Blog Archive

Saturday, June 28, 2014

Feng shui part 2 புதுப்பிக்கப் பட்ட பதிவு.

vவெங்கட் கேட்ட மாதாசீன வாஸ்து முறைப்படி கற்றவர்களிடம் அறிவுரை பெற்றுக்கொள்ளுவதில் தப்பில்லை. அவசரநிவாரணம் எந்தப் பிரச்சினைக்குமே கிடைக்காது என்று தெரியவே எனக்கு அவ்வளவு நாளாகியது. அதற்குள் வீடு மாறிவிட்டது. பார்க்கும் இடமெல்லாம் சிகப்பு,மஞ்சள்.போதாக்குறைக்கு எங்க மீன் செல்லம் அரோவானா மீனாக்ஷியும் சேர்ந்தது.

தஞ்சாவூர் ஓவியங்கள் சில,கடவுளர் படங்கள் என்று சுவர்கள் நிரம்பிவிட்டன.
ஆடிக்கும்,தைமாதத்துக்கும் வெள்ளி செவ்வாய் மட்டும் கொடை கேட்டு வருபவர்கள் எப்போதும் வரத்தொடங்கினார்கள். எங்க வீடும் இன்னோரு கோவில் போலத் தெரிந்திருக்கும்.:)))))

எங்க பையன் இப்பவும் சொல்லிக் காண்பிப்பான்.
அது எப்படிம்மா நீ இப்படியானே... அசப்புல ஒரு இரண்டு மாத இடைவெளியில் உன்னைப் பார்த்துப் பயந்தே போயிட்டேன்.
கண்ணில எக்ஸ்ட்ரா கருணை, சாந்தம் ,பவ்யம் நம்ம அம்மாவக் காணோமேனு வருத்தமாயிடுத்தும்மா.

அது ஒன்றுமில்லை,அந்தக் கடைக்காரம்மா கருணையாலே ஒரு பூஜை செய்முறையும் கற்றுக்கொண்டேன்.
சாததரண அனுமார் வால் பூஜையெல்லாம் இல்லை. இது அதிகாலை எழுந்து, குறிப்பிட்ட குங்குமம் இட்டு, அதை நம் நெற்றியிலும் வைத்துக் கொள்ளவேண்டும்.

ஒரு சின்ன நெத்தியில் புருவ மத்தியில் பொட்டு,அதன்மேல்(அனுமார்) சிந்தூரம், அதன் மேல் விபூதி,அதற்கும்மேல் இந்தப் பளிச் குங்குமம்.
திடீர்னு பாக்கிறவங்களுக்கு ,இந்த அம்மன் படத்தில வர ரம்யாகிருஷ்ணனைப் பார்த்த ஷாக் ... காரண்டி.....யாக்கிடைக்கும்.
பத்துமாதம் கழித்துப் பார்க்கவந்த பெரிய பையன், கதவைத் திறந்ததும் என்னைப் பார்த்த அதிர்ச்சியில் அரண்டு போய்,ரெண்டு ஸ்டெப் பின்னாடி போயிட்டான்.:))

மாயா பஜார் படத்தில கடோத்கஜன் சொல்றது போல நமோ மாதா என்று சிரிக்கிறான்.
சின்னவனோ இனிமே கோவில் யானைக்கே நீ ஆசீர்வாதம் செய்யலாம்மா.அத்தன தெய்வீகமா இருக்கே என்கிறான்.!!!!!

இந்தக் கோலம் பார்த்து ரெண்டு,மூணு சம்பந்தங்கள் கை விட்டுப் போயின.


பின்ன ஜோசியம் சொல்கிற மாதிரி வேஷம் போட்ட மாமியாரை எந்தப் பெண்ணோட அப்பா கல்யயணம் கட்டிகொடுப்பார்.?
எல்லாம் கொஞ்ச நாளைக்குத் தான். பிறகு சாமியே மனசு வைத்துத் திருமணங்கள் நடந்தன.

பித்தமும் தெளிந்தது.
ஆனால் படங்கள், விசிறிகள் ,யோகம்தரும் கழுதைப்படம்எல்லாம் அப்படியெதான் இருக்கின்றன.நீளம் கருதி மிச்சக் கதையைக் குறைத்து விட்டேன்...:)))

Add captionFENGSHUI BEDROOMAdd caption

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
யின் யாங்  சுழற்சி                                              இரவும் வரும் பகலும் வரும் உலகம் ஒன்றுதான். உறவும் வரும் பிரிவும் வரும் வாழ்க்கை ஒன்றுதான். வாழ்க்கை ஒன்றுதான்.இளமை வரும்   முதுமை வரும்    பயணம் ஒன்றுதான்.                                     தனிமை வரும் துணையும் வரும்    இதயம்  ஒன்றுதான். இப்படிப்போகும் பாடல்தான் நினைவுக்கு வருகிறது...

Friday, June 27, 2014

ஃபெங் ஷுவியும் நானும்

அருள் தரும்  அம்மாஜி:)
தண்ணீர் சத்தம் கேட்க வேண்டும்!!
Add caption
Add caption

 வாஸ்து டால்ஃபின்

Feng shui எனும் ஃபங் ஷ்வே என் வாழ்க்கையில் புகுந்தது எப்போதுனு யோசித்தேன்...உட்காரப் போனேன்...............உடனே

ஓஹோ வடக்குப் பார்த்து உட்காரக் கூடாதோ!!!

 தெற்கே பார்த்துத் திரும்பி உட்கார்ந்து கொண்டேன். அம்மா சாமி கும்பிடுதுனு மினிம்மாவும் விடை வாங்கிக்கொண்டு வீட்டுக்குப் போனாள்.

ஒரு ச்சின்ன ஸ்டூல். அதில ஒரு கண்ணாடி பௌல். தண்ணீர் நிரப்பி அதில் இரண்டு கல்லு,கொஞ்சம் எண்ணை,ஒரு ஃப்ளோட்டிங் தீபம், கொஞ்சம் பூக்கள் உதிர்த்துப் போட்டுக் கண்திருஷ்டிக்கு ஒரு வேப்பிலை, பக்கத்திலேயே ஒரு சிங்கப்பூர் சாம்பிராணி.. இன்ஸ்டண்ட் மாயாலோகம்.

த்யானம் செய்ய வசதியா, ஒரு நாற்காலி,போற வறவங்களுக்கு இடைஞ்சலா வெளி வாசல் ,பின் வாசலுக்கு நடுவில் தான் இதெல்லாம் இருக்கும்.

கைல ஜபமாலை. ,கழுத்தில ருத்த்ராட்சம்.. போதுமா. இப்பவே ஒரு பிக்சர் கிடைத்திருக்குமே. எல்லாம் நம்ம விஷுவலைசேஷனோட பெருமை.......

இது ஒரு பத்து, பதினைந்து வருடங்களுக்கு முன்னால் வீட்டுக்கு நலம்னு நான் கத்துக்கிட்ட சீன வாஸ்து.

வீட்டில ஏதவது நல்லது நடக்கணும்னால் இது போல தீபம்,தியானம் ,சி (chi) சக்தி,,சிவப்பு ,பச்சை,கறுப்பு,மஞ்சள் நிறங்களோட மகிமை,

யின் அண்ட் யாங், நான் எலியா,புலியானு ஆராய்ச்சி....

அதாவது இந்த வருஷம் பிறந்தா இந்த மிருகம்னு சைனீஸ் ல இருக்கும்

அது பிரகாரம் நான் எலினு தெரிஞ்சுது., எங்க வீட்டுக்காரர் முயல்னோ வேற ஏதொ போட்டு இருந்தது. எலியும் பூனையும்னால் கூட ஒத்துக் கொள்ளலாம்.

எலியும் முயலும் சினேகமா இருக்குமான்னும் அப்போது திடீர்னு சந்தேகம். ஆனால் நாங்க சகித்துக் கொள்கிற சதிபதியா இருந்ததால எலியும் முயலும் தோழமை சக்திகள்தானு உறுதிப் படுத்திக் கொண்டேன். :)))

அப்படி ஒரு வாஸ்து பிரமை ஒரு பத்து மாதம் வரை ஆட்டி வைத்தது. வாஸ்து சாஸ்திரம் தப்பு என்றோ சைனீஸ் மட்டம் என்றோ சொல்ல வரவில்லை. நான் வாஸ்து விஷயத்தில் நடந்து கொண்டவிதம் கொஞ்சம் விபரீதம்..

நம்ம வீட்டுக்கு வரவங்க போறவங்களுக்கெல்லாம் வாஸ்து அறிவுரைகளை வாரி வழங்குவோம்.

தாராளமாக வழங்கப்படும்.இந்த அறிவுரைகளைக் கேட்டு,அவர்கள் சுற்றிய ரீலோடு அது திருப்பி எனக்கேஇன்னும் சொல்லப் போனனல் வரவங்க எல்லார் மூலமாவும் எனக்கு ஹிண்ட்ஸ் வர ஆரம்பிச்சுது..

"ஏங்க இந்த டைனிங் டேபிள் கிழக்கு மேற்கா இருக்கலாமே,

தெற்கு பார்த்து சோஃபாவைப் போடலாமே. சம்பந்தம் பேச வரவங்களுக்கு மேல்கையா நீங்க இருக்கணும்.(அப்போது எங்க பையன்களுக்குத் திருமணம் முயற்சிகள் செய்து கொண்டிருந்தநேரம் )

இதென்ன ரம்மியா, நான் ட்ரம்ப் கார்டு விளையாட. மேல் கை,கீழ் கை என்றுபேச.

காம்பவுண்ட் சுவருல பிள்ளையார் வரஞ்சிடலாம். தெருவில இருந்து கண் போடறவங்க கிட்டே இருந்து தப்பிக்க வழி.

வீடு கட்டின விதமே சரியில்லீங்க, ஒரு மாதிரி அகல நீளமெல்லாம் ஆராயம கட்டிட்டாங்க."

இதெல்லாம் சொன்னவங்க, வீட்டுக்குப் பெயிண்ட் அடிக்க வரவங்க,ஏசிக்காக சுவரில இடிச்சுக் கட்டினவங்க, குளிக்கிற அறையில டைல்ஸ் போட்டவங்க,காண்ட்ராக்டர்.....இவங்களைத் தவிர புதிசா வீடு கட்டினவங்களும் அடங்கும்.

நாங்களா கேப்போம்.....??என்னிக்காவது கேட்டு இருந்தாத்தானே.......

அதற்குப்பதில் மௌண்ட்ரோடுக்குப் படையெடுத்தேன்,அப்ப ஒரு புகழ்பெற்ற ஃபங்ஷுவே கடை அங்கே இயங்கிக்கொண்டிருந்தது.(இப்ப மூடிட்டாங்கன்னு கேள்விப்பட்டேன். :)))

ஆஹா, அந்த அனுபவத்த இப்ப நினைச்சாலும் கலங்கறது மனசு.

எவ்வளவு பெரிய முட்டாளை எங்க அம்மா அப்பா உலகத்துக்கு

வாரி வழங்கி இருக்காங்கனு.

அங்க இருந்த கடை சொந்தக்காரங்க நான் உள்ள நுழைந்ததும் ஒரு நல்ல நாற்காலியில் உட்கார வச்சாங்க. நானும் சுத்திமுத்திப் பார்த்தேன்.

கொஞ்சம் இருட்டு,வாசனை மெழுகுவர்த்திகள் வெளிச்சம் கொடுத்தன.

அத்தனூண்டு சின்னக் கடைக்குள்ள,மணிகள்,விண்ட்சைம்ஸ்,விதவிதமான ஆமை,டிராகன்,தவளை,சிரிக்கிற, குண்டா இருக்கிற புத்தா பொம்மைகள், மாலைகள்,வர்ணம் நிறம்பிய கூழாங்கற்கள்,திபேத்தியன் இசையோடு,சாம்பிராணி வாசனையோடு,பக்கத்திலேயெ சிவலிங்கம், குட்டி மீன்கள்,மோதிரங்கள்......

ஒருமாதிரி அம்மனொ சாமியோ(இப்பத்தி மொழிப்படி மந்திரிச்சுவிட்ட ஆடு) நிலைமைக்குப் போகும்போது

அந்த அம்மா உங்களுக்கு என்ன மாதிரி பிரச்சினைனு என்கிட்ட சொன்னா நான் தீர்த்துவைக்கிறேன்.

இடிக்க வேணாம்,கட்ட வேணாம். ரெய்கி,சைனீஸ் வாஸ்து இதில சொல்லப் படாத நிவாரணமே இல்லை.அப்படின்னு சொல்லி விதமான மணிமாலைகள்,மோதிரங்கள்,சிகப்பு வெல்வெட் பைகள்,விசிறிகள்,பறக்கிற வாத்துகள் படம், பெரிய பொம்மைமீன் சிகப்புக் கண்ணோட,டர்ட்டில் டோவ் இன்னும் சில பொருட்கள் மறந்துவிட்டது. (எல்லாப் பொருட்களையும் ஒரு கணிசமான

விலைக்கு வாங்கிக் கொண்டேன், வாங்க வைக்கப் பட்டேன்:))))

அதற்கும், அதாவது என் மறதிக்கும் ஏதோ மந்திரிச்சுக் கொடுத்தாங்க.)

அப்புறம் என் நடவடிக்கையே மாறிவிட்டது.

சும்மா இருந்த வீட்டு வரவேற்பறை வண்ணக்குவியலாக மாறியது

வீட்டு வாசலைப் பார்த்து வெங்கடாசலபதி படம்,பக்கத்துலேயே பிள்ளையார்

அவங்க படத்துக்குக் கீழே ஒரு சிகப்பு வெல்வெட் சக்கரம்,
அதுக்கும் கீழே மஞ்சள்தங்கக் கலரில் ஓம்,

பேரனுக்காகக் கட்டின ஊஞ்சலில் மயிலிறகுக்கொத்து.
அத்ற்கு மேலெ காற்றில் ஆடினால் சத்தம் செய்யும் விண்ட்சைம்.

அது சரியா,சிங்கம் வந்து உட்கார்ந்து டிவி ஃபான் போட்டதும்
 கிளின்க் க்ளாங் சத்தம் போட ஆரம்பிக்குமா.டிவீல "டை ஹார்ட்" cinema
பார்ப்பாரா,

இந்தக் கசமுசாவைக்கேட்பாரா.....

அதுக்கு ஒரு ரப்பர்பாண்ட் போட்டுவிட்டார். விஷயம் தெரியாத நான்
''கோவில்மணி ஓசைதன்னைக் கேட்டதாரோனு பாடிக்கொண்டு
கூடத்துக்கு வந்தால் அது வாய் மூடி மௌனியாக இருக்கு.இந்த கட்டறதும்,அவுத்துவிடறதும் ஒரு நான்கு நாட்கள் நடந்ததும்
நான் அந்த விண்ட்சைம்ஸை மாடிக்கு மாற்றினேன்.

அடுத்தாற்போல இந்த ஆசைகளை எழுதி கயிற்றில்கல்லோடு சேர்த்துக் கட்டி
சுவர்மூலையில் தொங்கவிடுவது,அதுவும் தெற்குமூலை
 இரு பசங்களுக்கும்
சீக்கிரம் திருமணம் நடக்க வேண்டும் என்று எழுதி ஒரு கத்திரிப்பூ கலர் தாளில் சுற்றி
அதில் ஒரு அமெதிஸ்ட் கல்லையும் கட்டி பட்டு நூலில் ஜன்னல் கம்பிகளில் கட்டி வைத்தேன். மீதியை நாளை பார்க்கலாம்:))))))))))

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Wednesday, June 25, 2014

சில சில் நினைவுகள் 16 செப்டம்பர் 1967 ஏப்ரில் 1968

அப்பா,அம்மா,பையன்,வரப்போகும் பெண்
Add caption
Add caption
 
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
பாதை இங்கே  பயணம் இங்கே.                                                                                                                                                                         புது வீட்டுக்குச் சென்று பால் காய்ச்சி அக்கம் பக்கம் பழகி,அருமையான   பெண் ஒன்றும்  உதவிக்குக் கிடைத்தாள். சரஸ்வதி என்று பெயர். கொஞ்சம் ஊனம். மனசில் இல்லை., எப்பொழுதும் சிரித்தவண்ணம் முகம். 12 வயதில் பொறுப்பாகப் பாபுவைப் பார்த்துக் கொள்வாள்.                காலையில் வந்து பாத்திரங்கள் தேய்த்துக் கொடுத்து க் குழந்தையை அழைத்துக் கொண்டு வெளியே மணலில் உட்கார்ந்து கொண்டு விளையாட்டுக் காட்டுவாள்.காய்கறி வாங்கிவருவது நல்ல தண்ணீர் பிடித்துத் தருவது.நான் வேண்டாம் என்றாலும்  தன் ஆயா  கடையிலிருந்து சுடசுட இட்லி வாங்கிவருவது  என்று அதிசய  ராதையாக இருந்தாள். இப்பொழுது வெளியே இட்லி வாங்க என்ன அவசியம் என்ற கேள்வி வருகிறது இல்லையா.. மீண்டும் அதே கதைதான்.  40 நாட்கள் ஆனபிறகே விழித்துக் கொண்டேன். சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் அழுகைதான் வந்தது..   பாபுவைப் பார்த்துக் கொள்ளவே நேரம் போத வில்லை. எல்லாவற்றுக்கும் பிடிவாதம். இவரோ மதியம் சாப்பாடு கூட வெளியில்  சாப்பிட மாட்டார்.. முடிந்தால் இன்னும் யாராவது கூட வருவார்கள்..  வேலைக்கு நடுவிலே இப்படித் தூக்கம் வருகிறதே  என்று கோபம்தான் வந்தது..   பக்கத்துவீட்டு மிஸஸ் நாயரிடம்  கேட்டால்,  மோளே,,,  சத்தில்லா த்ரேகம். அனந்தன் டாகடரைப் பார்க்காம்  என்றார்.


சரிதான் என்று கிளம்பும்போதே வாசலில் தயிர்க்கார அம்மா வந்தார். மோரு குடிச்சுட்டுப் போ அம்மணின்னு   மண்சட்டி மோரை நீட்டினார். அதைப் பார்த்து வந்ததே  ஒரு கலக்கம். ஓடினேன் பின்புறம். காலையில் சாப்பிட்டதெல்லம் வெளியே வந்தது. நாயர்ம்மா வந்து தலையைப் பிடித்துக் கொண்டார்..ரேவதி  ஒரு சம்சயமாணு என்றதும். நானும் தலையை ஆட்டினேன். பிறகு டாகடரும் அதை  உறுதி செய்தார். கூடவே    ரத்த சோகைக்கு ஒரு மருந்தும் மாதா மாத விசிட்டுக்கு ஒரு   புத்திமதியும் சொல்லி அனுப்பினார்.   மிஸஸ் நாயரிடம்  இன்னும்கொஞ்சம் நாட்கள் போயிருக்கலாமே. சிறு பையன்.  வேணுமானால்  வேறு ஏற்பாடு செய்யட்டுமா என்று கேட்டார்.  நல்லவர்தான். இருந்தும் எனக்கு மகாக் கோபம் வந்தது...  அதெல்லாம் ஒன்றும் வேண்டாம்.நான் சமாளிப்பேன் என்று விட்டு20 ரூபாய்  டாக்டர் ஃபீஸையும் கொடுத்துவிட்டு வந்துவிட்டேன்...                                அக்கா, பாபுக்குத் தங்கச்சி வரப் போவுதா  என்று சரஸ்வதி வேறு ஆட்டம். எனக்கோ எல்லாரிடமும் எப்படிச் சொல்வது  என்ற யோசனை.  சிங்கம் சீக்கிரம் வந்தால் தேவலை. கோபத்தைக் காட்ட ஆசாமி தேவை.  மாமியாரிடம் சொல்லணும். அம்மாவிடம் சொல்லணும். இப்பதானே அனுப்பி வைத்தார்கள்.  அதற்குள் இன்னோண்ணாஆஆஆஆஆ.   என்று யாரும் சொல்லப் போவதில்லை. எனக்கு நானே சட்டாம்பிள்ளை. பேஸ்தடித்துப் போய் உட்கார்ந்திருந்த என்னிடம் சச்சு,நான் வேணா சமைச்சுத் தரட்டுமாமான்னு கேட்கீறது. இல்லைடா ,அக்கா பார்த்துக்கறேன்னு  ,எழுந்து உ கிழங்கு ரசம் செய்துவிட்டுப் படுத்தவள் தான். என்னைக் கட்டிக் கொண்டு குழந்தையும் தூங்கிவிட்டது.  சிங்கம் வரும் வரை சச்சு காவல்.   குழந்தையின் பசி அழுகை எழுப்ப அதற்கு பருப்புமம்மம்  துளி உப்பு போட்டு உ.கிழங்கும் மசித்துக் கொடுத்தேன்.
வந்தாரையா  மன்னன்.     எதிர் நீச்சல் போணும் போணும்னு சொன்னியே.  ஞாயிற்றுக் கிழமை   போலாமா. முதல்ல  சாப்பாடு. வாடா பாபு  டாடிக்குக் கம்பெனி கொடு என்று தூக்கிவைத்துக் கொண்டார். பதில் பேசாமல் தட்டை வைத்து   சாதம்,மற்ற பதார்த்தங்களை வைத்துவிட்டு எதிர் நாற்காலியில் உட்கார்ந்தேன்.                      என்னய்யா  ஒரே டல்லா இருக்கே. சாப்பிடு நீயும் என்று  சொன்னார்.  ரசத்தின் பூண்டும் என்னைக் கலக்க உடனே எழுந்துவிட்டேன். அவர் சாப்பிட்டு முடித்ததும்  சேதி சொல்லலாம் என்று.  பேசாமல் இருந்தேன்.  இந்தா அம்மா லெட்டர். இப்ப செப்டம்பரா. நவம்பர்ல 11 ஆம் தேதி இவனுக்கு  ஆண்டுநிறைவு,ஆயுஷ் ஹோமம் எல்லாம் செய்யணும். புது சட்டை,பட்டு வேஷ்டி எல்லாம் வாங்கணும் இரண்டு நாட்கள் முன்னாலயெ வந்து ஏற்பாடு செய்யச் சொல்லி அம்மா எழுதி இருக்கிறார் என்று கொடுத்தார்..  இன்னோரு கடிதம் என் அம்மாவிடமிருந்து. குழந்தை தேறினானா. நீ சரியாச் சாப்பிடுகிறாயா. லேகியம் மறக்காதே. குழந்தையைப் பார்த்து நாலு மாசம் ஆகிறது. ராமேஸ்வரத்துக்கு ஒரு நடை வரலாமே. என்று ராமேஸ்வரம் கோவில், பிரம்மாண்டமான ஆடி வெள்ளித்தேர்க் கொண்டாட்டங்கள், ரங்கனின் தமிழ் மீடியக் கஷ்டங்கள்,அப்பாவின்  வேலைப் பளு, அந்ததீவின் அழகு என்று  ஆயிரம் சமாச்சாரங்கள்.            


நாம் முதலில்  ராமேஸ்வரம் போகலாம்.  பிறகு   சென்னைக்கு   டிக்கெட்   பதிவு செய்கிறேன் என்று விட்டு. டேக் கேர் மா. ஹேவ் அ குட் ஸ்லீப்.  மா. யூ  டு  நாட் லுக் ஓகே  என்று ஓடிவிட்டார்.        அந்த  க்ஷணம் உலகில் அத்தனை பேரையும் வெறுத்தேன்:))))
வழக்கம்போல வேலைகள் நடந்தன.    இரண்டு நாட்கள் பொறுத்தே விஷயத்தைச் சொன்னேன். அசரவில்லையே. மோர்  த மெர்ரியர். கங்க்ராட்ஸ் மா.   ஒரு ஆறு குழந்தைகள் நமக்கு வேண்டும் என்றார்.. இப்ப யாரு கிட்டயும் சொல்லவேண்டாம்.  நவம்பருக்கு அப்புறம் சொல்லலாம்.  ஐ டு நாட் வாந்ட்  எனிபடி  டு டாக்  அபவுட் திஸ் என்று விட்டார். பெரிய பாரம் இறங்கிவிட்டது.  இவரே பொறுப்பு எடுத்துக் கொண்டால் எனக்கென்ன கவலை என்று ராமேஸ்வரம் ஏற்பாடுகளில் இறங்கினோம்.  நாங்கள் இராமேஸ்வரம் போய் வந்த கதை


http://naachiyaar.blogspot.com/2014/05/6-1967.html       இந்த லின்கில் இருக்கிறது:)

அக்டோபர் வந்து பறந்தது. உயரமும்  ஒல்லியான உடம்பும்  என் ரகசியத்தைக் காண்பித்துக் கொடுக்கவில்லை.............சென்னைக்குக் கிளம்பும் நாளும் வந்தது.  வழ்க்கம் போலப் பால்பவுடர், குழந்தையின் துணிகள்,வெந்நீர் என்று ஒரு பெட்டி. குழந்தையின்    புதுத்துணிகள் எங்களுக்கான                ஒருவார உடைகள். ஒரு நல்ல ஒபட்டுப்புடவை ,வேஷ்டி என்று ரயிலடிக்கு வந்தாச்சு. கடைசி நிமிடம் வரை வொர்க்ஷாப் வேலை. அவசமாக வண்டியில் ஏறும்போது எங்கள் பெட்டீ  ப்ளாட்ஃபாரத்திலேயே   தங்கிவிட்டது. ஆவர் ஒரு பக்கம் நானும் குழந்தையும் ஒருபக்க.ம்.  போர்ட்டர் வைப்பதில் நம்பிக்கை இல்லாத   சாமி என் சாமி. விடை. குழந்தையுடைய தேவையான பொருட்கள் மட்டும் வண்டியில் ஏற அடுத்த நாள் உடுத்த வேண்டிய   புடவை கூட இல்லாமல் சென்னை வந்து சேர்ந்தோம்:)))))          

Sunday, June 22, 2014

ஒரு ஞாயிற்றுக்கிழமையின் அலையும் மனது

சென்ற வருடம் நடந்த பாதை.
மறப்பதும் நல்லதுதான்.
இப்பொழுது  படித்துக் கொண்டிருக்கும் கதைகள்
ஈச்ச மரத்தின் நிழல் நம் ஊரில்.
இது  கலேடியமா....
கற்றாழையின் இனிய  மலர்
நண்பரின் வருகைக்குக் காத்திருக்கும் ஆர்க்கிட் மலர்கள்
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Add caption

Friday, June 20, 2014

டால்ஃபின்களின் செயல் திறன்..........மீள் பதிவு

சிரிக்கும் டால்ஃபின்(கூஃபி) சனிக்கிழமையன்று  பிபிசி  தொலைக்காட்சியில்  அகப்பட்ட  அருமையான  கதை. நிஜக்கதை.
நியூசிலண்ட் வட கடற்கரையில் டால்ஃபின்களின் நடமாட்டம் அதிகமாயிருக்குமாம். கிட்டத்தட்ட 500க்கு மேற்பட்ட  டால்ஃபின்கள் அங்கே   குடும்பமக வாழ்ந்து வருகின்றன.
எனக்கு யானை,கடல்,குழந்தை,பிள்ளையாருக்கு அடுத்தபடி டால்ஃபின்களை  ரொம்பவும் பிடிக்கும்.
அதனால் கையிலிருந்த காப்பியைக் கூட மறந்து பார்த்துக் கொண்டிருந்தேன்.

நடந்த ஒரு சம்பவத்தைச் சொல்ல ஆரம்பித்தார்   அதில் பங்கு கொண்ட லைப்  கார்ட்.
ஒரு  குளிர்காலம்  முடிந்து  ஸ்ப்ரிங் சீசன் தொடங்கும் நேரம் தன் பெண்ணையும் அவளது தோழிகளையும் கடற்கரைக்கு அழைத்துச் செல்கிறார். அதில் ஒரு பெண்ணுக்குக் கடலின் அலைகளிடம் பயம்.

ஏற்கனவே மூழ்க இருந்தவளைக் காப்பாற்றியதும் இந்தச் சம்பவத்தைச்  சொன்னவர்தான்.

எலோரும் உற்சாகமாகக் கடலை அணுகுகிறார்கள்.
கொஞ்ச நேரம் கழித்து  ஓரிரண்டு டால்ஃபின்கள் இவர்களை நோக்கி வருகின்றன.
கடலில் நீந்தும் உற்சாகத்தில் கரையைவிட்டு   கடலுக்குள் நீந்த ஆரம்பிக்கும் சமயம்,  அவரகளைச் சுற்றி  கிட்டத்தட்ட  20 டால்ஃபின்கள் சுற்ற ஆரம்பிக்கின்றன.
முதலில் விள்யாட்டாக எடுத்துக் கொண்ட இந்தக் குழு பிறகு அவைகளின் பதட்டத்தை உணறுகின்றனர்.

இவர்களை நகரவிடாமல் ஒரு இறுகிய வட்டத்துக்குள்ளயெ  இருக்க வைத்து அவை சுற்றிச் சுற்றி வருகின்றன.


இவர்களுக்குப் பயம் பிடித்துக் கொள்கிறது. ஏன் இந்த ஆவேசம்  இந்த டால்ஃபின்களுக்கு. என்ன விஷயத்துககத் தங்களை நகர விடமாட்டேன் என்று அடம் பிடிப்பதோசு அல்லாமல்  தங்கள் வாலைத் தடார் தடார் என்று தண்ணீரில் அடித்து  ஓசைப் படுத்துகின்றன.
?
அவைகள் அப்படிச் செய்வது பயத்தால் என்பது இவர்களுக்கும் புரிகிறது என்ன காரணம் என்று புரியாமல் பதட்டப் பட ஆரம்பிக்கின்றனர்.
தண்ணீரோ சில்லென்று இருக்கிறது.

அப்பொழுது குழுத்தலைவருக்கு ஏதோ பொறி தட்ட  தண்ணீருக்கடியில்  பார்வையைச் செலுத்துகிறார்.
அங்கெ அவர் காணும் காட்சி அவரை உறைய வைக்கிறது.
அவர்களுக்கு நேர்கீழெ  ஒரு வெள்ளை ஷார்க்  வட்டமிட்டுக் கொண்டிருக்கிறது!
நொடியில் நிலைமையை உணர்ந்த அவர்(ஜாக்)  பெண்களிடம் பயத்தை ஏற்படுத்தாமல் தான் மட்டும் விலகிக் கொஞ்ச தூரம் போகிறார். அவர் பெண் அப்பாவைத் தனியாக விடக் கூடாது என்று தானும் அந்தக் குழுவிகிருந்து வெளியேறுகிறாள்.
அவள் அடிபட்ட காலிலிருந்த ரத்தம் கசிகிறது
இதற்குள் கரையிலிருந்து   இவர்களைப் பார்ப்பவர்கள் இவர்கள் டால்ஃபின்களோடு விளையாடுவதாக நினைத்து ஆரவாரமிடுகிறார்கள்.

இவர்கள் தோழன் ஒருவன் மட்டும் லைப் போட்டை எடுத்து வருகிறான்.
அதே நேரம் 45 நிமிடங்களாக இவர்களைக் காபந்து செய்த  டால்ஃபின்கள் விலகுகின்றன.
ஜாக் அப்போதுதான் ,  அந்த  சுறா அங்கெயிருந்து போன விஷயத்தை உறுதி செய்து கொள்கிறார்.

இனம் தெரியாத நன்றி உணர்வு அவரை அழச் செய்கிறது.

பெண்களை படகில் ஏற்றிவிட்டுத் தான் மட்டும் நீந்திக் கரை சேர்கிறார்..


கரை சேர்ந்தபிறகு நடந்ததைச் சொல்லுகிறார்.
 பெண்களும் மற்றவர்களும்  அதிசயத்தும் நன்றி உணர்விலும் ஆழ்ந்து போகிறார்கள்.

மரீன் பயலஜிஸ்ட் கூடவே வந்து டால்ஃபின்களின் மூளை வளர்ச்சியைப் பற்றிப் பேசுகிறார்.
அவைகளுக்கான சங்கேத மொழியில் சுற்றுப் புறத்தில் இருந்த அத்தனை தோழர்களையும் வரவழைத்து இவர்களை ஒரே இடத்தில் நிறுத்தி வைத்து அந்த ஷார்க்கை அண்டவிடாமல் இவர்களைக் காப்பாற்றி இருக்கின்றன.
என்று இன்னும் விவரமாக விளக்குகிறார்.

அந்தப் படத்தைப்  பார்த்த    அதிசயத்தில் வெகு நேரம் கடவுளின் அதிசயப் படைப்புகளை நினைத்து  ஆச்சரியத்தில் மூழ்கி இருந்தேன்.
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Wednesday, June 18, 2014

சில சில் நினைவுகள் 15 ஏப்ரில் ....நவம்பர்1967

சிங்கத்தின்   கைத்திறன்  இரை  பொறுக்கும் பறவையும்    மரத் துண்டில் மனித முகமும்
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
மஞ்சள் ரோஜா.  ஒரு நர்சரியில்
சேலம்  பயணம் வெஸ்ட்கோஸ்ட்  ரயிலின் ஆதரவில் சத்தம் தூசி,குழந்தையின் அழுகை  ,வெந்நிர் ஃப்ளாஸ்கிலிருந்து கொட்டி பாட்டி புடவை நனைந்து என்று அட்டகாசமாக  நடந்தது.                                          சேலம் ரயில் நிலையத்துக்கு சிங்கம் வந்திருந்தார்.  அங்கேயும் வெய்யில்.                                       அதுவரை காச்மூச் என்று கத்திக் கொண்டு இருந்தவன்  அப்பா கையில் சாதுவாகப்  படுத்துக் கொண்டான்.. ப்ரேக் வானிலிருந்து  தொட்டில் மெத்தை எல்லாவற்றையும்  இறக்கி வைக்கக்   கூடவந்த நண்பர்கள் உதவினார்கள்.  வீட்டிற்கு வந்தோம்.    வீடு பளபளவென்று இருந்தது. ஐயா நான் இல்லாவிட்டால்   நல்லாவே பார்த்துக் கொள்கிறார் போல் இருக்கே    என்று யோசித்த வண்ணம்  , இரவுக்கான   சாப்பாட்டுப் பொட்டணங்களைப் பிரித்தேன். மாமியார்    எல்லோருக்கும் தோசையும் புளிமிளகாயும்    நன்றாகப் பார்சல் செய்து  கொடுத்திருந்தார். . நானும் தைரியமாகச் சாப்பிடலாம். குழந்தை இந்த   ஆறு மாதங்களில் க்ளாக்ஸோவிற்கும்   ,அமுல்ஸ்ப்ரேவுக்கும்  பழகி இருந்தான். பால் பவுடரைக் கரைக்கத் தனி                                  பாத்திரம்,மில்க் மிக்சர் என்று வாங்கிக் கொடுத்திருந்தார் கமலம்மா.  அப்போது ப்ளாஸ்டிக் பாட்டில்கள் வரவில்லை. கையில் எப்பொழுதும் கண்ணாடி   ஃபீடிங் பாட்டில்  இருக்கும். பாட்டில்களை  ஸ்டெரிலைஸ் செய்ய ஒரு பெரிய அலுமினிய        பாத்திரம்.!!அம்மாவிடமிருந்து     பார்சல் வந்தது. வெந்நீர்த்தவலையும்   ,எவெர்சில்வர் பக்கெட்டும்   குழந்தை குளிப்பதற்காக.  மதுரையிலிருந்த சதர்ன் ரோட்வேஸ் வண்டியில் அனுப்பி இருந்தார்கள்.. அப்பாவுக்குப் போடி என்ற ஊருக்கு மாற்றி இருப்பதாகவும் தானும் ரங்கனும் மட்டும் பசுமலையில் வசிப்பதாகவும். இன்னும் இரண்டு மூன்று மாதங்களில்  இராமேஸ்வரம் போக வேண்டும் என்றும் கடிதம் வந்தது. சீனிம்மாவுக்கு இருப்பிக் கொள்ளவில்லை. ஸ்டவ் ஹீட்டர் அடுப்பில்  சமைக்க  அவருடைய ஆசாரம் ஒத்துக் கொள்ளவில்லை.  ஸ்டவ்வில்  சப்பாத்தி மட்டும் செய்து கொண்டார்.  மூன்றாம் நாள் மதுரைக்குக் கிளம்பிவிட்டார்.      அவருக்கு எங்கள் தனிக்குடித்தனத்தில் அவ்வளவு நம்பிக்கை.. ""ஆண்டா , ஜாக்கிரதையா இருந்துக்கோ.. லேகியம் மறக்காமச் சாப்பிடு. ஃபெரக்ஸ்   குழந்தைக்குக் கட்டிதட்டாமல் மெதுவாக ஊட்டு..  குழந்தைகள் துணிகளை வெள்ளைத் துணியில் வேப்பிலைகளோடு  மேல வை..தொட்டில் கட்டவில்லையானால் தூளியாவது கட்டித் தரச் சொல்  }}  என்று  அறிவுரைகள் சொல்லி  பஸ்ஸில் ஏறிவிட்டார். அவருக்கு முதல் காரணம் எங்களைத் தனியே விடுவதுதானாகத்   தான்  இருக்கவேண்டும் இங்கிதம் தெரிந்த மனுஷி..........

எனக்குப் புதுதோழி ஒருத்தி கிடைத்தாள்.   என் வயது. ஆனால் கல்லூரியில் அப்போதுதான்  இரண்டாம் வருடம் ஹோம்சயின்ஸ் படித்துக் கொண்டிருந்தாள். அண்ணா  சேலத்துக்கு மாற்றி வந்ததால்  அவளும் வந்துவிட்டாள்.  இன்னும் கொஞ்ச நாட்களில் சென்னைக்குப் படிக்கச் சென்றுவிடுவாள். அவளும் ரேவதிதான்.ரேவதி பஞ்சரத்தினம்.    தினம் சிங்கம் வேலைக்குப் போனவுடன் வந்துவிடுவாள் வரும்போதே  ஏதாவது ஒரு புது ரெசிபி கொண்டு வருவாள்.    சாயந்திர வேளைவரும் சைக்கிள் வண்டிக் காய்கறிக் கடையில் குடமிளகாய், காலிஃப்ளவர்,  பெரிய உருளைக் கிழங்கு  எல்லாம் ஒருகிலோ ஒரு ரூபாய்க்கு வாங்கிவிடுவாள்.    இரண்டு மூன்று நாட்கள் பஜ்ஜி,கட்லட்,போண்டா எல்லாம் வெளுத்து வாங்குவோம். நான் குழந்தைக்கு  வேண்டும் என்கிற வேலைகளைக் கவனிக்க  அவள் இதையெல்லாம் செய்து முடித்துக் கொஞ்சம் சாப்பிட்டுவிட்டுப் பறந்துவிடுவாள். அந்த மூன்றுமாதங்கள் பாட்டிலும் சமையலிலும்  கடந்தன.  பாபு தவழ ஆரம்பித்தான்.          இவரும் பெரமனூர்   KHMS  colony   என்கிற இடத்தில்  வீடு பார்த்தார்.  அது இன்னும் கொஞ்சம் பெரிய வீடு. ஒரு வரவேற்பு அறை.  வராண்டா,ஒரு படுக்கும் அறை. இன்னோரு வராண்டா  .இன்னோரு அறை. பிறகு   சமையலறை. அதன் பின் பெரிய முற்றம்.  கழிப்பறை, குளிக்கும் அறை. வீடு மாற்றியதும்   காஸ் அடுப்பும் வந்தது.  பாபுவுக்கு ஆயுஷ்ஹோமம் செய்யச் சென்னைக்கு வருமாறு மாமியாரிடமிருந்து அழைப்பு   வந்தது. இனி மேற்கொண்டு பார்க்கலாம்.

Sunday, June 15, 2014

உலகத் தந்தையர் தினம், வாழ்த்துகள்தந்தையர் தினம்.
தாய்கள் தினத்துக்குப் பிறகு வருவது ஏன்.
மங்கை முதலில் பிறந்து மணவாளன் பின்னால் பிறந்தானா.
எங்கள் வீட்டுத் தந்தையைப் பற்றி எழுத எனக்கு அவ்வளவு தகுதி இல்லை. சின்ன வயசில் பரணில் ஏறி, என் மரயானையை,
தும்பிக்கை உடைந்த யானையை, எட்டாத ஒரு முக்காலி மேல் ஏறி எடுத்துக் கொடுத்தவரும்,
பள்ளிக்கு அழைத்துச் சென்று,ஆங்கிலம் பேசும் மரியாதைக் குரிய மதர் சுபீரியரிடம், என் பெண்ணுக்கு அவ்வளவு ஆங்கிலம் தெரியாது. நீங்கள்தான் பார்த்து அவளுக்கு இந்தப் பள்ளியில் இடம் கொடுக்க வேண்டும் என்று சொன்ன போது எனக்கு வயது 12.
இப்போதென்றால், பிள்ளைகளொ பெண்ணொ தாங்களே தகுதிகளைச் சொல்லி மனதில் இடம் பிடித்து விடுவார்கள்.
ஊமையாக இருக்கும் என்னை நிறையப் பேச வைத்தவர். எழுத வைத்தவர். உலகின் பல்கோணங்களைக் காட்டிக் கொடுத்தவர்.
அப்புறம் அடடா,இப்படிப் பேசுகிறதே என்று சங்கடப் பட்டவரும் அவர்தான்:)
 
இன்று நான் நினைவு கொள்ளப் போவது அவரை அல்ல.
எத்தனையோ தந்தைகள், குழந்தைகளுடனும் இருக்க முடியாமல்,
வெளிநாடுகளுக்குப் போய்ச் சம்பாதித்து வந்து, நேற்றுப் பார்த்த பெண்ணும்,பையனும் இன்னும் 10 செண்டிமீட்டர் உயர்ந்து விட்டதையும்,
அவர்கள் எண்ணங்கள் வித விதமாக மாறி இருப்பதையும்,
தான் வாங்கி வந்த அன்பளிப்புகள்
எதுவும் பிடித்தது போலத் தெரிந்தாலும் காண்பித்துக் கொண்டாலும்,
சம்திங் மிஸ்ஸிங், என்ற ஒரூணர்வு தெரிகிறதே, உணர்கிறார்களே, அந்தத் தந்தைகளுக்குத் தான்
இந்தத் தந்தையர் தின வாழ்த்துகளைச் சொல்லுகிறேன்.
அம்மா ஒரு இடம், அப்பா ஒரு இடம் என்று வேலை பார்க்க, பாட்டி தாத்தாக்களிடம் வளரும் குழந்தைகளுக்குத் தந்தையாக இரட்டிப்பு வேலை செய்யும் தாத்தாக்களுக்கும் என் வணக்கம்.

எல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்.
Posted by Picasa

Friday, June 13, 2014

வைகாசி பூரண நிலா.

பியோனீஸ்
இந்த மாலையிலும்   கிழக்கு வெளுத்தது நிலா அன்னையின் கருணையால்

பல் ஆயிரம் வெண்முத்து மணிகள் திரண்டு குவிந்தது போல ஒரு தோற்றம். என்ன ஒளி.
இப்போதுதான் வெளியே வர ஆரம்பித்திருக்கிறாள் நிலா மங்கை. மழை வந்து   நிலவைப் பார்க்க முடியாமல் போனது  மே மாதம்.   .இந்த மாதம் பெருங்கருணை புரிந்தாள் நிலாம்மா.
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Add caption

Thursday, June 12, 2014

சிங்கம் பார்ட் 8 1968 சேலம்


பல  நிகழ்ச்சிகள்  உள்ளத்தில் குறுக்கிடுகின்றன. அதில் முக்கியமானது  சேலம் கிச்சிலிப் பாளையத்தில் இருந்த வொர்க்ஷாப்பை  ஐந்து ரோடு எனும் இடத்திற்கும் மாற்றும் மகா பெரிய வேலை.
நாள் பகல் இரவு என்றில்லாமல்  வேலைகள். பெரிய பெரிய இயந்திரங்களை எல்லாம் அங்கே   அமைக்கவேண்டும். ஸ்திரமான இடம் பார்த்து  பாதுகாப்பு பார்த்து நிறுவ வேண்டும். ப்ளூ    ப்ரிண்ட்கள் துணையோடு அந்தப் பணிமனை    உருவானது. சேலத்தில்  பாசஞ்சர்  கார்களும் வரும். லாரிகளும்  ரிப்பேருக்கு வந்த வண்ணம் இருக்கும்.  அவைகளையும் விடக் கூடாது. இங்கேயும் வேலை நடக்கவேண்டும். அத்தனை பணியாளர்களும் சேர்ந்து உழைத்தாலும்  தீராத  பிரம்மாண்டமான     கவனிப்புத் தேவைப் பட்டது.
அளவில்லாத காஃபியும் டீயும்   தான் உணவு.  ஒரு வாரக் கடின உழைப்பில் உடல்  நலிந்துவிட்டது. வைத்தியரிடம் போய் விட்டு வந்திருக்கிறார். அவர் இவருடைய    தளர்ந்த நிலைமை கண்டு அதிர்ச்சி அடைந்துவிட்டார்.   திஸ் இஸ்  டூ மச். வாட் டு யூ தின்க் யு ஆர்.  சூப்பர் மேன் என்று திட்டி  இதயப் பரிசோதனை செய்து.ஒன்றும்   கவலை இல்லை.  இப்பொதைக்கு  பூஸ்டர் இஞ்செக்ஷன் கொடுக்கிறேன்.   எப்போது உன கம்பெனி திறப்பு விழா என்று கேட்டு இருக்கிறார். இரண்டு நாட்கள் கழித்து என்று சொன்னதும். ஊசியைப் போட்டு விட்டு வீட்டுக்குப் போய்ச் சாப்பிடு. பிறகு கம்பெனிக்குப் போகலாம் என்று நண்பர் ஒருவரோடு அனுப்பி விட்டார். இவர் வீட்டுக்கு வந்த நிலமை வழக்கத்தை விடப் பயங்கரமாக இருந்தது. நண்பர் கண் காட்டினார். அவனைச் சாப்பிட வைம்மா. அவன் தூங்கட்டும் என்றதும் மரமண்டைக்குப் புரியவில்லை. காலையில் யாராவது தூங்குவார்களா  என்று யோசித்தபடி அவருக்குத் தட்டில் இட்லி சாம்பார் சட்னி என்று எடுத்துவைத்தேன். இங்க கொண்டு வரயாமா. ரொம்பத் தூக்கம் வருகிறது என்ற குரல்  படுக்கை அறையிலிருந்து கேட்டது.                     குளிக்காமலா  தூங்குகிறார என்று அதிசயப் பட்டுக் கொண்டு போனால் அரைத்தூக்கத்தில் இருந்தார். அவசர அவசரமாக ஊட்டாத குறையாக் அவரைச் சாப்பிட வைத்தேன்.   ஈரத்தூண்டில்   முகத்தைத் துடைத்துக் கட்டிலில் சாய்ந்தவர்தான். ஆடவில்லை அசைய வில்லை.


அ டுத்த நாள் காலை பதினோரு மணியாகியும் எழுதிருக்கவில்லை. அப்போதுதான்  அவர் மார்பில் இதயத்தின் பக்கத்தில் ஒரு   பெல்டோனா ப்ளாஸ்டர் ஒட்டி இருப்பதைக் கவனித்தேன். அதிர்ச்சியாக இருந்தது. உடனே அடுத்தவீட்டு வேலாயுதம் தம்பதிகளை அழைத்தேன்.  அவருக்கு வைத்திய வகைகள் தெரியும். நல்ல நண்பர்கள். அவர் பார்த்துவிட்டு.  உறங்கட்டே.  தூக்க மருந்து கொடுத்திருக்கு டாக்டர். என்றார்.
எல்லோருக்கும் தெரிகிறது எனக்குத் தெரியவில்லையே  என்று வருத்தமாக இருந்தது.

பாதி விஷயம் நான் பயப்படுவேனே என்றே சொல்ல மாட்டார்.  சாயந்திரம் ஆனதும்   பொறுக்க முடியாமல் காஃபி மணம்நாசியில் படும்படி கட்டில் பக்கம் வைத்து நானும் பாபுவும் அவரை அழைத்தோம். அடுத்த நிமிடம் விழித்து விட்டார்.  நான் ஏன் இங்க இருக்கேன். வொர்க்ஷாப்ல என்ன ஆச்சு.  ஐ ஷுட் கோ என்று அனத்த ஆரம்பித்ததும்  நான் நடந்ததைச் சொல்லி இன்று மட்டும்  ஓய்வாக இருங்கள். கம்பெனி முதலாளி வருவதால் வெள்ளிக்கிழமைதான் திறப்புவிழா.இன்று செவ்வாய். அதனால் நஷ்டம்  யாருக்கும் இல்லை. என்றதும் மீண்டும் அலுப்போடு படுத்துக் கொண்டார். சரியாக இரண்டு மணி நேரம். ஐய்யா  குளிக்கப் போயாச்சு. வெள்ளை வேளேர் பாண்ட். வெள்ளை முழுக்கை சட்டை.  ரேவ்,,,,,,, வொர்க்ஷாப் போறேம்மா.  என்னால் இன்னும் தூங்க முடியாது. ஐ யாம் கம்ப்ளீட்லி ஃபைன். அடுத்த நிமிடம் ஜீப் உறுமியது.  அடுத்த நாள் மாலை  படங்களோடு வந்தார். கம்பெனி முதலாளி வரவேற்புக்கு  ஏற்பாடுகள் பிரமாதமாக இருந்தான. காகித வண்ணப்பூக்கள் அலங்காரம். புதிதாக் ஒரு சுழலும் மேடையில் அப்போது ரிலீசாகி இருந்த ஃபியட் வண்டி  ஒன்று சுழல்வது போலவும் அமைத்திருந்தார். மேலே இருந்த வண்ண ரிப்பன்கள் தொங்க அமர்க்களமாக இருந்தது.வெள்ளிக்கிழமையும் வந்தது.  கம்பெனி சேர்மனும் வந்தார்.
சுற்றிப் பார்த்துவிட்டு  மிக மகிழ்ந்து போனார்.  இதுக்குத் தாண்டா உன்னிடம் கொடுக்கணும் வேலையை  என்றவர்  சும்மா இல்லை.  வொர்க்ஸ் மானேஜர்  பதவியையும்    கொடுத்துவிட்டார். அப்போது 28  வயதுதான் சிங்கத்துக்கு. எனக்கோ   இரண்டாவது குழந்தை வயிற்றில்   எட்டு மாதம்.  
she is bringing  me accolades  "என்று பெருமைப் பட்டுக் கொண்டார் . அவர் தீர்மானப் படியே பெண்தான் பிறந்தது.      யாருடைய     பிரகாசத்துக்கும் யாரும் காரணமில்லை. உங்கள் உழைப்பு உங்களை உயர்த்தியது என்று நானும் சொன்னேன்.                                                                                                        
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.

Monday, June 09, 2014

சில்லென்று சில நினைவுகள் 14......... 1967

பெரியவனும் அவன் கரடியும் இப்படித்தான் இருப்பார்கள். வாயில் விரலும் உண்டு.   கண்ணில் எப்போதும் ஒரு கேள்விக்குறி.
Add caption
சிங்கத்துக்கு முகவும் பிடித்த ஆர்க்கிட்.
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
குளிரையும் தாண்டி  வந்த புதர். இந்த ஊர் மக்களைப் போலவே சர்வைவர்.


ஏன் இந்தப் பையன்   நம்மகத்தைக் கொள்ளவில்லை. இவ்வளவு  ஒல்லியா  இங்கே  குழந்தை பிறந்ததே   இல்லை.   ரேவதியைத் தான்  கொண்டிருக்கு.  வரவர்கள் போகிறவர்கள் எல்லாம்    சொல்லும் வார்த்தைகள் இவை.  எனக்கு  மிகவும் வருத்தமாக இருக்கும்.  மாமியார் உடனே  குழந்தையை  குழந்தை நல மருத்துவரிடம்                                                                  அழைத்துப் போனார்கள். அவர் பார்த்துவிட்டு  இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை  லாக்டோஜன் கரைத்துக் கொடுக்கச் சொன்னார்.  மற்றபடி   நல்ல சுறுசுறுப்பாக இருக்கிறான். கவலை ஒன்றும் இல்லை என்று அனுப்பிவிட்டார்.


நல்ல  வேளை நான் பிழைத்துக் கொண்டேன் என்றபடி  சிங்கத்துக்கும் கடிதம் போட்டேன். அவர் இன்னும் பத்து நாட்களில் இங்கே வரவேண்டும் என்று பதில் போட்டார்.  கவலைப் படாதேம்மா. இங்க வா. நாம் நல்லபடியாக வளர்க்கலாம்  என்ற உறுதி வேற.      சீனிம்மாவுக்குத் தொலைபேசி  என்னை அழைத்துக் கொண்டு போகச் சொன்னேன்.  மாமாவும் வந்தார். பாரிஜாதத்தில் அப்போது தண்ணீர் கஷ்டம். நிறைய குடும்பத்தினர் வேற வருகை.  முனியம்மா   துணிகளைத் தோய்ப்பதும்       உலர்த்துவதும், காப்பிப் பாத்திரங்களைத் தேய்ப்பதும்  ஆக இருந்தார்.  உள்ளே    சமையலுக்கு இருக்கும் நரசிம்மன்   செய்யும்   குழம்பு.கறிக்கூட்டு எல்லா வாசனையும் மாடிக்கு  மிதந்து  வரும். பசி தாங்காது.  அந்தச் சின்ன வயதில் பொறுமையும் கூடவந்ததில்  எனக்கு அதிசயமே.  பெரியவர்கள் சாப்பிட்டு முடிந்ததும்  அழைப்பு வரும்.  குழந்தையைக் கீழே கொண்டு வந்து கூடத்தில் குட்டி மெத்தை பாய் எல்லாம் போட்டு  கொசுக் கூடாரமும்  வைத்து விட்டால் வாயில் விரலை போட்டுக் கொண்டு எல்லோரையும்    பார்த்த படி இருப்பான்.  மாமனார்  பார்த்துவிட்டுப் பெரிய பிலாசபரா வருவான் பாரு என்பார். சும்மா இரு மாமா. ரேவதி   அவன் நல்ல ஆர்டிஸ்டாக வருவான் பாரு என்பார் இன்னோருவர். நான் சாப்பிட்டதும்    குழந்தையைப் பின்வீட்டுக்கு எடுத்துக் கொண்டு போய்ச் சின்ன மாமியாரிடம் கொடுத்தால் அவர்கள் வீட்டுப் பாத்ரூமில் சொகுசாகக் குளிப்பான்.  வீடு இன்னமும் ஆலிவர் ரோடில் இருக்கிறது. மாமியார் தான் இல்லை. மிக நல்ல மனுஷி. என்னடி காமாட்சி என்றுதான் என்னை விளிப்பார்.                                                       

அப்புறம் சில வருடங்கள்  கழித்துத்தான்    புதுவீடு கட்டியது அப்புறம் தண்ணீர் நிலைமை சரியானது.   இன்னும் 67இல்   இருக்கிறொம் இல்லையா. இரண்டு நாட்கள் புரசவாக்கம் போய் விட்டு வந்தோம்.  இங்கே  வீனஸ் காலனி கதா காலட்சேபங்கள்    போய்க்கொண்டிருந்தன. பாலகிருஷ்ண  சாஸ்திரிகள்     பாகவதம் சொல்லிக் கொண்டிருந்தார் என்று நினைக்கிறேன். எனக்குக் கதை கேட்கப் பிடிக்கும் ஆனால்  குழந்தையைப் பார்த்துக் கொள்ள  யாரும் இல்லாததால் நான் வீட்டில்      இருக்க வேண்டியது ஆயிற்று.  பெரியவர்கள் சின்ன வயதில் எனக்கு     விருப்பம் இருக்காது என்று நினைத்தார்களோ என்னவோ.   பின்னாட்களில்    சந்தர்ப்பம் கிடைத்தும்      கூட வர  ஆளில்லாததால்  போக முடியவில்லை. சிங்கம்  என்னைக் கொண்டுவிடத்தயார். சாயந்திரம் போய் இரவு வேளையில் அவரைத் தொந்தரவு செய்ய எனக்கு இஷடம் இல்லை. எல்லாத்துக்கும் கொடுப்பினை வேண்டும்  இல்லையா.   சீனிம்மாவுடன்   சேலம் கிளம்பும் நாளும் வந்தது. வெஸ்ட் கோஸ்ட்  எக்ஸ்ப்ரஸ்   மதியம்  12  மணிக்குக் கிளம்பும் என்று நினைவு. தொட்டில், லாக்டோஜன்,ஃப்ளாஸ்க்,பாட்டில்கள் சகிதம்  ஒரு பிக்னிக்  பாஸ்கெட். என் பெட்டி ஒன்று.சீனிம்மாவின் எளிமையான பை ஒன்று இத்துடன் அம்மா,மாமா,தாத்தா ,ஆஜிப்பாட்டி இவர்களுன் நூறு புத்திமதிகளோடு நாங்களும் கிளம்பினோம். இனி  சேலத்தில் பார்க்கலாம்.