வல்லிசிம்ஹன்
எல்லோரும் இனிதாக வாழவேண்டும்
மார்கழித் திருப்பாவை 25 ஒருத்தி மகனாய்.
ஸ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருவடிகளே சரணம்.

ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளர
தருகிலனாகித் தான் தீங்கு நினைத்தக்
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றினில்
நெருப்பென நின்ற நெடுமாலே உன்னை
அருத்தித்து வந்தோம் பறை தருதியாகில்,
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.
கோதை பிறந்து கலக்கம் தீர்த்தாள். வாழியே!!!!!
ஆண்டாள் கண்ணனைப் போற்றிப் பாடிக்கொண்டிருக்கிறாள்.
அதில் அடுத்ததாக வருவது அவனது குலச் சரித்திரம்.
விருஷ்ணி வம்ச அரசன் வசுதேவருக்கும் அவரது மனைவி தேவகிக்கும் எட்டாவது மகனாகப் பிறக்கும் கண்ணன்,
தன்னை அழிக்கப் பிறந்தவன் என்று அறிகிறான்
தாய் மாமான் கம்சன்,
அவன் கைகளிலிருந்து தப்பிக்க வசுதேவர் விஷ்ணு அவதாரமாகப் பிறந்து கண்ணனைத் தன்
சகோதரனான நந்தகோபனின் ஆயர்பாடியில் விட்டு விடுகிறார்.
ஒளித்து வளர்கிறான் கண்ணன்.
அவனைத்தாக்க வரும் கம்சனின்
அசுரர்கள் அனைவரையும்
சிறு குழந்தையாக இருக்கும் போதே அழித்து விடுகிறார் கிருஷ்ண பரம்பொருள்.
தருக்கிலானாகிதான் நினைத்தக் கருத்தைப்
பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில் நெருப்பென நின்றான்--------
கண்ணனைக் கொல்ல வேண்டும் என்னும் பகைத்தீ
கம்சன் நெஞ்சில் எரிந்து கொண்டிருக்க
அவன் அழைப்பின் பேரில் மாமனைக் காண வந்த
கண்ணன் அவன் வயிற்றினில் ஏறி நின்று அவனை மாய்த்து
மோக்ஷம் அளித்தார்.
அப்படி நின்ற பெருமானே உன்னை
மோக்ஷப் பொருளாக வரித்து அணுகி இருக்கிறோம்
எங்களை மதித்து எங்கள் நோன்பை மதித்து
எங்கள் வருத்தம் தீர்ந்து மகிழுமாறு செய்வாய் கண்ணா என்று வேண்டுகிறாள்.
விஷ்ணுசித்தரின் மக்களும் ஸ்ரீரங்கராஜனின் பிரிய மனைவியுமான கோதை நாச்சியாருக்கு நம் வணக்கங்கள்.