Blog Archive

Thursday, July 31, 2014

தென் டகோட்டா ரஷ்மோர் குன்றுகள்

இதோ  அந்த வீடியோ
போகும் வழியில் ஒரு கடையில் குதிரை.
Add caption
ரஷ்மோர்   குன்றுகளுக்கு முன்னால் ஸ்தம்பங்கள் ஒவ்வொரு மாகாணம் பிறந்தநாளும் ஐக்கியமான நாளும் குறிப்பிடப் பட்டு,கல்வெட்டு.
ரஷ்மோர் முகங்களுக்கு வடிவம் கொடுத்த சிற்பி போர்க்ளம்
மலையடிவாரத்தில்  அவரது கலைக்கூடம்.இன்று இந்த  மாபெரும் நினைவாலயம் உருவான கதையைச் சொல்கிறது.
சிற்பங்கள் உருவாவதற்கு முன் போர்க்ளம் இறைவனடி சேர ,மிச்ச வேலைகளைப் பூத்தி செய்தார்  அவர் மகன்  லின்கன்.
நிகழ்ச்சிகள் நடக்கும் ஆம்ஃபி தியேட்டர். கலை நிகழ்ச்சிகளும்,  மற்ற சித்திரங்களும் காட்சிக்கு வைக்கப் படுகின்றன.
எத்தனை உழைப்பு இந்த முகங்களைச் செய்வதில் இணைந்திருக்கிறது. அந்தக் காலத்தில் கணினி கிடையாது. கண்ணளவு,தன் கணித அளவு,எஞ்சினீயராக இருந்து சிற்பியாகிய மாமனிதரின் இடையறா முயற்சி  ஆச்சரியத்தில் நம்மை ஆழ்த்துகிறது.
தினமும்  நடைபெறும் நிகழ்ச்சிகளுக்காகக் கூடும் கூட்டம்.  நிகழ்ச்சி முடிவில்   அமெரிக்க் அதிபர்களின் முகங்கள் வண்ண ஓளியில்  பிரம்மாண்டமாகத் தெரிகின்றன. மக்களின் உணர்ச்சி வெள்ளம் கணக்கில்  அடங்காது.
இதுபோலப் நான்கு இடங்களிலிருந்து  ராட்சச   விளக்குகள் ஒளி பாய்ச்சுகின்றன. ஒரு ராணுவ நடவடிக்கைபோல    இந்த விழா தினமும் இரவு ஒன்பது மணிக்கு நடக்கிறது.
அத்தனை மாகாணங்களின் கொடிகளும் பறக்கின்றன.வண்ணங்கள் கண்ணைப் பறிக்கும்படி.
ஜார்ஜ்  வாஷிங்டன்,தாமஸ் ஜெஃபர்சன், தியோடார் ரூஸ் வெல்ட்,ஆப்ரஹாம் லின்கன்.  அமெரிக்காவின் அடிப்படை ஆதாரச் சட்டங்களையும் பிரமாணங்களையும்   அமைத்தவர்கள்.                               இங்கே  ஒரு  இணைப்பு யூ டியூபிலிருந்து கொடுக்கிறேன்.
http://youtu.be/KksIvMukSE0
 எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Looking in awe.  .....................இது ஒரு மறக்க முடியாத   அனுபவம். ஒரு அப்பா,மகன்  400  பணியாளர்கள் முனைந்து முடித்த மாபெரும்    ஆச்சரியம்.  முழுவிவரங்களையும் தொகுத்துக் கொடுக்கலாம் என்றால் நீண்டு கொண்டே போனது. அதனால் சுலப வழியாக  வீடியோவை இணைத்துவிட்டேன்.

Monday, July 28, 2014

தென் டகோட்டா பயணம் ஆரம்பம் கரடிகள் உலகம்

Add caption
ஒரு கரடி  நடக்க இடமில்லாம வந்துடறாங்கப்பா  வண்டி  வண்டியா.
உன் வண்டிக்கு அப்பன் வண்டியே பார்த்திருக்கேன்  போப்பா  போ.
எங்க நிழலையே காணோம்........மூச்சு வேற வாங்குது.
 
ராப்பிட் சிடி  விமான நிலையம்  சௌத் டகோடா
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
ஆஹா தேன் வாசனை வருதே......என்றபடி நகர்ந்த இந்தக் கரடியார் ஒரு மரத்தண்ட போயி அண்ணாந்து பார்த்தபடி    உட்கார்ந்தே விட்டார்.அசையவே இல்லை.
கீழே  இருக்கும்   எறும்புகளை முறைக்கிறார்  இவர்.
சாப்பாட்டுக்கு நேரமாச்சே.  என்ன  வச்சிருக்காங்களோ   தெரியலையே.
அருகிலிருந்த  கேர்ள் பிரண்டைக் காணோமே. எங்க போயிட்டாங்க.   இப்படியாகத் தானே  எங்கள் முதல் நாள்   ஊர்சுற்றல் தொடங்கியது. சிகாகோவிலிருந்து கிளம்பும்போது தெளிவாக இருந்த வானம் நடுவானத்தில்  கறுத்தது. மேகங்கள் திரண்டன. மிம்ன்னல் வெட்டி நாங்கள் சென்று கொண்டிருந்த விமானம்     நடுங்க ஆரம்பித்தது.   பக்கத்திலிருந்த சின்னப் பேரன்  என்னை அணைத்தபடி  பயப்படாதே  பாட்டி. ப்ளேன் இன்னும்  அரைமணி நேரத்தில் ராப்பிட் சிடி போயிடும்.  என்கிறான்.   விமானம்       தரை இறங்கியதும் பெருமூச்சு விட்டேன். கொஞ்ச நேரத்தில் வழியில் வந்த                    மின்னல் இடிகள் இங்கேயும் வந்துவிட்டன..    மிக  அழகான நிலையம்.   சுவரெங்கும் அமெரிக்க இந்தியர்கள் படம்.மியுரல் கலை வண்ணத்தில் மலைகள் புல்வெளிகளின் வண்ணங்கள்.  சிரித்த முகத்தோடு  பணிபுரியும்    மக்கள். மாப்பிள்ளை  அங்கே ஊர்சுற்றிப் பார்க்க  ஹெர்ட்ஸ் நிறுவனத்திலிருந்து பெரிய வண்டி ஒன்றை எடுத்துக் கொண்டார். வெகு சௌகரியம்.ஐந்த நாட்களும் சலியாமல் எங்களை  எல்லா இடங்களுக்கும்  அழைத்துச் சென்றது..ஒரு சத்தம் இல்லை.                                                                                                                                                                                                                            சத்தமெல்லாம்  இப்பொழுது வெளியே தான். என்னைத் தவிர எல்லோரும் ,ஒரு ஆறு மாசப் பாப்பா உள்பட வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.  எப்பாடியோ ஒருவிதமாக வண்டியை விமானநிலைய வாசலுக்குக் கொண்டு வந்துவிட்டார் மாப்பிள்ளை.   நாங்களும் குடைகளைப் பிடித்தபடி வண்டியில் ஏறி உட்கார்ந்தோம். இனி தங்கும் கம்ஃபர்ட் இன்ன்  தங்கும் விடுதியைக் கண்டுபிடிக்கவேண்டும். ஜிபிஎஸ்  பெண்மணி  பேச ஆரம்பித்தாள். நேர வலது பக்கத்திலியே இரு  இடப்பக்கம் திரும்பு என்று நகைச்சுவையாக்ச் சொல்லிக் கொண்டிருந்தாள். அந்த இருட்டில் மழையில் நல்லபடியாக  ஹோட்டலுக்குக் கொண்டுவந்து சேர்த்தார் மாப்பிள்ளை..                                                                                                                                    அவரது ஓட்டும் திறனுக்கு நன்றி.   இனி அடுத்த நாள் கதைதான் மேலே நடந்தது. கரடிகள்   உலகம்,. இங்கே கரடிகளோடு  காட்டெருமைகள்.,கொம்பு பெரிதான ஆடுகள், அலாஸ்கன் ஓநாய்,மான்கள்,   என்று விதவிதமாக இருந்தன. கரடிகள் சர்வசாதரண்மாக உலாவந்தன.    வண்டியின் கண்ணாடிகளைத் திறக்கக் கூடாது என்பது  சட்டம். அது பாட்டு வந்து கார் உயரத்துக்கு நின்று   எட்டிப் பார்த்து முகர்ந்துவிட்டு நகர்ந்தது.    அத்தனையும் அவ்வளவு அழகு. ஐய்யோ பாவம் மூச்சு வாங்கறதே  என்று நான் சொன்னால்      உடனே  பெண்  அவைகள் அப்படித்தாம்மா மூச்சுவிடும் .அதுக்கு வெயிட் ப்ராப்ளம்   எல்லாம் கிடையாது என்றாள்.                            ஒரே இடத்தில் நான்கு க்கரடிகள் மர நிழலில் தூங்கிக் கொண்டிருந்தன. .......    ஒவ்வொரு மிருகங்களுக்கும்  நடுவே தடுப்பு இருந்தது. ஓநாய் மற்ற மெல்லினங்களை வேட்டையாட முடியாது.  நம்மூர் மனித ஓநாய்களுக்கும் இது போல வரம்பு இருக்கக் கூடாதோ என்று தோன்றியது.:(                                                                                                            
   ஒரு மணி நேரம் சுற்றிவிட்டு சூவனீர் வாங்கும் கடைக்கு வந்தோம். பேரனுக்கு ஒரு கரடி சட்டை வாங்கிக் கொடுத்தேன்....அவர்கள் தங்களுக்கு வேண்டும் என்பதை வாங்கிக் கொண்டு எனக்கு ஒரு காட்டெருமை பொம்மை வாங்கிக் கொடுத்தார்கள்...எல்லாம் பளாபளா. விலையும் பளாப்பளா.                                                    
 முன்போல்  ஆசை இல்லை., கடையிலேயெ இருக்கட்டும் என்று தோன்றியது.   அடுத்து போகப் போவது   மௌண்ட்   ரஷ்மோர்.  முக்கிய அமெரிக்க அதிபதிகளின் முகங்கள் பதித்த  மலைச் சிகரங்கள்.   தொடரும்.                                   

Friday, July 18, 2014

அன்பின் அடையாளம் மன்னி

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
கடலில் கலந்த இன்னோரு ஜீவன்   ஆடி பிறந்தது என்று  மகளுடன் அருமையாகப் பேசிய என் அன்பு மன்னி ஜயா வரதராஜன்    சென்னையில் குரோம்பேட்டையில் இறைவனடி சேர்ந்தார். வாழ்வு முழுவதும் போராட்டம் தான்.                                                அயராத இறை நம்பிக்கை. .எதையும் வென்று வரலாம் எனும் தைரியம்.சாதுர்யம்.மனவலிமை என்றிருந்தவரை,இதயம் கைவிட்டுவிட்டது. 1957 ஆம் ஆண்டு என் பாட்டியின் வீட்டு முதல் மருமகளாக அழகுப் பதுமையாக  18வயது    பிம்பம் வந்த போதே மாமாவுக்கு நிகராக நாங்கள் அனைவரும் அவளை நேசித்தோம்.     இந்த  58 வருடங்கள் குடும்பத்திற்கும் ,பாசுர வகுப்புகளுக்கும், கோயில்களுக்கும் எத்தனை   விதமாக உதவி இருப்பார்களோ  தெரியாது.             மாமாவின் போனவருட  உடல் நிலை எண்ணும்போது  அவருக்காக நான் பயந்தேன்.   அவர்கள் அத்தனைபேருக்கும் சாயும் சுவராக இருந்தவள் ஒரு நொடியில்  இறைவன் பாதத்தை அடைந்துவிட்டாள்.  இங்கிருந்து தொலைபேசுவேன். நீ எப்படி இருக்கே மன்னி என்றால்  ,என்னை விடு நீ என்ன செய்யறே எழுதறியா.நிறைய எழுது.  உன் மனசு தெளிவாகும் என்று ஆசீர்வதித்தவள்.  மாமா தான் என்ன செய்வாரோ. எழுதிருக்கும்போதெ மனைவி கை காப்பியுடன் தான் அவரது  தினசரி              துவங்கும்..மன்னியின் மக்களுக்கும் மாமாவுக்கும் நல்லதொரு காவல் தெய்வமாக இருக்கவேண்டும்.. சதா மங்கையர் மலர்,குங்குமம், என்று   எல்லாவற்றுக்கும் எழுதிக் கொண்டிருப்பார். குறுக்கெழுத்துப் போட்டிகளில் கூட வெற்றிபெற்றிருக்கிறார்.    அசந்து மறந்து உட்கார்ந்து விட மாட்டார்.  இன்னும் எனக்குக் கீரைவடை  செய்து தரவில்லை என்று பரிகாசம் செய்வேன்.                                                நீ என்னோட வந்து இரு .உனக்கு   நான் எல்லாம் செய்து தரேன் என்பார்..  அவர் இறுதிப் பயணத்துக்கு வந்த பெண்களின் கூட்டம் சொல்லிமுடியாதாம்.மாலைகளும்  புடவைகளுமாகக் குவிந்தனவாம்.                                                                                                  மாமாவுக்கும் குழந்தைகளுக்கும்    இறைவன் ஏதாவது நல்வழி காட்டுவார்.   நமஸ்காரங்கள் மன்னி. .

Monday, July 14, 2014

காலையும் நீயே மாலையும் நீயே

நான் இல்லாவிடில் இத்தனை அழகு  உனக்குக் கிடைக்குமா.
தோட்டத்தின் கோடியில்  இருக்கும் மரகதம்
Add caption
புல்வெளிப் புல்வெளி தன்னில் பனித்துளி பனித்துளி
Add caption
மஞ்சள் வானம் தென்றல் சாட்சி
இயற்கை அன்னைக்கு எத்தனை வண்ணங்கள்.
Addcaption
சாளரத்தைதொட்டுச் செல்லும் கிரணங்கள்
இந்த இலைகளும் எத்தனை வண்ணம்தான் காட்டுமோ
 
புனித மலர் கண்ணுக்குக் குளிர்ச்சி
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
மாலை வண்ணம்

Wednesday, July 09, 2014

நதியோரம் ஒரு நடை

நேப்பர்வில்லின் போர் வீரர்களுக்கான   சின்னம்.
நன்றி மைக்கெல். நதிக்கு மேல்  பாலம் .அது ஒரு அழகு. நின்று கொண்டு நதியையும் ஒலியையும்           கேட்கும் பொழுது நிம்மதி.
அந்திமாலையின் பொன்னிறங்கள் அழகு.
ஐந்து  படுக்கை அறைகள்   கொண்ட   பெரும் வீடு. நதிக்கரை வாசம்.
இனிமையான இசை   பின்னணியில்  இந்த     ஊற்று மகிழ்ச்சிதரும்
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
ஆஹா இன்ப நிலாவினிலே ஓஹோ ஜகமே ஆடிடுதே                                                    





நேப்பர்வில்லுக்கான    ஒரு நதி. அதைச் சுற்றி கேளிக்கைகள் கொண்டாட்டங்கள்.    உணவு விடுதிகள்,நதியில் ஆழமில்லாத இடத்தில் விளையாடும் குழந்தைகள் பெரியவர்கள். ஆழநீரில் நீந்தும் விடலைகள். எல்லாரையும் கண்காணிக்க  லைஃப் கார்டுகள்       நதியோரம்ம்நடக்க   பாதைகள். நதிக்கு மேலே பாலங்கள். ஒளிவுமறைவான இடங்களில் புல் தரைகளில் காதலர்கள்.   என்போன்றவர்களுக்காக இசை. உட்கார்ந்து கேட்க  சாய்மானங்கள். இதமான   வெய்யில்.




புல்தரையில் ஃப்ரிஸ்பி விளையாட நச்சு பண்ணும் பேரன். கண்டும் காணாமல் அம்மாவுக்காக வந்த பெரிய பேரன்..கையில் க்ளிக்கும்  அலைபேசி.                    அவ்வப் பொழுது பாட்டியின் கைகளை இறுகப் பிடித்து,படிகளில் நிற்கும்   போது  தடுக்காமல் தடுக்கும் ஆபத் பாந்தவன்.  ஒரு சுற்று  சுற்றிவர இரண்டு மணிநேரம் பிடித்தது.  மணிக்கூண்டில் ஏடெல்வைஸ்     பாடல்.   எல்லாம்  பிடித்திருந்தது.    மிதந்து வந்த  சிகரெட்டின் மணம்    சிங்கமும் எங்கயோ இருப்பது போலப் பிரமை.        


https://docs.google.com/file/d/0B0EMbkYS23jkUzZ0YzFyMjRCeXM/edit



Tuesday, July 08, 2014

வெள்ளையும் மஞ்சளும் பிட் போட்டி ஜூலை



மஞ்சள் வெள்ளை ரோஜா
Add caption

Add caption
Add caption
Add caption
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Add caption