Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

Sunday, October 23, 2011

சினிமாவில் காதலும் காதலர்களும்

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
முன்பொரு தடவை'' டூ ஃபார் த ரோட் ''
என்ற படத்தை விமரிசித்துப் பதிவொன்று போட்டிருந்தேன்.
காதலர்களாக வாழ்க்கையை ஆரம்பிப்பவர்கள், காலப் போக்கில் எப்படி மாறுகிறார்கள்
 என்பதை எனக்குத் தெரிந்த விதத்தில் எழுதி இருந்தேன்.
ஆட்ரி  ஹெப்பர்ன்   எனக்கு மிகவும் பிடித்த நடிகை.
அந்த மான் போல விழிகள் இன்னும் என்னை  மயக்கிவைத்திருக்கின்றன.

அதில் வரும் ஒரு வசனம்.
கணவன் மனைவியைப் பார்த்துக் கேட்பது.

ஒரே இடத்தில் உட்கார்ந்து கொண்டு பேசாமல் இருக்கும்  ஆணையும் பெண்ணையும்
 பற்றி என்ன நினைக்கிறாய் என்பதே.
அவள் சொல்வால் ''ஒ. தே  மஸ்ட்  பி மார்ரீட்"  என்று
 அந்த அளவுக்கு அவர்கள் காதல் கசந்து போயிருக்கும்.

இந்தப் பதிவில் நான் பேசுவது சில நிறைவேறாத நிஜம் காதலைப் பற்றி.
சங்கம் படம் இந்தியில்  வந்தது.
அப்பொழுது ராஜ்கபூர் வைஜயந்திமாலா  காதல் பற்றி விரிவாகப் பேசப்பட்டது. அது நிஜமோ பொய்யோ தெரியாது.
அப்புறம் நடந்தது எல்லாம்  நமக்குத் தெரியும்.
  இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்னால்  அமெரிக்க வாழ்
திரு.பிரகாஷ் ஸ்வாமி நம் பத்மினியைப் பேட்டி எடுத்துப் போட்டு இருந்தார்.

அதில் பத்மினி தன்   பழைய காதலைப் பற்றி க் கண்ணீர் சிந்தாத குறையாகப் பேட்டி கொடுத்திருந்தார்.
  நடிகர் திருசிவாஜிகணேசனுக்கும்   தனக்கும் நடுவில் இருந்த ஈர்ப்பு  எப்படி நிறைவேறாமல் போனது என்று விரிவாகச் சொல்லப்பட்டிருந்தது.

இப்பொழுதும் தில்லானா மோஹனாம்பாள் படத்தில் வரும் ''நலந்தானா '' பாடலைப் பார்க்கும் போது அவர்களிடமிருந்த ''கெமிஸ்ட்ரி''  அற்புதமாக
வெளிப்படும். நம் மனமும் அவர்கள் காதலுக்காக   வலி  அடையும்.

 அதே போல    ரோமன் ஹாலிடே  படம்.
கிரிகரி பெக்  ,ஹெப்பர்ன் ஜோடி   படத்தில் தான் காதலர்கள். நிஜ வாழ்வில் இல்லை. ஆனால் என்ன ஒரு நடிப்பு. ரொமான்ஸ் என்றால்
இப்படித்தான் இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு அங்க அசைவிலும் தெரியும்படி நடித்திருப்பார்கள்.

அதே வரிசையில் ''கிங் அண்ட் ஐ'' என்கிற படம் யூல் ப்ரன்னரும் டெபோரா கெர்ரும் நடித்தது.

படித்த கௌரவமான ஆங்கில கவர்னஸாக டெபோரா சையாம் நாட்டுக்கு வருவார். அந்த ஊர் அரசனாக யூல் ப்ரென்னர்.
பல மனைவிகள் இருபது முப்பது குழந்தைகளுக்குத் தந்தை.

இந்தப் படமெல்லாம் ''க்ளாஸிக்''  வகையைச் சேர்ந்தவை.
தன் மூர்க்கமான நடிப்பினாலயே  டெபோராவிடம் தன்   காதலை வெளிப்படுத்திவிடுவார்.
சட்டம் மதம் இரண்டும் அவர்களைச் சேரவிடாமல் இரும்புத்திரையாக நிற்கும்.
அதைப்பற்றி அவர்களுக்கும் தெரியும்.
அரசனின் கடைசிப் படுக்கையில்   டெபோரா  மரியாதையே உருவாக
தலைகுனிந்து  முழந்தாள் இட்டு அவருக்கு மரியாதை
செலுத்தி நிமிரும்போது அரசனின்  கண்கள் தன் மேல் நிலைத்திருப்பதைப் பார்த்து  உணர்ச்சிவசப்படுவார்.
நிதானமாகத்   தன் மகனின் கைகளைப் பற்றியபடி வெளியேறி விடுவார்.
ஒரு விரசம் கிடையாது. ஒரு முகம் சுளிக்கும் வசனம் இருக்காது.
இவர்களும் மணம் புரிய நினைத்துப் பிரிந்தவர்கள்.

அந்த வழியில் நான் நினைவு   கொள்வது அபூர்வ ராகங்கள் படம்.
ஸ்ரீவித்யாவின் நயன மொழிக்கு உலகையே அள்ளித் தரலாம்.
வாழ்வில்  சோகத்தைத்  தவிர வேறு எதைக் கண்டாரோ.

மொகலேஆசம். மதுபாலா திலீப் குமார் நிஜ வாழ்க்கைக் காதலர்கள்.

உண்மையாகவும் பிரிந்தார்கள்.


   சில சமயம் தோன்றும்    உண்மையான காதல்   சேர்ந்தாலும் காதலர்கள் சேருவதில்லையோ.
இல்லை காதல் வெற்றியாகக் கல்யாணத்தில் முடிந்தாலும்
அலுத்துக் கொள்ளாமல்  வாழ்க்கை போகிறதா:)
எப்பவோ  எழுதின  பதிவு.
இப்பொழுது எவ்வளவோ   காலம் மாறிவிட்டது.










Tuesday, February 16, 2010

500, அ பாட்ச் ஆப் ப்ளு(சினிமா)

selina,gordan



கோர்டன்
************************
சமீபத்தில் டர்னர் க்ளாசிக் மூவீஸ் தொலைக்காட்சியில் இந்தப் படத்தைக் காணும் சந்தர்ப்பம் கிடைத்தது.
ஒரு கண் பார்வை இழந்த பெண்ணின் வாழ்க்கையின் சோகமும் சந்தோஷமும் மிக அழகான சந்தர்ப்பங்களின் நிகழ்ச்சிகளின் கோர்வையாகத் தொகுத்து வழங்கி இருக்கிறார்கள்.
பதினாறு வயது செலினா வும் அவள் அம்மாவும்,தாத்தாவும் ஒரு அபார்ட்மெண்டில் வசித்துவருகிறார்கள் . வறுமைக்கோட்டின் எல்லை.
பல வழிகளில் பணம் சம்பாதிக்கும் அம்மாவாக ஷெல்லி விண்டர்ஸ்








செலினாவாக எலிசபெத் ஹார்ட்மேன் என்ற நடிகை கண்ணில்லாத பெண்ணாக வெகு அருமையாக நடித்திருக்கிறார்.
கோர்டன் என்னும் கறுப்பினத்தவராக சிட்னி பாட்டியெ(Sidney Poitier) ஓல் பா என்று அழைக்கப்படும் தாத்தா. இவர்களைச் சுற்றி வரும் கதை. ஐந்து வயதில் அம்மாவுக்கும் அவருடைய சினேகிதனுக்கும் சண்டையில் கண்கள் குருடாகின்றன செலினாவுக்கு.

அந்த நாட்களில் கறுப்பு வெள்ளை இனத்தவரிடையே மிகுந்த கசப்புணர்ச்சி கொந்தளித்துக் கொண்டிருந்த நேரம்.

வீட்டு வேலைகளைச் செய்வதற்கு மட்டுமேஅவளைப் பயன்படுத்திக் கொள்கிறாள் அம்மா.
செலினாவுக்கு ஒரே ஒரு மகிழ்ச்சி,பாசி மணி மாலைகளைக் கோர்த்து அதை இன்னொரு அன்புள்ளம் கொண்டவர் மூலம் விற்று அந்தப் பணத்தை அம்மாவிடம் கொடுப்பதுதான்.

அந்தச் சினேகிதரே சிலசமயங்கள் அருகில் இருக்கும் பார்க்கில் அழைத்துக் கொண்டு போய் விடுவார்,..அங்கு ஒரு மரத்தடியில் உட்கார்ந்து அன்று மாலை வரைச் சந்தோஷமாகப் பலவித பறவைகளின் சப்தங்களைக் கேட்டுக் கொண்டே மாலைகளைக் கோர்த்து முடிப்பாள்.
இரவு நேரம் நெருங்கும்போது அவளது தாத்தா குடி போதையோடு அங்கு வந்து அவளை வீட்டுக்கு அழைத்துச் செல்வார்.
இதைக் கண்டுபிடிக்கும் அம்மா அவளைப் பார்க்குக்குப் போகத்தடை விதிக்கிறாள்.
அதையும் மீறி தாத்தாவுடன் வெளியே வரும்போதுதான்,அந்தப் பார்க்கில் மேற்பார்வையாளராக இருக்கும் கோர்டனைச் சந்திக்கிறாள்.
இருவருக்கும் அழகான நேசம் மலர்கிறது. கோர்டன், செலினாவின் வெகுளித்தனத்தையும், பொறுமையையும் கண்டு வியக்கிறான். அவளுக்குக் கண்பார்வையின் குறைப்பாடுகளை நீக மிகவும் முயற்சிக்கிறான். சாலையைக் கடப்பதற்கும்,,ப்ரெயில் முறையில் கல்வி அனுபவம் பெறுவதற்கும் பாடு படுகிறான்.
கண்பார்வையில்லாத அந்தச் சிறுமிக்கு உலகின் வெளிச்சமான பகுதியைக் காண்பிக்கிறான். இவர்களின் நட்பை அறியவரும், ரோசலின்(செலினாவின் அம்மா) கோர்டன் ஒரு கறுப்பு இனத்தவர் என்று சொல்லி செலினாவை மிரட்டி அடிக்கிறாள் .


இரண்டு நாட்களுக்கு மேல் செலினாவால் வீட்டில் இருக்க முடியவில்லை. தட்டுத் தடுமாறி வெளியே வந்து பார்க்குக்குச் செல்ல முயற்சிக்கிறாள். தோல்வியே ஏற்படுகிறது. ஒரு மழை இரவில் கோர்டனின் தொலைபேசி எண்ணை வாங்கிக் . கொள்கிறாள் .
கோர்டனுக்கு அவள் மீது காதல் இருந்தாலும் ,அவள் வாழ்வில் முன்னேற வேண்டும் என்று நினைக்கிறான்.
அவளோ அவனை விட்டுப் போவதில் சம்மதம் இல்லாவிட்டாலும் அவன் ஏற்பாடு செய்யும் கண்தெரியாதவர்கள் பள்ளிக்குப் போகச் சம்மதிக்கிறாள்.

கடைசிக் காட்சியில் அவளுக்குக் கொடுக்க ஆசைப்பட்ட மியூசிக் பாக்ஸை எடுத்துக் கொண்டு படியிறங்குகிறான் கோர்டான்.
அவன் வாயிலுக்கு வருவதற்குள் அழைத்துச் செல்ல வந்த பள்ளி வண்டி கிளம்பிவிடுகிறது. கண்களில் இன்னதென்று தெரியாத உணர்ச்சியோடு பார்த்தவண்ணம் நிற்கிறான் கோர்டன்.

அருமையான முடிவு. மற்ற காதல் படங்களைப் போல், உன்னை நான் திருமணம் செய்து வாழ்நாள் பூராவும் காப்பாற்றுவேன் என்ற உறுதி மொழியெல்லாம் தராமல் அவள் உண்மையாகவே வாழ்க்கையில் முன்னேற வழிவகுக்கும் கோர்டன்….சிட்னி பாட்டரின். நடிப்பு மனதில் நிற்கிறது . ஆஸ்கார் வாங்கின படமென்று திரையில் காண்பித்தார்கள்.

இந்தப் படத்தில் , அந்த நாளைய வெள்ளை கறுப்பர்களின் இன பேதத்தை ஒட்டி எடுக்கப்பட்ட காட்சிகளும் , வார்த்தைகளும் மனதில் பதிகின்றன,.
இவர்களது நேசம் நிறைவேறாமல் போவதற்கும் இந்த பேதமே காரணமாகிறது.:(
வெகு இயற்கையாக அவர்களது மெல்லிய உணர்வுகள் காண்பிக்கப் படுகின்றன.
வெகுநாளைக்கப்புறம் மிக நல்ல படமொன்றைப் பார்த்த நிறைவு எனக்குக் கிடைத்தது.









எல்லோரும் வாழ வேண்டும்.

Thursday, October 23, 2008

மீண்டும் சினிமா..கவிதாயினிக்காக

பாலும் பழமும்,இந்தப் படத்திலிருந்து எங்கள் பதின்மவயது தீர்மானம், நோய் வந்தாலும் கணவன் பணிவிடை மறக்கக் கூடாது:)

அழகான படம்.

ஆச்சி இல்லாமல் சினிமாபற்றி எழுதக் கூடாது இல்லையா.
பெண்களின் திடத்திற்கு இவர் ஒரு முன்னோடி. பானுமதி அம்மா கூடவே போட்டி போடத் துணிந்தவர்:)


தேவ் ஆனந்த் க்ரேஸ், சிங்கத்து கிட்டயிருந்த்து பிடித்தது. இவரும் கிஷோர்ர் குமாரும் சேர்ந்து இசைக் கோவில் கட்டி இருக்கிறார்கள். ரசிகர்கள் மனத்தில்.



அஷ்டாவதானி.
சிவாஜி சாருக்கு சமானமாக இவருக்கும் அப்பொது மரியாதை உண்டு.
மீண்டும் ஒரு அன்னை படம் வருமா.




டெய்சி இரானி. மகா கனம் பொருந்திய ஸ்ரீமான் சுந்த்ரராஜனைத் திரையில் காட்டியவர். நல்ல சுட்டிப் பெண். பையன் யார் என்று கேட்க வைத்தவர். இப்போது உருவமும் புகழும் வேறு விதமாக இருக்கின்றன. பாவம்தான்.





இவர்களையெல்லாம் பற்றியும் இவர்ர்களின் நடிப்பைப் பற்றியும் ஒரு மாநாடே நடத்தலாம்.
இரூவருக்கும் இடையே அப்படி ஒரு ஸின்க் இருந்தது.
பக்கா ஜெண்டில்மேன். நோய்க்கு இடம் கொடுத்துவிட்டார்.







இன்னும் நான் ரசிக்கும் கடோத்கஜன். அந்த மீசையை ஒதுக்கிப் பாயாசம்
உறிஞ்சும் அழகே அழகு.:)








நடீக்கவந்தபோது இருந்த அதே வெடுக் வாழ்க்கையிலும் இவரிடம் இருப்பதைப் பார்த்திருக்கிறேன்.









நல்லதொரு நாட்டிய நடிகை. வெகு அழகான கண்கள்.
மதுரை வீரனில் வாங்க மச்சான் வாங்க பாட்டுக்கு உயிர் கொடுத்தவர்.
பாடாத பாட்டெல்லாம் பாட வந்தால் பாட்டுக்கு ஆடும் நடனம் கண் முன்னே நிற்கும்.
மணப்பந்தல் படத்தீல் எஸ்.எஸ்.ஆருக்காகப் பாடும்' உனக்கு மட்டும் ''பாட்டு
அந்த நாட்களில் ரொம்பவே பிரபலம்.












சந்திரபாபு. நல்ல மனிதர், பாடகர். சிரிக்க வைத்து கோணங்கி செய்தவர்.
பிழைக்கத்தான் தெரியவில்லை.










சந்திரலேகா! சரித்திரம் தான். ரஞ்சன் படம் கிடைக்கவில்லை.
அவரும் மைலாப்பூர் வாசி என்று கேள்விப் பட்டீருக்கிறேன்.
''நான் ஆடுனு சொன்னா நீ ஆடணும்'' என்று சவுக்கோடு மிரட்டுவதை ரசிக்கலாம்.












சௌகார் அம்மாவை விட முடியாது. பாண்டி பஜாரில் இரண்டு மூன்று தடவை பார்த்திருக்கிறேன்ன்.
உயர்ந்த மனிதனில் '' a time to play, a time to eat,and a time to rest''
மறக்க முடியாத வசனம்:)













பின்னுரை....

நாம் சினிமாவை விட்டாலும் சினிமா நம்மளை விட மாட்டேங்குது. இது யாரோ நடிகையோட புலம்பல் இல்லப்பா.


நானே தான். மன்றத்தில வந்து சினிமா பத்திச் சொல்லுங்கன்னுட்டாங்க நம்ம

மதுமிதா,கவிதாயினி,சுபாஷிதம் எழுதினவங்க,சமூக சேவகி
சொல்லாளர்
கடுதாசி அழைப்பு வச்சுட்டாங்க
நம்மளாலே தட்ட முடியுமா.

அதுவும் சினிமாங்கற அல்வாத்துண்டு பக்கத்தில வச்சுட்டு
கொஞ்சம் கொஞ்சமா சாப்பிடச் சொன்னாக் கசக்குமா என்ன:)
நேரம்தான் போறவில்லை.அவ்வளவு இருக்கு சொல்ல.
கேள்வி பதில்னு வந்தா கொஞ்சம் கற்பனை தடைப்படுது:)
நான் பார்க்க நினைச்சுப் பார்க்காம விட்ட படங்களே அதிகம்.
ஷோலேக்குக்கூட சிங்கம் தனியாப் போயிட்டு வந்தது. டூ மச் வயலன்ஸாம்:)
இப்ப ஒண்ணும் கெட்டுப் போகலே. சீன் பை சீன் யூ டுயூபில பார்த்தாகிறது.
மத்தபடி பராசக்தில ஆரம்பிச்ச நம்ம பயணம்
குழந்தைகள் பிறக்கிற வரை அப்படி இப்படி போச்சு. அப்புறம் ஒரு ஆறு வருஷம் சினிமா பக்கமெ போகவில்லை.
அப்புறமா பாமாவிஜயம் தொட்டு வருடத்துக்கு ஒரு சினிமாவாவது பார்க்கும் வழக்கம் வந்தது.
குழந்தைகளுக்காக ஹடாரி,ஷாக்கி டி ஏ, ஆஃப்ரிகன் சஃபாரி, சூப்பர்மேன்,
ஸ்டார்வார்ஸ்,மை டியர் குட்டிச் சாத்தான்னு
நிறைய படங்கள்.
அப்புறம் டிவி வந்ததில் ஏதாவது ஒரு படமாவது வாரத்துக்கு ஒரு முறை பார்த்துவிடுவதுதான்:)
சினிமா பிடிக்கும்.நல்ல சினிமா ,கொலைகள்,மற்ற குற்றங்கள்னு இல்லாம படங்கள் வரவேண்டும் என்று ஆசைதான்.
மக்கள் பார்ப்போர்களோ, தயாரிப்பாளாகளும் எடுப்பார்களொ. தெரியாது.
மீண்டும் என்னை எழுதவைத்த மதுமிதாவுக்கு வளர நன்னி.




.

,



.




நவராத்திரி பதிவு 4

வல்லிசிம்ஹன் நவராத்திரி நல் நாட்கள் வல்லிசிம்ஹன் எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்  நவராத்திரி நல்  நாட்கள்  +++++++++++++++++++++++++++++++ சின...