ஜிமிக்கி அழகா இருக்கே |
அம்மா தொப்பா வலிக்கிறது:(
வெந்நீர் கொடுக்கறேண்டா. சரியாப் போயிடும். இல்ல இன்னிக்கு நறைய
வலிக்கிறது ம்ம்ம்ம்.
இரு அப்பாவும் அக்காவும் கிளம்பட்டும் . உனக்கு
மருந்து தரேன்
என்று சொல்லிவிட்டு எட்டு மணிக்குக் கிளம்பவேண்டிய கணவனுக்கு லன்ச் எடுத்துவைத்துக் காரில் கொண்டுபோய்வைத்துவிட்டு,பெண்ணுக்கு
வேண்டிய நூடில்ஸ் செய்து ஹாட்பாக்ஸில் வைத்து வெளியே வந்த பள்ளிப்
பஸ்ஸில் ஏற்றிவிட்டு வந்தாள்.
பெண் ஆறாம் வகுப்புக்குப் போனதிலிருந்து தம்பிக்கு
பள்ளிக்குப் போவது சிரமமாக இருந்தது.
இவன் வேறு பள்ளி அவள் வேறு பள்ளி.
அது தினப்படி வயிற்று வலியாக உருவெடுத்தது.:(
அம்மாவுக்கு அது புரிந்தாலும் நிஜமான வயிற்றுக் கோளாறாஆக இருக்குமோ என்ற கவலை வந்தது.
சின்னவனே இன்னிக்கு டாக்டர்கிட்ட அப்பாயிண்ட்மெண்ட் வாங்கறேன் போலாமா என்றாள்.
அய்ய அவ்ளோ வலிக்கலைமா. வெந்நீர் சாப்பிட்டதும் இப்போ சரியாப் போச்சு. நாம ஸ்கூலுக்குப் போலாமா.
என்று உற்சாகமாகப் போகும் மகனைப் பார்த்தவண்ணம் நின்றாள்.
லன்ச் போது நான்வரட்டுமா. வயித்துவலி இருக்குமா?
அம்மா நோபடி கம்ஸ் டு ஸ்கூல் . லன்ச் ரூம்ல அம்மா எல்லாம் வரக்கூடாது.
சீஸ் டோஸ்ட் வச்சிருக்கியா.
ஆமாம். அப்ப ஐ ஆம் ஒக்கே.
என்று அம்மாவின் கைகளைப் பற்றியபடி பள்ளியை நோக்கி விரைந்தான் சின்னவன்.
பள்ளிக் கதவுகள் திறந்திருந்தன.
தயங்கினான்.
அம்மா என்னை என் க்ளாஸ் வரை வரை விடுகிறாயா.
கார்ரிடார் லாங்கா இருக்குமா. இட் ஃபீல்ஸ் ஸ்ட்ரேஞ்ச்.
எனக்கு அனுமதி இல்லையேடா. சரி இன்னிக்கு மட்டும் விடுகிறேன்.
வா என்ற போதே சின்னவனின் வகுப்பு டீச்சர் வந்தாள்.
"ஹை டார்லிங்
கம் வித் மி "என்று அழைத்துப் போய்விட்டாள்.
இப்போது அம்மாவுக்கு வயிறு கலங்குவது போல இருந்தது.
ஓ! இந்த வெளிச்சமில்லாத வழிதான் அவனுடைய வயிற்று வலிக்குக் காரணமா.
என்ன செய்யலாம் என்று பள்ளியின் அடுத்தபக்கத்துக்கு வந்தாள். கண்ணாடிக கதவுகள் வழியே பார்க்கும் போது மகன் அவன் வகுப்பில் நுழைவதைப் பார்த்தாள்.
இப்பொழுது பிரச்சினைக்கு வழி தெரிந்துவிட்டது.
அடுத்த நாள். பின் கதவு வழியே அவனை அழைத்துச் சென்றதும் சின்னவன் முகத்தைப் பார்க்கவேண்டுமே. ஹை அம்மா. திஸ் இஸ் பெட்டர்.
அவனது ஐந்துவயது உடல் பூராவும் சந்தோஷம்:0)
அடுத்த நாள் வயிற்றுவலி வரவில்லை.!!!!
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்