Blog Archive

Sunday, September 26, 2021

மஹா பாரதக் கதைகள்..தர்மம் 2

வல்லிசிம்ஹன்


 · 
மஹாபாரத கிளை கதைகள்:
மஹாபாரதம் முழுவதும் கிளை கதைகளால் நிரம்பி வழிகிறது. "மார்கழி முடிந்தால் மழை ஏது. பாரதம் முடிந்தால் கதை ஏது" என்பது முது மொழி.
பாரதத்தில் எத்தனை மனிதர்கள் உள்ளனரோ அத்தனை பாரதங்கள் உலவுகின்றன.
நிறைய கதைகள் செவி வழியாய் அடுத்தடுத்த தலை முறைக்கு அனுப்ப படுகின்றன. அப்படி என்னை வந்தடைந்த மூன்று கதைகள் இங்கே.
முதியவர் ஒருவர் நடந்து செல்கிறார். நண்பகல் பொழுது.. களைப்பால் தொடர்ந்து நடக்க முடியாத நிலை. எதிரே துரியோதனன் வருகிறான். முதியவர் துரியோதனனிடம் தனக்கு உண்ண ஏதாவது தர கேட்கிறார். உணர்வு விடுபட்ட நிலை முதியவர்க்கு. துடியோதணன் அவரிடம் அருகில் இருந்த உணவு விடுதியை சுட்டிக்காட்டி வயிறார உணவுண்டு செல்ல சொல்கிறான். ஆனால் முதியவர்க்கோ எழுந்து நடக்க முடியாத நிலை.
துரியோதனன் புறப்பட்ட சிறிது நேரத்தில் ஒரு ரதம் வருகிறது. முதியவர் தன் சக்தி அனைத்தும் திரட்டி தன் நிலையை உணர்த்த முற்படுகிறார். கீழே இறங்கிய அந்த மனிதன் முதியவரின் நிலையை நன்கு அறிகிறான். தன் ரதம் தனில் தொங்கிய சில கனிகளை முதியவர்க்கு புகட்டுகிறான். சில இளநீர் குலைகள் அலங்காரமாக ரதமோடு வருகின்றன. அவற்றையும் எடுத்து புகட்டுகிறான். முதிய மனிதர் களைப்பு விடை பெற்றவராய் நீங்கள் கர்ணன் தானே என வினவுகிறான். தற்போது முன் சென்ற பாவி உணவிடும் இடத்தை சுட்டிசென்றதாய் வருந்துகிறார் . கர்ணன் தலை அசைத்த படியே நீங்கள் மெதுவாக உணவு விடுதிக்கு சென்று உணவருந்தி செல்லுங்கள் என கூறுகிறான். முதியவர் தன் களைப்பு நீங்கியதை சொல்லி பயணத்தை தொடர்கிறார். உதவி எப்படி இருக்க வேண்டும் என்பதை இதை கொண்டே நாம் உணரலாம்.
இன்னுமொரு புனைவு
அர்ஜுனனுக்கு பல நாட்களாய் ஒரு சந்தேகம். எல்லோரும் கர்ணனை பெரும் வள்ளலாய் கொண்டாடுகிறார்களே என்பதே. உண்மையில் நம்மை விட கர்ணன் ஒரு போதும் பெரும் வள்ளல் அல்ல என்பது அவன் எண்ணம். தன் கருத்தை கிருஷ்ணனிடம் பகிர்ந்து கொண்டான். கிருஷ்ணா, எல்லோரும் ஏன் கர்ணனை மட்டும் இப்படி வள்ளலாய் கொண்டாடுகிறார்கள். நான் எதில் குறைந்து போனேன்? என்னை அப்படி யாரும் சொல்லவில்லையே என வருந்தினான். கண்ணனும் தனக்கே உரித்தான தனி புன்னகையோடு நாளை உங்கள் இருவரில் யார் வள்ளல் என்பதை நிருபிக்கிறேன் என்று புறப்பட்டான்.
அடுத்த நாள் உதயத்தில் கண்ணன் தனது சக்தியால் இரண்டு தங்க மலைகளை உருவாக்குகிறான். கர்ணனையும் அர்ஜுனனையும் அழைத்து இவை உங்கள் சொத்து என சொல்லி புறப்படுகிறான். இருவர்க்கும் ஒரு நிபந்தனை..
அந்த நாளின் முடிவில் இருவரும் தங்களுக்கு அளிக்கப்பட்ட தங்க மலைகளை தானம் செய்ய வேண்டும் .
அர்ஜுனன் தன் காரியத்தில் கண்ணானான். வருகின்ற வறியவர் அனைவர்க்கும் தங்க மலைகளை வெட்டி வெட்டி அளித்தபடியிருந்
தான். அந்த நாளும் முடிவுக்கு வருகிறது. அர்ஜுனனுக்கு ஒரே பெருமை. அந்த மலையில் குடைந்து நிறைய தங்கத்தை வெட்டி தந்திருந்தான். கர்ணன் ஒருபோதும் இவ்வளவு மலையை தானமாக தந்திருக்க முடியாது எனும் அசைக்கமுடியாத நம்பிக்கை.
அந்த தருணத்தில் கிருஷ்ணனும் அர்ஜுனனை காண வந்துவிட்டார். அர்ஜுனனும் நிறைய பெருமிதத்தோடு தான் அன்று தானம் செய்த மலை பகுதியை சுட்டி காண்பித்தான். ஆனால் கிருஷ்ணன் கர்ணன் வென்று விட்டதை குறிப்பிட்டார். அர்ஜுனனால் நம்பமுடியவில்லை .
காரணத்தை கிருஷ்ணனிடமே கேட்டான். கர்ணன் எவ்விதமாய் தானமளித்தான் என்பது அவனுள் எழுந்த முதல் வினா..
கிருஷ்ணன் அதித புன்னகையோடு பதில் சொன்னான். இன்று காலை உன்னை போல் கர்ணனுக்கு ஒரு மலையை கொடுத்தேன். அவனிடம் ஒரு மனிதன் யாசித்து வந்தான். கர்ணனும் அந்த மலையை சுட்டி காட்டி இந்த மலையை வைத்துக்கொள் என தன் வழியே அடுத்த காரியத்துக்கு புறப்பட்டு விட்டான். கர்ணனின் தான நிகழ்வு காலையிலேயே முடிவுக்கு வந்து விட்டதாய் சொன்னான். அதன் பின் அர்ஜுனனுக்கு தான் பேச்சு எழவில்லை.



23 comments:

Yaathoramani.blogspot.com said...

அற்புதமான கதைகள்..பகிர்ந்தமைக்கு வாழ்த்துகள்..

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

பதிவு அருமை. தர்மம் பற்றிய செவிவழி கதைகளாகிய இப்பதிவில் முதல் கதை படித்ததில்லை. இரண்டாவது படித்திருக்கிறேன்.கர்ணனின் தான தர்மங்கள் அளவிட முடியாதுதானே...! ஒருவர் எதையாவது கேட்டவுடன் பிறர் அதை உடனே தந்து விட்டால்,கர்ணனின் பெயரை முன்னிறுத்திதானே கொடுத்தவரை புகழ்கிறோம்.கர்ணனின் புகழ் இந்த பாரதம் உள்ளவரை மங்காதது.கர்ணன் படப்பாடலும் பலமுறை கேட்டு ரசித்தவை. சிவாஜியின் சிறந்த நடிப்புடன் கூடிய அந்தப் படமும்,படத்தின் பாடல்களும் மறக்க முடியாதவை. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

வல்லிசிம்ஹன் said...

கருத்துக்கு மிக நன்றி திரு .ரமணி.

ஸ்ரீராம். said...

மகாபாரதம் இயல்பான மனிதர்களை இயல்புடனேயே  காட்டுகிறது.  கர்ணன் துரியோதனன் தீயவர்கள் என்று சொல்லப்பட்டாலும் அவர்களிடம் இருக்கும் நல்லவைகளையும் பட்டியலிடுகிறது.  நல்லவர்களாக கண்ணன், தர்மர், அர்ஜுனன் செய்யும் அதர்மங்களையும் சொல்லிச் செல்லும்.  அருமையான கதைகள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கமலாமா,

நலமுடன் இருங்கள் அம்மா.

ஐய்யத்துக்கே இடமில்லாமல் கொடை வள்ளலாக
விளங்கினவன் தான் கர்ணன்.
வட இந்திய கதைகளில் இவ்வளவு
கொண்டாடப் படவில்லை என்று தோன்றுகிறது.

நம் கடையேழு வள்ளல்கள் போலவே
அதற்கு மேல் கர்ணன் கொண்டாடப் படுகிறான்.

அந்தப்படம் சிவாஜி அவர்களின் நடிப்பால்
கர்ணன் உயர்ந்தான்.
இசை,நடிப்பு, கதை அமைப்பு படத்தின் வெற்றிக்குக்
காரணங்கள்.
உங்களுடைய புரிதல் எப்பொழுதும்போல் அதிசயிக்க வைக்கிறது மா.

Thulasidharan V Thillaiakathu said...

கதைகள் அருமையான கதைகள்.

கர்ணனின் கொடை எவ்வளவு பேசப்பட்டாலும் பாவம் இல்லையா அவன்...அம்மாவால் துறக்கப்பட்டு எவ்வளவு அவமானங்கள்...வலிகள் வேதனைகள்...

மற்ற பாத்திரங்களை விட அதில் நிறைய மனோதத்துவங்கள் இருக்கிறது. அடுத்து சில பாத்திரங்கள்.

//அந்த நாளின் முடிவில் இருவரும் தங்களுக்கு அளிக்கப்பட்ட தங்க மலைகளை தானம் செய்ய வேண்டும் .//

ஆஹா அப்ப ஒரு ரஜனி படத்தின் கதைக்கு இதுதான் கதைக் கருவோ...அது என்ன படம் என்று பெயர் டக்கென்று நினைவுக்கு வரவில்லை அம்மா

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

இதுவரை அறியாத கதைகள்.

ஆனால் கருத்துள்ள கதைகள்.

துளசிதரன்

Geetha Sambasivam said...

எல்லாமே கேட்ட கதைகள் என்றாலும் மீண்டும் படிக்கச் சுவை. எல்லாமே அருமை. கர்ணன் கொடையாளி என்றாலும் எதுவும் அவன் சுயமாய் சம்பாதித்ததில் இருந்து கொடுக்கவில்லை. எல்லாம் துரியோதனன் கொடுத்தது தானே அவனுக்கு! இங்கே தமிழ்நாட்டில் தான் கர்ணன் கதாநாயகன்! கொண்டாடுவது எல்லாம். பொதுவாய் இங்கே அனைவருக்கும் ஆன்டி ஹீரோயிசமே பிடிக்கிறது. ஆகவே ராவணன், கர்ணன் ஆகியோரை எல்லாம் கொண்டாடுகிறார்கள். இங்குள்ள மனோநிலை அப்படி. ஆனால் தமிழ்நாட்டைத் தவிர்த்த மற்ற மாநிலங்களில் இப்படி இல்லை.

Geetha Sambasivam said...

என்னவோ என்னால் கர்ணனை ஓர் வள்ளலாக ஏற்க முடியவில்லை. மன்னித்துக்கொள்ளுங்கள். கர்ணன் படமும் பார்த்திருக்கேன். அருமையான படப்பிடிப்பு, ஒளிப்பதிவு. பின்னாட்களில் டிஜிடலில் கூட வந்திருந்ததே!

கோமதி அரசு said...

கதையும், பாடலும் அருமை.

//"மார்கழி முடிந்தால் மழை ஏது. பாரதம் முடிந்தால் கதை ஏது" என்பது முது மொழி.//

முது மொழி பாட்டி சொல்லி கேட்டு இருக்கிறேன்.

மூன்று கதைகளும் அருமை.


வல்லிசிம்ஹன் said...

அன்பின் சின்ன கீதாமா,
பலப்பல குணங்களை வர்ணிப்பது
மஹாபாரதம்.
அந்தப் பாத்திரம் முன்னணிக்கு வந்தது
தமிழில் எழுதப்பட்ட கதைகளும், தொலைக் காட்சியில் காண்பிக்கப் பட்ட மஹாபாரத்தும் தான்.

நாம் ஏற்கனவே மனதில் உருவகப் படுத்தி இருந்த
ராஜாஜியின் பாத்திரங்களும், வட இந்திய காவியங்களிலிருந்தும் ஒரு கலப்படத்தை
திரையில் கண்டோம்.
நம் வாழ்க்கையிலேயே பல கர்ணன் போன்ற
பாதிக்கப் பட்ட பாத்திரங்களை
மனதில் கண்முன் நிறுத்த இவை வழி செய்தன
என்று என் சிந்தனை ஓடுகிறது.
கீழே கீதா சாம்பசிவம் சொல்லி இருப்பது
போல கர்ணன் அதமனாக நடந்து கொண்ட
காலங்களும் உண்டு.
இந்தத் தர்ம வள்ளல் பட்டம் அந்தப் பாத்திரத்துக்குக் கட்டப்
பட்ட ஒரு பட்டு வஸ்திரம்.
ஒரு சபிக்கப் பட்ட ஜீவனாக வாழ்ந்து மறைந்தான்.

சிவாஜி வழியாக கர்ணனுக்கு கிரீடம் சூட்டப்பட்டக்
காலம் நமக்கு வேற பிம்பத்தைக் காண்பித்தது.

அனைவரையும் போற்றும் சரித்திரம்
உருவானது.நன்றி கண்ணா.
நாம் யாருமே முழுமை பெற்றவர்கள் இல்லை
என்பதே உண்மை.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஸ்ரீராம்,
ஆமாம் பா.
யாரிடம் தவறு இல்லை. நாமே ஒரு பிம்பத்தை உருவாக்கிக் கொள்கிறோம்.
அப்படி இல்லை என்று சொல்வதற்கே அவர்களின் கதைகள்
உள்ளபடி சொல்லப் படுகின்றன.

பாரதப் போரின் போது அத்தனை பிம்பங்களும் உடைகின்றன.
All is well in Love and War'

இதுதான் நாம் அறியப் பெறுவது.
எல்லாக் கேரக்டர்களும் ஏதோ ஒரு விதத்தில்
அதர்ம வழியில் சென்று விடுகிறார்கள்.

அபிமன்யு ஒருவனே நின்று போர் புரிந்து
உயிர்த்தியாகம் செய்கிறான்.

மற்ற எல்லோரும் பீஷ்மர் உள்பட ஏதோ ஒரு
பாபத்தில் சிக்கிக் கொள்கிறார்கள்.
உங்கள் பின்னூட்டம் என்னை விரிவாகச் சிந்திக்க வைத்தது. மிக மிக
நன்றி மா.நலமுடன் இருங்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் @துளசிதரன்,
இவைகள் எல்லாமே செவி வழிக் கதைகள்.
கர்ணம் என்றாலே
செவி தானே!!
நல்லதை மட்டுமே எடுத்துக் கொள்வோம். மிக மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

ஆஹா அப்ப ஒரு ரஜனி படத்தின் கதைக்கு இதுதான் கதைக் கருவோ...அது என்ன படம் என்று பெயர் டக்கென்று நினைவுக்கு வரவில்லை அம்மா"""
Dear Geetha rangan, Maybe Padaiyappa?

வல்லிசிம்ஹன் said...

"பொதுவாய் இங்கே அனைவருக்கும் ஆன்டி ஹீரோயிசமே பிடிக்கிறது. ஆகவே ராவணன், கர்ணன் ஆகியோரை எல்லாம் கொண்டாடுகிறார்கள். இங்குள்ள மனோநிலை அப்படி. ஆனால் தமிழ்நாட்டைத் தவிர்த்த மற்ற மாநிலங்களில் இப்படி இல்லை."


உண்மைதான்.
ஒரு கர்ணன் படம் வந்தது. கர்ண வழிக் கதைகள் உச்சியில் சென்றன.

எல்லாருக்கும் ஒரு கெட்டவன் இமேஜை உடைக்க
ஒரு படம் தேவைப்பட்டது போல.

நடிகர் மனோஹரின் லங்கேஸ்வரன் நாடகம் மாதிரி!!
உண்மையான இதிஹாச, புராணங்களை அறிந்தவர்கள்
இருப்பதை இருப்பது போலச் சொல்வார்கள்.

கட்டுக் கதைகளுக்கு அங்கே இடம் கிடையாது.
இனிப்பையே சாப்பிடாமல் கொஞ்சம் கசப்பு காரம் சேர்ப்பது
போல வேற்றுச் சுவையுடன் படைக்கப்
பட்டன சினிமாக்கள்.

1960 களில் வரத் தொடங்கிய ஆண்ட்டி ஹீரோ
கதைகள் ,அவர்கள் மேல் பரிதாபப் பட வைத்துப்
பணம் சம்பாதித்தன.
தர்மன் சூதாடியது, துரியோதன,சகுனி,கர்ணனின்
சதிகள், பாஞ்சாலியின் சபதம் எல்லாமே
மனிதர்களின் மனித விகாரங்கள்.
மண்ணாசையால் விளைந்த விபரீதங்கள்.
நாம் கற்க வேண்டிய நீதிகளை
அடிக்கோடிட்டு காண்பிக்கும் போது
அந்தத் தவறை நாம் செய்யாமல் இருக்க வேண்டும் என்று அப்பா
சொல்வார்.

நாமும் அந்த வழியிலே செல்கிறோம்.
சிந்திக்க வைத்ததற்கு மிக நன்றி கீதாமா.




வல்லிசிம்ஹன் said...

என்னவோ என்னால் கர்ணனை ஓர் வள்ளலாக ஏற்க முடியவில்லை. மன்னித்துக்கொள்ளுங்கள். கர்ணன் படமும் பார்த்திருக்கேன். அருமையான படப்பிடிப்பு, ஒளிப்பதிவு. பின்னாட்களில் டிஜிடலில் கூட வந்திருந்ததே!"


அடடா!! என்ன கீதாமா.
வெறும் இணையத்தில் கண்டதை இங்கே
பதிகிறேன். அவ்வளவுதான்.

இந்த மஹாலய பக்ஷத்தில் கண்ணில் பட்ட
நல்ல சிந்தனைகளைப் பதிய எண்ணம்.
மற்றவைகள் நிறைய கண்ணில் படுகிறதே!!!
மன்னித்தல் எல்லாம் பெரிய வார்த்தை மா.
வாபஸ் வாங்கிக் கொள்ளுங்கள்:))

வல்லிசிம்ஹன் said...

மூன்று கதைகளும் அருமை."


அன்பின் கோமதி மா,
எல்லாமே இணைய வழிக் கதைகள் தான்.
நல்லதைப் பதியலாம் என்ற எண்ணம்.
வந்து கருத்து சொன்னதற்கு மிக நன்றி மா.
வாழ்க வளமுடன்.


பாட்டி சொல்வாரா!!!
நான் கேட்டதே இல்லைமா.
மிக நன்றி.

Geetha Sambasivam said...

ரஜினி நடிச்ச "தளபதி" படம் கர்ணன் கதையின் தழுவல்/தற்காலச் சூழ்நிலைக்கு ஏற்ப எடுக்கப்பட்டது என்பார்கள் ரேவதி. மமூட்டி தான் துரியோதனன். ரஜினி தாயால் கைவிடப் பட்ட பிள்ளை/கர்ணன். :)))))) நான் படம் பார்க்கவில்லை. ஆனால் நிறைய விமரிசனங்கள் படிச்சிருக்கேன்.

வல்லிசிம்ஹன் said...

ஓஹோ:)))) கீதாமா!!!
ஆமாம். ரஜினி அடிக்கடி சொல்வாரே. ''எங்க அம்மா என்னைத் தூக்கி
எறிஞ்சுட்டா":)
மணிரத்னம் படம் எல்லாம் ஏதாவது
ஒரு இதிகாசத்தை உல்டா செய்துதான் செய்திருப்பார்.

அக்னி நட்சத்திரம் கூட அந்த மாதிரி தான். ஹாஹ்ஹா.

ஸ்ரீராம். said...

கர்ணனின் உல்ட்டா இரண்டு படங்கள்.  ஒன்று தளபதி.  இன்னொன்று பட்டாக்கத்தி பைரவன்!

Geetha Sambasivam said...

அட? அக்னி நக்ஷத்திரமுமா? படம் பார்த்திருக்கேன். ஆனால் எந்த இதிஹாசக்கதை என்பது புரியலையே?

வல்லிசிம்ஹன் said...

Sriram,
இனிமேலாவது இதிகாசங்களைச் சும்மா விடட்டும்:)

வல்லிசிம்ஹன் said...

கீதாமா,
எனக்குச் சட்டென்று நினைவுக்கு வரவில்லை.

அப்போது வந்த விகடன் விமரிசனத்தில் இருந்தது.
rich boy poor boy syndrome.நு மேற்கோள் காட்டி எழுதி இருந்தார்கள்.
மறந்து போகிறது .