19, 2021

Tasty Garam Masala |

கரம் மசாலா பொடி. இந்தியில் சொன்னாலும்
பொருட்களைச் சொல்வதால் புரிந்து கொள்ள 
முடிகிறது.
செய்யலாம்:)

போட்டாச்சு ஊசி.,,,........வல்லிசிம்ஹன்

கொஞ்சம் தாமதம் தான். இருந்தாலும் மிக வேகமாகத் தடுப்பூசி
போடுவது தொடர்கிறது.
ஃபைசர் தடுப்பூசியும் மடோர்னாவும் போடப் படுகின்றன.
நமக்கு வேண்டியதைச் சொல்லி பதிவு செய்து கொண்டால்

ஐந்து நாட்களுக்குள் மூன்று இடங்களில் கிடைக்கும்படி 
ஏற்பாடும் செய்து விட்டார்கள்.

நல்ல விதமாக ஆர்கனைஸ் செய்யப்பட்ட 
வணிக வளாகத்தில் ஆறடி ,ஆறடித் தொலைவில்
வரிசை துரிதமாக நகர, உள்ளே நுழைந்த 
இருபதாவது நிமிடம் வெளியே வந்தாகி விட்டது.

முகத்தில் அணிந்த கவசத்தை யாரும் கழற்றவில்லை.
பத்தடிக்குப் பத்தடியில்
உதவி செய்ய ஆட்கள். நம் வயது, இருப்பிடம் எல்லாவற்றையும் 
உறுதி செய்து கொண்டு ஏற்கனவே 
கொடுக்கப்பட்ட எண்கள் பிரகாரம் 
உட்கார வைத்து ஊசியும் போட்டு விட்டார்கள்.

உடனே எழுந்து சென்று குறிப்பிடப்பட்ட இடத்தில்
15 நிமிடங்கள் உட்கார்ந்து,  ஊசிக்கு ஏதாவது 
reaction  இருக்கிறதா என்று கவனித்துவிட்டு 
எழுந்து வந்துவிடலாம்.

மிக வலித்தால் இந்த ஊர் வலி நிவாரணி எடுத்துக் 
கொள்ளலாம் என்று முதலில்  சொல்லி விட்டார்கள்.
இன்னோரு செயலி வழியாக நாம் எப்படி இருக்கிறோம் 
என்று விசாரித்துக் கொண்டு
48 மணி நேரத்தில் சரியாகி விடும் என்றும் 
சொல்லி இருக்கிறார்கள்.
இப்பொழுதுதான் வலி தெரிகிறது.
பரவாயில்லை இது பெரிய விலை இல்லை.
கடவுள் என்றும் காப்பாற்றுவார்.

நம் ஊரிலும்  எல்லோருக்கும் சீக்கிரமே
தடுப்பூசி கிடைக்க வேண்டும். 
இங்கே 16 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஏப்ரில் 1 ஆம் தேதி
முதல் தடுப்பூசி கொடுக்கப் படுவார்கள்.
நலமுடன் இருப்போம்.

Wednesday, March 17, 2021

80, 90 களின் நினைவுகளில்.....

85 களின் நினைவுகளில்.....

சில குழந்தைகள் கல்லூரிகளில் சேர்ந்தார்கள். சிலர்
 பள்ளியில் இருந்தார்கள்.

வரிசையாக வீட்டுக் குழந்தைகளும் தோழிகளின் குழந்தைகளும் 
பெரியவர்கள் ஆகிக் கொண்டிருந்த காலம்.

வெளி மானிலங்களுக்குச் சென்று படித்த 
சிங்கத்தின் அக்கா மகன்,
சில நாட்கள் நம் வீட்டுக்கும் வருவான்.
அவனுக்கு மிகப் பிடித்த பாடல்
நம் கீதா சாம்பசிவம் முந்தைய பதிவில் சொல்லி
இருந்த ''சிட்டி ஆயி ஹை '' பாடல். தான்.
வெளினாடு போகப் போகும் தன்னை நினைத்து

சோகப்படும் அன்னையின் நினைவு வர அவன் கண்களும்
கலங்கும்,
''மாமி, அம்மாவிடம்  நிறையப் பேசுங்கள்''
என்றே சொல்லிச் சென்றான்.
இன்றும் பேரன் பேத்திகளோடு நன்றாக இருக்கிறான்.

அன்புத் தோழி  கீதா சாம்பசிவம்
சொல்வது போல எத்தனையோ தபால்,எத்தனையோ
கடிதங்கள் நம் வாழ்வைச் செழிப்பாக்கின.

தாயின் 3 பக்கக் கடிதத்திற்கு ஒரு பக்கத்தில்
பதில் சொல்லும் புத்திர, புத்திரிகள்:)

புதிதாக மணம் புரிந்து அமெரிக்கா சென்ற மகளின் கடிதத்தைப் பிரிக்கக்
கூட மனம் இல்லாமல்
கண்ணீர் விட்ட அம்மாவையும் எனக்குத் தெரியும்.
நான் 10 வருடங்கள் கழித்து இதே போலக்
குழந்தைகளின் குரலுக்கும்
கடிதங்களுக்கும் காத்திருக்கப் போகிறேன் என்று அப்போது தெரியாது.

வெளியூரிலிருந்தாலும் உள்ளூரிலிருந்தாலும்

ஒரே ஒரு ஃபோன் செய்ய மாட்டாளா, என்று ஏங்கிய என் பெற்றோரையும்
நினைவில் பதிகிறேன்.
தன் வெற்றிகளை அன்புடன் பகிர்ந்து கொண்ட
பெரிய தம்பி எல்லாத்தையும் அந்த தபால் அட்டையில் எழுத முயற்சிப்பான்.
சின்னவனுக்கோ அவ்வளவு பொறுமை கிடையாது,
கோவையிலிருந்து பஸ் ஏறிப் பார்க்க வந்து விடுவான்.

அவர்களைப் பார்த்துப் பார்த்தே எங்கள் குழந்தைகளும் 
பொறுப்புடன் திகழ்கிறார்கள்.

ஒருத்தருக்கு ஒருத்தர் மனம்விட்டுப் பேச வேண்டும். மற்றவர்களின்
சுகதுக்கங்களுக்கு  சந்தோஷமும் ஆதரவும்
சொல்ல வேண்டும்.
இணையத்தின் இணையற்ற தபால்காரர்
நம் வலைப் பதிவுகள்.

என்றும் எல்லோரும் நலத்துடனும் , மகிழ்ச்சியுடனும் இருக்க 
இறைவன் அருளட்டும்.

வாழ்க இந்தியத் திரு நாடு


என்றும் தாய்த் திரு நாட்டைப்
பெற்ற தாயென்று கும்பிடுவோம் பாப்பா.

Tuesday, March 16, 2021

raj kachori recipe | In English:)

சுவைத்து சாப்பிட வாழ்த்துகள்.:)

கனாக் கண்டேன்.......

வல்லிசிம்ஹன்

மீண்டும் ஒரு பழைய கதை.
அவசியமா என்று பார்த்தால். நடந்ததே மீண்டும் திரும்புவது போலத்
தோன்றுகிறது.

பூர்வ ஜன்ம நிகழ்வுகள் போலக் கனவுகள்
தொடர்கின்றன. இதற்கு என்ன அர்த்தம்?
பள்ளிப் பருவத்திலோ,  20 வருடங்கள் கழித்து
 மற்ற  தபால்வழித் தொடர்கல்வியில்
தேர்வுகள் எழுதும்போதோ
உண்மையாக அவதி இல்லை.
அதெல்லாம் முடிந்தே 37 வருடங்கள் ஓடிவிட்டன.
இன்னும் தேர்வு நடக்கும் இடத்துக்குப்
போகத்தடையோ
2,கையில் எழுதும் தாள் கிடைத்து என்ன எழுத என்று திணறுவது 
போலவும்,
3, படித்தது எல்லாம் மறந்து விட்டது மாதிரியும்
வரும் கனவுகள்:)

இது பரவாயில்லை. 
அம்மாவுக்கு உடல் நலம் சரியில்லை 
என்று தம்பி ஃபோன் செய்வது  ஒரு கனவு.
சட்டென்று எழுந்துவிடுவேன். அம்மா இப்போது 
இல்லை என்பது கூட நிம்மதி தருமா?
இல்லை அந்த மாதிரிக் கவலைப் பட இப்போது
தெம்பில்லையா?

சிங்கம் எங்கேயோ சென்றிருக்கும் இடத்தில்
அதென்ன இடம்,  ஆங்க்....கீழக்கட்டளை.
அங்கேயிருந்து தொலை பேசி  'ரேவ், கைகால் ரொம்ப
வலிக்கிறது. '' என்று சொல்லி அந்த கனவு நடுவில்
தொங்குகிறது.
இதற்கு நடுவில்  பெரிய தம்பி 5 ஆம் தேதிக்கப்புறம்
தொலை பேசவில்லை என்று சிங்கத்திடமே 
சொல்லிப் புலம்புகிறேன்.

தூங்கவே பயமாகிவிடும் சில நாள்.
இது எல்லாமே நாம் எதுவுமே செய்ய முடியாமல்
மாட்டிக் கொண்ட வேளைகளை நினைவு
படுத்துகிறது. என்று என்னை நானே சமாதானம் செய்து கொண்டு
மீண்டும் தூங்க முயற்சிக்கிறேன்.

நிறைய நல்ல பாடல்களைக் கேட்கிறேன்.
இதோ நட்புகளுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
கடவுளிடமும் பாபாவிடமும்  முறையிட்டு
பிரார்த்தனை செய்து மீண்டு விடத் தீர்மானிக்கிறேன்.

உங்கள் யாராவதுக்கு இது போலச் சங்கடங்கள்
இருக்கின்றனவா என்று அறிய ஆசை.
எல்லோரும் நலமாக இருக்க வேண்டும்.Sunday, March 14, 2021

மலேஷியா வாசுதேவனின் குரலில்....


இவரின் குரல் மறக்க முடியாது. அதன் திண்மை
வேறு பட்டு ஒலித்தது.

எஸ்பி பியின் இனிய இளைய குரல் ஒரு புறம்.
டி எம் எஸ் குரலில் மயங்கியவர்களுக்கு அது 
ஒரு மாற்றம். 
கூடவே ஒலித்து வந்தது மலேஷியா வாசுதேவனின் 
திடமான  ஒலி.
ஒரு டி எம் எஸ்ஸுக்கு ஒரு சீர்காழி, ஒரு 
பி பி ஸ்ரீனிவாஸ் மாதிரி.

70 களில் எல்லாம் இசைக் கோலம் தெளித்த
இவர்களின்  இசைச் சேவை
மறக்க முடியாதது. நன்றி வாசுதேவன் சார்.

Friday, March 12, 2021

நிறைவு தரும் பாடல்கள்.

இந்தப் பாடல்களின் இசையும், 
படம் எடுக்கப் பட்ட விதமும், தேர்ந்த
நடனமணிகளின் முக பாவங்களும்
அலுப்பதே இல்லை.


Thursday, March 11, 2021

ஆவாரம் பூவும் 2021 ஆம் ஆண்டும். .............தமிழ்த் திரைப்படங்களை அடிக்கடி பார்க்க
முடிவதில்லை. நஷ்டம் இல்லை.

இருந்தாலும் பழைய படங்களும்,பாடல்களும்
சுவையாகத் தான் இருக்கின்றன.
இந்தப் பாடல் ஆவாரம் பூ வரும் வரை,
அந்தச் செடிகளைப் பார்த்திருந்தாலும் இதனை அழகான
வண்ணத்தில் கண்டதே இல்லை. இது அந்தக்காலம்.
இணையம் வந்த பிறகு பலப்பல முன்னேற்றம்.

உலகின் எந்த மூலையிலிருந்து அடுத்த
கண்டத்திற்குப் பேசலாம்.
55 வருடங்களுக்கு முன் தபால் அலுவகத்தில்
டிரங்க் கால் பதிவு செய்து விட்டுக் காத்திருக்க
வேண்டும்.நம் வீட்டுக்கேத் தொலைபேசி
வந்த பிறகும் மூன்று மணி நேரம்
காத்திருந்தால் தான்  சேலத்துக்கோ, திருச்சிக்கோ
பேச முடியும்.
பேரன் பகிர்ந்து கொண்ட ஒரு செய்தி
இதையெல்லாம் நினைக்க வைத்தது.
முக நூலின் மார்க்,
டெலிபோர்டேஷன் முறையில் இருவர்
தொடர்பு கொள்ள ஆராய்ச்சியில் இறங்கி இருக்கிறாராம்.
Augmented Reality  !!!!!இது சாத்தியப்படுமாம். பேரன் முக நூலில் ஆறு மாதங்கள் 
பயிற்சியாளராக இருந்ததில் அங்கே 
தோழர்கள் உண்டு.
வர்ச்சுவல் ரியாலிட்டி நாம் பார்த்திருக்கிறோம்.
தூர்தர்ஷனில் கூட இதை உபயோகித்து ஞாயிறு
அன்று ஒரு தொடர் ஒளி பரப்பினார்கள்.இதுவும்
25 ,30 வருடங்களுக்கு முந்தியோ? நினைவில்லை.

இப்போது வந்திருக்கும் செய்தி,
இந்த செயலியின் உதவியுடன்,நான் ஸ்ரீரங்கத்தில் 
நம் கீதா சாம்பசிவம் வீட்டு நாற்காலியில்
உட்கார்ந்து பேசலாம். அதே போல்
கீதா இங்கே என் முன் இருப்பார்.
அதாவது தோற்றம் மட்டும். எப்படி இருக்கும் என்று நினைத்துப்
பார்க்கிறேன்.
நன்றாகத் தான் இருக்கும்.:)
வெறும் 'மன்னவனே அழலாமா' பார்த்தே வியந்த பாமர
மனம். 
இந்த விஞ்ஞான முயற்சியைக் கற்பனையில்
நினைத்தே மகிழ்வாக இருக்கிறது.

Tuesday, March 09, 2021

சொதப்பலானாலும் ஒரு ருசிதான்:)

பாதாம் பிஸ்தா,பால், நெய் எல்லாம் ஒவ்வொரு கிண்ணம்
கடைசியில் அல்வா வந்தது. ஸோஹன் இல்லை:)
வறுத்து முடித்ததும் சர்க்கரை நெய்  சேர்த்து
கோதுமை மாவை நெய்யில் வறுத்துக் கொண்டு

வல்லிசிம்ஹன்
ஒரு கப் சர்க்கரை.

எல்லாம் சரிதான் சோஹன் அல்வா சொல்லியாச்சு.
நமக்கும் சரியா வந்தால் தானே நம் வார்த்தை நிச்சயமாகும்னு.... ஒரு தடவை, 
இரண்டு தடவை செய்தேன். வந்தது என்னவோ அல்வாப் பதம தான். முறுகவும் இல்லை.
கடிக்கவும் இல்லை.

காத்திருந்து அவள்(  Sheethal) நடை பயிற்சிக்குச் செல்லும் வேளையில் 
பிடித்து விட்டேன்.
ஆறடி தள்ளி நின்று அவள் சொன்ன பதில்.

நெய் விட்டு செய்யக் கூடாதாம்.
எண்ணெய் விட்டு செய்ய வேண்டுமாம்.

தலையில் தட்டிக் கொண்டேன்.:(
சொல்வதை நேராகச் சொல்லக் கூடாதோ?

ஞாயிறு செய்த அல்வாப் படங்களைப் 
பதிவிடுகிறேன்.
ஒரு கிண்ணம் கோதுமைமாவை பழுப்பு நிறத்தில் வறுத்துக்கொண்டு சர்க்கரை,
நெய், பாதாம்,பிஸ்தா பருப்புகளைத் தாராளமாகத் தூவினால்

அடுப்பில் வாணலியிலிருந்து அழகாகச் சுருண்டு வந்து விட்டது.
முறுகலாக ஆகவில்லை.
ஏக தேச வரவேற்பைப் பெற்றாலும் எனக்கு வருத்தம் தான்.

இந்த மாத சர்க்கரைக் கோட்டா ஓவர்.
இனி அடுத்த மாதம் தான். பார்க்கலாம்.

தப்பு ரெசிப்பி கொடுத்ததற்கு மன்னிக்கவும்.
வாழ்க வளமுடன்.😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥

பன்னீர் புஷ்பங்கள்Kuzhalappam || Bakery Snacks || Kerala Special Tea time snack Recipe in ...

Monday, March 08, 2021

பழைய கதை.2018

வல்லிசிம்ஹன்M onday, March 05, 2018
குளியலறையில் வயதானவர்கள் மயங்கி விழுவதேன்.
 எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

குளியலறையில் வயதானவர்கள் மயங்கி விழுவதேன்.

பல காரணங்கள்.
1,
சர்க்கரை அளவு ..அதிகமாக இருப்பதோ ,குறைவாக இருப்பதோ.
2,
இரத்த அழுத்தம்  அதிகம் ,அல்லது குறைவு,
3
முந்தின நாள் ஜீரணம் சரியாக இல்லாமல், இழந்த நீர்ச்சத்து,
4,
தூக்க மருந்து உட் கொள்பவர்களின் தூக்கம் தடை படும்போது.

5, இருமலுக்கான ஸிரப் அதிக அளவில் உட்கொண்டு
ஒருவித மயக்கத்தில் இருப்பது.

6,கடைசி எல்லோருக்கும் பொருந்தாது.
Aneurism...முன்பே தலையில் அடிபட்டவர்கள், வேறு விதமான
சங்கடங்களால் ,உடலில், ரத்தத்தில் உலவும் விபரீதமான
இரத்தக் கட்டி.
    இனி விளைவுகளைப் பார்க்கலாம்.
இவை எல்லாமே மயக்கத்தில் கொண்டு விடுவதில்லை.
பகலில் விழுந்துவிட்டால் ,சத்தம் கேட்டு வந்து காப்பாற்றப் படும் சாத்தியம்.

இரவாக இருந்தால் விழுந்தபிறகு எங்கிருக்கிறொம் என்று தெரியாத நிலை.
இறைவன் அருளில் எனக்கு பத்து நிமிடங்களில் விழிப்பு வந்ததாக நினைக்கிறேன்
உடல் அசைக்க முடியவில்லை.  என் வாழ்க்கையில் இரது வரைக் காண்பிக்காத தைரியம் எங்கிருந்தோ வந்து ,குளியலறையின் வாசலுக்குக் கொண்டுவிட்டது.

வைத்தியர் சொன்ன அறிவுரை.
எப்பவும் அலர்டாக இருக்க ஆக்சிஜன் தேவை. நிதானத்தைக் கடைப்பிடியுங்கள்.
கழிப்பறை வேலை முடிந்ததும் உடனே எழும்பவேண்டாம். ஆஸ்வாசப் படுத்திக்கொண்டு,
பக்கத்தில் இருக்கும் நகராத பொருட்களைப் பிடித்து எழுந்து நின்று,
 தீர்க்கமாக மூச்சு விடவேண்டும்.
பிறகு மெதுவே நடந்து வெளியே வரலாம்.

பாத்டப் எங்காயாவது தலையில் இடித்திருந்தால் ரத்தக் காயம் நிச்சயம். உடனே
உதவி தேவை.
அடுத்த ஸ்டெப் எமெர்ஜென்ஸி போவதுதான். எங்கே அடிப்பட்டிருக்கிறது, எலும்பு முறிவு இருக்கிறதா,. ஸ்கான் அவசியமா என்றேல்லாம் வைத்தியர்கள் தீர்மானிக்க வேண்டும்.

வயதானவர்களின் குளியறையில் த்ண்ணீர் தேங்கக் கூடாது. இந்த ஊரில் அந்தப்பிரச்சினை இல்லை.
நம் ஊரில் உண்டு.
டாய்லெட் இருக்குமிடத்தைச் சுற்றி என் மகன் கம்பி போட்டு வைத்து இருக்கிறான் ..சென்னையில்.
குளிக்கும் இடத்திலும் அவ்வாறே.
கீழே வழுக்காத தரை.

தினம் மூச்சுப் பயிற்சி.
நிதானமான அழுத்தமான நடை,
அடிக்கடி நீர் பருகுதல். படுக்கும் முன் இதமான பால்.

அதிக வருத்தம் ,கவலை எல்லாவற்றையும் ஒதுக்கிவிட்டு,கடவுள் பிரார்த்தனை.

என்க்குத்தெரிந்ததைச் சொல்லி இருக்கிறேன். மருத்துவர்கள் இன்னும் அழகாகச் சொல்வார்கள். நலமே வாழ்க..

Fainting during urination (micturition syncope): What causes it? - Mayo ...
https://www.mayoclinic.org/diseases-conditions/vasovagal-syncope/.../faq-20058084
Micturition (or post-micturition) syncope is fainting during or, more commonly, immediately after urination due to a severe drop in blood pressure. Micturition syncope is most common in older men and usually occurs at night after a deep sleep. The exact cause of micturition syncope isn't fully understood.

#dedicated to my loving husband Singam simmu.
Posted by வல்லிசிம்ஹன் at 9:00:00 PM

Sunday, March 07, 2021

மழை!!!!!பார்வைகளின் பொருள்

என் தோழி ஒருவருக்கு மழை என்றால் 
பயம். சென்னை வெள்ளத்தில் மாட்டிய அனுபவம்.:(

மழைக்காலங்களில் சென்னை அழகாக இருப்பது போலத் தோன்றும்.
அதாவது வெகு காலத்துக்கு முன்.

கார் மாதிரி வண்டியில் போகிறவர்களுக்கு அவ்வளவு கவலை 
இல்லை. இரு சக்கிர வாகனங்களில் 
செல்வோருக்கும், பஸ்ஸில் பள்ளி சென்று வரும்
குழந்தைகளுக்கும் மிக மிக சிரமம்.

இந்த மழைக்குப் பள்ளிக் குழந்தைகளைக் கண்டால்
ஒரே உத்சாகம். 
பள்ளி மூடப்போகும் சமயத்தில் கொட்டித் தீர்க்கும்.

நான் குடையோடு பஸ் நிற்கும் இடங்களுக்குச் சென்று விடுவேன்.

சாலையில் போகிறவர்கள் எல்லாம் நம் வீட்டு வாசலில் அப்போதிருந்த முகப்புக்குக் கீழே நின்று கொள்வார்கள். நேற்று இங்கே பெய்த மழை கொண்டு வந்த
நினைவுகள்:)
Golden Chariot - National Geopraphic Channel

Friday, March 05, 2021

ஸோஹன் ஹல்வா செய்முறை.........

வல்லிசிம்ஹன்


பக்கத்து வீட்டில் இருக்கும் ஷீதல்  , இந்திய கான்பூரில்
இருந்து வந்தவர்.
வயதான மிக மிக வயதான மாமனார் ,மாமியார்.

28 வயது மகள், 20 வயதில் இன்னோரு மகள்,
கடைக்குட்டி செல்ல மகன்.
வியாபாரம் செய்யும் கணவன். 
இவர்கள் அனைவருக்கும் சமையல் செய்து விட்டு

ஒரு பெரிய கடையில் வேலை
பார்க்கவும் கிளம்பி விடுவார்.

அவர்கள் வீட்டில் ஒரு விருந்துக்குப் போயிருந்தோம்.
அப்பொழுதுதான் ,வெகு நாட்கள் முன்பு
ருசி பார்த்திருந்த சோஹன் ஹல்வாத் துண்டங்களைப்
பார்த்தேன்.
நாங்கள் சேலத்தில் இருக்கும் போது
அங்கே இருக்கும் அகர்வால் ஆர்யபவன் ஹோட்டலிலிருந்து
சிங்கம் வாரத்துக்கு ஒரு முறை
ஒரு பெரிய டின் டப்பாவில் வாங்கி வருவார்.
12 எண்ணமாவது இருக்கும்.
அப்போதெல்லாம் எதுவும் சாப்பிடத் தடை இல்லையே.

மூன்றே நாட்களில் காலி செய்து விடுவேன்.
பாவம் சிங்கம், வாங்கி வைத்த கையோடு வேலை வந்து விடும். திரும்பி வரும் வேளையில்
இரண்டு மீதி இருக்கும்.
களைப்பில்
கொஞ்சம் ருசி பார்த்துவிட்டு வைத்துவிடுவார்.
குழந்தைகள் இருவருக்கும் 
இந்த அல்வாத்துண்டை  நறுக்கித் துண்டுகளாகக் கிண்ணத்தில் வைத்துக் 
கொடுப்பேன். நெடு நேரம் சுவைப்பார்கள்.


கிட்டத்தட்ட 50 வருடங்களுக்குப் பிறகு
இந்தத் துண்டங்களைப் பார்த்தேன்.
ஹல்வா என்பது பெயர் மட்டில் தான். இது டாஃஃபி
மாதிரி கடிக்கக் கடினமாக இருக்கும்.
வாயில் போட்டவுடன் கரைந்து விடும்.


ஷீதல் இந்த அல்வா செய்முறையை எளிதாகச் சொன்னாள்.
 முந்திய வாரம்  அவர்கள் வீட்டுக்கு மைசூர் பாக்
கொடுத்து விட்டிருந்தேன்.

இப்போது எனக்கு ஞாபகப் படுத்தினாள்.
கைவிடாமல் Myசூர் பாகு கிண்டி 
தட்டில் கொட்டினதை மாதிரி
இந்தக் கோதுமை மாவால் செய்த அல்வாவைச் செய்ய வேண்டும் என்றாள்.
எனக்குப் பழைய காலத்து செங்கல் மைசூர்பாக்  ஜோக்குகள்

நினைவு வந்து தொலைத்தது:)

தேவையான பொருட்கள்...
1, ஒரு கப் கோதுமை மாவு,
2,ஒரு கப் பால்,
ஒரு கப் நெய்,
ஒரு கப் சர்க்கரை,
100 க்ராம் நறுக்கிய பாதாம், பிஸ்தா,முந்திரி பருப்புகள்,
1 கப்  தண்ணீர்
ஒரு டப்பா குங்குமப்பூ,
கொஞ்சம் ஏலத்தூள்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

ஷீதல் செய்த முறை.

ஒரு அடி கனத்த பாத்திரத்தில் கோதுமை மாவை சிவக்க வறுக்கணும்.
2, அதை எடுத்துவிட்டு  ஒரு   கப் ஜலத்தில்
ஒரு கப் சர்க்கரயைப் போடவேண்டும்.சேர்ந்து கொதித்து கிட்டத்தட்டக் கம்பிப்பாகு பதம் வந்த பிறகு


அதனுடன் பாலையும் சேர்த்துக் கொதித்து வரும்போது
இறக்கி ஒரு மஸ்லின் துணியில் வடித்துக் கொண்டு
மீண்டும் அடுப்பில் ஏற்றி, குங்குமப்பூவை சிறிது பாலில்
கரைத்து விட்டு,
கோதுமை மாவை மெது மெதுவே தூவிக் கொண்டே கிளற
வேண்டும்.

கோதுமை மாவும் சர்க்கரையும் கெட்டியாகும் போது,பாதாம், பிஸ்தா
முந்திரித் துண்டுகளையும் ஏலத்தூளையும்
சேர்க்க வேண்டும்.

இது சேர்ந்து வரக் கொஞ்சம் நேரம் பிடிக்கும் 
பொறுமை தேவை,
ஒரு திடமானத் திட்டத்துக்கு வந்தவுடன்
நெய்யை மெது மெதுவே சேர்க்க வேண்டும்,
அல்வாக் கெட்டி முறுக ஆரம்பிக்கும். 
விடாமல் கிளறி அது பொங்கும் நிலைக்கு வந்தாலும்
மீண்டும் நெய் விட்டு நல்ல மணம் வந்ததும்,
ஒரு நெய் தடவிய தட்டில் கொட்டி வைத்தால்
பத்தாவது நிமிடம்
 கத்தியால் துண்டு போடலாம். 
நல்ல பழுப்பு நிறத்தில்,பளபளக்கும் நெய்யுடன் சுவையான
அல்வா தயார்.
கோதுமை அல்வா அப்படியே வாயில் வழுக்கிக் கொண்டு போகும்.


இந்த சோன் அல்வாவுக்கு
 பல் வேண்டும் கடிக்க.
ஆனாலும் ருசி ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம். சொல்லி முடியாது.
அந்த நெய் வாசனையோடு 
பருப்புகள் நறனறவென்று நொறுங்க
சாப்பிடும் வைபவமே தனி ருசி!!

சாப்பிடும் போது என் அன்புக் கணவரையும் 
வாழ்த்தி சாப்பிடுங்கள். நன்றி.காலை 8மணி முதல் பந்தி சாப்பாடு - 82 வருட வைஸ்யா மாடர்ன் ஹோட்டல்,salem - MSF

சேலம் ஹோட்டல். இங்கிருந்து பருப்புப்பொடி, பூண்டுப்பொடியை  4 வருடங்கள் வாங்கி சுவைத்து அனுபவித்தோம்.
மிக மிக நன்றி. அதே போல சோஹன் அல்வா. நெய்யில்
செய்தது. இன்னும் அது போல சாப்பிடவில்லை.
81ஆம்  வயது பூர்த்தி செய்யும் அருமை சிங்கத்துக்கு 
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
எங்கிருந்தாலும் தன் குடும்பத்தை அவர் நன்றாக வைத்திருப்பார்
என்பதில் எனக்கு ஒரு சந்தேகமும் கிடையாது.

இனிய 81 ஆம் பிறந்த நாள் வாழ்த்துகள்.


இந்தப் பாடல்களை அனுப்பி வைத்தவர்கள் பேத்திகளும் ,பேரனும். மார்ச் 5 ஆம் தேதி தாத்தா பிறந்த நாளுக்கு
நினைவாக எனக்கு அனுப்பி வைத்த செல்வங்களுக்கு மிக மிக நன்றி.
அதே சமயம் அவர்கள் வளர்ந்து விட்டார்கள் என்பதையும் உணர்த்தியது இந்தப் 
பாடல்கள்.

நிறைவான வளத்துடனும் நீண்ட ஆயுள், ஆரோக்கியத்துடன்
எங்கள் ஆசிகளுடன்
நாங்கள் பெற்ற செல்வங்கள் ,இன்னும் எல்லோரும்
என்றும் நலமுடன் இருக்கப் பிரார்த்தனைகள்.

Thursday, March 04, 2021

Sekar : The Jawa Doctor | Bullet & Vintage Bikes Comparison | Interview

வீட்டுக்குள் நிற்கும் ஜாவா எண்1387  நினைவில் வந்து 
நிற்கிறது.சிங்கத்தைப் போலவே அதுவும் உழைத்துக் கொண்டே இருந்தது. அந்தப் பதின்மூன்றாம் தேதியும்  சாயந்திரம் 6 மணிக்குக் கூட   அவரை அழைத்துக்  கொண்டு வெளியே 
போய் வந்தது. வாழ்க்கையின். நல்ல நினைவுகளில் நம்முடன்  வந்து கொண்டிருக்கின்றன!நேற்று
சிங்கத்தின் அக்கா (87). நல்ல முறையில். சந்தோஷமாகப் பேசிக் கொண்டிருந்த 
மணித்துளிகளைப். பற்றிப் பகிர்ந்து கொண்டார். எங்கிருந்தாலும்  சிங்கம் நலமாக இருக்க வேண்டும்.நேற்று

அசலும் நகலும்.


வயல்வெளிகளில் நடனமாடி பல லட்சம் 
உள்ளங்களைக் கொள்ளை கொண்டு வரும் ப்ரியதர்சினி த்யாகி
ஒரு  மாணவி. 
இந்த வீடியோ எடுக்கும் போது 14 வயது என்று சொன்னார்கள்.

மிகப் பிரபலமான, எல்லோரையும் கவர்ந்த 
பாடலுக்கு இந்த இளம் பெண் 'கதக்'
நடனம் ஆடி இருப்பது அனைவரையும் 
கட்டிப் போட்டிருக்கிறது.
இன்னும் நிறைய இணையத்தில் இருந்தாலும்
எனக்குப் பிடித்த 
பாடலை இங்கே பதிகிறேன்.

இன்னொன்று சிங்கத்துக்குப் பிடித்த தேவ் ஆனந்த்,சாதனா
பாடல்.
இன்னொன்று சின்னத் தம்பிக்குப் 
பிடித்த சிவாஜி பாடல்!!!

Venkatesh Bhat makes Hayagreeva Maddi | hayagreeva maddi recipe in tamil...

 மார்ச் 5 ஆம் நாள் சிங்கம் பிறந்த தேதி. அவரை ஈன்ற அன்னைக்கும் , அவரது அன்பு சகோதரிகளுக்கும் என் நமஸ்காரங்கள்.
எங்கள் குடும்பம் தழைக்க பெரியோர்கள் ஆசிகள் 
என்றும் நிலைக்க வேண்டும். அவருக்கு இணையத்திலேயே தித்திப்பு வழங்கலாம் என்று
வெங்கடேஷ் பட்டின் செய்முறையைப் 
பதிவிட்டேன். அருமையாகத் தான் இருக்கிறது.

Wednesday, March 03, 2021

Quarantine from Reality | Antha Sivakaami maganidam | Pattanathil Bootha...

கொஞ்சம் வேலை நிறைய வேடிக்கை


ஸ்ரீதேவி பற்றி நிறைய செய்திகள், இணையத்தில் கடந்த 
சில தினங்களாக உலவுகின்றன.

ஒன்றும் கேட்கும்படி இல்லை. பாவம்.
எல்லாவற்றுக்கும் அடிப்படைக் காரணம்
அம்மாவின் அரவணைப்பு இல்லாமல் போனதால். இன்னோரு பக்கம் அம்மாவின் ஆதிக்கத்திலிருந்து வெளியே வந்ததும் இன்னோருவர்
துணையை  நாடுவதாலும் இருக்கும். 

எங்கேயோ கேட்ட நினைவு வருகிறதா.? நானும் அதையே நினைத்தேன்.