மகாகவி பாரதியார் பற்றி எழுதுவதற்கும் தகுதி வேண்டும்.
ஆனால் அவர் பிறந்த இந்த நாளில் அவரை வாழ்த்தத் தமிழ் மொழி தெரிந்தால் போதும் என்றே நினைக்கிறேன்.விழிகளின்
கூர்மை, இந்தப் பழைய படத்திலிருந்தே எட்டி நம்மைப் பிடிக்கும் காந்த முகம், அவர் மனைவியின் எளிமை .அவர் விட்டுச்சென்ற கவிதை வரிகள் இன்னும் எல்லோருக்கும் ஊக்கமும் பேச்சு வன்மையும் கொடுத்துக் கொண்டிருக்கிறது.
எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கும் மகா மனிதருக்கு ,வள்ளலுக்கு
நம் எளிய பிறந்த நாள் வாழ்த்துக்களைச் சொல்லி வணங்குவோம்.
உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா வா.
எல்லோரும் வாழ வேண்டும்.
என் நட்பு என் சொத்து .
- Emily Dickinson
என் நட்பு என் சொத்து .
- Emily Dickinson
32 comments:
நானும் கூடச் சேர்ந்துக்கவா?
இனிய வாழ்த்து(க்)கள் நம் முண்டாசுக்கு!
'பொழுதோட போயிட்டயே ஐயா'ன்னு மனசு நினைக்குது.
தங்களோடு சேர்ந்து நானும் நினைவு கூர்கிறேன்!! நல்ல இடுகை வல்லியம்மா!
ஹெட்டர் ...கூல்!!
எனது வாழ்த்துக்களும்
நானும்.. நானும் சேர்ந்து கொள்கிறேன்.
நினைவு கூர்ந்திருக்கும் விதம் வெகு அழகு வல்லிம்மா.
நானும் சேர்ந்து கொள்கிறேன், நம் தேசிய கவியை வாழ்த்த.
இன்று வசந் டீ.வியில் பாரதியைப் பற்றிபேசியவர் சொன்னார், குடும்பத்தோடு திருவனந்தபுரத்தில் உள்ள வனவிலங்கு பூங்கவிற்கு பாரதிபோனாராம்.சிங்ககூண்டு கிட்ட போய் சிங்கத்திடம் கைகுலுக்க கை கேட்டு விட்டு சொன்னாராம்,நீகாட்டுக்கு ராஜா,நான் பாட்டுக்கு ராஜா என்று.
உங்களுடன் சேர்ந்து பாரதியை நானும் நினைத்துக் கொண்டேன்.நன்றி.
படங்கள் எல்லாம் அற்புதம் வழ்க்கம் போல்.
thanks for the post, wishes to Barathi
துளசி சொல்லாத பாரதியையா நான் சொல்லி விட்டேன்.
உங்க வீட்ட்ல தான் முதல்ல முண்டாசைக் காட்டினாராம் அவர். சொன்னார்.!
வாங்கப்பா முல்லை. உங்களுக்காகவே ஹெட்டரை மாத்தறேன்:) நன்றிம்மா.
வாங்கப்பா தென்றல். உங்க ஊரு எப்படி இருக்கோன்னு கவலையா இருந்தது.
நன்றிம்மா.
வாங்கப்பா ராமலக்ஷ்மி, உங்களைப் பார்க்கும்போது---இல்லை இல்லை படிக்கும் போது, இதோ பாரதி கண்ட
புதுமைப் பெண் அப்படீன்னு தோணும்.
தேவதைக்கு வாழ்த்துகள்.:)
வாங்கப்பா கோமதி.
ஒரு டீச்சரா உங்களுக்குப் பிள்ளைங்களுக்குச் சொல்லிக் கொடுத்த அனுபவம் இருக்கும்.
அதில் பாரதி நிறைய வந்திருப்பார்.
எத்தனையோ கவிஞர்களுக்கு உரமிட்டவர் இல்லையா.
நன்றிம்மா.
you are welcome Kuppan.yahoo.
thanks for this visit and comment.
மன்னிக்கவும். நான் மாறுபட்ட சிந்தனையாளன். இடும்பன் எனச் சொல்லிக்கொள்ளலாம்.
பதிவின் முதல் வரியின் பொருள் என்ன? ஏன் தகுதி வேண்டும்? தமிழர் அனைவருக்கும் அவர் ஒரு கவிஞர். அக்காலத்தில் பிறந்ததனால், சுதந்திரத்தாகம் ஊட்டும் கவிகளைப்புனைந்தார். வேறென்ன?
இவற்றை அறிய் நமக்கு என்ன தகுதி வேண்டும்?
ஏன் ஒரு மனிதரை தெய்வமாக்குகிறீர்கள்? மாமனிதர். நல்ல மனிதர். என்று சொன்னால் போதாதா?
இரண்டாவது வரியில், முதல் வரியில் சொன்னதை மறுத்து எழுதுகிறீகள்! என்னதான் சொல்ல வருகிறீர்கள்?
படங்கள் நான்கு. இரண்டாவது படம் என்ன? அஃது எட்டயபுரம் அரண்மனையா? அந்த அரண்மனை பாரதியை ஒதுக்கித்தள்ளி விட்டது என்று உங்களுக்குத் தெரியுமா?
அதை ஏன் இங்கு போட்டு பாரதிக்குப் பிறந்தநாள் வாழ்த்துச் சொல்கிறீர்கள்? வஞசப்புகழ்ச்சியா?
பாரதியின் இல்லாளை எளிமையாக இருக்கிறார் என ஒரு காமெண்ட்.
ஏழ்மையில் உழன்றவர் எப்படி இருப்பார் நண்பரே?
அது மட்டுமா? அவர் அக்கால அவர்தம் சாதி ஆச்சாரப்படியே இருக்கிறார். இஃதெல்லாம் உங்களுக்கு வேறு மாதிரி தெரிகிறதா?
பாரதியை மீசைக்காரர் என்கிறீர்கள்! அதைப்பெருமையாகச்சொல்வதாகத் தெரிகிறது!! அதில் என்ன சிறப்பைக்கண்டு பிடித்தீர்கள்?
என்னவோ போங்கள். உங்களைப்போன்றோரால் வருங்காலத்தில் பாரதி காணாமல் போய்விடுவார் என அச்சத்தைத் என்னால் தவிர்க்கமுடியவில்லை.
வல்லிம்மா...நானும் ஒரு பிறந்த நாள் அன்னிக்கு அவரோட வீட்டுக்கு போனோன். ம்மம்ம்...ஏதே இருக்கு.
ஒரு வணக்கத்தை சொல்லிக்கிறேன்.
பாரதிக்கு வாழ்த்துகளும் வணக்கங்களும்.
Very nice . i got the blog link through my friend... yar yar piranth naalukuo special podum namathu Thollai kacchikgal bharathiyai maranthathu eno???
LK
கள்ளபிரான் வணக்கம்.
படங்க்கள் பாரதியைச் சேர்ந்தவை. எட்டயபுஅத்தில் அவர் பிறந்த வீடு.
இன்னொன்று சென்னையில் அவர் வசித்த வீடு.
உண்மைதான் அந்தக் கால ஆசாரப்படி அவர் மனைவி இருக்கிறார்.
ஏழ்மையிலும் மேன்மை கண்டவர்கள்.
பாரதி மீசை எங்க வீட்டில் எல்லோருக்கும் பிடிக்கும். இது என் பதிவு. அதில் எழுத எனக்கு உரிமை உண்டு. இதில் வஞ்சமும் இல்லை .
புகழ்ச்சியும் இல்லை. மீசையும் முண்டாசும் அவன் சொத்து,.
உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் எனக்கு நஷ்டமும் இல்லை லாபமும் இல்லை.
யார் என்ன சொன்னாலும் பாரதியின் புகழ் நிலைக்கும்.
வாங்கப்பா கோபிநாத். நான் எட்டயபுரம் போனதில்லை. அந்த வகையில் நீங்கள் கொடுத்துவைத்தவர்.
வாங்கப்பா கவிநயா.
எல்லாப் புகழும் பாரதிக்கேன்னு நாம ,தமிழைப் பற்றிப் பேசும்போது சொல்லலாம்.
LK, you yrself have given the correct comment. thollaikkaatchi ... adhu appadiththaan irukkum.
அப்படிப்போடு அருவாளைன்னானாம்!
பூனை ஒன்று புலியானது:-))))))
Thulasi!!!:))))
Miga miga arumayana Padaipugal madam. Hats off to you..
LK
நீ எழுதி நாம் படித்தோம்
தமிழில் கீதை,
நீ எழுதி யாம் படித்த
யாவும் கீதை..!
nalla irukku
check my blod..
http://sakthispoem.blogspot.com/2009/12/blog-post_12.html
மிக்க நன்றி சக்திவேல். மிக்க நன்றி எல்.கே.
உங்கள் வார்த்தைகள் உற்சாகத்தைக் கொடுக்கின்றன.
நன்றிப்பா.
பதிலைக் கண்ணியமான முறையில் போட்டதற்கு நன்றி. பொதுவாக பாரதி வணக்கம் செய்வோர், நான் பாரதியின் எதிரியன நினைத்து வசைபொழிவார்கள். எனவே special thanks for you.
எல்லாம் சரி. என் முதற்கேள்விக்குப் பதிலைக்காணேமே ஏன்?
பாரதியைப் பற்றி அறிய ஒரு தகுதி வேண்டும்? அஃது என்ன?
மீண்டும் வணக்கம் கள்ளபிரான்.
நான் எழுதுவதற்கும் ஒரு தகுதி வேண்டும் என்று தான் பதிவிட்டிருக்கிறேன்.
"அறிய"ப் படிக்கும் தகுதி இருந்தால் போதும்.
ஒரு பெரிய மலை ஏறும்போது, ஒரு கடலின் முன்னால் நிற்கும்போது
நாம் உணரும் ஒரு ஹம்பிள் உணர்ச்சிதான்.பாரதியைப் படிக்கும் போது ஏற்படுவது.
என்னைவிடத் தமிழ் தெரிந்தவர்கள்,அறிஞர்கள் இருக்கிறார்கள்.
அவர்கள் நடுவே நான் பாரதியைப் பற்றி எழுதும்போது எச்சரிக்கையாக எழுத வேண்டும்
என்ற உணர்வே இது. நன்றி. உங்கள் பதிவையும் படித்தேன்.
Read. Thanks.
Post a Comment