மாடியின் வளைவில் ஏறி வரும் பொன்னியைப் பார்த்தான் சாமி ...............................எப்படி வளர்ந்துவிட்டாள்!. கண்ணுக்கு இனிமையான பச்சை பட்டுப் பாவாடைவெள்ளையில் பலவிதபூக்கள் போட்ட தாவணி. கையில் பச்சை வளையல்கள் முகம் மலர்ந்த புன்னகை,வெட்கம் ஏன் இந்த மாற்றம். அம்மாவை அழைக்க எழுப்பிய குரல் தொண்டையில் சிக்கியது. வா வா எப்ப வந்த மெட்ராஸ்க்கு?. பரீட்சையெல்லாம் பாசாவியா. இல்லை கணக்கில் கோட்டை விடுவியா என்று கேலியும் சிரிப்புமாக அவளை வரவேற்றான். மாடி ஏறி அவனை நிமிர்ந்து பார்த்தவள் சிரித்தபடி மாமி என்றழைத்தபடி உள்ளே சென்றுவிட்டாள்......................................................மனதில் எழுந்த ஏமாற்றத்தை மறைத்தபடி அவளைத் தொடர்ந்தான். ..அவனது அம்மாவும் பொன்னியைப் பார்த்து வாயைப் பிளந்தாள் .................................ஏ குட்டி எவ்ளொ வளந்துட்ட...ம்ம் கலயாணம் கட்ட வேண்டியதுதான்.என்று ஆசையாக அண்ணன் மகளைப் பார்த்தாள்........................................................என்னது கல்யாணமா.!! மாமி இப்பதான் ஒம்போதாவது வந்திருக்கிறேன். இன்னும் ரெண்டு வருஷமாவது படிக்கணும். சாமிக்குக் கட்டி வைங்க. அவந்தான் வளர்ந்துட்டான் பனை மரத்தில பாதி:0 என்று சிரித்தாள் பொன்னி..........................................................................................................அவனும் இப்பதானெ காலேஜ் போயிருக்கான். சம்பாதிக்க வேண்டாமா. .... மருமகளை வச்சுக் காப்பாத்தப் பணம் வேணுமே குட்டி!!!!!................................................சாமிக்கென்ன , தொட்டால் நானூறு சம்பளம் வாங்கிடுவான். படு சாமர்த்தியம். என்றவாறு சாமி இருக்கும் பக்கம் கண்ணை ஓட்டினாள் பொன்னி.. ........................ஏதோ ஒரு நாணம் அவனை முழுவதும் பார்க்க விடாமல் தடுத்தது.......அதற்குள் மாமியின் இன்னோரு பெண் சித்ரா வந்துவிட்டாள் அவளும் இவளும் ஒரே வயது.
இரண்டு வருடங்களாகப் பார்க்காதவர்கள் உடனே மாடிக்குப் போய்விட்டார்கள். தாயம்,புளியமுத்து எல்லாம் விளையாடியபடி பொழுது போனது. ....................பாட்டீ தேடுவாங்கப்பா என்றபடி எழுந்தவள் ,சாமி உள்ளே நுழைவதைக் கண்டு தயங்கினாள்...
..நம்ம சாமிதானே ஏன் இப்படி ஒதுங்கறே என்று கேலி காட்டினாள் கீதா........இல்ல நான் போகணும் என்று தாவணித் தலைப்பைத் திருக ஆரம்பித்தாள் பொன்னி. கைகளில் ஆங்கிலப் புத்தகங்களை வைத்திருந்த சாமி...........பொன்னியிடம் கொடுத்தான். இதெல்லாம் டிடெக்டிவ் ஸ்டோரீஸ்.முன்ன வாசிச்ச ஃபாண்டம் அது போல இல்ல. லீவு நாளை வீணாக்காமல் படி என்று........................................................பெரிய மனித தோரணையில் அவள் கையில் கொடுத்தான்...குனிந்து கொண்டே வாங்கிய பொன்னி தான்க்ஸ் சொல்லிவிட்டு
அடுக்களையில் மாமியின் அடையை ருசிக்கப் பறந்தாள்..................................மாமியும் மறக்காமல் அவளுக்குப் பிடித்த மிளகு குழம்பு சாதமும் ,அடையும் வெண்ணெயுமாகத் தாமரை இலையில் வைத்திருந்தாள். அடுக்களை வெகு எளிமையாக இருந்தது. அடுப்பு, குமுட்டி அடுப்பு என்று வசதிகள் குறைவான இடம்தான் .........................மேலே ஓடுவேய்ந்த கூரை. நடுவில் எட்டிப்பார்க்கும் சூரியப் பொட்டுகள். அனைத்தையும் ருசித்தபடி இருந்தவளை ஏதோ ஒன்று திருப்பிப் பார்க்கவைத்தது......சாமி.
அதற்கு மேல் ஒன்றும் தொண்டையில் இறங்கவில்லை அவளுக்கு......எப்படியோ சமாளித்தவள் மாமியைப் பார்த்தாள்.....மாமி கண்ணில் நீர்.....அச்சோ எப்பதான் ஓடு மாற்றுவோமோ உன் மாமாவின் மனம் என்னிக்குச் சரின்னு படறதோ அன்னிக்குத்தான் எல்லாக் கல்யாணமும்......என்ற படி எழுந்தவள்....
...சமத்தா இருந்துக்கோ. படி......பாட்டி தேடப் போகிறாள்.
ரிக் ஷாவைக் கூப்பிடட்டுமா? என்றபடி வெளியே வந்தார்கள். பால்கனியின் கோடியில் நின்று கொண்டிருந்த சாமி நான் முனியாண்டியைக் கூப்பிட்டு விட்டேன்மா. .பணமும் கொடுத்துவிட்டேன். பொன்னி பத்திரமாகப் போய்விடுவாள் என்றபடி......பொன்னியைப் புன்னகையோடு ஏறிட்டான். ........................அவள் மனதில் ஏதோ சங்கடப் படுத்தியது..நான் வரேன் என்று தலையை ஆட்டி விடை பெற்றுக் கொண்டு படியிறங்கினவளை ஏதோ ஒன்று திரும்ப வைத்தது. சாமி அதே புன்னகையோடு நின்றுகொண்டிருந்தான்........................................................அவனும் தலையை ஆட்டி விடை கொடுத்தான்.
பாட்டி வந்ததும் கோபித்துக் கொண்டாள் .உன்னை யார் அங்க போகச் சொன்னது...................வீட்டொடு இரு.
எல்லாம் போதும் இந்த சகவாசம்......................பொருத்தம் கிடையாது.
கற்பனை எல்லாம் வேண்டாம்...... இதெல்லாம் நடந்து நாலைந்து வருடங்களில் சாமி தில்லி போய்விட்டான். ..............
.......................பொன்னி மன்னார்குடியில் திருமணம் செய்துகொண்டு பணக்கார நிலச் சுவான் தாரின் மருமகளானாள். சாமியின் பார்வையை மட்டும் அவள் என்றும் மறக்கவில்லை.# பதின்ம வயதில் ஒரு ராகம்.
