Blog Archive

Thursday, September 30, 2021

இனிய கானங்கள் கிஷோர் சாப் உடன்

வல்லிசிம்ஹன்

கிஷோர் குமார் அவர்களின் குரலை 
விமரிசிப்பது/வர்ணிப்பது சுலபம்
இல்லை.

அதை ரசிப்பதே நம் வேலை.
வாழ்க  இசை,. நம் வாழ்க்கையில்
பல குரல்கள்
நம்மை அமைதியுறச் செய்கின்றன.
இன்றும் பாட்டுக் கேட்ட படியே தான்
உறங்கப் போகிறேன். 
முருகன் பாடல்கள் துணை. 30 நிமிடங்களில்
உறக்கம் வந்துவிடும்:)

கணினியில் உட்கார, எழுத சி.எஸ் ஜயராமனில் ஆரம்பித்து, சீர்காழி, சுசீலா
அம்மா, டி எம் எஸ் ,திருச்சி லோகனாதன் 
என்று தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருக்கும் இசை.

காதையும், கேட்கும் திறனையும் கொடுத்த இறைவனுக்கு நன்றி,.





Wednesday, September 29, 2021

சுட்டு சாப்பிட்ட பதிவு:)

வல்லிசிம்ஹன்
Thank you Jayanthi Kannan dear Sister,

சுட்டு சாப்பிட்ட பதிவு
இன்னைக்கு வெளில சாப்பிடலாமா?” என்று கேட்டான் மகன்.
( இவனுக்கு இதே வேலையாப் போச்சு.... நல்லதா வீட்டில் எதைச் சமைத்தாலும் சாப்பிட மாட்டேங்கிறாங்க.வெளியில் எதைப் போட்டாலும் தின்கிறார்கள்)
‘வெளியே என்றால் எங்கே? 
வெளியே என்பது ஒரு Broad term. கோடம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷன் மேம்பாலத்துப் படிக்கட்டில் சாப்பிடுவது கூட வெளியேயில் தான் அடக்கம்.
“பார்பக்யூல சாப்பிடலாமா?”
“பார்பர் ஷாப்ல எல்லாம் என்னால சாப்பிட முடியாதுடா. ஐஸ் க்ரீம் சாப்பிட்டு பழக்கம் இருக்கே தவிர ஷேவிங் க்ரீம் எல்லாம் இது வரைக்கும் சாப்பிட்டது இல்லே”
“அப்பா... 
இது Barbeque. 
ஒரு விதமான ஹோட்டல்”
“டேய்...
எனக்கு பார்வதி பவன் போதும். 
இந்த பார்பெக்யூ எல்லாம் வேணாம்” 
“நீங்க வந்தே ஆகணும்.. 
நான் டேபிள் புக் பண்றேன்”
பிறகு மகன் ஹோட்டல் ஆட்களிடம் ஏதோ இங்கிலீஷில் பேசினான். 
“டேபிள் புக் பண்ணி ஆச்சு. 
நமக்கு மத்தியானம் 2:30 மணிக்கு அலாட் ஆகி இருக்கு”
“பார்பெக்யூன்னா என்னடா?”
என்றேன்.
“க்ரில். 
நீ இதுவரைக்கும் Grill சாப்பிட்டது இல்லையா?”
“க்ரில்லை சாப்பிடறதா? 
நம்ம வீட்டு வாசல் க்ரில் கேட் கீழே கொஞ்சம் காணாமத்தான் போயிருக்கு. 
ஆனா நான் சாப்பிடல்லேடா...”
“Grill சாப்பிட்டுப் பழகிக்கோ.. 
நல்லா சூடா இருக்கும்”
“ஆமா. 
வெல்டிங் வெச்சவுடனே க்ரில் சூடாத்தான் இருக்கும்”
அதன் பிறகு பார்பெக்யூ பற்றி மகன் விளக்க ஆரம்பித்தான். 
ஒரு இரும்புக் குச்சியில் பதார்த்தங்களை வைத்து நெருப்பில் சுட்டுத் தருவார்களாம். அதை அப்படியே லபக்க வேண்டுமாம். இந்த சிந்து சமவெளி நாகரீக உணவுக்குத்தான் அநாவசிய பில்டப் கொடுத்துக் கொண்டு இருந்தான்.
“சாப்பாடு ரொம்ப ஹெவியா இருக்கும். காத்தால ஒண்ணும் சாப்பிட வேணாம். வெறும் வயித்துல போனா நிறைய சாப்பிடலாம்” என்றான் மகன்.
“டேய்..
ஏதாவது இடைக்கால நிவாரணம் கொடுடா... 
என்னால முடியாது”
2.15 மணிக்கு பார்பெக்யூ ஹோட்டலுக்குப் போனோம். கதவு அருகே பெரிய க்யூ இருந்தது. 
நிறைய பட்டினியாளர்கள் காத்து இருந்தார்கள்.
“டேபிள் புக் பண்ணி இருக்கு என் பேர்ல. நாலு பேர்”  என்றான் மகன். 
“உனக்கு ஏதுடா நாலு பேர்? 
ஒரு பேர்தானே வச்சேன்”
“அப்பா...
சும்மா இருங்க...
கொஞ்ச நேரத்துல உள்ளே போகணும். உள்ளே டீசண்டா பிஹேவ் பண்ணு. நான் சொல்ற மாதிரி தான் சாப்பிடணும்”
கொஞ்ச நேரத்தில் சொர்க்க வாசல் திறந்தது. 
நான்கு பேர் அமரும் ஒரு டேபிளில் அமர்ந்தோம். 
“வெஜிட்டேரியன்” என்று சொன்னதும் எல்லோருக்கும் பச்சை பார்டர் போட்ட ப்ளேட் கொண்டு வந்து வைத்தார்கள். நாங்களோ பச்சையாக சாப்பிடப் போவதில்லை. எதற்கு பச்சை ப்ளேட்?
டேபிள் மத்தியில் சதுரமாக ஒரு Slot இருந்தது. 
கொஞ்ச நேரத்தில் அதில் ஹோம குண்டம் மாதிரி ஏதோ கொண்டு வந்து வைத்தார்கள். நல்ல வேளை... அதில் கோலம் எதுவும் போட்டு இருக்கவில்லை. 
“அப்பா...
நமக்கு சாப்பிடறதுக்கு ரெண்டு மணி நேரம் டைம் இருக்கு. 
4.30 வரைக்கும் சாப்பிடலாம்”
“சாப்பிட இரண்டு மணி நேரமா? அரிசியை ஊறப் போட்டால் இந்த நேரத்தில் மாவே அரைத்து விடலாமே!"
“ரொம்ப ரிலாக்ஸ்டா சாப்பிடு. 
நிறைய சாப்பிடலாம்”
“டேய். 
எனக்கு ஒரே ஒரு வயிறு தான் இருக்கு...
அது என்ன ஸ்டேட் பாங்கா? 
நிறைய ப்ராஞ்ச் வச்சிக்கறதுக்கு. வயிறு கொள்ற வரைக்கும்தான் சாப்பிட முடியும்”
“பஸ் எல்லா ஸ்டாப்பிங்லயும் நின்னு நின்னு போனா நிறைய பாசஞ்சர்ஸ் ஏறிக்கறது இல்லையா? 
வயிறும் அந்த மாதிரிதான். 
நின்னு நின்னு சாப்பிட்டா நிறைய சாப்பிடலாம்” 
இந்த Theory of Digestivity  கண்டு பிடித்ததற்கு என் மகனுக்கு ஜீரண் மித்ரா என்ற பட்டமே கொடுக்கலாம்.
முதல் ரவுண்டு சர்விங் ஆரம்பமானது.
சுட்ட உருளைக் கிழங்கு வில்லைகளைத் தயிர் மாதிரி ஏதோ ஒரு பேஸ்டில் ஊற வைத்து ப்ளேட்டில் வைத்தார்கள்.
“இந்த வெள்ளை பேஸ்டுக்கு  பேர் மயோனீஸ்” 
என்றான் மகன்.
நல்ல வேளை அந்த பேஸ்ட்டில் உப்பு இருந்தது. 
சூடான உருளைக் கிழங்குடன் ருசி அம்சமாக இருந்தது.
அதன் பிறகு ஒரு கம்பியில் சில பதார்த்தங்களை குத்தி ஹோம குண்டம் மேல் வைத்தார்கள். சென்ட்ரல் ஸ்டேஷன் ரயில்வே லைன் மாதிரி அருகருகே…

அருகருகே எட்டுக்கும் மேற்பட்ட கம்பிகள் இருந்தன. தீக்குள் விரலை விட்டு தொட்டுப் பார்த்தேன். 
தீண்டும் இன்பம் தோன்றியது உண்மைதான்.
ஒரு கம்பியை வெளியில் எடுத்தேன். 
Abacus மாதிரி இருந்தது.
கம்பியில் குத்துப்பட்டு பதம் ஆன பதார்த்தங்களை வெளியே உருவிச் சாப்பிட்டேன். 
இது வரை வருவல் சாப்பிட்டு இருக்கிறேன். 
இது போன்ற உருவல் சாப்பிட்டது இல்லை. 
உருவல் உண்மையிலேயே நன்றாக  இருந்தது.
“நாம சாப்பிடச் சாப்பிட அவங்க புதுசு புதுசா கம்பியை வச்சிகிட்டே இருப்பாங்க. இப்படியே ஒரு மணி நேரம் சாப்பிடணும். பக்கத்து டேபிளைப் பாரு”
பக்கத்து டேபிளில் ஒரு சேட்டுக் குடும்பம் இருந்தது. எங்களுக்கு முன்பாகவே அவர்கள் வந்து இருந்தார்கள். 
ராஜ் கபூர் 'மேரா நாம் ஜோக்கர்' படம் ரிலீஸ் செய்த போது டேபிளுக்கு வந்து இருப்பார்கள் போலத் தெரிந்தது. 
மகன் போய் ராமர் கலரில் ஒரு ஜூஸ் எடுத்து வந்தான். எலுமிச்சை நறு மணத்துடன் ஜிவ் என்று இருந்தது. 
ஏதாவது பாத்திரம் கழுவும் லிக்விட் ஆக இருக்குமோ?
“கொஞ்ச நேரத்துல பைனாப்பிள் க்ரில் வரும்” 
என்றான் மகன்.
சொன்ன படியே ஆயிரத்தில் ஒருவன் கத்தியில் பைனாபிள் துண்டுகள் சொருகப்பட்டு வந்தன. 
இந்திய ரெஸ்டாரண்டுகள் வரலாற்றில் முதன்முறையாக பழத்தை நெருப்பில் சுட்டு சாப்பிடுவதைப் பார்த்தேன்.
அவ்வையார் தீர்க்க தரிசி. 
சுட்ட பழம் வேண்டுமா? 
சுடாத பழம் வேண்டுமா? 
என்று சங்க காலத்திலேயே கேட்டு விட்டார்.
மகன் வெயிட்டரைக் கூப்பிட்டான்.
“வாட்டர் மெலன் க்ரில் வைக்கவே இல்லையே?”
“கொண்டு வர்ரேன் சார்”
வாட்டர் மெலனை சுட்டு சாப்பிடுவதா? என் மகனுக்கு எப்படி இவ்வளவு விஷயம் தெரிகிறது? 
அடிக்கடி நண்பர்களுடன் க்ரில் சாப்பிடுவானோ? ஏகப்பட்ட Grill friends வைத்திருப்பான் போல இருக்கிறது.
நான்கு சுற்று க்ரில் முடிந்தது. உருளைக் கிழங்கு தான் லீடிங்கில் இருந்தது. இப்படி பல சுற்றுகள் போயின. 
இறுதிச் சுற்று வருவது மாதிரியே தெரியவில்லை. அரை மணி நேரம்தான் ஆகி இருந்தது.
சேட்டுக் குடும்பம் மறுபடியும் மயோனீஸ் பேஸ்டில் இருந்து ஆரம்பித்தது. வயிற்றில் One Thousand T.B. Expandable storage இருக்குமோ? அதிலும் அந்த அரை டிராயர் போட்ட பெண் மிகவும் மோசம். 
கேரம் போர்ட் ஆட்டத்தில் பாக்கெட்டில் வரிசையாக காயின் போடுவது போல வாய்க்குள் ஐட்டங்களை தள்ளிக் கொண்டு இருந்தாள். 
ஒரு பாத்திரத்தை எடுத்து வந்தார் வெயிட்டர். அதிலிருந்து புகை வந்து கொண்டு இருந்தது. Corn flakes பொறித்துக் கொண்டு வந்து இருந்தார். 
ரோடு போட லாரியில் இருந்து ஜல்லி கொட்டுவது போல தட்டில் கார்ன் ஃப்ளேக்கை தள்ளினார்.
சுடச்சுட கார்ன் ஃப்ளேக் பஞ்சு மாதிரி இருந்தது. லாரி இன்னொரு லோட் அடித்தது.
கடிகாரத்தைப் பார்த்தேன். 
முக்கால் மணி நேரம் தான் ஆகி இருந்தது. 
“மெதுவா சாப்பிடுன்னு சொன்னேன் இல்லே..
ஏன் இப்படி அரக்கப் பரக்க சாப்பிடறே?” என்றான் மகன்.
“அடேய்...
மூகாம்பிகை கேட்டரிங்கா இருந்தா இந்த நேரத்துல மூணு பந்தி முகூர்த்த சாப்பாடு போட்டிருப்பாங்கடா. டி. வி. ல ரன் அவுட் ஸ்லோ மோஷன்ல காட்டுவானே.. அதைவிட ஸ்லோவா சாப்பிட்டுகிட்டு இருக்கேன். 
இதுக்கு மேல என்னால முடியாது. நான் மெயின் கோர்ஸ் சாப்பாடு எடுக்கப் போறேன்”
மெயின் கோர்ஸில் புலாவ், நூடுல்ஸ், சப்ஜி என்று இன்ன பிற ஐட்டங்கள் இருந்தன. கொஞ்சமாக எடுத்து வந்தேன். 
அதற்குள் மகன் பட்டர் ரொட்டி சொல்லி இருந்தான்.
டேபிள் மீது ஒரு கொடி இருந்தது. க்ரில் ஐட்டம் போதும் என்றால் அந்த கொடியை மடக்கி வைக்க வேண்டுமாம். நாங்கள் கொடியை மடக்கி விட்டோம். அந்த சேட்டுப் பெண் மடக்குவது மாதிரி தெரியவில்லை.
க்ரில் ஐட்டங்கள் முடிந்ததால் ஹோம குண்டத்தை எடுத்து விட்டு குழியை ஒரு பலகை போட்டு மூடினார்கள்.
“இந்தா பாஸ்தா எடுத்துக்கோ?” என்றான் மகன்.
“பாட்ஷா எல்லாம் வேணாம்டா”
“கொஞ்சம் டிரை பண்ணு”
‘உள்ளே போ...
உள்ளே போ’ என்று எவ்வளவு மிரட்டியும் பாட்ஷா வயிற்றுக்குள் போக மறுத்தது.
வலது பக்கம் திரும்பினால் எல்லா கலரிலும் கேக், கீர், சாக்லேட் என ஐட்டங்களை கொலு வைத்து இருந்தார்கள்.
“ஒவ்வொரு கேக்லயும் ரெண்டு எடுத்துக்கோ” 
என்று கேக்கோபதேசம் செய்தான்  மகன்.
இரண்டு நாட்கள் வேலைக்காரி வீட்டுக்கு வரா விட்டால் குப்பை பக்கெட் எப்படி நிரம்பி வழியும்? அந்த மாதிரி இருந்தது என் வயிறு...
இதில் இரண்டு கேக் எப்படி எடுப்பது? அவன் பேச்சை நான் கேக்கவில்லை.
கடைசியில் பில்லை ஹோம குண்டம் இருந்த இடத்தில் வைத்தார்கள். மகனுக்குத் தெரியாமல் பில்லைப் பார்த்தேன்.
க்ரெடிட் கார்டை ஹோம குண்டம் மேல் வைத்தான் மகன். 
நாலு பேர் சாப்பிட்டதற்கு          4,000 ரூபாய் ஸ்வாகா ஆகி இருந்தது.
டிங்.
********
சித்தானந்தம்
வாட்ஸ்அப்பில் வந்தது.

Tuesday, September 28, 2021

நீல நிறத்தின் சிறப்பு







மதிய நேரங்களில் பேரனை அழைத்து வருவது  வழக்கம் ஆகிவிட்டது.  நல்ல காற்று முகம் எல்லாம் படர, மதிய நேரமே இப்போது இனிமையாக இருக்கிறது. 

வல்லிசிம்ஹன்



இனியொரு மாதம் சென்றால் சாளரங்களைத் திறந்து வைக்க முடியாது.
இந்த நீல நிறத்தையும் காண முடியாது.

பள்ளிக்கூடத்தில் படம் எடுக்க முடியாது.
அங்கே  நடக்கும் கோலாஹலமான பேச்சுகள். மாணவ மாணவிகளின்
உற்சாகப் பேச்சுகள் கிண்டல்கள்
எல்லாமே காதில் விழும்.

விளையாட்டுக்குச் செல்லும் சத்தம். வாலி பால், சாக்கர்,
ஹாக்கி என்று வித விதமான யூனிஃபார்ம்கள்,
பெரிய மைதானத்தைச் சுற்றி
ஓடும் விளையாட்டு வீரர்கள்.

ஒன்றும் செய்யாமல் மரத்தடிகளில்
பேசிக்களிக்கும் சிலர்.

தனிதனியே உட்கார்ந்து மொபைல் பார்த்த வண்ணம்
நேரம் கழிக்கும் சிலர்.
கை கோர்த்தபடி  வண்டிக்குச் சென்று 
வண்டியை வேகமாக விரட்டும் 17 வயது விடலைகள்.
(அவர்களுக்கு வேகமாகச் செல்ல அனுமதி கிடையாது)

பள்ளி போன்ற இடங்களில் மாணவர்களுக்கே
முதல் உரிமை.
அதையும் மீறி அவர்கள் லைசென்ஸ் பெற்ற 
உற்சாகத்தில் 16 ஆவது பிறந்த நாளுக்குக் கொடுக்கப்
பட்ட வண்டியை வ்ரூம் வ்ரூம் ஒலிக்க
 எடுப்பது நம்மை சாலையோரத்தில் ஒண்ட வைக்கும்.:)

பதின்ம வயதின் சக்தியைச் சரியாக வடிகால் இடாவிட்டால்

வீணாவது தெரிகிறது.
அதுவும் வெள்ளிக்கிழமை என்றால் வார இறுதிக் குதூகலம்
அளவிட முடியாது. இத்தனைக்கும் கழுத்தை நெரிக்கும்
பாடங்கள் வீட்டுப் பாடங்கள்.

விளையாட்டுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு
நல்ல கல்லூரியில் இடம் கிடைக்கலாம்.
இல்லையானால் பெரிய யூனிவர்சிட்டிக்குப் போக வேண்டுமானால்
உ-ம். ஹார்வர்ட்,  எம் ஐ டி, கால்டெக் ,கார்னகி மில்லென்
இப்படி வரும் கல்லூரிகளுக்கு வாங்க வேண்டிய
க்ரேடுகள் 4.6 இருக்க வேண்டும்.

பேரன் படிப்புக்குத் தான் முக்கியத்துவம் கொடுக்கிறான்.
பார்க்கலாம். வளரட்டும் மாணவர்கள். செழிக்கட்டும் அவர்கள் நலன்.


இந்த வண்ணங்கள் பற்றிய பேச்சு எங்கள் ப்ளாக்
புதன் கேள்வி பதிலின் போது

எழுந்தது. என்னையும் கணவரையும் இணைத்தது  அந்த வண்ணம் தான் அவரும் வெளிர் நீல 
முழுக்கை ஷர்ட் , நான் அடர் நீலப் புடவை,
எங்கள் குணங்களைப் பிரதிபலித்தன.

உடனே முடிவானது எங்கள் திருமணம்.

அதுதான் இந்தப் பதிவுக்கான அடித்தளம்.🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩


Monday, September 27, 2021

அக்கா ,தம்பி பாசம்:)

  என் தம்பிகளுக்கு இந்தப் பிரச்சினை இருக்கவில்லை.
எனக்குத் திருமணம் நடந்த போது 
இன்னோரு குடும்பம் கிடைத்ததாகவே மகிழ்ந்தனர்.

அவ்வளவு  இன்னொசெண்ட்  ஆத்மாக்கள்.
என் தம்பி ரங்கனின் நினைவில். 
டேய்  ரங்கா. ஹாப்பி  பர்த்டே டா. 70 ஆகிறது உனக்கு.
உன் மனைவி, குழந்தை, மாப்பிள்ளை, பேரன்
அனைவரும் நலமாக இருக்கட்டும்.




என்னாளும் செய் நன்றி மறவாமல் இருக்க வேண்டும். 
இதற்காகவே மிஞ்சி இருக்கும் நான் 
இந்த மஹாலய பட்சத்தில் உங்கள் இருவருக்கும் நற்கதி கிடைத்திருக்கும் என்று
நம்பி, உங்கள் எல்லாப் பிறவிகளிலும்
அன்னம், தண்ணீர்,இருப்பிடம் எல்லாம்

நலமாக அமைய இறைவனைப் 
பிரார்த்திக்கிறேன்.

Sunday, September 26, 2021

மஹா பாரதக் கதைகள்..தர்மம் 2

வல்லிசிம்ஹன்


 · 
மஹாபாரத கிளை கதைகள்:
மஹாபாரதம் முழுவதும் கிளை கதைகளால் நிரம்பி வழிகிறது. "மார்கழி முடிந்தால் மழை ஏது. பாரதம் முடிந்தால் கதை ஏது" என்பது முது மொழி.
பாரதத்தில் எத்தனை மனிதர்கள் உள்ளனரோ அத்தனை பாரதங்கள் உலவுகின்றன.
நிறைய கதைகள் செவி வழியாய் அடுத்தடுத்த தலை முறைக்கு அனுப்ப படுகின்றன. அப்படி என்னை வந்தடைந்த மூன்று கதைகள் இங்கே.
முதியவர் ஒருவர் நடந்து செல்கிறார். நண்பகல் பொழுது.. களைப்பால் தொடர்ந்து நடக்க முடியாத நிலை. எதிரே துரியோதனன் வருகிறான். முதியவர் துரியோதனனிடம் தனக்கு உண்ண ஏதாவது தர கேட்கிறார். உணர்வு விடுபட்ட நிலை முதியவர்க்கு. துடியோதணன் அவரிடம் அருகில் இருந்த உணவு விடுதியை சுட்டிக்காட்டி வயிறார உணவுண்டு செல்ல சொல்கிறான். ஆனால் முதியவர்க்கோ எழுந்து நடக்க முடியாத நிலை.
துரியோதனன் புறப்பட்ட சிறிது நேரத்தில் ஒரு ரதம் வருகிறது. முதியவர் தன் சக்தி அனைத்தும் திரட்டி தன் நிலையை உணர்த்த முற்படுகிறார். கீழே இறங்கிய அந்த மனிதன் முதியவரின் நிலையை நன்கு அறிகிறான். தன் ரதம் தனில் தொங்கிய சில கனிகளை முதியவர்க்கு புகட்டுகிறான். சில இளநீர் குலைகள் அலங்காரமாக ரதமோடு வருகின்றன. அவற்றையும் எடுத்து புகட்டுகிறான். முதிய மனிதர் களைப்பு விடை பெற்றவராய் நீங்கள் கர்ணன் தானே என வினவுகிறான். தற்போது முன் சென்ற பாவி உணவிடும் இடத்தை சுட்டிசென்றதாய் வருந்துகிறார் . கர்ணன் தலை அசைத்த படியே நீங்கள் மெதுவாக உணவு விடுதிக்கு சென்று உணவருந்தி செல்லுங்கள் என கூறுகிறான். முதியவர் தன் களைப்பு நீங்கியதை சொல்லி பயணத்தை தொடர்கிறார். உதவி எப்படி இருக்க வேண்டும் என்பதை இதை கொண்டே நாம் உணரலாம்.
இன்னுமொரு புனைவு
அர்ஜுனனுக்கு பல நாட்களாய் ஒரு சந்தேகம். எல்லோரும் கர்ணனை பெரும் வள்ளலாய் கொண்டாடுகிறார்களே என்பதே. உண்மையில் நம்மை விட கர்ணன் ஒரு போதும் பெரும் வள்ளல் அல்ல என்பது அவன் எண்ணம். தன் கருத்தை கிருஷ்ணனிடம் பகிர்ந்து கொண்டான். கிருஷ்ணா, எல்லோரும் ஏன் கர்ணனை மட்டும் இப்படி வள்ளலாய் கொண்டாடுகிறார்கள். நான் எதில் குறைந்து போனேன்? என்னை அப்படி யாரும் சொல்லவில்லையே என வருந்தினான். கண்ணனும் தனக்கே உரித்தான தனி புன்னகையோடு நாளை உங்கள் இருவரில் யார் வள்ளல் என்பதை நிருபிக்கிறேன் என்று புறப்பட்டான்.
அடுத்த நாள் உதயத்தில் கண்ணன் தனது சக்தியால் இரண்டு தங்க மலைகளை உருவாக்குகிறான். கர்ணனையும் அர்ஜுனனையும் அழைத்து இவை உங்கள் சொத்து என சொல்லி புறப்படுகிறான். இருவர்க்கும் ஒரு நிபந்தனை..
அந்த நாளின் முடிவில் இருவரும் தங்களுக்கு அளிக்கப்பட்ட தங்க மலைகளை தானம் செய்ய வேண்டும் .
அர்ஜுனன் தன் காரியத்தில் கண்ணானான். வருகின்ற வறியவர் அனைவர்க்கும் தங்க மலைகளை வெட்டி வெட்டி அளித்தபடியிருந்
தான். அந்த நாளும் முடிவுக்கு வருகிறது. அர்ஜுனனுக்கு ஒரே பெருமை. அந்த மலையில் குடைந்து நிறைய தங்கத்தை வெட்டி தந்திருந்தான். கர்ணன் ஒருபோதும் இவ்வளவு மலையை தானமாக தந்திருக்க முடியாது எனும் அசைக்கமுடியாத நம்பிக்கை.
அந்த தருணத்தில் கிருஷ்ணனும் அர்ஜுனனை காண வந்துவிட்டார். அர்ஜுனனும் நிறைய பெருமிதத்தோடு தான் அன்று தானம் செய்த மலை பகுதியை சுட்டி காண்பித்தான். ஆனால் கிருஷ்ணன் கர்ணன் வென்று விட்டதை குறிப்பிட்டார். அர்ஜுனனால் நம்பமுடியவில்லை .
காரணத்தை கிருஷ்ணனிடமே கேட்டான். கர்ணன் எவ்விதமாய் தானமளித்தான் என்பது அவனுள் எழுந்த முதல் வினா..
கிருஷ்ணன் அதித புன்னகையோடு பதில் சொன்னான். இன்று காலை உன்னை போல் கர்ணனுக்கு ஒரு மலையை கொடுத்தேன். அவனிடம் ஒரு மனிதன் யாசித்து வந்தான். கர்ணனும் அந்த மலையை சுட்டி காட்டி இந்த மலையை வைத்துக்கொள் என தன் வழியே அடுத்த காரியத்துக்கு புறப்பட்டு விட்டான். கர்ணனின் தான நிகழ்வு காலையிலேயே முடிவுக்கு வந்து விட்டதாய் சொன்னான். அதன் பின் அர்ஜுனனுக்கு தான் பேச்சு எழவில்லை.



Saturday, September 25, 2021

தெய்வ கானம் கொடுத்த அம்மா





வல்லிசிம்ஹன்செப்டம்பர் மாதம் 16 ஆம் தேதி பதிந்திருக்க வேண்டிய கானங்கள்.
சில பல காரணங்களால்
இன்று பதிகிறேன்.
தேவ கானத்துக்கு ஏது  காலம்.?
நிறைவுடன் நினைப்போம். நமஸ்காரங்கள் 
அம்மா. கோடிப் பிரமாணங்கள்.

Yercaud | Weekend Gateway

எங்கள் சேலம் நினைவுகளுக்கு  ஒரு பாலம் யேர்க்காடு.

சிங்கத்தின் ஆகச் சிறந்த தோழர் வசித்த இடம்.
எங்களுக்கு வார இறுதிப் பயணம் போகக் கிடைத்த இடம். 

யேற்காடு ஏரி அருகே இருந்த சேர்வராய்  விடுதியில் தங்கி
அடுத்த நாள் சேலம் திரும்பி விடுவோம்.

காலை உணவுக்குப் பின் , நடை நடை நடைதான்.

அந்த மரங்களும் ,பறவைகளின் குரல் ஒலியும் மறக்க முடியாத
நினைவுகள்.
அடிக்கடி வந்து போகும் மேகப் பொதிகள். மஞ்சு என்று 
சொல்வார்கள். மஞ்சி வருது பார்த்துப் போங்க என்று எதிரே வருபவர்களின்

குரல் மட்டும் கேட்கும்:) நல்ல நினைவுகளுக்கு நன்றி.

Friday, September 24, 2021

கண்ணிற்கினிய காட்சிகள்.











வல்லிசிம்ஹன்❤


இணையத்தில் கண்களில் பட்ட காட்சிகள். இவை எல்லாம் ஓவியங்கள் என்று என்னால்
நம்பமுடியவில்லை.
அப்படியே அச்சாகவா வரைவார்கள். அதுவும் அந்தத் தென்னைமரம்

ஓலைகள் பளிச்சிட, கீற்றுகள் அளவோடு 
பிரிந்திருக்க  மிக மிகச் சிறப்பு.
 நான் எல்லா இடங்களையும் காமிராவில் 
படங்களாக அடைத்தபடி இருந்தே. 

சின்னக் கையளவு  காமிராவிலிருந்து 
வீடியோ காமிராவரை  பிள்ளைகளும் ,பெண்ணும்
வாங்கிக் கொடுக்க ரோல் ரோலாகப் படம் எடுத்து 
ஸ்டூடியோவில் கொடுத்துப் படமாக்கி வீடு நிறைந்தது.

பிறகு கணினியில்  ஏற்றப் பழகிக் கொன்டேன்.
அப்போது நம் ராமலக்ஷ்மியின் பிட் காண்டெஸ்ட் எல்லாம் இருந்தது.

காமிராவில் எடுத்த படங்களை இப்போது 
பார்த்தாலும் அப்படி கச்சிதமாக இருக்கிறது.
இப்போது கணினி, இணையம், மொபைலில் 
படம் எடுப்பது எல்லாம் கைகொடுக்கிறது.

தோழி அனுப்பிய ஓவியக் கண்காட்சிப் 
படங்கள் அசர வைத்தன. பிறகு நானே தேடினேன்.
இப்போது கண்காட்சிக்கு எல்லாம் 
போகும் நிலை இல்லையே.
இந்தப் படங்கள் உங்களுக்கும்
பிடிக்கும் என்று நம்புகிறேன். 

இலைகள்  




உதிர்ந்து நிற்கும் மரங்களைப் பனி அணைத்துக் கொள்ளுமுன்
வண்ணங்கள் மாறிப் பல தோற்றங்களைக்
காண்பிக்கும் மரங்கள்.
 மழை நீடித்தால் ஏரிகள் நிரம்பும்.
எல்லோரும் நலமுடன் இருக்க இறைவன் அருள வேண்டும்.

Thursday, September 23, 2021

தர்மம்...பழமொழி



வல்லிசிம்ஹன்

#படித்ததில்பிடித்தது.








ஆள்காட்டி விரலுக்கும் அன்னதானப் பலன்:
தானத்துள் சிறந்த தானம் அன்னதானம் என்பர். எதை எவரும் எளிதில் செய்யலாம். தம்மிடம், பசித்து வருவோருக்கு வேறு இடத்தை சுட்டிக்காட்டி, அங்கே செல்லும்படி சொன்னாலும் சிறிதளவு அன்னதானப் பயன் உண்டாம். இதனையொட்டி எழுந்தது, மேலே உள்ள பழமொழி. இது தொடர்பான பாரதக் கதை:
கர்ணன் அர்ச்சுனனால் கொல்லப்பட்ட பிறகு தன் புண்ணிய பலத்தின் காரணமாக கைலாசம் சென்றான். அங்கே அவனுக்குப் பசி எடுத்தது. அந்தப் புனித லோகத்தில் எவருக்கும் பசி, தாகம் இல்லை. ஆனால், தனக்கு மட்டும் பசி ஏற்படக் காரணம் கர்ணனுக்குப் புரியவில்லை.
அவன் நந்திதேவரிடம் சென்று விசாரித்தான்.
நந்திதேவர், ‘‘கர்ணா! நீ பூவுலகில் எல்லா வகையான தானங்களும் செய்தாய். ஆனால், அன்னதானம் மட்டும் செய்யவில்லை. அதனால் உனக்கு இங்கே வந்ததும் பசிக்கிறது. நீ உன் ஆள்காட்டி விரலை வாயிலே வைத்துச் சுவை. அப்போது பசி போய்விடும்’’ என்றார்.
கர்ணனும் அப்படியே செய்தான்; பசி போய்விட்டது. உடனே கர்ணன் நந்தியடிகளைப் பார்த்து, ‘‘இந்த ஆள்காட்டி விரலில் என்ன மர்மம் இருக்கிறது?’’ என்றான். அதையடுத்து அவர் சொன்ன வரலாறு இது:
‘கிருஷ்ண பகவான் பாண்டவர்களுக்காகத் தூதுவராக அஸ்தினாபுரம் சென்றபோது அவரை வரவேற்க துரியோதனன் போகவில்லை. கிருஷ்ணருக்கு சிறப்பான தங்குமிடம் (மாளிகை) ஒன்றை அமைத்தான் துரியோதனன். பிறகு, கிருஷ்ணருக்கு விருப்பமுள்ள கர்ணனை வரவேற்குமாறு அனுப்பினான்.
கர்ணன், கிருஷ்ணருடன் தெருக்கள் வழியே வரும்போது மாயவர் ஒவ்வொருவரைப் பற்றியும் விசாரித்துக் கொண்டே வந்தார். இடையில் கர்ணன் தன் ஆள்காட்டி விரலினால் விதுரரின் வீட்டைக் காட்டி, ‘‘இது விதுரரின் வீடு; உங்கள் மீது மிகுந்த பக்தியுடையவர்; அவர். உங்களுக்கு விருந்திட ஆர்வம் மிகுந்தவர். ஆனால் அரசர் உங்களுக்கு வேறு தங்குமிடம் அமைத்திருக்கிறார்’’ என்றான்.
அதனை, உடன் இருந்து கேட்டு வந்த விதுரர், ‘‘கண்ணா! இது உங்கள் வீடு; என் வீடு அன்று!’’ என்றார்.
இதனையே ஆதாரமாகக் கொண்டு கிருஷ்ணர், ‘‘அஸ்தினாபுரத்தில் எனக்கும் ஒரு வீடு இருக்கிறதா? அப்படியானால், நான் இங்கேயே தங்குகிறேன்’’ என்று கூறி, உள்ளே புகுந்து விதுரருக்கு விருந்தினர் ஆனார்.
மேற்கூறிய கதையை நந்திதேவர் சொல்லக் கேட்ட கர்ணன், அன்னதானத்தின் பலனை அறிந்து கொண்டு, தனக்கு மறு பிறவியை வேண்டி, பூவுலகுக்கு வந்து, அன்னதானம் செய்து, கைலாசம் மீண்டான்.
இது வியாச பாரதத்திலோ, வில்லிபாரதத்திலோ இல்லாத நிகழ்ச்சி. பிறமொழிகளில் உள்ள பாரதத்தில் இருக்கக்கூடும். இதை புராணிகர்கள் உபன்யாசங்களில் கூறி, பரப்பினர்.

Monday, September 20, 2021

மஹாலய பட்சம் ஆரம்பம்..

வல்லிசிம்ஹன்

மகாளய பட்சம் என்பது புரட்டாசி மாதம் பவுர்ணமிக்கு மறுநாள், பிரதமை திதியில் துவங்கி, புரட்டாசி மாதம் அமாவாசை வரை நீடிக்கும். வரும் 20.09.2021 ஆம் தேதி துவங்கி அக்டோபர் 6.10.2021ஆம் தேதி வரை 15 நாட்கள் மகாளய பட்ச காலமாகும். இந்த நாட்களை பயன்படுத்திக்கொண்டு பித்ருக்களுக்குரிய தர்ப்பணம், சிரார்த்தம் முதலியவற்றை தவறாமல் செய்யவேண்டும். தர்ப்பணத்தில் விடுகின்ற எள் மற்றும் தண்ணீரை ஸ்வேதா தேவி என்பவள் மிக எளிதாக பித்ருக்களிடம் சேர்த்துவிடுகிறாள்.

 இந்த  நாட்களில் தினமும் முன்னோர்களை வழிபடுவது நன்மையைத் தரும். தாயார் தகப்பனார் இல்லாதவர்கள் தினமும் தர்ப்பணம் செய்வது நல்லது. மற்றவர்கள் தினமும் காலையில் குளித்தவுடன் முன்னோர்களை வணங்கி விட்டு அதன் பின் வேலைகளை தொடங்குவது நல்லது. 

மஹாளய பட்சமாகிய இந்த நாட்களில் நமது முன்னோர்களே நம் வீடு தேடி வந்து, நம்முடன் தங்கியிருந்து, நாம் அளிக்கும் உபசாரங்கள், பூஜைகள் ஆகியவற்றை மகிழ்ச்சியுடன் ஏற்று, நம்மை ஆசீர்வதிக்கின்றனர். பித்ருக்கள் மனநிறைவு பெற்று நம்மை ஆசீர்வதிப்பதால், முற்பிறவித் தவறுகளால் இப்பிறவியில் நமக்கு ஏற்படும் அல்லது ஏற்படக்கூடிய கடன் தொல்லைகள், நோய்கள், குடும்பப் பிரச்னைகள், குழந்தைகளின் கல்வி முன்னேற்றத்தில் தடங்கல்கள், செய்வினை தோஷங்கள், நியாயமில்லாமல் பிறரால் கொடுமைக்கு ஆளாகுதல், புத்திரப்பேறின்மை, கணவன்-மனைவியரிடையே அன்யோன்யம் குறைதல், கணவன்-மனைவி பிரிந்திருத்தல், உத்தியோகத்தில் தொல்லைகள், மனநலக்குறைவு, குடும்பத்தில் ஏற்படும் தற்கொலைகள், அகால மரணங்கள், காரணமற்ற மனபயம் ஆகிய மிகக்கொடிய துன்பங்களும்கூட அடியோடு நீங்கிவிடும் என்பது ஐதீகம். 

#பித்ருக்கள் எப்படி வருவார்கள்? 

மஹாளய பட்சம் ஆரம்ப தினத்தன்று பித்ரு தேவதைகள், சூரிய பகவான், தர்மராஜன் ஆகியோரின் அனுமதி பெற்று பித்ருக்கள், ஸ்வர்ண (தங்கம்) மயமான விமானங்களில் ஏறி நம்மிடம் வருகிறார்கள். இந்த விமானங்கள் சூரியனின் ஒளிக்கற்றைகள் மூலம் பறந்து வருகின்றன. இவ்விதம் பித்ருக்கள் பூமியில் இறங்கும்போது அவர்களைத் தேவர்களின் உலகிலுள்ள மகரிஷிகள் ஆசீர்வதிக்கின்றனர்.  தேவர்கள் வணங்குகின்றனர்.
பித்ருக்கள் பரம பவித்திரமானவர்கள். தங்களது ஜீவித காலத்தில் செய்துள்ள புண்ணிய செயல்களால் புடமிட்ட தங்கம்போல் ஒளிபொருந்தியவர்களாகப் பித்ருக்கள் பிரகாசிக்கிறார்கள் எனப் புராதன நூல்கள் போற்றிப் புகழ்கின்றன. மீண்டும், தங்கள் குழந்தைகளைப் பார்க்கும் வாய்ப்புக் கிட்டியதால், அவர்கள் பேருவகை அடைவதாக ‘கருடபுராணம்’ கூறுகிறது. அவர்கள் நம்மிடையே வந்து நம்முடன் தங்கும் இந்தப் பதினைந்து புனித நாட்களும் நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும், எப்படி பேசவேண்டும், வீட்டை எப்படிப் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதை ‘வைத்யநாத தீக்ஷிதம்’ என்ற வடமொழி நூல் அதிஅற்புதமாக விளக்கியுள்ளது.

#இந்த  நாட்களில் எப்படி இருக்க வேண்டும்?
இந்த, பதினைந்து நாட்களிலும், ஒவ்வொருவரும் நமது வீட்டை மிகவும் சுத்தமாக வைத்துக் கொள்வது அவசியம். குடும்பத்தில் ஒருவருக்கொருவர் சண்டை போடுவது, தகாத சொற்களைப் பேசுவது, திரைப்படம் பார்ப்பது, ஆபாசமான படங்களைப் பார்த்தல், சஞ்சிகைகள், பத்திரிகைகள் ஆகியவற்றைப் படித்தல், புலால் உண்ணுதல், கள், மது குடித்தல் ஆகியவற்றைக் கண்டிப்பாகத் தவிர்த்தல் வேண்டும்.
நாம் எந்த அளவிற்குத் தூய்மையாக இருக்கிறோமோ, எந்த அளவிற்குச் சுத்தமாக இருக்கிறோமோ, எந்த அளவிற்கு ஒற்றுமையாக இருக்கிறோமோ, எந்த அளவிற்குப் பித்ருக்களைச் சிரத்தையுடன் பூஜிக்கிறோமோ அந்த அளவிற்கு இந்தப் பதினைந்து நாட்களும் நம்முடன் தங்கியிருக்கும் நம் பித்ருக்கள், மனமகிழ்ச்சியையும், மனநிறைவையும் அடைகிறார்கள். பித்ருக்கள் இவ்விதம் இந்தப் பதினைந்து நாட்களும் நாம் குடும்பம் நடத்தும் நேர்மையைக் கண்டு மனத் திருப்தி அடைவதன் பலனைப் பித்ரு தேவதைகள் அவர்களிடம் பெற்று நம்மிடம் சேர்க்கிறார்கள்.

நமக்கு உதவியவர்களுக்கும் திதி கொடுக்கலாம்...
நமக்குப் பல தருணங்களில் அன்பும், இரக்கமும் காட்டி உதவிய பித்ருக்களுக்கும் இந்த மஹாளய பட்சத்தில் நினைவுகூர்ந்து திதி செய்யலாம். இவர்களுக்கு ‘காருண்ய பித்ருக்கள்’ என்று பெயர். அதாவது நாம் துன்பப்படும்போது நம்மீது கருணைகாட்டி உதவிய பித்ருக்கள் என்று பொருள்.

இவ்வாறு, சிரத்தையுடன் மஹாளய பட்சத்தை அனுஷ்டிப்பவர்கள் குடும்பங்களில் எத்தகைய துன்பமானாலும் நொடியில் தீர்ந்து அந்தக் குடும்பம் செழிப்பதை அனுபவத்தில் காணலாம். இந்தப் பதினைந்து நாட்கள் பூஜையைச் செய்யாமல் விடுபவர்கள் எளிதில் கிட்டாத ஓர் அரிய நல்வாய்ப்பினை இழந்துவிடுகிறார்கள். ஆதலால் பரம பவித்திரமான இந்தப் பூஜையை அன்பர்கள் அனைவரும் செய்து பயனடைய வேண்டும் 
மேஷம் - ரிஷபம் - சிம்மம் - துலாம் - விருச்சிகம் - தனுசுh ஆகிய ராசிக்காரர்கள் தினமும் முன்னோர்களை வணங்கி வந்தால் சனியின் உக்ரம் குறையும்.


Thank you Jeyanthi Kannan. 

Sunday, September 19, 2021

..பிடித்த நகைச்சுவை:)


ஞாயிறு காலை நன்றே விடிந்தது.
சூரியனுக்கு வணக்கம் சொல்லி
வாசலின் செக்யூரிட்டி  லாக்கை

அலார்ம் அணைத்துவிட்டுத் திரும்பும்போது
 கதவுக்கு அப்பால்  டமால் என்று ஏதோ விழும் சப்தம்

அமேஸான் பாக்கெட்டை வைத்து விட்டுப்
போகிறார்களா என்று பார்த்தால்,( they are always very gentle)

அமேஸான் டப்பா பக்கத்தில் ஒரு மீன்!!
மூச்சு விட்டுக் கொண்டிருந்தது.என் பதட்டத்தில், என்ன செய்வதென்றே தெரியவில்லை.
மீனின் கண்கள் என்னைப் பார்த்த வண்ணம்.
கண் முன்னே அது சலனமற்றுப் போனது.

மேலிருந்து ஒரு பறவை இதை நழுவ விட்டிருக்க வேண்டும்:(
பக்கத்தில் ஏரி இருக்கிறது.

கதவைத் திறந்தால் சத்தம் கேட்கும். 
மகளுக்கு யோசனையாகிவிடும். எல்லோரும் ஞாயிறு
தூக்கத்தை அனுபவித்துக் கொண்டிருந்தார்கள்.
ஒன்றுமே புரியவில்லை.நம் ஊராயிருந்தால் அதன் மேல் தண்ணீராவது விட்டிருக்கலாம்.

மனக் கலக்கத்தைப் போக்கிக் கொள்ள சபாஷ் மீனா
படம் பார்க்க ஆரம்பித்தேன்.

நம் கோமதி அரசு காப்பாற்றிய பறவைகள் நினைவு 
வந்தது.நம் எங்கள் ப்ளாக் ஶ்ரீராமும் விதவிதமான உயிரினங்களைக்
காத்து இருக்கிறார்.

சிங்கம் இருந்திருந்தால் உடனே ஒரு பக்கெட்டில் தண்ணீர் வைத்து ,அந்த மீனைக் கையில் எடுத்துக்
காப்பாற்றி இருப்பார்.
அனைவரும் நலமுடன் இருக்க இறைவன் 
கருணை செய்ய வேண்டும்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏


Saturday, September 18, 2021

நெல்லைக்குப் போகலாமா. ஒரு பயணம்!

முன்பு சென்ற இடங்களெல்லாம் மனதில் 
நிழலாகச் செல்ல,

அவசரப் பயணமாக நெல்லை சென்று வந்தது ஒரு 
கனவு போலத் தோன்றுகிறது.
பல நல்லவர்களின் விளை நிலமாக
இருக்கும் நெல்லைத் தாமிரபரணி தீரம் 
1995இல்  இருந்து  திட்டமிட்டு 2019இல் 
நிறைவேறியது.

திருக்குறுங்குடி, கீழ நத்தம், திருக்குருகூர் -ஆழ்வார் திரு நகரி
இவையே வரித்திட்ட ஸ்தலங்கள். 

தந்தை ஊர், தாயின் ஊர், குரு,ஆச்சார்யனின் 
ஊர் என்று திட்டம் இட்ட மனம்.

சென்னையிலிருந்து மதுரைக்கு விமானம். பழங்கா நத்தத்தில்
தங்கல்.
அடுத்த நாள் வாடகைக்காரில் திரு நெல்வேலிக்குப் 
பயணம். பழகிய இடங்கள் ஒன்றுமே கண்ணில் படவில்லை.
திருப்பரங்குன்றம் கோயிலும் ,மலையும் ,கப்பலூரும்
கண்ணில் பட்டன. திருமங்கலத்தைதாண்டி விரைந்த வண்டியின்

ஓட்டுனருக்கு சகல அரசியலும் தெரிந்திருந்தது.
வேண்டுமோ வேண்டாமோ அத்தனையையும்
காதில் திணித்தார்.

சிங்கமாயிருந்தால் ஒரு அதட்டலில் நிலமை மாறி இருக்கும். 
மகன்கள்  இருவரும் மரியாதை நிமித்தம்
பொறுத்துக் கொண்டு வந்தார்கள்:)

மனம் 71 வருட வாழ்க்கையின் ஒவ்வொரு 
சம்பவங்களையும் அசை போட்டுக் கொண்டு 
முன்னோர்கள் இருந்த இடங்களையும், கோவில்தெய்வங்களையும் மனதுருக வேண்டிக்கொண்டு 
வந்தோம்.
இதோ இன்னும் ஒரு புரட்டாசி ,ஐப்பசி வந்துவிட்டது. 



Nammazhvaar

அனைவரும் நலமுடன் இருக்க இறைவன் துணை.




வல்லிசிம்ஹன்

கற்பனையிலாவது ரயிலில் போகலாமே என்ற ஆசைதான். :)

Friday, September 17, 2021

அந்தரங்கமும் அந்த ரங்கனும்

வல்லிசிம்ஹன்

Thank you @Geetha Rangan for  making  me to muse about Srirangan.

வட பத்ர ஸாயி ரங்க மன்னார்


ஆண்டாளை  இந்த ரங்கன் ஆண்டுகொண்டு
அவளும் ஆண்டாள்.
நமக்குக் கிடைத்தது அவர்களின் வாத்சல்ய அருள்.

அந்தக் கருணையை என்றும் அனுபவிக்கும் 
மனம்.வைணவ ஆச்சார்யர் வேதாந்த தேகர் 
ஸாந்த்ர வாத்சல்ய சிந்து என்றே அழைக்கிறார்.
அவளே விஷ்ணு சித்தரின் மனக் கடலில் விளைந்த
புதல்வி. அவர் ஒரு மாபெருங்ககடல் என்றால்,
அவர் மகள் ஆலிலைக் கண்ணன் அரங்கனுடன் இணையும் முன்னேயே
கருணைக் கடல் ஆகிறாள்.
கோதா தேவி காத்தருள்.


புரட்டாசித் திரு மாதம் திருவோண நாளில்
பிறந்தது.

தவ நாட்கள் ஆரம்பம். அத்தனை அருள்தெய்வங்களையும்
நித்தம் சிந்திப்போம் அவனே கருணை செய்வான்.

5 ways to use your kitchen better

இப்பொழுதுதான் கீதா சாம்பசிவம் அவர்களின் பதிவைப்
படித்து விட்டு வந்தேன்.
இங்கே வந்தால் இந்த அம்மா
சொல்லுகிறார்கள்:)

Thursday, September 16, 2021

Sudhir Srinivasan's The Late Review: Thalaivii | Kangana Ranaut | Arvind...

ஒரு பிரபலமான மனிதர்/மனுஷி  பற்றி எடுக்கப் படும் 
பயோபிக் சாதாரண விஷயம் இல்லை.

சொல்லுவது செல்லுபடியாக வேண்டும் என்றால்
எச்சரிக்கையுடன் செய்ய வேண்டும்.

தமிழ் நாட்டில் உணர்ச்சிவசப்படுபவர்களே அதிகம்.
 ஆராய்ச்சிகள் பல செய்து,
தெரிந்த விஷயங்களையே  நாசூக்காகவும் அழகாகவும்
கதைச் சம்பவங்களாகக் கோர்த்திருக்கிறார்
இயக்குனர்.

அர்விந்த் சுவாமி, மிகப் பாடுபட்டு தலைவராக
மாறி இருக்கிறார்.
தமிழே தெரியாத  கங்கணா ரணாவத்
ஜெயாவாகவே மாற இயக்கப் பட்டு இருக்கிறார்.

அங்கங்கே சில ஒத்துக் கொள்ள முடியாத இணைப்புகள்
இருந்தாலும் ,பொதுவாக இவர் ஆளப் பிறந்தவர் 
என்ற முனைப்பிலேயே காட்டப் பட்டிருக்கிறார்.

ஏற்றுக்கொள்வதும் இல்லாததும் மக்கள் கையில்.

அவருடன் சேர்ந்து பயணிக்கும் நாஸர், சமுத்திரக்கனி
இன்னும் பலருடைய ஆழ்ந்த அர்ப்பணிப்பு 
செம்மையாகத் தெரிகிறது.

இந்தப் படத்தின் நடுவில் இந்திப் பாடலின் இசை 
பின்னணியில் வருவது அத்தனை சுகமாக இல்லை.
அதே போல மிகப் பழங்கால பாகவதர் 
காலத்து பாக்க்ரௌண்டும் எடுத்துக் கொள்ள முடியவில்லை.

ஜெஜே நடிக்க வந்த காலத்தில்
ஆங்கில இசை தழுவி வந்த பாடல்களே
அனேகம்.
நான் படத்தைப் பார்க்கவில்லை. யூடியுபில் 
கிடைத்த சில காட்சிகளை வைத்து சொல்கிறேன்.
தவறாகவும் இருக்கலாம்.
மொத்தத்தில் அரிய உழைப்பில் உருவாகி இருக்கும்
சரித்திரப் படம். வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

மௌனம்...

மௌனம் என்னும் மொழி வலியது.
பேசிக்கொண்டே இருக்கும் போது
மனம் நிறைவானால் மௌனம் மட்டுமே போதும்.

நிறைந்த மனங்களிடையே  கசப்பு எழும்போதும் 
மொழி வெளியே வருவதில்லை.

யாராவது ஏதாவது பேச மாட்டார்களா என்னும் ஏக்கம் வரும்போது 
கேட்கும் கிளியோசையும், காகத்தின் குரலும் 
இனிமை.

தொலைக்காட்சியின் செய்திகள் மனதில் 
கலவரம் எழுப்பும்போது 
நெஞ்சம் தேடுவது நிசப்தம்.

வஞ்சம் இழைக்கப்பட்ட 120 சின்னப் 
பெண்களின் குரல் எழும்பியிருக்காவிடில்
இன்னும் அநீதி  தொடர்ந்திருக்கும்.

இதுபோல் இன்னும் எத்தனை விபரீதங்களோ
 என்று கூக்குரலிடும் குரல்கள் 
தொண்டையிலேயே அடங்கி இருந்தால்
இனி விளையாட்டே கிடையாது என்று இன்னுமொரு
லாக் டௌன் வந்திருக்கும்.

ஒலிம்பிக்ஸில் தங்கம் வாங்கும் முன்னமேயே
தங்கள் பால்யத்தை இழந்துவிட்ட குழந்தைகள்
இன்னும் எத்தனை ஆயிரமோ?
தொலையக் காரணமாக இருந்த
வழிகாட்டிகள் எத்தனை நூற்றுக்குள்
அடங்குவார்களோ.
இயற்கைதான் பதில் சொல்ல வேண்டும்..
 
வாரக்கணக்கில் ஓடிக் கொண்டிருக்கும்
சாட்சி விசாரணைகள் செய்தி  சானல்களில்..



.நீதி கிடைக்குமா?







Tuesday, September 14, 2021

மௌனம் ?????

வல்லிசிம்ஹன்

அன்புத் தங்கை சுபா ,  Kovai  அனுப்பிய செய்தி.
நன்றியுடன்.


Monday, September 13, 2021

Magic!!! Music and All that!!





வல்லிசிம்ஹன்

இசை வலியைக் குறைக்கும்.
மனதை மிருதுவாக்கும். 
நாடித்துடிப்பை சீராக்கும்.
ஓடிக் கொண்டே இருந்தால் அலுக்கும் வாழ்க்கை சிலசமயம்
ஓய்வையும் விரும்புகிறது.

Sunday, September 12, 2021

அக்கம் பக்கம் என்ன செய்தி..3

வல்லிசிம்ஹன்

நம் பிள்ளையார் நன்றே வந்தார்.
எல்லாக் குறைகளையும் கவலைகளையும்
தீர்த்து நோயில்லாப் பாதையில்
பயம் இல்லா வாழ்க்கையை 
அவரே தரவேண்டும்.

வெகு நாட்களாக வராதிருந்த முதுகுவலி
இப்போது மீண்டும் உன்னை விட்டேனா 
என்று பயம் காட்டிப் பார்க்கிறது.!
அது வரும் நேரம் எதனால், எந்த உணவுக் கோளாறினால்
என்று துல்லியமாகத் தெரிந்துவிடும்.

வாயுயும்,அசிடிடியும்  மார்பு, வயிறு, முதுகு
என்று பயணம் செய்து உண்டு இல்லை என்று
ஆக்கிவிடும்.
ராமா ராமா ஜபமும் பொறுமையும் 
தான் மீட்கவேண்டும்.

உடல் பாதிப்பு இருந்தால் பதிவு எழுத முடியாது.
 யூடியூபில் வரும் சில நல்ல 
விஷயங்களை இணைத்து விட்டு
பின்னூட்டங்களுக்கும் 
பதில் எழுதாமல் இருந்தால் மிக மரியாதைக் குறைவு,
சற்றே பொறுத்துக் கொள்ள வேண்டுகிறேன்.

லஸ் பிள்ளையார், வடபழனி முருகன், மாங்காடு காமாக்ஷி,
மயிலை கற்பகம்,மந்தைவெளி ஸ்ரீனிவாசர் தாயார், பாங்க் ஹனுமார் 
எல்லோரயும் மனதில் நினைத்துக் கொண்டு 
காலைப் பிடித்துக் கொள்கிறேன்.
'துதிப்போர்க்கு வல்வினை போம்
துன்பம் போம் .''அவனை நெஞ்சில் பதிப்போம்.

Thursday, September 09, 2021

பழைய நினைப்புதான்.....3


291, நூறும் ஒண்ணும் 2007




Posted by Picasa இந்தப் பாட்டிக்கு நூறு வயசாச்சு.
நம்ப முடியுதா:)
அவங்களோட பேரன்தான் இவங்களை நல்லா வச்சிருக்காரு.
பாட்டிக்குப் பொண்ணு வயித்துப் பேரன்.                                                                                     அவரோட பொண்டாட்டி நம்ம பொண்ணுக்கு நல்ல சினேகிதி.
சாலினு பேரு.
க்ரானி,க்ரானினு கூப்பிடறதைப் பார்த்துட்டு நான் அசந்து போனேன்.அத்தனை அன்பு இந்தப் பாட்டிகிட்ட அவங்களுக்கு.
இந்த வயசுக்கே உரித்தான சில முக்கிய பிரச்சினைகள் இருந்தும், இந்த சாலி(Sally) ரொம்பப் பொறுமை சாலியா(!)ப் பார்த்துக்கறாங்க.
பாட்டிக்கு நல்ல க்ரொஷா பின்ன வருமாம். நான் பொண்ணு வீட்டில இருந்த சமயம் ஒரு நாள் இவங்களை ஒரு மாலைப் பொழுதுக்கு வரச்சொல்லி இருந்தோம்.
பாட்டிக்கு வாக்கர் கூடத் தேவையா இருக்கவில்லை. பேத்தி கையை இறுக்கப் பிடித்து மெதுவா ஏறி வீட்டுக்குள்ள வந்து இருக்கையில உட்கார்ந்து,எங்க குட்டிப் பேரனோட விளையாடினாங்க.
அவனுக்குத் தான் பாட்டியோட எலும்பு உறுத்தவே ரொம்ப நேரம் அவங்களோட இருக்கலை.
Sally, பொறுமையா பாட்டிக்கு என் பொட்டு, என் உடை எல்லாத்தையும் விளக்கிச் சொல்ல அவங்க கேட்டுக்கிட்டு கிராஸ் கேள்வி வேற கேட்க ஆரம்பிச்சாங்க.

நீ உன் பாட்டியைப் பார்த்துக் கொண்டாயா. உன் அம்மாவுக்கு சேவை செய்தியா.இப்படி....
நானும் என் பழைய வரலாறிலிருந்து கொஞ்சம் சொன்னேன்.
அவ்வளவா இம்ப்ரஸ் ஆகலை பாட்டி.

ஆனா சமோசாவையும், பால்கோவாவையும் ரசிச்சு சாப்பிட்டாங்க.
பாட்டிக்கு இப்பத்தான் ஒரு இடுப்பு எலும்பு முறிவு சிகிச்சை முடிஞ்சு இருக்கு. இல்லாட்டி மாடிக்கும் போய்ப் பார்த்துட்டு வருவாங்கனு சாலி சொன்னாங்க.

அங்க இருந்த ஒரு இரண்டு மணி நேரத்தில் பாட்டி எழுந்து கீபொர்ட் வாசிச்சு, குஷன் கவரெல்லாம் சுத்தமா முடி போட்டு வச்சு, கீழ சிதறிக் கிடைந்த விளையாட்டுப் பொருட்களை அதோட பொட்டில போட்டு,
(ஹய்யோ) மீண்டும் சோஃபாவில வந்து உட்கார்ந்து கொண்டா.ர்......                                                                                                                                                                                                                                                                       
சற்றே செனீலிடி வந்து இருக்கிறது என்பது எனக்குப் பிறகே உரைத்தது.
அடுத்த வீட்டு அல்(ஆதி)சேஷன் குரைக்க ஆரம்பித்ததும்,
ஓ டாகி டாகி, எனக்கு இப்பவே டாகி பார்க்கணும்.
'Sally you are a bad girl. you will not let me play''
என்று விசும்ப ஆரம்பித்துவிட்டார்.
எனக்கு மனமே என்னவோ ஆகிவிட்டது.
ஆனால் இதை அந்தப் பெண் ரொம்ப அழகா சமாளிச்சா.
உடனே ஒரு நாய் பொம்மையைக் கையில் கொடுத்து நீங்க இதோட விளையாடுங்க. நான் இதோ வரேன். நாம் கோவிலுக்குப் போகலாம். உங்க தோழி அங்க காத்து இருப்பாங்கனு சொன்னதும் பாட்டிக்கு மீண்டும் உற்சாகம் வந்து விட்டது.
சாலி நீ ரொம்ப நல்ல பொண்ணு என்று சர்ட்டிஃபிகேட்டும் கொடுத்து விட்டார்.


ம்ம். என்னவெல்லாமோ அயல் நாடு பத்திச் சொல்றாங்களே.
இப்படியும் ஒரு பேரன் பொண்டாட்டி பாட்டியைப் பார்த்துக்கிறாளே என்று சந்தோஷப்பட்டேன்.
🤩
இன்னும் பாட்டிக்குத் தன் சொந்த ஊரானமெம்ஃபிஸ் போகத்தான் ஆசை. தனியாக இருந்தால் அடிக்கடி கீழே விழுந்து விடுவதால்
தாங்கள் தங்களுடைய வீட்டுக்கு அழைத்து வந்ததாக சாலி சொன்னார்.
பாட்டிக்கு ஒரே பெண் தான் அவரும் நோய் வந்து இறந்து விட்டார்.
அந்த பெண்ணின் பையந்தான் சாம்,சாலியின் கணவன்.
பாட்டிக்குப் பிறகு ஒரு எஸ்டேட் (20 ஏக்கர்)இவர்களுக்குக் கிடைக்கும் என்று என் பெண் அவர்கள் கிளம்பியதும் சொன்னாள்.

Wednesday, September 08, 2021

மீண்டும் வெங்காயம்.

வல்லிசிம்ஹன்



 செய்தி உபயம் ,தம்பி முகுந்தன் ,மதுரை.
+++++++++++++++++++++++++++++++++++++++++++
+++++++++++++++++++++++++++++++++++++++
வெங்காய புராணம் ( தொடர்கிறது) 
எனக்குத்தெரிந்த ஒரு  வெங்காய வெறியர் ஒருவர் காசிக்குப் போவதாக சொன்னார், காசிக்குப் போனால்   நமக்கு பிடித்த காய்கறி ஏதாவது ஒன்றை விட்டு  விட வேண்டும் என்ற வழக்கம் உள்ளதால், நான் அவரை “உங்களுக்கு மிகவும் பிடித்த காய்கறி எது?” என்று கேட்டேன். 
“வெங்காயம்” என்றார்.
 “அப்படியானால் நீங்கள் காசியில் வெங்காயத்தை விட்டு விட வேண்டும்” என்றேன். “அப்படியானால் கங்கையில் வேணாலும் 4 வெங்காயத்தை விட்டு விடுகிறேனே” என்றார். “நோ, நோ, நீங்கள் அதை சாப்பிடுவதை விட்டு விட வேண்டும்”. என்றேன்.
 “எத்தனை நாளைக்கு?” என்றார்,
 “ஆயுள் முழுவதும்” என்றேன். 
உடனே அவர் “விட்டு விடகிறேன்” என்றார். 
“ஆகா, உங்களுக்குத்தான் காசி மீது எவ்வளவு நம்பிக்கை, மரியாதை”  என்றேன். 
அவர் “இல்லை நான் காசிக்குப் போவதை  விட்டு விடுகிறேன்” என்றார். '
 “நோ காசி ஈவன்  இஃப் இட் கம்ஸ் ஓசி” என்று ஒரு ரைம் அடித்தார். 
அவருடைய வெங்காய பக்தியைக்கண்டு நான் அசந்து போனேன். எனக்குத் தெரிந்து காசிக்குப்போய் வெங்காயத்தை விட்டவர்களை நான் இதுவரையிலும் பார்த்ததில்லை. ஆனால் வெங்காயத்துக்காக காசியை விட்டவர்கள் நிறைய பேர் இருப்பார்கள் என்பது என்யூகம்.அவர்களுக்கு  ஏற்கனவே பிடிக்காத  காயை இந்த சாக்கில் விட்டவர்கள்தான் அதிகமாக இருக்குமோ என்று சந்தேகம் தோன்றுகிறது. எங்கே காசிக்குப்போனால் வெங்காயத்தை விட்டு விட நேருமோ என்ற பயத்தில் நான் இது வரையில் காசிக்குப் போனதில்லை.

மற்ற காய்கறிகள் போல் இல்லாமல் வெங்காயம் வாங்குவது ரொம்ப சுலபம். முத்தலா, இளசா என்று பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. அதை மற்ற காய்கறிவகைகளப்போல கிள்ளிப் பார்க்க  வேண்டியது இல்லை. வெண்டைக்காய் போல் உடைத்துப் பார்க்க வேண்டியது இல்லை. பீன்ஸ் போல் ஒவ்வொன்றாக பொறுக்கி எடுத்து வளைத்துப் பார்க்க  வேண்டிய அவசியம் இல்லை. அதை அப்படியே அள்ளிப்போட்டுக்கொண்டு வரவேண்டியதுதான். பெரிய வெங்காயம் வாங்கும்போது அத்துடன் சிறிய வெங்காயம் கலக்காமலும், சிறிய வெங்காயம்  வாங்கும்போது அத்துடன் பெரிய வெங்காயமோ  அல்லது மிகச்சிறிய தூளாகிவிட்ட  வெங்காயமோ கலக்காமலும் பார்த்துக் கொள்ள வேண்டும்.  அவ்வளவுதான். வெறும் தோலையும் வாங்கக்கூடாது. இப்படி வாங்கிய பச்சை வெங்காயத்தை பல வாரங்கள்வரை சேமித்து  வைக்கலாம். இதுவே அதைப்பதுக்கி வைக்க ஏதுவாகிறது. இதனால் இது அரசியல் வாதிகளுக்கு தேர்தல்நேரத்தில் கை கொடுக்கும் காயாக மாறிவிடுகிறது. அது சமைக்கப்பட்டு விட்டால் அதன் ஆயுள் ஓரிரு நாட்கள் தான்.

வெங்காயங்கள் பல உருவம் எடுக்கும். அது ஒரு தோழமைக்காய் . வேறே பல காய்களோட சுமுகமாக உறவாடும். முரண்டு பிடிக்காது  சில காய்கறிகள்மாதிரி. 

**வெங்காய வடை, வெங்காய தோசை, வெங்காய ரவா தோசை, வெங்காய ரவா மசாலா தோசை, வெங்காய சட்டினி, வெங்காய தக்காளி சட்னி,  வெங்காய தயிர்ப் பச்சடி. வெங்காய ஊறுகாய்  என வெங்காயம் பத்துக்கு மேலேயே  பல அவதாரங்கள் எடுக்கும். நொறுக்குத்தீனிகளில் டாப் ஏற்கனவே நான் சொன்னது போன்று வெங்காய பக்கவடா. 

அது தோசையோட சேந்து வெங்காய  தோசைஆகும். உருளைக்கிழங்கோடு சேந்து மசாலா  ஆகும். இந்த மசாலா பூரிக்கும் தோழன். தோசைக்கும் நேசன். அப்படி ஒரு காம்பினேஷன். நீ இல்லாமல் நானில்லை. நானில்லாமல் நீ இல்லை என்ற அளவுக்கு அவை இணை பிரியாத ஒரு பந்தத்தை ஏற்படுத்திக்கொள்கின்றன. 

இது தவிர வெங்காய ரவா தோசையும் உண்டு , வெங்காய ரவா மசால்தோசையும் உண்டு. மசால்தோசையையும், , பூரி மசாலாவையும் பீட் பண்ணும் கூட்டணி இனிமேல்தான் பிறந்து வரணும். 
மசால் தோசைக்கு ஏற்கனவே உலக மகாரசிகர்கள் இருக்கிறார்கள். நீங்கள் ஒரு வீடியோவில், மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய அமெரிக்கன் வைஸ் பிரசிடெண்ட், கமலா ஹாரிஸ், தன் அமெரிக்க நண்பிக்கு மசால்தோசை செய்து காட்டும் வீடியோ ஒன்று வெளியானது. அந்த தோசை எப்படி இருந்தது என்று எனக்குத்தெரியாது. அதைப்பார்த்தே, எனக்கு எங்க வீட்டு மசால்தோசையை சாப்பிட்ட திருப்தி. அந்த அளவிற்கு மசால் தோசையின் மகிமை கடல் கடந்து சென்று இருக்கிறது,
 அதேபோல் பூரிமசாலாவின் பெருமையை உலகறிய அமெரிக்காவில் இன்னொரு அமெரிக்க வாழ்  இந்திய பெண்மணி விமலா வாரிஸ்   பெரிய அதிகாரப்பொறுப்பை ஏற்கும்நாள் என்னாளோ அன்னாளே பூரி மசாலாவின்  பொன்னாள். 
உருளைக்கிழங்கு வெங்காய கூட்டணிக்கு இணையான அரசியல் கூட்டணி இந்திய, ஏன் உலக அரசியலிலேயே  இன்னும் உருவாகவில்லை. எந்த பிரசாந்த் கிஷோராலும் உருவாக்க முடியாது. 

மசாலா கூட்டணியில் பிறந்தது தான் சமோசா. வட இந்தியாவில் இதன் ரசிகர்கள் அதிகம். ஆனால் இது நம் தமிழ்நாட்டின் இட்டிலி , தோசை, வடையுடன் போட்டி போட முடியுமா தெரியவில்லை. இதில் உ.மசாலாவின் டேஸ்ட்டை அதன் தடித்த மேல் ஓடு குறைத்து விடுவதாக  என் நாக்கு சொல்கிறது,..பாவ் பாஜியில் வெங்காயம் பங்கு வகிக்கிறது . பேல்பூரியில் பங்கு கொள்கிறது, சாண்ட் விச்சில் இடம் பிடிக்கிறது. சமைக்கப்பட்ட பின் வெங்காயத்தின் ஷெல்ப் லைப் குறைவு என்பதாலே வெங்காயம் சேர்ந்த பண்டங்களை ரொம்ப நாள் வைத்து இருக்க முடியாது. அப்படி வைத்திருக்கும் அளவிற்கு அதை யாரும் விட்டு வைக்க மாட்டார்கள். இது ஸ்நாக்ஸாக வெங்காய பக்கவடாவில் மட்டும்தான் இடம்பெறுகிறது. மற்ற ஸ்நாக்குகளில் இடம் பெறுவதில்லை. குறிப்பாக தமிழ் நாட்டுத் தின்பண்டங்களில் இது அதிகமாகக் காணப்படுவதில்லை. அது எனக்குப் பெருத்த ஏமாற்றம்தான்.
எனக்குத்தெரிந்தவரையில் வெங்காயம் இட்லியுடன் நேராக சேர்வதில்லை எக்செப்ட் ஏஸ் சைட் டிஷ். சாம்பார் அண்ட் சட்டினி உருவத்தில். இதேபோன்று  வடையுடன் சேர்ந்தால் வெங்காயவடை. இதற்கென்றே ஒரு ரசிகர்கூட்டம் இருக்கிறது. எனக்குத்தெரிந்த ஒரு சூப்பர்ஸ்நாக்ஸ் வெங்காய பக்கவடாதான். இதை எழுதும்போதே என் நாக்கு சப்பு கொட்டுகிறது. இந்த வெங்காய பக்கவடா சில ஆண்டுகளில் இண்டர்நேஷனல் ஸ்னேக்ஸாக  டிக்ளேர் செய்யப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை., இது தவிர தினசரி சமையலில் வெங்காயம் வெகுவாக பல காய்களுடன் சேர்த்து பயன்படுத்தப்படுகின்றன. முந்திரி பருப்பு போட்டு  அப்போதுதான்,  பறித்துக்கழுவிய கொத்தமல்லியைத்தூவிய  வெண்பொங்கலுக்குத்தொட்டுக்கொள்ள வெங்காய கொத்சு காம்பினேஷனக்கு வேறு எதுவும் ஈடும் ஆகாது. இணையும் ஆகாது.  ஆகா, ஆகா, ஆகா. வெறும் சின்ன வெங்காயத்தை நெய்யில் வதக்கி அது சூடு ஆறுவதற்குள் சாப்பிட்டு இருக்கிறீர்களா? அந்த சுகமே சுகம்..

எனக்குத்தெரிந்து  வெங்காயத்துக்கு நாம் எந்த பண்டிகைகளிலும் இடம் கொடுத்தது கிடையாது. அது ஒரு காலத்தில் நம் தீபாவளிப்பண்டிகையின்போது  இடம் பெற்றது வெங்காய வெடி என்ற பெயரில். ஆச்சரியமாக இருக்கிறதா? அதை எதன்மீதாவது பலமாக வீசினாலோ, ஒங்கி  அடித்தாலோ அது வெடித்து சத்தம் வரும். இந்த சாக்கிலே பலர் தீபாவளியின் போது இதை வாங்கி தங்களுக்குப்பிடிக்காதவர்கள் மீது தங்கள் வன்மத்தைக் காட்டுவார்கள். இதனால்பல விபத்துகள் ஏற்படவே அதற்கு  ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இன்று அது காணாமலே போய்விட்டது. பேர்தான் வெங்காய வெடியே தவிர , அந்த வெடியில் வெங்காயம் கிடையாது. பார்ப்பதற்கு சிறிய வெங்காயம் போல் இருந்ததால் அதற்கு அந்தப் பெயர்

வெங்காயத்திலும், பூண்டிலும் மனிதர்களை மெல்லக் கொல்லும் விஷத்தன்மை கொண்ட 21 பொருட்கள் இருப்பதாக சில விஞ்ஞான ஆராய்ச்சிகள் கூறுகின்றன. (உதாரணம்: டாக்டர். ரோபர்ட் சி பெக், அமெரிக்கா அவர்களின் ஆராய்ச்சி) மேலும், மனிதனின் மூளை வளர்ச்சிக்கு இவை தடையாக இருப்பதாகவும் கூறுகின்றனர். இதைப் பற்றி நம்மில் பலரும் கவலைப்படத் தேவை இல்லை.
பூண்டும், வெங்காயமும் பல வகையான நன்மைகளைக் கொண்டிருந்தாலும் அதை தினசரி பயன்பாட்டிற்கு உட்கொள்வது நல்லதல்ல என ஆயுர்வேதம் கூறுகிறது. .
வெங்காயம் அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் முக்கியமான பக்கவிளைவுகளில் ஒன்று வாய் துர்நாற்றம் ஆகும்.
 An apple a day keeps the doctor away
A garlic a day, keeps everyone away  
இது வெங்காயம் சாப்பிட்ட வாய்க்கும் பொருந்தும்
வலுவான வெங்காயத்தின் வாசனையானது நீண்ட நேரத்திற்கு உங்கள் வாயை விட்டு போகாது. எனவே பொது இடங்களுக்கு செல்லும் முன் அதிகளவு வெங்காயம் சாப்பிடுவதை தவிர்க்கவும். 
முக்கியமாக பல்டாக்டரிடம் போகும்போது இதைத்தவிர்ப்பது உங்களுக்கு நல்லது. இல்லாவிட்டால் பல் டாக்டர்  சாபத்துக்கு நீங்கள் ஆளாக நேரும். வெங்காயம் சாப்பிட்ட வாயை அவர் நெருங்க பயப்பட்டு ஏதாவது எசகு பிசகாக பல்லுக்குப்பதில் உங்கள் நாக்கைப்  பிடுங்கிவிடலாம். அதற்கப்புறம் நீங்கள் வெங்காயத்தைப்பார்க்கத்தான் முடியுமே ஒழிய ருசித்து சாப்பிட முடியாது. அதே போல உங்கள் நட்பு நீடிக்க வேண்டும் என்றால் வெங்காய சமாசாரங்கள் சாப்பிட்டவுடன் உங்கள் நெருங்கிய நண்பன் அல்லது நண்பிகளுக்கு அருகில் செல்வதைத்தவிர்க்கவும். 

இப்படி வெங்காய மகிமையைப் பத்தி மணி கணக்கா சொல்லிக்கிட்டே போகலாம்., இன்னும் சொல்ல வேண்டியது நிறைய இருக்கு.ஆனா?
ஆனா?…… அட, கிச்சனிலிருத்து வெங்காய பஜ்ஜி வாசனை உம்..உம்...ஆளையே தூக்குதே. சரி.சரி.ஆளை விடுங்க. நான் என் பேவரிட் வெங்காயத்தை ஒரு கை பார்க்கணும், அதனாலே வெங்காய மகிமையை இத்தோட முடிச்சிக்கிறேன். 
வெங்காய சாம்பார் சாதம்
பொட டோ ரோஸ்டும் பிரமாதம்
அந்த கௌரவ பிரசாதம்
அதுவே எனக்கு போதும்  
ஹஹ்ஹஹ்ஹ ஹ்ஹஹ்ஹ
ஹஹ்ஹஹ்ஹ ஹ்ஹஹ்ஹ
ஹஹ்ஹஹ்ஹ ஹ்ஹஹ்ஹ
வெங்காய பஜ்ஜி அங்கே
அதன் வாசனை வருது இங்கே
சந்தோஷம் எனக்குப்பொங்க
ஆசை வருது அதைத் திங்க 
என்று மனதிற்குள் பாடிக்கொண்டே வீட்டின் கிச்சனை  நோக்கி ஓடினேன். ( முற்றும்)
12:12 AM

Tuesday, September 07, 2021

பழைய நினைப்புதான்......2

வல்லிசிம்ஹன்


 2008  எழுதின பதிவு. மீள் வாசிப்புக்கு.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++

நாமும்தான் எழுத ஆரம்பிச்சு ஒரு ரெண்டு வருஷம் ஆகிறது.

பிடிச்ச பதிவு பிடிக்காத பதிவு ஒண்ணும் கிடையாது.

நம்ம பெத்த பசங்களை (எழுத்துகளை)
 நாமே குறை சொல்லக் கூடாது.


எனக்கும் என் சின்னத் தம்பிக்கும் ஒரு அன்யோன்யம் உண்டு.

நான் சொல்றதுக்கெல்லாம் அவன் ஆமாம் சாமி போடுவான்.


சின்னவயசில் வாங்கின குட்டுகள் நினைவில வச்சிருந்தானு நினைக்கிறேன்.


அதே போல அவன் அங்க போனோம்,இங்க போனோம்னு அவன் அலுவல் விஷயமாக சென்ற இடங்களில் சம்யோசிதமாக நடந்து ஏகப்பட்ட அன்னிய செலாவணி கண்டுபிடிச்ச வீரப் பிரதாபங்கள் சொல்லும்போது, உன்னை மாதிரி உண்டாடா'ன்னு நானும் சொல்லுவேன்:))))))



 
அது எங்களுக்கு ஒரு மியூச்சுவல் அட்மிரேஷன் சொசைட்டினு பெயர் வாங்கிக் கொடுத்து விட்டது:)) அதனால் நாம சொல்லும் எல்லாமே சுவாரசியமானது என்கிற நினைப்பு வந்து மனதில் தங்கி விட்டது.
வலைப்பூ ஒன்று ஆரம்பித்து அதில் அபிப்பிராயங்களை எழுத ஆரம்பித்ததும் சில பதிவுகளுக்குப் பின்னூட்டங்கள் நிறைய வரும்(10னு வச்சுக்கலாமெ:) ) சிலதுக்கு 2 வரும்.
அதில ஒண்ணு என்னுடைய பதிலாக இருக்கும்.:)

திடீர்னு ஒரு நாள் தம்பி கிட்ட பேரன் பிறந்த போது நான் செய்த அசட்டுக் காரியங்களையெல்லாம் சொல்லிச் சிரித்த போது,ஏய், எல்லாத்தையும் குறிப்பெடுத்து வை. என்னிக்காவது ஒரு நாள் நீ ஜர்னலிஸ்ட் ஆனா நீ கருப்பொருள் தேட வேண்டாம் பாரு,என்று சீண்டுவான்.
''ஒரு நாள்...!!'' என்று அண்ணாமலை லெவல்ல சபதம் சொல்வேன்.
படித்தவர்கள் எங்கள் புகுந்த வீட்டில் சற்றே அதிகம்.
எல்லா மொழியும் கலகலப்பாக வந்து போகும்.
காளிதாசன்,பர்த்ஹரி,,ரகுவம்சம்,ஸ்ரீ பாஷ்யம் என்றெல்லாம் விவாதிக்கப் படும்.
நானும் சமையலறையிலிருந்து பஜ்ஜி,போண்டா எல்லாம்
கொண்டு வந்து சாப்பிடக் கொடுக்கும் போது,
ஆவலாக இருந்தாலும் புரியாத காரணத்தால் நீட்டோலை வாசியா நெடுமரமாக நிற்க மனமின்றி,
வெங்காய பஜ்ஜியா, காலிஃப்ளவர் பஜ்ஜியா ஆராய்ச்சிக்குப் போய் விடுவேன்.
அதில் ஒரு வெகு தூர உறவினர், ''நீ ஒண்ணுமே பண்ணலியா அப்புறம்?? ''என்று கேட்டால்
கேள்வி புரிந்தாலும், இல்லையே டீ போடலாம்னு இருக்கேன்.' என்பேன்.
உலக மகா ( நகைச்சுவை )ஜோக் சொன்ன மாதிரி அவர் சிரிப்பார்.
அது போக என்னை,மாற்றி ஒரு அசாதாரண அறிவு ஜீவியாக மாற்ற இவர்கள் செய்த அத்தனை முயற்சியும் வீணாகின.
நமக்கு அப்போது சமையல்,வெளிவேலைகள்,குழந்தைகள்,பாடங்கள், துணிமணி மடித்து இஸ்திரி,ஒட்டடை இதற்கு நடுவே கந்தன் லைப்ரரி புத்தகங்கள். இதுவே போதுமானதாக இருந்தது.
ஆனால் பதிவுகளில் நீடித்து இருப்பதற்கு இவை போதாது,. இன்னும் நிறையப் படிக்க வேண்டும் தமிழை.
நேரம் இருக்கிறதே!!
சுஜாதா சார் கையெழுத்துப் போட்டுக் கொடுத்த புத்தகத்தையாவது இன்னும் ரெண்டு தடவை படிக்கலாம்.
பாவை விளக்கு படிக்கலாம்.
எப்படி எழுதினார்கள் என்று கொஞ்சமாவது தெளியலாம் இல்லையா.








Monday, September 06, 2021

குறும்படங்களும் கதைகளும்.:))))))))





வல்லிசிம்ஹன்

இளமை இனிமை. மகிழ்ச்சி.

கொறக்களி பிடித்தால்.....

வல்லிசிம்ஹன்

[8:31 AM, 9/4/2021] Jayanthi Kanna.: உடல் நலம்:

குளிர் காலம் ஆரம்பமாகிவிட்டால்

Middleage, senior citizens க்கு 
பொதுவாக ஒரு problem வரும்.

Cramp...

பெரும்பாலும் இரவு நேரத்தில் வரும். கெண்டைக்கால் சதை, கால் விரல்கள், பாதங்கள், etc ,etc severe தசை பிடிப்பு.

சதையும் நரம்புகளும் சேர்ந்து கட்டி போல் ஆகிவிடும். வலி உயிர் போய் விடும். எழுந்திருக்கவும் முடியாது படுக்கவும் முடியாது. யாராவது உதவ வேண்டும். 

அந்த கடின தசை பகுதியை மெல்ல அழுத்தமாக தடவி, சமநிலைக்கு கொண்டு வர வேண்டும். பின் Volini gel ஏதாவது தடவ வேண்டும். இரண்டு நாட்களுக்காவது அந்த வலி லேசாக இருக்கும்.

Cramp வரும் போது, தூக்கத்தில் இருந்தாலும், அலறி அடித்துக் கொண்டு எழுந்து  அழ ஆரம்பித்து விடுவார்கள்.Pain Uncontrollable.

பொதுவாக Evion tablets 10 நாட்கள் சாப்பிட சொல்வார்கள். அப்போதைக்கு சரியாகிவிடும். பின் மீண்டும் வரும்.

ஆயுர்வேதம், வர்மம்  பயின்ற என் நண்பர் ,எளிமையான ஒரு தீர்வு கூறினார்.

வலது பக்கத்தில் Cramp வந்தால், இடது கையை காதோடு ஒட்டி மேலே தூக்குங்கள். இரண்டு அல்லது மூன்று நிமிடம் அந்த positionலேயே இருங்கள். Cramp சரியாகிவிடும். வந்த சுவடே தெரியாது.

அதே போல இடது பக்கத்தில் Cramp வந்தால் வலது கையை காதோடு ஒட்டி மேலே தூக்குங்கள்.

படுத்திருக்கும் போது வந்தாலும், 
காதை ஒட்டியவாறு கைகளை 
நீட்டுங்கள். சரியாகிவிடும்.

 நண்பர்கள், உறவுகள் பலரும் பயனடைந்தார்கள். நீங்களும் 
முயற்சித்து பார்க்கலாம்.

Eye Dryness:

இதுவும் அப்படித்தான்.வலியும் இருக்கும். காலையில் கண்ணை திறப்பதே சிரமமாக இருக்கும்.

இரவு தூங்கும் போது கண்டிப்பாக Eye drops போட வேண்டும். இல்லாவிடில் தூக்கம் கெடும். காலையில் சிரமம்.

இதற்கும் ஒரு எளிய மருத்துவம்:

இரவு தூங்கும் போது தொப்புளை சுற்றி அரை அங்குலம் வரை தேங்காய் எண்ணையை தடவி, லேசாக தடவி மசாஜ் செய்து கொள்ளுங்கள்.

ஒரு வாரத்திலேயே, Eye drynessல் இருந்து பெரும் விடுதலை கிடைக்கும். இன்னும் சில
உடல் பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.

எனக்கு தெரிந்தவர்
பத்து வருடங்களாக, Eye drops உபயோகித்தவர். அடிக்கடி Eye Checkup.

இப்போது பெரிய Relief. முதலில்  இந்த சிகிச்சையை  சொன்னபோது சிரித்தார்கள் உபயோகப்படுத்தியவுடன், நல்ல முன்னேற்றம்.
Eye drops மிகவும் குறைத்து விட்டார். 
No more doctor Visit.

தூக்கமின்மை :

பலருக்கு இரவில் ஆழ்ந்த தூக்கம் வராது. Disturbed sleep due to worries,  etc etc.

எளிய மருத்துவம் :

தூங்க போகுமுன்,  தேங்காய் எண்ணெய் மூன்று அல்லது நான்கு drops எடுத்து. வலது பாதத்திற்கு அடிபாகத்தில் (உள்ளங்காலில்) மென்மையாக தடவி மூன்று நிமிடம் லேசாக மஸாஜ் செய்யுங்கள். அதே போல இடது காலிலும் செய்யுங்கள். பின் படுத்து விடுங்கள். ஆழ்ந்த உறக்கம் கண்டிப்பாக வரும். 

நீங்களும் முயன்று பார்க்கலாம்.
Sleeping tablets கூட நாளடைவில்
தவிர்த்து விடலாம்.

ஒரு மருத்துவ நண்பர் சொன்னது:

தொப்புள்  72000 நரம்புகள் குவியும் இடம்.
அங்கு தேங்காய் எண்ணயை தடவும் போது, நரம்புகளில் இருக்கும் குறைபாடுகளை சமன் செய்கிறது. அதே போலதான், உள்ளங்காலிலும். 

Acupressure பயிற்சிகளில் கூட உள்ளங்கால் முழுமையும் விரல்களால் அழுத்தி, உடலின் எல்லா உறுப்புகளிலும் உயிர் சக்தி தங்கு தடையில்லாம பயணிக்க செய்வார்கள்.

உடல் நலத்தில் கவனம் தேவை. 

ஆங்கில மருந்துகளை மெல்லகுறைத்து கொண்டு மாற்று மருத்துவத்தில் கவனம் செலுத்துதல் சிறப்பு.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

நலம் பெறவேண்டுகிறேன்.🙏வாழ்க வளமுடன்

தங்கை ஜெயந்தி அனுப்பிய வாட்சாப் தகவல்.
நன்றிகளுடன்.



பழைய நினைப்புதான் பேராண்டி:)

வல்லிசிம்ஹன்

Friday, March 23, 2007
கவிதை(யா?) 
எதிர்காலம்..

கண்ணளவே வானம் என்றெண்ணித்
தலை குனிந்து போனதால்
அழகு கொண்ட மரமும் செடியும்
நான் காணவில்லை


காதளவே சொற்கள் என்றே எண்ணிக்
கருத்தினிலே போடவில்லை.
அரியனவெல்லாம் தெரியவில்லை.
அறிந்து கொள்ளவும் வழியில்லை
நெடி அடிக்கும் என்று மூக்கை
மூடியதால்
பூக்கள் என்னை பார்த்து சிரிக்கவில்லை.
உணவு தன்னை மதிக்காததால்
மணக்கும் உணர்வும் மறந்து போனது.

இப்போதோ பேரன் எனக்குச் சொந்தம்
நான் பேசுகிறேன்
அவன் கேட்கிறான்
இரண்டு வருடம் போய்வந்தால்
இவனும் பதில் எனக்குச் சொல்வான்.

இனியே கண்கள் திறக்கும்
காதுகள் கேட்கும்
வாய் நிறையக் கொஞ்சும்
விடுதலை கொடுத்தது யார்?

ஒரு தற்கொலை தடுக்கப் படுகிறது.


வல்லிசிம்ஹன்

குறும்படங்கள். மிக சுவாரஸ்யமாகப படம் எடுக்கப் படுகின்றன. இந்தப் படம் 

ரசிக்கப் படும் விதத்தில். எடுக்கப் பட்டிருக்கிறது. நேரே நடப்பது போல ஒரு
 பிரமிப்பு. நல்ல நடிப்பு. கோவிட் காலத்தில் நாம் அனுபவிக்கும் சங்கடங்கள் அதன் விளை வுகள். 


 அந்த ஸ்டாக் ப்ரோக்கர், ரிலேஷன்ஷிப் மேனேஜர் 
என்று சொல்கிறார்.
 தொலைபேசியில் கேட்கும் வன்முறை,
அவரை ,அந்தப் பெண்ணுடன் பேசவைக்கிறது.
பேசியே மனதை மாற்றுகிறார்.
இல்லாத ஒரு அக்காவை உருவாக்கிக்
கதையாகப் பேசுகிறார்.
மிக நல்ல கதை அம்சம் கொண்ட குறும்படம்.


Saturday, September 04, 2021

சில பல கானங்கள்


வல்லிசிம்ஹன்
நமக்கு ஒரு சில பாடல்கள் மட்டும் 
மனதின் முன்னணியில் நின்று காதில் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன
என்று சில நேரம் யோசிப்பதுண்டு.

நல்ல எழுத்துகள்  அகத்தில் பதிவது போல
எப்பொழுதோ கேட்ட  இசை
திடீரென்று சிந்தையில்  நடமாடும். 
இது வரை அதற்கான காரணங்களை ஆராய்ச்சி செய்வதில்லை.
இதற்கெல்லாம் ஆதி காரணங்களை
ஆராயப் பலர் இருக்கின்றனர்.

சமீபத்தில் ஒரு நெடு நாளைய தோழி
சொன்னதைப் போல ''இன்றைய நன்மைகளை
அனுபவியேன் ரேவதி. !! யேன், எப்படி என்று கேள்வி கேட்டு
இந்தக் கணத்தை விட்டு விடாதே.''

எப்பொழுது  பார்த்தாலும் விசாரம், விசாரணை,
தேடல் என்றில்லாமல்  அந்தந்த நொடியைக்
கெட்டியாகப் பிடித்துக் கொள்ள முயற்சிக்கிறேன்.:)




Friday, September 03, 2021

அக்கம் பக்கம் என்ன செய்தி.

வல்லிசிம்ஹன்




செப்டம்பர் 3.
 ஒரு முக்கிய நாள். முதல் பேரன் எங்கள் வாழ்வில்
வருகை புரிந்த நாள்.
அன்பின் விஷ்ணு  என்றும் ஆனந்தத்துடன்,ஆரோக்கியத்துடன்
வள வாழ்வு பெற இறைவன் கருணை செய்வான்.
மற்ற செய்திகளில்
இங்கே நேற்று வடகிழக்கு மாகாணங்களில் 
அடித்த சூறாவளி.

நம் பக்கம் வந்தால் நம் பயத்தோடு போகும்.
நம் உறவினர்கள் அங்கே இருப்பதால்
நேற்று எல்லோரையும் தொடர்பு கொண்டு கிடைக்காமல்
கவலைப் பட்டுப் பொழுது கழிந்தது.

சாயந்திரம் தான் அவர்களிடம் இருந்து
பாதுகாப்பான இடங்களுக்கு வந்து விட்டோம்
என்ற செய்தி கிடைத்தது. இறைவனுக்கு நன்றி.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
எப்பொழுதும் சாலைகளில் ஓட்டிச் செல்லும் போது,
சிங்கம் ரூல்ஸ் ராமானுஜம் தான். 

ஒரு சட்டத்தையும் மீற மாட்டார். அவருக்கு இண்டர் நேஷனல் 
லைசென்ஸ் இருந்தாலும்
இந்த ஊர் வேகத்தைப் பார்த்து 
இங்கேயும் லைசென்ஸ் எடுக்க முயற்சித்து
மனம் மாறிவிட்டார். எல்லோரும் ஒரே மாதிரி ஓட்டுவதில்லை
என்ற குறை அவருக்கு.

அதை நிரூபிப்பது போல அடுத்த வீட்டுப் பெண்
ஒரு அரசு வேலையில் இருப்பவர்
கடந்த திங்கள் மாலை சொன்ன விஷயம்.

அவள் அலுவலகத்திலிருந்து திரும்பும் போது சிக்னல்
பச்சை காட்டியதும் 
இந்த ரோடில் ரைட் டர்ன் எடுக்கும் போது
எதிர் பக்கத்திலிருந்து வேகமாக வந்த வண்டி இவள் பக்கத்தில்
வேகமாக மோதி நின்றிருக்கிறது.
என்ன நடந்தது என்று தெரியவில்லை அவளுக்கு.
எமெர்ஜென்சி தடுப்புகள்(pillows) வெளிவந்து காப்பாற்றி இருக்கின்றன.

அடுத்த நிமிடம் ஆம்புலன்ஸ் வந்து பாரா மெடிக்ஸ் அவளைக்
காரில் இருந்து வெளியே கொண்டு வந்து,
அவள் கணவருக்கு சொல்லி,
மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று விட்டார்கள்.

அங்கு பரிபூரண செக் அப், ஸ்கான் எல்லாம் செய்து
அடுத்த நாள் காலை வீட்டுக்கு அனுப்பினார்கள்.

அவள் பேசும்போது இன்னும் அவள் தெளியவில்லை.
நேற்றுதான் உடல் நடுக்கம் நின்றிருக்கிறது.:(

மோதினானே அந்த டிரைவரை அர்ரெஸ்ட்
செய்துவிட்டார்களா என்று கேட்டேன்.
சிரிக்கிறார்கள்.
அவனுக்கு வார்னிங்க் கொடுத்து லைசென்ஸ்
தடை செய்யப்படும். கைது எல்லாம் செய்ய மாட்டார்கள்.
அவளுக்குத் தான் ஆபத்து இல்லையே
என்று சொன்னார்கள்.
அவள் வண்டி வொர்க்ஷாப்புக்குப் போனது, சரியாகி வர
இரண்டு வாரம் ஆகுமாம்.

ஒரு பக்கமே சேதமாகி இருக்கிறது.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இப்போது பெண் வண்டியை எடுக்கும் போது நானும் சென்று விடுகிறேன்.
பள்ளியிலிருந்து பேரனைக் கொண்டுவிட,அழைத்து வர:)

அத்தனை குழந்தைகளையும் தினமும் காண்பது 
நல்ல மகிழ்ச்சி தரும் அனுபவம்.
வண்டியை விட்டு இறங்குவதில்லை.
 பள்ளி இறுதி வகுப்பு மாணவர்கள் 
ஓட்டும் வண்டிகள் பிரமிப்பைத்
தருகின்றன. தெளிவாகத்தான் ஓட்டுகிறார்கள்.
இறைவன் அவர்களை மற்ற வேக ஓட்டுனர்களிடம் இருந்து காக்க வேண்டும்.

இன்னும் வேறு செய்திகளுடன் பிறகு 
பார்க்கலாம். அனைவரும் வளமாக வாழ இறைவன் அருள வேண்டும்.




கிரகணம் | Eclipse | அ. முத்துலிங்கம் | பாரதி பாஸ்கர் | Bharathy Baskar |...

Wednesday, September 01, 2021

வாழைப்பூ சாண்ட்விச்!!!

செப்டம்பர் மாதம் ஆரம்பித்தாச்சு. வெய்யில் குறையலாம்.

என்றும் கண்ணன்.

வல்லிசிம்ஹன்

ராமாவதாரத்துக்கும் கிருஷ்ணாவதாரத்துக்கும் ரசிக்கத்தக்க வேற்றுமைகள் உண்டு. 

ராமன் நவமியில் பகல் வேளையில் அரண்மனையில் அவதாரம் செய்தான். 

கிருஷ்ணன் அஷ்டமியில் அர்த்த ராத்திரியில் சிறையில் அவதாரம் செய்தான். 

எண்களில் ஒன்பதை எப்படிப் பெருக்கினாலும் அது தன்நிலையில் மாறாது. அதைப் போன்றவன் ராமன்.

எட்டு என்ற எண், தன் நிலையில் பெருக்கும்போது குறுகிக் கொண்டே வந்து இறுதியில் மாயமாகி விடுகிறது. 

அதைப்போல தன்னை ஒளித்தும், நிதானம் காட்டி பின்னர் மாயையை விரட்டி தர்மத்தை நிலை நாட்டினான் கிருஷ்ணன். 

ஆகவேதான், ‘பகவத் கீதை’ என்ற உபதேசத்தை யுத்தபூமியில் விஜயனை முன்னிட்டு நமக்கெல்லாம் உபதேசம் செய்தான்.

ஒருவருக்கு நால்வராய் வாய்த்தது ராமாவதாரம். 

நால்வருக்கு ஒருவராய் நின்றது கிருஷ்ணாவதாரம். 

அதாவது, பிள்ளை இல்லையே என்று வருந்திய தசரதனுக்கு ராம, லக்ஷ்மண, பரத, சத்ருக்னன் என்று நால்வராக வாய்த்தது ராமாவதாரம். 

வசுதேவர், தேவகி, நந்தகோபர், யசோதை என்கிற நால்வருக்கும் - கண்ணன் என்ற ஒருவனே, மகனாய் வாய்த்தது கிருஷ்ணாவதாரம்.

ராமாவதாரத்தில் சீதைக்குப்புகழ் அதிகம். சிறையிலிருந்து புகழ் பெற்றாள் சீதை. 

அதைத் தோற்கடிக்கும் விதமாக பிறக்கும்போதே சிறையில் பிறந்து சாதனை செய்தது கிருஷ்ண சாமர்த்தியம்.

தூதுபோய் அனுமன் புகழ்பெற்ற சரிதம் ராமாயணம். 

அந்த தூதுப்புகழும் தனக்கே என்பதைக் காட்டியது கிருஷ்ணாவதாரம்.

எல்லாவற்றையும் விட மிக முக்கியம், இராமன், மனிதனும் தெய்வமாகலாம் என்பதன் விளக்கம். 

கிருஷ்ணன், தெய்வமே மனிதனாக வரலாம் என்பதன் சுருக்கம். 

அதனால்தான் ராமனுக்கு விஸ்வரூபம் என்று எதுவும் இல்லை. 

கண்ணனுக்கு விஸ்வரூபம் என்பது சர்வசாதாரணம்.

சூட்சுமமாகப் பார்த்தோமானால் கிருஷ்ணன் என்பது ஒரு சுவையான அனந்தநிலை, உத்சவ உற்சாகம், மனமோகன ஸ்வரூபம்.

கிருஷ்ணனுக்குப் பூப்போட்டு வணங்குவது மட்டும் பக்தியில்லை. தன்னையே ஒரு பூவைப் போல லேசாக்கிக் கொள்ளுதலே கிருஷ்ண அனுபவம்.



🙏சர்வம் கிருஷ்ணார்ப்பணம்

கண்ணன். 
தங்கையிடம் இருந்து வந்த செய்தி. நன்றி ஜெயந்தி கண்ணன்.