Blog Archive

Thursday, July 31, 2014

தென் டகோட்டா ரஷ்மோர் குன்றுகள்

இதோ  அந்த வீடியோ
போகும் வழியில் ஒரு கடையில் குதிரை.
Add caption
ரஷ்மோர்   குன்றுகளுக்கு முன்னால் ஸ்தம்பங்கள் ஒவ்வொரு மாகாணம் பிறந்தநாளும் ஐக்கியமான நாளும் குறிப்பிடப் பட்டு,கல்வெட்டு.
ரஷ்மோர் முகங்களுக்கு வடிவம் கொடுத்த சிற்பி போர்க்ளம்
மலையடிவாரத்தில்  அவரது கலைக்கூடம்.இன்று இந்த  மாபெரும் நினைவாலயம் உருவான கதையைச் சொல்கிறது.
சிற்பங்கள் உருவாவதற்கு முன் போர்க்ளம் இறைவனடி சேர ,மிச்ச வேலைகளைப் பூத்தி செய்தார்  அவர் மகன்  லின்கன்.
நிகழ்ச்சிகள் நடக்கும் ஆம்ஃபி தியேட்டர். கலை நிகழ்ச்சிகளும்,  மற்ற சித்திரங்களும் காட்சிக்கு வைக்கப் படுகின்றன.
எத்தனை உழைப்பு இந்த முகங்களைச் செய்வதில் இணைந்திருக்கிறது. அந்தக் காலத்தில் கணினி கிடையாது. கண்ணளவு,தன் கணித அளவு,எஞ்சினீயராக இருந்து சிற்பியாகிய மாமனிதரின் இடையறா முயற்சி  ஆச்சரியத்தில் நம்மை ஆழ்த்துகிறது.
தினமும்  நடைபெறும் நிகழ்ச்சிகளுக்காகக் கூடும் கூட்டம்.  நிகழ்ச்சி முடிவில்   அமெரிக்க் அதிபர்களின் முகங்கள் வண்ண ஓளியில்  பிரம்மாண்டமாகத் தெரிகின்றன. மக்களின் உணர்ச்சி வெள்ளம் கணக்கில்  அடங்காது.
இதுபோலப் நான்கு இடங்களிலிருந்து  ராட்சச   விளக்குகள் ஒளி பாய்ச்சுகின்றன. ஒரு ராணுவ நடவடிக்கைபோல    இந்த விழா தினமும் இரவு ஒன்பது மணிக்கு நடக்கிறது.
அத்தனை மாகாணங்களின் கொடிகளும் பறக்கின்றன.வண்ணங்கள் கண்ணைப் பறிக்கும்படி.
ஜார்ஜ்  வாஷிங்டன்,தாமஸ் ஜெஃபர்சன், தியோடார் ரூஸ் வெல்ட்,ஆப்ரஹாம் லின்கன்.  அமெரிக்காவின் அடிப்படை ஆதாரச் சட்டங்களையும் பிரமாணங்களையும்   அமைத்தவர்கள்.                               இங்கே  ஒரு  இணைப்பு யூ டியூபிலிருந்து கொடுக்கிறேன்.
http://youtu.be/KksIvMukSE0
 எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Looking in awe.  .....................இது ஒரு மறக்க முடியாத   அனுபவம். ஒரு அப்பா,மகன்  400  பணியாளர்கள் முனைந்து முடித்த மாபெரும்    ஆச்சரியம்.  முழுவிவரங்களையும் தொகுத்துக் கொடுக்கலாம் என்றால் நீண்டு கொண்டே போனது. அதனால் சுலப வழியாக  வீடியோவை இணைத்துவிட்டேன்.

9 comments:

வெங்கட் நாகராஜ் said...

எத்தனை நுணுக்கமான வேலைப்பாடு.... பகிர்ந்து கொண்டதற்கு நன்றிம்மா....

ஸ்ரீராம். said...

பிரமிக்க வைக்கும் முகச் சிற்பங்கள்! எல்லா புகைப்படங்களும் அருமை. வீடியோ 19.23 என்கிறது. பின்னர்தான் பார்க்க வேண்டும்! :))))

Angel said...

அற்புதமான கலைநயமிக்க வியக்கவைக்கும் சிற்பங்கள் !! உண்மையிலேயே வடிவமைத்தவர்கள் கிரேட் !
பகிர்வுக்கு நன்றிம்மா

துளசி கோபால் said...

ஹைய்யோ!!!!!!!

வல்லிசிம்ஹன் said...

நன்றி வெங்கட். இன்னும் செய்திகள் சேர்த்திருக்கவேண்டும்.கைகால் வலி என்று அலுப்பு. நானும் போனேன் என்பதற்கு ஒரு ஆதாரம்.அருமையான இடம்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் ஸ்ரீராம். வீடியோ நல்ல தரமாகக் கொடுத்திருக்கிறார்கள் .அதனால் தான் அதைப் பதிவில் சேர்த்தேன். வருடக்கணக்கில் பாடுபட்டுச் செதுக்கியிருக்கிறார்கள். பலவித ஆப்த்துகளுக்கு நடுவே இரண்டே நபருக்குத் தான் காயம்.சேதம் இல்லாமல் நல்ல காரியத்தை முடித்துவிட்டார்கள். நன்றிமா.

வல்லிசிம்ஹன் said...

வரணும் ஏஞ்சலின். முடிந்த போது அமெரிக்கா வந்து பாருங்கள். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடம்.நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

ஹை துளசிமா. படமெல்லாம் பிடித்ததா. பாடம்தான் சரியாக நடத்தவில்லை. எல்லோரும் துளசியாக முடியுமா:))

ராமலக்ஷ்மி said...

அருமையான படங்கள். வீடியோவைப் பார்க்கிறேன். பகிர்வுக்கு நன்றி.