Monday, September 27, 2021

அக்கா ,தம்பி பாசம்:)

  என் தம்பிகளுக்கு இந்தப் பிரச்சினை இருக்கவில்லை.
எனக்குத் திருமணம் நடந்த போது 
இன்னோரு குடும்பம் கிடைத்ததாகவே மகிழ்ந்தனர்.

அவ்வளவு  இன்னொசெண்ட்  ஆத்மாக்கள்.
என் தம்பி ரங்கனின் நினைவில். 
டேய்  ரங்கா. ஹாப்பி  பர்த்டே டா. 70 ஆகிறது உனக்கு.
உன் மனைவி, குழந்தை, மாப்பிள்ளை, பேரன்
அனைவரும் நலமாக இருக்கட்டும்.




என்னாளும் செய் நன்றி மறவாமல் இருக்க வேண்டும். 
இதற்காகவே மிஞ்சி இருக்கும் நான் 
இந்த மஹாலய பட்சத்தில் உங்கள் இருவருக்கும் நற்கதி கிடைத்திருக்கும் என்று
நம்பி, உங்கள் எல்லாப் பிறவிகளிலும்
அன்னம், தண்ணீர்,இருப்பிடம் எல்லாம்

நலமாக அமைய இறைவனைப் 
பிரார்த்திக்கிறேன்.

8 comments:

ஸ்ரீராம். said...

ஓ... அன்புத்தம்பிக்கு இன்று பிறந்த நாளா? குறும்படம் சற்றே நெகிழ்வு.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம்.
ஆமாம் சின்னத் தம்பிக்குப் பிறந்த நாள்.

இந்தப் படம் எனக்கு மிகவும் பிடித்தது.
நன்றாக எடுத்திருக்கிறார்கள்.நன்றி மா.

கோமதி அரசு said...

மிக அருமையான குறும்படம். சகோதர பாசம் அருமை.
உங்கள் அன்புத் தம்பி அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

அவர்கள் என்றும் அக்காவின் நினைவுகளில் வாழ்ந்து கொண்டு இருப்பார்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதி மா,
வாழ்க வளமுடன்,.

அவன் நினைவில் பதிவிடுகிறேன். வாழ்த்துகளுக்கு நன்றி.
எங்கிருந்தாலும் நலமாகத் தான் இருப்பான்.

Geetha Sambasivam said...

உங்கள் தம்பியும் உங்களை எங்கிருந்தாலும் நினைத்துக் கொண்டிருப்பார். வாழ்த்துகள். இன்னிக்கு எங்க பெண்ணிற்கும் பிறந்த நாள்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி அன்பு கீதாமா,.
அட! உங்கள் மகளுக்குமா.
என் அன்பும் ஆசிகளும் ,வாழ்த்துகளும்.

நானும் சொல்லி விடுகிறேன். அமோகமாக இருக்கணும்.

Thulasidharan V Thillaiakathu said...

உங்கள் தம்பியின் பிறந்தநாள் இன்று இல்லையா. அவர் உங்களை எப்போதும் நினைத்துக் கொண்டுதான் இருப்பார். இறைவனிடம் இருப்பதால் உங்களுக்காகப் பிரார்த்தித்துக் கொண்டும் இருப்பார்.

குறும்படம் நெகிழ்ச்சி.

துளசிதரன்

(அம்மா துளசி பதிவு அன்றே அனுப்பிவிட்டார் கருத்தை நான் தான் தாமதமாகப் போடுகிறேன்..சாரிம்மா - கீதா)

Thulasidharan V Thillaiakathu said...

உங்கள் பதிவுக்கு ஏற்ப படமும்

உங்கள் தம்பியின் அன்பு எப்போதும் இருக்கும் அம்மா.

படம் அக்காவும் தம்பியும் என்ன பாசம்...கடைசியில் தம்பியும் கையை கீழே இறக்குவது ...டச்சிங்க்...

கீதா

கதம்பம்

வல்லிசிம்ஹன் எல்லோரும் வளமாக வாழ வேண்டும் 2011  Trip in Swiss. அம்மாவின் குடும்பத்தினர் பயணங்களில் பதிந்த படம். நிலா அது வானத்தின் மேலே .அது...