Add caption |
ஏரிக்கரையில் காற்று வாங்கும் வீடுகள். அவைகளின் அடித்தளத்தில் படகுகள். நினைத்தால் படகில் ஏறிப் பயணம் செய்யலாம். |
படகின் முன் பகுதியில் தேசிய மலர் எடேல்வைஸ் சுவிஸ் நாட்டின் செழிப்புச் சின்னம் |
ரயில் நிலையத்தின் பயணக் கழிப்பிடம். இரண்டு ரூபாய்க்கு சுத்தம் சுகாதாரம். |
Add caption |
ஏரிக்கரையோரம் மலைகள் வானை முட்டும் சிகரங்களுக்கு மேல் பஞ்சுப்பொதியாய் மேகங்கள். |
ரயிலோடு ஒட்டி வரும் ஏரிக்கரையும் சாலையும் |
படகின் அழகுச் சித்திரங்கள் |
எல்லாத் தமிழ்ப் படங்கள் இந்திப் படங்களிலும் இந்தப் பாலத்தைப் பார்த்திருக்கிறேன்/ |
வாழ்க்கையே அலைபோலே நாமெல்லாம் அதன் மேலே ஓடம் போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே |
அவர்களின் தேசியத்தை எங்கும் மறப்பதில்லை இந்நாட்டு மக்கள். |
பின்தொடரும் நினைவுகள் போல அலைகள் |
அலைகள்
நடுவே அமைந்த நகரம்" இன்டர் லாகன்' சுவிட்சர்லாந்த்.
ஊரைவிட்டுக் கிளம்பும் நாட்கள் நெருங்க நெருங்க பேத்தியின் கேள்விகள் அதிகரித்தன.
''
நீ ஏன் அமேரிக்கா போனும். அவனை இங்க வரச்ச் சொல்லு. நாம எல்லாம் சேர்ந்து இருக்கலாம்.
என் ரூம் அவனுக்குக் கொடுக்கிறேன்'' என்றெல்லாம் வார்த்தைகள்
வர ஆரம்பித்தன.
ஒரு மாறுதலுக்கு வெளியே அழைத்துப் போகலாம் என்று
இண்டர்லாக்கன்
நகரத்துக்குப் போகலாம் என்று முடிவு செய்தோம்.
இந்த ஊர் இரண்டு ஏரிகளுக்கு நடுவே அமைந்திருக்கிறது.
துன் என்று ஒரு ஏரி
. மற்றொன்று ப்ரையன்சீ.
வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்ற விதத்தில்
ஏகப்பட்ட கவர்ச்சிகள் நிறைந்த இடம்.
பாரா
க்ளைடிங், பலவித மலைச்சிகரங்களுக்குப் போக கேபிள் கார் வசதிகள்.
ஏரிகளுக்கு இடையே போக்குவரத்துக்கு வசதியான படகுகள்.
நகரம் முழுவதும் கண்ட இடமெல்லாம் பாக்கேஜ் டூர் வந்திருக்கும்
இந்தியர்கள்
கண்களை நிறைக்கும் வண்ண மலர்கள்.
நீலவானம்.
பச்சை மலைகள்.
பார்த்துவிட்டு
மனம்
நிறைய
நினைவுகளை அள்ளி நிறைத்துக் கொண்டு
வீடு திரும்பினோம்
சிகாகோ கிளம்பும் நாளும் வந்தது.
மகனும் பேத்தியும் சூரிக் விமான நிலையத்தில் எங்களை வழி அனுப்ப வந்தார்கள். அழுது கண்கள் சிவந்திருந்த பேத்திக்கு சமாதானம்...இரண்டு மூன்று வாரங்களில் வந்துவிடுவோம்.
சரியென்று ஒப்புக் கொண்டது குழந்தை.
அவளுக்கு வாரங்கள், மாதங்கள் தெரியாது.
இரண்டு ஞாயிறு சென்றால் வந்துவிடு
வார்கள் என்ற நம்பிக்கை. :(
!!!!!!!!!!!!!!^^^^^^^^ ¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦
மாற்றம் ஒன்றே நிஜம் வாழ்வில்!!
பயணம் மீண்டும். இந்த வார்த்தைகள் எவ்வள்வு உண்மை என்பதை 2011இல் உணரவில்லை. இப்போதும் கிளம்புகிறேன். துணைக்கு மகன். மீண்டும் பயணம்.