| fullmoon |
இந்தத் திங்கள் இந்த நிலா.
இந்தப் படங்கள் எடுப்பதற்குள்
ஊன் உருகித்தான் விட்டது.
அவ்வளவு குளிர்.10 டிகிரி
நமக்கு ஒத்து வர மாட்டேன் என்கிறது.:)
மாசில் வீணையும்
மாலை மதியமும்
வீசும் தென்றலும்
வீங்கிள வேனிலும்
மூசு வண்டரைப் பொய்கையும்
போன்றதே ஈசன் எந்தை இணையடி நீழலே
இந்தப் பாடல் தான் நினைவுக்கு வந்தது.
ஒரு சத்தம் கிடையாது. ஆறு மணிக்கு சாயந்திர வேளையில் நிசப்தம்.
எட்டு மணிக்கு சாப்பாடு முடிந்து
நித்திரை கொள்ள இந்த ஊர் தயார்.
ஒன்பது மணி வரை சூரிய வெளிச்சம் இருக்கிறது.
"நேரத்தோடு சாப்பிட்டு நேரத்தோடு படுத்துக்கணும்*
தாத்தா குரல் காதில் விழுகிறது:)
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்



