![]() |
| இன்று |
காயமே இது பொய்யடா
வெறும் காற்றடைத்த பையடா//
பழைய சித்தர் பாடல் தானே.
நானும் சாதாரண பதிவர்களில் ஒருவளாகச் செயல் பட்டுக் கொண்டிருந்த காலங்களில்
இந்த (மேலே குறிப்பிடப் பட்டிருக்கும் )எண்ணைப் பற்றித் தெரியவும் தெரியாது.
சுவாரஸ்யமும் கிடையாது. புத்திசாலிப் பதிவர்களின் நட்பு.
அவர்களுடன் சேர்ந்தால் புத்தி கூர்மையாகும்னுதானே எதிர்பார்ப்பீர்கள்?
ஹா!நம்ம வழி தனி வழி இல்லையா.
தோன்றும்போது எண்ணங்களைப் பதிய வேண்டியது.
அதில் கால்வாசி புலம்பல் இருக்கும்.ஓகே ஓகே பாதி புலம்பலாக இருக்கும்.
ஒரு வரலாறு இருக்காது. ஒரு சமூகப் ப்ரக்ஞையோடு
ஒரு பதிவும் இருக்காது.
படங்கள் நிறையக் கிடைக்கும் போது நோகாமல் நோன்பு நூற்பது போலப் போய்க் கொண்டிருந்த வாழ்க்கையில் திடீர் என்று தமிழ்மண நட்சத்திர அழைப்பு!
இதேதடா வம்பு.என்று ரொம்ப நிறையவே கஷ்டப்பட்டு ஒரு வாரம் தேற்றிவிட்டேன்.
அப்போதுதான் இந்த ட்ராஃபிக் ரான்க் பற்றித் தெரியவந்தது.
அதைப் பதிவில் இட்டுக் கொள்ள புத்திமதியும் வந்தது. நம்பமுடியாது.
69ஆவது ரேன்க்.
நான் எங்கையோ 129இல் இருந்ததாக நினைவு,.
அதற்கப்புறம் ஒரே ஏற்றம் தான்.
நான் முன்பு என்ன தப்பாகச் செய்தேன். இப்பொழுது என்ன சரியாகாச் செய்கிறேன் என்றே புரியவில்லை:)))
2011 கடைசியிலிருந்து ரேன்க் முன்னேறி முன்னேறி 23,22 வரை வந்து நின்றது!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
எனக்கு நம்பமுடியவில்லை.
சரி போ இருக்கிறவரை லட்டு சாப்பிட்டுக்கோன்னு விட்டு விட்டேன். நடுவில் வந்த மகிழ்ச்சி குழந்தைகள் வருகை, தொந்தரவுகள் ,உறவினர் உடல் நிலை, சிலபிரிவுகள் எல்லாம் என்னைப் புத்தகங்கள் தங்கள் பக்கம் ஈர்த்தன.
தொலைக்காட்சிப் படங்கள் பாடல்கள். இது ஒரு விடுமுறை சீசன்!
அது பார்வையாளர்களுக்கும் படிப்பவர்களுக்கும் தெரிந்துவிட்டது:)
பலன் என்னன்னால் ரேன்க் ஏறிவிட்டது.
ஒன்றுதான் புரியவில்லை.
ஸ்டாட்ஸ் பார்த்தால் 100,200னு இருக்கு
இதுக்கும் அதுக்கும் சம்பந்தம் இருக்கா இல்லியா.
வாழ்க்கைல நிறைய விஷயங்களில் புத்தி மட்டுதான். அதில இதையும் சேர்த்துக் கொள்ள வேணும்:)))))))))))))))))))
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
