Showing posts with label நிகழ்வுகள். 2023. Show all posts
Showing posts with label நிகழ்வுகள். 2023. Show all posts

Wednesday, November 08, 2023

உயிர்




வல்லிசிம்ஹன்
எல்லோரும் வளமாக வாழவேண்டும்.

வாழும் வரை. நிறை வாழ்வு அனைவருக்கும். கிடைக்குமா என்று தெரியவில்லை. இரண்டு மாதங்களாகக். காதில் விழுந்த
செய்திகள் அலைக்கழித்து விட்டன.

யார் வழியாக வந்தது என்ற ஆராய்ச்சி வேண்டாம்.
கணவனிடம். சண்டை. குழந்தை களிடம்  மறைத்து
அளவில்லாத தூக்க மாத்திரைகளை விழுங்கி 
மயக்கம் வரும் அவசரப் போலீசை. அழைத்து   நினைவு இழந்து

   விழுந்திருக்கிறாள்.

 அவர்களுக்குக் குழந்தைகள் மூன்று. ஆம்புலன்சில் வந்த போலீஸ்
குழந்தைகளைத் தெரிந்தவர்கள்
வீட்டில் அழைத்துச் சொல்லி இருக்கிறார்கள் . அனைவருக்கும் அதிர்ச்சி.
24 மணி நேரம் தங்கள் பாதுகாப்பில் வைத்திருப்பதாக
உறுதி கொடுத்ததும் போலீஸ் குழந்தைகளை அவர்கள் பொறுப்பில் 
விட்டது.
 
அந்தப் பெண்மணியின் கணவருக்கு  ரெஸ்டிரைனிங்க் ஆர்டர். குழந்தைகள் 
பக்கத்தில் வரக்கூடாது என்று.
 அந்தப் பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு
ஒரு வாரம் சிகித்சை எடுத்த பிறகு
மன நல மருத்துவர் முழு அனுமதி கொடுத்த பிறகு
வீட்டிற்கு வந்திருக்கிறாள்.
அவளுக்குக் காவலாக அவளது 70 வயது தாயும் ,
உடல் நிலை சரியில்லாத தந்தையும்.

எல்லாவற்றுக்கும் அந்தப் பெண் சொல்லும் ஒரே
பதில் என் வளர்ச்சியை, முன்னேற்றத்தை 
யாருமே விரும்பவில்லை என்பது தான்.

அந்தப் பெண்ணின் தொழில் சைக்கியாட்டிரிஸ்ட்.

இனி அவளால் அந்தத் தொழிலைத் தொடரமுடியுமா என்பது சந்தேகம்.
   தொடரும்.
 


வயதானவர்களின் கொண்டாட்ட நாள்.

வல்லிசிம்ஹன் எல்லோரும் நலமுடன்   வாழ்க. வயதானவர்கள் (சீனியர் இல்லை) தினம். அக்டோபர் 1. வயதான வயதாகிக் கொண்டிருப்பவர்கள் தினம் இன்று அக்டோபர்...