Blog Archive

Sunday, June 29, 2008

துபாயைச் சுற்றி...உலாவி,வம்பு பிடித்து















இன்னொமொரு வீகெண்ட் முடிந்தது.

வெள்ளி காலை, வீட்டுக்கு வெளியே இருக்கும் வராந்தா,வழிப்பாதையில் இருந்த(நான்கு ஐந்து ஃபயர் அலார்ம் இருக்கு)


மணி விடாமல் ஒலித்தது. நான் வந்த பிறகு இவ்வாறு ஒலிப்பது இது நாலாவது தடவை. நாந்தான் அவசர அவசரமாக வெளியே வருவேன். காரிடார் நிசப்தமாக இருக்கும்.


இந்த அமைப்பு எனக்குப் புரியவில்லை. ஏன் ஒருத்தருக்கும் பயம் கிடையாதா என்று இங்கே கேட்டால், அது அலார்ம் சரியில்லைம்மா என்கிறார்கள்.
அப்புறம் தெரிந்தது,யாரோ ஒருத்தர் , வெளி ஆள் புகைபிடித்திருக்கிறார் என்று.

அப்ப உண்மையாவே ஏதாவது நெருக்கடி வந்தால்(வராம இருக்கணும் சாமி)

மெத்தனமாகவே இருந்து விடுவார்களா:(



இந்த பில்டிங்கில் தமிழ்க்காரர்கள் 4 பேர் இருப்பார்கள் . மற்றவரெல்லாம் ஐரோப்பியர்கள்,மற்றும் அண்டை நாட்டவர்கள்.

பகல் இரவென்று வேலைக்குப் போய் வருபவர்கள், பூட்ஸ் சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கும்.

மத்தபடி அமைதியான இடம்தான். பக்கத்து வீட்டுகாரர் கூட ராத்திரி 11 மணிக்கு ட்ரில்லிங் செய்வதை நிறுத்தி விட்டார்:)


அவர் பைலட்டாக வேலை செய்பவர். அவருக்கு விமானம் ஓட்டும் போது விதவித உத்திகள் தோன்றுமாம்:).அப்படியே நினைவில் பதிந்து கொண்டு வருகிற வழியில் ரெண்டு கட்டை வாங்கிக் கொண்டு வந்து விடுவார்.


சரியாக என் தலைப் பக்கம் ,

அவங்க வீட்டுச் சுவற்றின் பக்கத்தில் 10 மணிக்கு நான் தூங்கும் நேரம்,சரியாகப் பார்த்து அந்த வண்டு செய்யும்ரீங்காரம் மாதிரி சவுண்டு ஆரம்பிக்கும்.
எனக்குக் ( கனவில்) பெருச்சாளி பக்கத்தில் உட்கார்ந்து பிராண்டுவது போல
கற்பனை தோன்றும்.

அப்புறம் கட்டிடக் காவலுக்கு இருப்பவரிடம் சொல்லி ஒரு மாதிரி அதைச் சமாளித்தோம்.
இப்படியாகத் தானே ஊரை விட்டுக் கிளம்ப இன்னும் இரண்டே வாரம் இருக்கும் இந்த சமயத்தில் திடீரென நாலாவது அபார்ட்மெண்டில் இருக்கும்
ஒரு எகிப்து நாட்டுப் பெண் வந்து கதவைத் தட்டினாள். அவளையும் அவள் குழந்தையையும் மாடியில் நீச்சல் குளத்தருகே பார்த்த ஞாபகம்.
மொழி தெரியாததால் புன்னகையோடு நிறுத்திக் கொள்வேன்.
இந்த மதிய வேளையில் என்ன பிரச்சினையோ தெரியலையே என்று எனக்கு யோசனை.
குழந்தையும் கூட இருந்தது. அவள் சொன்ன அரை குறை இந்தியின் விஷயம் இதுதான்.
அவர்கள் வீட்டில் வேலை செய்யும் குணா திடீரென்று தன் கையில்
வைத்து இருந்த பாத்திரத்தை விட்டெறிந்து விட்டாளாம்.
பெருக்கும் துடப்பத்தையும் தூக்கிப் போட்டு விட்டாளாம். கத்த வேறு செய்கிறாளாம்.
என்னவென்று விசாரிக்க எங்க மருமகளைக் கூப்பிட வந்திருக்கிறாள்.
நான் பாப்பாவைப் பார்த்துக்கிறேன் ,நீ என்னவென்று விசாரித்துவிட்டு வா,
எதுக்கும் தள்ளி நின்னே பேசும்மான்னு சொல்லி அனுப்பினேன்.
நிறைய இடங்களில் வீட்டு வேலை செய்பவள் அந்த குணா என்கிற பெண்.
நல்ல சம்பளம். நாலைந்து பெண்களோடு வில்லா எனப்படும் குடி இருப்பில் இருப்பவள்.ஆனால் கொஞ்சம் முரடு.
கறார் ஆசாமி.
மருமகள் போய்விட்டு வந்து சொன்ன கதை இதுதான்.
நாலாம் வீட்டுக்கு ப் பெற்றோர்கள் வந்திருப்பதால் வேலை அதிகரித்து விட்டது.
அதற்காகப் பணம் கூடுதலாகத் தரச் சொல்லி கேட்டிருக்கிறாள் குணா.
''சரோஜா பாத்திரம் நிக்காலோ'' அப்டீன்னு சொல்கிறதாக நினைத்துக் கொண்டு மாமியார்க்காரி இன்னும் நிறைய பாத்திரங்களை, அலமாரியில் இருந்து எடுத்துப் போட்டு இருக்கிறாள்:)
''இத்னா பஹுத் காம்!!, ஹம்
'அவுர் குச் பைசா ,800 டிர்ஹம் சாஹ்தி ஹூம்''னு அவள் சொன்னதை
அந்த அம்மா புரிந்து கொள்ளாமல் இன்னும் வேலை கொடுக்க இவளுக்குக் கோபம் வந்து கையிலிருந்ததை விட்டெறிந்ததும்.
மாமியாரும்,மாமனாரும் வெளியே வந்துவிட்டார்கள்:)
குணாவின் ஹிந்தி என் ஹிந்தியைவிட மோசம். அவள் அரபி, இந்தி கலந்து பேசுவாள்.
அவர்கள் புரிதலோ அதைவிட மோசம்.
நாளைக்குத்தான் தெரியும் குணா மறுபடி வேலைக்கு வருவாளா என்று 30ஆம் தேதியாச்சே. சம்பள நாள்.
தற்போது மெயிட்ஸ் மாநாடு லிஃப்ட் பக்கத்தில் நடக்கிறது. என்ன ஆகிறது என்று பார்க்கலாம்.!!






Posted by Picasa

Tuesday, June 17, 2008

கண்ணே என் கண்மணியே கண்ணம்மா தாலேலோ

எப்பவோ ஜன்மங்கள் முன்னால் தூளியில் ஆடிய நினைவு உண்டு. அதுவும் மாமா' சின்னஞ்சிறு கிளியே பாடு





என்று சொன்ன நினைவும் இருப்பதால்,கொஞ்சம் இரண்டு வயதாவது ஆகியிருக்கும் என்று நினைக்கிறேன்



அதற்கப்புறம் எங்க குழந்தைகளுக்குத் தூளியெல்லாம் பழக்கப் படுத்தவில்லை.
பெரியவனுக்காவது தொட்டில் இருந்தது. அடுத்தது ரெண்டும் தரைதான்..
எப்படியோ தூங்கி வளர்ந்து இப்ப அவர்கள் குழந்தைகள் காலத்தில் க்ரிப்தான்
முழக்கம்.
அது விளையாடுவதை விடத் தூக்கிக்கோ அழுகை,சிணுங்கல் நிறைய.:)
ஸ்விஸ்ல இருக்கிறது ஓடி ஓடிக்களைத்து அப்புறம் தூங்குகிறது. இங்க இருக்கிறதுக்கு பாட்டு போடணும்,இல்லாட்டா தள்ளுவண்டியில் போட்டு பாடிக் கொண்டே நடக்கணும்.
எனக்கு நல்ல பயிற்சி ஒத்துக்கறேன்.
ஆனால் சில பாட்டுக்குத்தான் தூக்கம் வரது அதுக்கு. எம். எஸ். அம்மா பாட்டுக்களிலியே டோலாயாம், க்ஷீராப்தி கன்யககு இரண்டு பாடல்களுக்கும் கொஞ்சம் எஃபெக்ட் உண்டு. நர்சரி ரைம்ஸ் போட்டால் கொட்ட கொட்ட விழிக்கிறது.
நீ மாட்டு தள்ளு நான் மாட்டுக் கேக்க்கறேன் என்கிற மாதிரி முகத்தில எக்ஸ்ப்ரஷன்.
அங்க சிகாகோல இருக்கிற பேரன் பாம்ம்பே சகோதரிகளின் அற்புதமேன்னு தொடங்குகிற பாட்டைப் போட்டால் தான் தூக்கம் வருகிறது என்று மழலையில் சொல்கிறான்.
இன்னோரு வாட்டி போடுன்னு ஆறு தடவை இன்னோரு வாட்டி போட்ட பிறகுதான் கண் சொக்க ஆரம்பிக்கும்.
அதுவரை அம்மாவோ அப்பாவோ தூக்கிக் கொண்டு நடக்கணும்.
இதுக்காகவே தூக்கம் ஏன் வரலைனு இணையத்துக்குப் போய்ப் பார்க்கிறாங்க.
அதிலேருந்து என்ன விஷயம் பார்க்கிறாங்களோ படிக்கிறாங்களொ கொஞ்சம் சமதானம் ஆகும்.
நாம சொல்றதெல்லாம்'இப்படித்தானிருக்கும் ஒண்ணரை வயசானா எல்லாம் செட்டில் ஆகிடும்'
என்று சொன்னால் 'அப்படியெல்லாம் விடமுடியாதும்மா.
எல்லாத்துக்கும் ஒரு காரணம் இருக்கும்.கண்டு பிடிக்கணும்.''
சரிம்மா,சரிப்பானு விட்டு விட வேண்டியதுதான்.
போதாக்குறைக்கு பேரண்டிங்.காம் வேற இருக்கா.
அதில என் பொண்ணு,பையன் ராத்திரி தூங்க மாட்டேங்கறது என்ன பண்ணலாம் அம்மான்னு வேற கேள்வி போடுவாங்க. அதில ஒரு திருமதி படேலோ,அகர்வாலோ, ராஜலக்ஷ்மியோ வந்து ரெண்டு மூணு யோஜனையைக் கொடுப்பாங்க.
தூங்கறத்துக்கு முன்னால கொஞ்சம் பால் கொடுங்க.
எட்டுமணிக்குத் தொட்டில்ல போட்டுட்டு வெளில வந்துடுங்கோ. அது அழுதாலும் எட்டிப் பார்க்ககூடாதுன்னு இப்படிப் போகும்.
இவங்க பாலும் கொடுப்பாங்க. தொட்டில்லயும் போடுவாங்க.
ஆனா முணுக்னு அது சிணுங்கறத்துக்கு முன்னால போய் நின்னுடுவாங்க.:)
மடியில் போட்டுத் தட்டினாத் தானே தூங்கிடும்.அதுக்கு என்ன வேணும். டயப்பர் காய்ஞ்சு இருக்கணும்.வயிறு ரொம்பி இருக்கணும், அவ்வளவுதானே. !!! வயித்துவலியும் இருக்கக் கூடாது, அது ரொம்ப முக்கியம்.
இரண்டு வயது வரை இப்படித்தான் இருக்கும்.அதுக்கு அப்புறம் வேற மாதிரி
பேச்சு,பழக்கம்,சாப்பாடு மாறியதும் அதுவும் சமர்த்தாயிடும்:)
நம்புவோம்.





Aggregated by Thenkoodu.com - Tamil Blogs Portal

Sunday, June 15, 2008

தந்தையர் தின வாழ்த்துகள்(டிஸ்கியும் சேர்த்து)



இந்தத் தந்தையர் தின வாழ்த்துகளில் கிட்டத்தட்ட ஐம்பது அப்பாக்களும் குழந்தைகளும் வந்துவிட்டார்கள்.
தொழில்நுட்பக் கோளாறு என்று நம் கொத்ஸ் கண்டுபிடிச்சி சொல்லிட்டாரு. அதில எப்பவும் போல என்று வேற குறிப்பிட்டு இருக்காரு:)
என்ன செய்யறது நான் ஒரு தடவை படம் போட்டா அது 50 தடவை வரும்னு தெரியாமப் போச்சு. :)
இந்தப் பதிவை டெலிட் செய்யவும் குப்பையில் போடவும் மனசில்லா.:)
அதனால் பொறுத்திருந்து படங்களை ஸ்க்ரோல் செய்யும்படித் தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளுகிறேன்.
அட ராமா. டிஸ்கியே பதிவாயிடிச்சே!!!!!!!!!

























































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































இணையத்தில் உலவிக் கொண்டிருக்கும் அத்தனை தந்தையர்களுக்கும்

















































அவர்களுடைய தந்தையருக்கும் இன்னும்

















































குடும்ப நலனுக்காகப்

















































பாடு பட்ட, உழைத்துக் கொண்டிருக்கும், பாப்பாக்களைக் கைகளில் வைத்துக் காப்பாற்றும் அருமை அன்பு அப்பாக்களுக்கும்



















































































































































இப்போது திருமணமாக அப்பாவாக மாறப் போகும் இளைஞர்களுக்கும்

















































எங்கள் அன்பு நிறைந்த வணக்கங்களும் வாழ்த்துகளும்.

Friday, June 13, 2008

வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ







மிக மிக நன்றாக சமைப்பவர்கள் மத்தியில், நீட்டோலை வாசியா நெடுமரம் நான்.


அவர்கள் பேசும்போதெல்லாம் கவனமாகக் கேட்டுக் கொண்டு,

வானொலியில் சொல்லும், ம.மலரில் வரும் குறிப்புகள் எல்லாம் எழுதி வைத்துக் கொண்டு சமைத்த காலங்கள் உண்டு.


அது எங்க குழந்தைகளின் போதாத காலம்.:)

சில அனுபவங்களுக்கு அப்புறம், ;அம்மா எனிதிங் நியூ ' அப்படீனு கேக்கிறதையே பெரியவன் விட்டு விட்டான்.

(அவ்வளவு பயம்)பசங்க அலறுகிற மாதிரி ஒரு மாங்காய் ஜாம் செய்து

இருந்தேன்.


இந்த சோகம் ஆரம்பித்தது ,முதல் முதலா எங்க வீட்டு மாமரத்தில மாங்காய் அபரிமிதமாகக் காய்த்த 1983 சித்திரை மாதம்.


ஊறுகாய் போட்டால் ஒத்துக்கொள்ளும்படி இருக்கும். சும்மா சொல்லக் கூடாது. நல்லா காரமா ,எண்ணையில் மிதக்கும் மாங்காய்த் துண்டுகளை அழகாக பாட்டில்களில் பாக் செய்து எல்லாருக்கும் கொடுத்திருக்கிறேன்.
அவர்கள் எல்லோருமே நல்லாத்தான் இருக்காங்க:)

அப்போ சென்னையில் ஹாப்பினஸ்னு ஒரு சாகலேட் பானம் நடமாடிக் கொண்டிருந்தது.

அந்த பாட்டில் கெட்டியாக இருக்கும். அதோட மூடியில் ஹாப்பினஸ் என்று வேறு எழுதி இருக்கும். செண்டிமெண்ட் ஆவும் இருக்கும்,பாட்டில் சேர்க்கிறத்துக்கு ஆசைப் பட்ட நாட்கள்.
பக்கத்துவீட்டு தீபக்கோட பாட்டி மொட்டை மாடியில் உலர்த்திய ஒரு சுவையான பண்டத்தைப் பார்த்தேன்.
அப்போ வத்தல் வடகம் போடுகிற நாட்கள். நான் ஜவ்வரிசியைப் பிழிய அந்தப் பாட்டி மாங்காய் வத்தல் போடுவதாக அறிவித்தார்.
ஓ நாங்க கூடப் போடுவோம்னு நான் சொல்ல அது இல்ல இது. இது தித்திப்பு மாங்காய் என்றாரே பார்க்கணும்.
ஓஹோ ஆம்சத் போல இருக்கு ,அதான் எனக்குத் தெரியுமேனு நான் சொல்ல அவருக்குக் கொஞ்சம் கோபம் வந்துவிட்டது. இதுல காரம் திதிப்பு எல்லாம் சப்குச் இருக்கும் என்றார். அவங்க வட நாட்டவங்க.
சரி இதையும் கேட்டுக்கலாம்னு என்ன விவரம்,செய்முறை சொல்லுங்க என்று பணிவோடு கேட்டதற்கு
அவங்க அசால்ட்டா மாங்காய்த் துண்டு எட்த்துக்கோ. உப்பு போடு
வெல்லம் போடு. மிளகாய்ப் பொடி போடு, காய வைச்சால் வத்தல் கிடைக்கும்னு சொன்னாங்க.
நமக்கு ஒண்ணு காரம் ஒண்ணு திதிப்பு அப்படிச் செய்தால் ஒழுங்கா வரும்.
அது இப்பத் தெரிகிறது.
அப்ப இளமைக்காலம் இல்லையா.
அசத்திட வேண்டியதுதான்னு எங்க வீட்டு மகாப் புளிப்பு மாங்காயைத் துண்டம் செய்தேன்.
உடனே அதில் உப்பு மிளகாய்ப் பொடி போட்டுப் பிசிறி வச்சாச்சு.
இனிமேல் வெல்லம் சேர்க்கணும்.
அங்கதான் சனிபகவான் லேசா எட்டிப் பார்த்துட்டார்.
சரிக்கு சரி வெல்லம் சேர்க்க சொன்னாங்களா, இல்ல பாதியா என்று கேட்க அடுத்த வீட்டு ஜன்னலைப் பார்த்தால் பூட்டி இருந்தது.
வாட்ச்மேன் அவங்க திருப்பதிக்குப் போயிட்டதாச் சொன்னார்.
அட ஆத்தோட போற மாமியாரேனு நினைத்துக் கொண்டு:)(இது வேற கதை)
சரி, நம்ம மாங்காயோ புளிப்பு. அதுக்கு வெல்லம் சரியாயில்லாட்டா
பசங்க சாப்பிடாதுன்னு,
வெல்லப் பாகா செய்து மாக்கய் மேல விட்டு விட்டால் பர்ஃபி மாதிரி செய்துடலாம்,
என்ற யோசனையில் வெல்லத்தை உருளியில் போட்டு
இளக்கி ,...
போன் அடித்ததா...
என்னன்னு கேட்டு வரதுக்குள்ள கெட்டிப் பாகு ஆகிவிட்டது.
அதன் தலையில் இன்னும் கொஞ்சம் தண்ணீர் தெளித்து மாங்காயை அதோடு சேர்த்தேன்.
நல்ல வாசனை வந்தது.
கொஞ்சமே கொஞ்சம் வினோத வாசனை:0)
ஆறின பிறகு வாணலியில் கிளறுவதற்காக ஒரு கரண்டியைப் போட்டேன்.
சுழற்ற வந்தது. அப்பாடி!! இறுகிப் போகவில்லை.
தாம்பாளத்தில் கொட்டி விட்டு வெயில்ல வச்சால் ஆச்சு, என்று தைரியமாக
மதியம் கல்லூரியிலிருந்து சாப்பிட வந்த பெரியவனிடம், எப்படிப்பா மாங்காய் வாசனை நல்லா இருக்கு இல்லையா என்றதும்,
ஏம்மா மாங்காய்ப்பச்சடி செய்தியா என்று ஆசையாக வாணலியைப் பார்த்தான்.
ஒரே கறுப்பா இருக்கேம்மா.என்றபடி கரண்டியை எடுக்கப் போனான்.
ஆறட்டும்பா. நான் சாப்பிட்டுப் பார்த்துட்டுச் சொல்றேன் என்று
நானும் கரண்டியில் கைவைத்தால் அது நகர்ந்தால் தானே:)
பயங்கரப் பாகு பிடித்துவிட்டது!!!
கொஞ்சம் சந்தேகமா இருந்ததால் ,எப்படியும் கரண்டியை வெளில எடுத்துடலாம் என்று மறுபடி அடுப்பில் ஏற்றினேன்..
சளக் ப்ளக் என்ற சத்தத்தோடு மாங்காய்த் துண்டுகள் வெல்லத்தோடு ஐக்கியமாகி விட்டன.
இன்னும் பாகு இறுகி கரண்டி,மாங்காய்,வாணலி எல்லாம் திரி மூர்த்தி சங்கமம் ஆகி,
அந்த அழகான கல்கத்தா வாணலியின் கதை முடிந்தது.
மாங்காயைப் பிரிக்க செய்த முயற்சிகள் தோல்வி அடைந்தன.
கொஞ்சம் வாயில் போட்டுப் பார்க்கலாம் என்று ஓரமாகக் கிடைத்த ஒரு சின்ன மாங்காய்த் துண்டை எடுத்து சுவைத்தால்...
அப்படியே தலைக்குப் போயிற்று காரம்.
கண்ணில தண்ணி வந்தாச்சு.
என்னைப் பார்த்துப் பெரியவனுக்கும், மகளுக்கும் சிரிப்புப் பொங்கியது.
''அம்மா ஸ்பெஷல் பாம் எல்லாம் தயாரிக்க வேண்டாம்.
இதை அனுப்பு. உன்னை டிஃபென்ஸில் சேர்த்துக் கொள்வார்கள்.
அணுகுண்டெல்லாம் எந்த மூலைக்கு எங்க அம்மா செய்த
மாங்கய்ப் பணியாரத்துக்கு முன்னால்" என்று
ஒரே ஆரவாரம்:)
அதனால் மக்களே இந்தக் கதையின் மூலம் உங்களுக்கு நான் சொல்ல வருவது,
வருமுன் காத்துக் கொள்ளுங்கள் என்றுதான்.
புதுசு புதுசாக சமைக்க நல்ல துணிச்சலும் விவேகமும் வேண்டும் அது என் கிட்ட இல்லை. ஒத்துக் கொள்கிறேன்:)






Monday, June 09, 2008

சிவாஜி வாயிலே ஜிலேபி(சங்கிலி,செயின்,கொத்ஸ்)



இணையத்தில எல்லாருக்கும் எழுதி எழுதி அலுத்துப் போயிட்டாங்களாம்.
அப்புறம் சில பேருக்கு மொக்கை(என் எழுத்து மாதிரி கிட்டத்தட்டன்னு வச்சுக்கலாமே)களாப் படிச்சு அழவாச்சி நிலைக்கு வந்துட்டாங்களாம்.
அதனால்
வெண்பா புலவர் கொத்ஸை அழைச்சு கொத்ஸு கொத்ஸு நீ
ஒரு செயினை எங்கிட்ட இருந்து வாங்கி இன்னும் மூணு பேரை
மாட்டி விடுவியாம். அவங்க அதை இன்னும் மூணு பேருக்குக் கொடுக்க அல்லாருக்கும் சங்கிலி சங்கிலிய ஜிலேபி சாப்பிட்ட மாதிரி இருக்குமாம்
அப்படீனு அட்வைஸ் செய்தாராம்.
நம்ம கொத்ஸ் தான் ராத்திரி தூங்கறது இல்லையே :) யோசிச்சு உடனடியா ஆறிப்போன ஜிலேபி பதிவை சூடு செய்து ஆவசர அவசரமா வாயில போட்டுகிட்டு,
இன்னும் புதிசா ஜிலேபி சுத்துங்கனு என்னையும் இன்னும் ரெண்டு பேரையும் சங்கிலில கொண்டாந்துட்டாரா.
இப்ப நாம இன்னும் மூணு பேரைத் தேடணுமா.
நமக்கோ சிவாஜியை ரொம்பப் பிடிக்கும்.அதுக்கு மேல ஜிலேபியை இன்னும் பிடிக்கும்.
ஒருத்தரைப் பார்க்க முடியாது. அமரர் உலகத்துக்குப் போனா நடக்கும் . இப்ப சத்திக்குப் போறதா இல்லை:)
ஜிலேபியோ சரவணபவன்ல பார்த்ததோட சரி.
ஹ்ம்ம். அந்த ஜிலேபியத்தான் என்ன லாவகமா சுத்தறாரு அந்த மனுஷன்.
ஒரு வேளை ரீல் மாஸ்டரா இருந்திருப்பாரோ.
ரீலோ ரியலோ நமக்கென்னவோ அது கிடையாதுன்னு ஆகிப் போச்சு.
என் கண்ணு முன்னால ஒரு பொட்டி நிறைய ஜிலேபி அன்னிக்கு யாரோ வீட்டில கொண்டு வந்து வச்சாங்க.
பொட்டியைத் தொட்டிருப்பேனா.
இல்லையே!!! அடுத்த நாள் கார்த்தால வெள்ளிக்கிழமை, பையனும் அப்பாவுமா ஒரே நேரத்தில சமையலறையிலே நுழைந்து,
அடடா இந்த டப்பாவை யாரு திறந்ததுனு ஒருத்தரைச் சந்தேகமாகப் பார்த்துக் கொண்டார்கள்.
நான் இல்லை நீயா என்று கேட்டுக் கொண்டே என் பக்கம் திரும்பினார்கள். 'இதென்னடா வம்பாப் போச்சே, நான் தான் ஸ்வீட் பக்கமே திரும்பறதில்லையே' னு நான் கடுகு கொட்டப் போனேன்.
அதென்னம்மா ஒரு சின்ன பீஸ் உடைஞ்சிருக்கு ,மிச்சதெல்லாம் அப்படியே இருக்கு. போனாப் போறது, முழுசாவே எடுத்துக்கோ' என்று ஒரு ஜிலேபியை நீட்டினான் பையன்.
வேண்டாம் பாபு. இதைச் சாப்பிடுவானேன்,அப்புறம் அவஸ்தைப்படுவானேன்.
எல்லாம் தொண்டைக்குக்கீழே போனா ஒண்ணுமில்ல' என்று விரக்தியின் முழு அடையாளமாகச் சொல்லிவிட்டேன்.
அதான் முதல் நாளே பாதிக்கு மேல சாப்பிட்டாகிவிட்டது. எதற்கு இரண்டாம் பரிசோதனை என்று நான் இருந்தது அவர்களுக்குத் தெரிய நியாயமில்லை.!!!!!
இனி, மேற்கொண்டு சிவாஜியையும் ஜிலேபியையும் கனெக்ட் செய்யத் தெரியலை.
அதனால அவர் நடிச்ச சவாலே சமாளி படம் போட்டு விட்டேன்.:)
இந்தச் சங்கிலியைத் தொடர நான் அழைக்க நினைக்கும் மூன்று பதிவாளர்கள்,
(அவர்களை இதற்கும் முந்திக்கொண்டு வேறு யாரும் அழைக்காமல் இருக்கணுமே)
நினைத்தாலே கொசுவத்தி கொளுத்தி வாசம் கமழ வைக்கும் துளசி,
துளசிகோபால்
இரண்டாவது நானானி. சமையல்ல மும்முரமா இருந்தாலும்
பதிவு போட்டுடுங்க:)
ப்ளீஸ்பா கட்டாயம், தொடருங்க.
மூணாவதாக நான் கூப்பிடுவது
ராமலக்ஷ்மி.
அருமையா எழுதிடுவாங்க. கவலையே இல்லை.
நீங்களும் அழைப்பை ஏற்று ஜிலேபி செய்ய வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறேன்.
திடீர் தலைப்புல எல்லாம் நாம ரொம்ப கெட்டினு சொல்ல முடியாது.ஏதோ சொன்னதைச் செய்யும் வழக்கம் இருக்கிறதனால எழுதிட்டேன்.
கொத்ஸ் சார் சரியா:)

Saturday, June 07, 2008

எலுமிச்சைப்புல்லும் க்ளீன் களியும் லெட் களியும்














வியாழக்கிழமை வந்தால் இங்கே இருப்பவர்களின் முகத்தைப் பார்க்கவேண்டுமே.:)

ஒரே மகிழ்ச்சி.

ரேடியோவில் மகிழ்ச்சி. தெருக்களில் கூட்டம்.வெய்யிலோ,காற்றோ

வெக்கையோ, வெறும் ஃபலாபல்தான் சாப்பிடுவார்களோ இல்லை ஏழு நட்சத்திர விடுதிகளுக்குத் தான் போவார்களோ


கோவிலில் தான் கூடுவார்களோ ,ஆகக்கூடி வீட்டில் இருக்க மாட்டார்கள். இருந்தால் கட்டாயம் வீடியோக் காட்சிகள் உண்டு.


வார இறுதியாயிற்றே.!

இன்னும் கொஞ்ச நாட்கள் போனால் வீதிகளில் நடக்கக் கூட முடியாமல் அனல் வீசும். இப்போதைக்கு நடக்கட்டும் என்று கங்கணம் கட்டியது போல ஒரே கலகலாதான்.


அப்படி ஒரு வெள்ளிக்கிழமை ஒரு உணவு விடுதிக்கு நாங்களும் போனோம்.

அது ஒரு தாய் உணவகம்.


எனக்குக் கொஞ்சம் தயக்கம்தான்.

பாங்காக் போனவர்கள் பேச்சைக் கேட்டதிலிருந்து அவர்கள் உணவு மீது கொஞ்சம் பயம்.

(அய்ய, இன்னோரு பயமா)


மகனுக்கும் மருமகளுக்கும் தாய் உணவு மிக விருப்பம்.' சைவம்தான்மா,

கேட்டு வாங்கிச் சாப்பிடலாம். ரொம்ப ஆரோக்கியமாக ,எளிதில் ஜீரணம் ஆகிடும்.ம்ம்ம்ம்.


நாமதான் சந்தேகப் பாற்கடல் ஆச்சே:(


அப்பா ஏற்கனவே உங்க தம்பி ஊரில் ஏமாற இருந்தேன். கடல் வாழைக்காயைக் கொடுத்து விடப்போகிறார்கள் என்று சொல்லிக் கொண்டே இந்த ''எலுமிச்சைபுல்'' கடைக்குள் நுழைந்தோம்.
நாசியைத் துளைக்கு ஏதோ ஒரு அவ்வளவாகச் சுகமில்லாத வாசம்.
அபௌட் டர்ன் செய்திருப்பேன்.
இரும்மா. ட்ரை சம்திங் நியூனு உள்ள தள்ளாத குறையா சிங்கமும் சேர்ந்து கொள்ளவே போனோம்/




அழகாகச் சிரித்தபடி வரவேற்று உட்கார வைத்து. 'வில் யூஹேவ் க்லீன் களி ?
என்றது அந்தப் பெண்.
என்னது களியா என்று நான் திரும்ப. சிரிப்பை அடக்க முடியாமல் என் மருமகள் அது க்ரீன் கறிமா என்றாள்
இவர்களுக்கு ஆர் அவ்வளவாக வராது . எல் சுலபமாச் சொல்லுவார்கள் என்றதும் நான் ஜாக்கிரதையாகி விட்டேன். எனக்கு அது ஸ்ப்ளீன் என்று கேட்டது.
அதற்குள் சிங்கம் பூமிங் வாய்ஸில் \I want fried rice with minced chiken'' என்றாரா. அவள் நோட் பேப்பரைக் கையில வச்சுகொண்டு எழுதத்தெரியாத குழந்தை மாதிரி விழித்தாள்.
மீண்டும் மெனுவைச் சொல்ல ஆரம்பித்தாள்
வெஜிடேரியன்
க்ளீன் களி, லெட் களி,
ஃப்ளைட் லைஸ்,
ஷ்ளிம்ப் என்று அடுக்கவும் என் வயிறு கீழே இருந்து மேலே போய் வந்தது. ஏகத்துக்குப் பசி.
அப்பா மவனே வேணா ராசா நாம் சரவணா சங்கிதானு ஓடிடலாமேன்னால்
கேட்கவில்லை.
அவனும் மருமகளுமாக வெகு அழகான தெளிவான இந்தியில் சொல்லவும் அவள் புரிந்து கொண்டாள்.
மம்மா வெஜிடேரியான் அப்படீனு தலையை மேலும் கீழும் கொண்டு போனாள்.
பப்பா நான் வெஜ் ஒரு டிக்
பேபி? நோ நோ.
மிஸ்டர் ச்லீநாத் மிஸஸ் வெஜ்.
ஓகே:)
எல்லாம் சரிதான். மூங்கில் திரை, படங்கள், ட்விஸ்டட் பாம்பூ,அரக்குத் திரைச்சீலைகள் ....சரி.
க்வான்யின்(ரெய்கி) சிலை கூட சரிதான். அவங்கதான் வயிற்றுவலி வராம காப்பாத்தணும்.:(
காரம் குறைக்கலாம்.
கொஞ்சம் சாம்பிராணி போட்டு இருக்கலாம்.
சந்தேகத்தோடயே சாப்பிட்டதில் வயிறு நிறையலை.
ஸ்ப்ரிங் ரோல்ஸ் நல்லா இருந்தது.
டிஸ்கி.
என்னைத்தவிர எல்லாருக்கும் பிடிச்சிருந்தது:))

Thursday, June 05, 2008

ஜூன் மாதப்புகைப்பட போட்டிக்கு







இவை இரண்டு படங்களும் போட்டிக்கு அனுப்ப எடுத்தவை.

இன்னோரு படமும் உள்ளது. அது அவ்வளவு தெளிவாக இல்லை.

இருந்தும் பதிவில் இணைப்பதில் தவறு இல்லை என்று நினைக்கிறேன்:)
ஒன்று சிங்கத்துக்குத் தெரிந்து எடுத்தது. இன்னோன்று கண்ணாடிக்கு பின்னாலிருந்து எடுத்தேன்.
பின் ஆக்கத்துக்கு வழி இல்லை.
போட்டிக்கான படம் இரண்டாவது.



கானமயிலாடக் கண்டிருந்த:)










காலை யெழுந்தவுடன் காப்பி
பின்பு கண்டிப்பாக மருந்து,
ஆன பிறகு ரெண்டு இட்டிலி

பிறகு இருக்கவே இருக்கு வலைப்பதிவுகள்.
அங்கே என்ன போனா நாலு நாளா ஒரே தாளிக்கும் ஓசையும்,
பொரியல் வாசனையும்,
கொதிக்கும் ரசமும் என்று
சமையல்மணமா ஆகி இருக்கு.
ஒருத்தர் பாக்கி இல்லை.:)
இதைப் பப்ளிஷ் செய்யறத்துக் குள்ள
ஒருத்தர் வினோத வகைக்குழம்பு குறி ப்பு கொடுத்து இருக்கலாம்.!!

அதனால நான் இன்னிக்குச் செய்த சேனை கறியைப் படம் எடுத்துப் போட்டுட்டேன்.
ரொம்ப சாதாரணமா எல்லோரும் செய்கிற பொரியல்.
ஆனால் எனக்கு உலகத்திலேயே ரொம்பப் பிடிக்காத காரியம் என்றால் அது கத்தியைக் கையில் எடுப்பதுதான்.
நாமளோ அரிவாள்மணைக்குப் பழகியவர்கள்.
எங்க வீட்டு அருவாமணை எல்லா மருமகள் கைகளையும் பதம் பார்த்தது.
அத்தனை கூர்.
வாசலில் ''சாணாப் பிடிக்கிறதுனு'' போகிற கிழவன் கூட எங்க வீட்டு வாசலில் கூப்பிட மாட்டான்.

ஐய்யாவை கண்டாதான் ஆனந்தம் அவனுக்கு. அவர்தான் இந்த ஹெட்ஜ் கட்டர்,ஒரு நாலு கத்திரிக்கோல் வித விதமா கொடுப்பார். சலாம் போட்டு அருமை பேசி கூர்மையாகச் சீர் செய்து விட்டுப்போவார்.
அந்த அருமை அரிமணைய்யை விட்டு எந்தக் கத்தியும் நமக்குப் பிடிக்காமல் போய் விட்டது.
பின்ன எப்படி இப்ப இந்தச் சேன்னைக்கிழங்கு செய்தீங்கனு கேட்டால்...
இதுதான் வழி.
முழு சேனையை இந்தப் பெரிய கத்தியால நாலு போடு போட்டால் துண்டுகள் கிடைக்குமா,
அதை நல்லாத் தீர சுத்தம் செய்து, கொதிக்க வென்னீரில போட்டுடணும். மூடி வச்சா கொஞ்ச நேரத்துல சாஃப்டாயிடும்.
அடுப்பை அணைச்சுட்டு ,பொறுமையாகச் சின்னக் கத்தியால துக்கடா துண்டுகளாகச் செய்துகொண்டு, கொஞ்சமே க்கொஞ்சம் எண்ணைல வதக்கி எடுத்துட்டுப் போட்டோ எடுத்துப் பதிவும் போட்டுடலாம்:)
கானமயிலாடக் கண்டிருந்த வான்கோழித் தானும் அதுவாகப் பாவித்துத்
தானும் தன் பொல்லாச் சிறகை விரித்து ஆடி விட்டதாம்.



Posted by Picasa

Tuesday, June 03, 2008

பெரியவங்க பேச்சைக் கேக்கலாமா !
















''எத்தனை தடவைம்மா சொல்றது.புத்திமதி சொல்லறதுல்லாம் உன் காலத்தோட போச்சு.
இன்ஃபாக்ட் உன் அப்பா காலத்தோட ஓவர் மா.
இப்ப எல்லாருக்கும் எல்லாம் தெரியும்.
நின்னு, பாட்டி சொல்கிறதை எல்லாம் கேட்டுக் கொண்டு பின்பற்ற
நேரம் இல்லை.''
இது நாங்கள் தினம் கேட்கிற வசனம், அதுவும் காலை வேளைல
அம்மியில் தேங்காய்ச் சில்லுகளைத் தட்டிக் கொண்டூ இந்திராவோட
அம்மா தாழ்ந்த குரலில் பேசுவதும்,
இந்திரா அதைக் கேட்டுப் பொரிந்து கொட்டுவதும்,
உள்ளே இருந்து அவளுடைய பாட்டியின் அழைப்பும்
எங்க வீட்டுத் தாழ்வாரத்தில் கேட்கும்.
நான் அப்போது வீட்டுக்குத் தேவையான தண்ணீரைக் கிணற்றிலிருந்து
இழுத்துக் கொட்டிக் கொண்டிருப்பேன்.
எங்க பாட்டி ஒரு தூணில் சாய்ந்து கொண்டு கால்களை நீட்டி
தைல எண்ணையைத் தடவிக்கொண்டு இருப்பார்.
எனக்கோ எட்டுமணிக்கு வரும் ஒரே ஒரு டவுன் பஸ்ஸைப் பிடித்துப்
பள்ளிக்குப் போக வேண்டும்.
பாட்டிக்கோ பக்கத்து வீட்டில் என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ள ஆசை.:)
''அந்தப் பொண்ணு ,சொன்னதைக் கேக்காதோ.என்ன பிரச்சினை ஆண்டாள்?''
என்று என்னை விளிப்பார். பாட்டிக்கு இந்த திருநெல்வேலிக் குசும்பு ரொம்ப ஜாஸ்தினு எனக்கு அப்பத் தெரியாது.:)
ஐயோ சத்தம் போட்டுப் பேசாதே பாட்டீஈஈஇ
நான் அவளோட தான் ஸ்கூலுக்குப் போணும். அப்புறமா உள்ள வந்து சொல்றேன். '' என்று ஓடி விடுவேன்.
திருப்பி சாயந்திரம் வீட்டுக்கு வந்ததும், பாட்டி ரெடியாக வாசல் திண்ணையில் உட்கார்ந்திருப்பார். என்ன ஆச்சு.அப்புறம் அந்த சண்டை தீர்ந்துதா? என்று ஆவலோடக் கேட்கும் அந்த 70 வயசுக் குழந்தையைப் பார்த்தால் கோபம் தான் வரும்:)
மாலைப்பசி,உப்புமா காத்துக் கொண்டிருக்குமோ என்கிற கோபம்,
அத்தனை அல்ஜீப்ராவையும் போட்டு முடிக்கணுமே என்கிற தாபம்,
பாட்டிக்குப் பின்னால் மெயில் மூட்டைகளைக் கட்டி சீல் வைத்துக் கொண்டிருக்கும் தங்கப்பத் தாத்தாவின் நமுட்டுச் சிரிப்பு.
''பாப்பா மாட்டிக்கிட்டியா'' என்கிற மாதிரி கேலி செய்யும்.
வர்ரேன் பாட்டி என்று கடித்த பற்களுக்கிடையே பேசிவிட்டு உள்ளே போய்விடுவேன்.
அங்கே போய் அம்மாவிடம் புலுபுலுவென்று ஒரு சண்டை போட்ட பிறகு
மீண்டும் வாசலுக்கு வந்தால் அங்கே மீண்டும் பாட்டி!!
சரி இன்னிக்குச் சொல்லாமல் தீராது,அப்புறம் அப்பா வரை விஷயம் போய்விடும் என்கிற பயத்தில் ,''இல்ல பாட்டி....என்று ஆரம்பித்தால்.,
இந்த ' இல்லை,வந்து ' ரெண்டு வார்த்தை இல்லாம உன்னால பேச முடியாதா
என்று கேலியாகக் கேட்பார்.
நமக்குத்தான் ரோஷம் நெத்திக்கு நடுவில உட்கார்ந்திருக்குமே:)
முறைப்பேன் பாட்டியை.
இப்படியெல்லாம் முறைச்சா நாளைக்கு எப்படி கலெக்டராப் போவ. ?நாலு பேர் நாப்பது பிராது கொடுப்பார்கள். எப்படித் தீர்த்து வைப்ப.' பொறுமை என்னும் நகை அணிந்து 'அப்படீனு அவ்வையார் பாடியிருக்கார் தெரியுமா என்பார்.
எனக்கு அதுவரை இருந்த நல்ல குணமெல்லாம் அப்படியே மறைந்துவிடும்!!
''போ உன்கிட்ட ஒண்ணுமே சொல்ல மாட்டேன். எனக்குத்தான் பொறுமை இல்லையே '' என்று வேறு பக்கம் திரும்பினால் எதிரே இருக்கிற லாரி ஆபீசைப் பார்க்கணும்,அதனால் மீண்டும் பாட்டியைப் பார்ப்பேன்.
''தாழ்ந்த இடத்திலதான் தண்ணீர் தங்குமே, தெரியுமா? என்பார்.
ஆமாம் தண்ணியும் தங்கும் கொசுவும் வளரும்' அப்டீனு தொச்சுக் கொட்டுவேன்;)
இந்த மாதிரி ரெண்டு மூணு ஸ்டாக் டயலாக் முடிஞ்சதும் பக்கத்து வீட்டுச் சமாசாரமும் சொன்னேன்.
எப்படி அந்த இந்திராவுக்கு ஒரு பையன் லவ் லெட்டர் கொடுக்கப் பார்த்தான். அவ எப்படி வாங்கிக்காம கல்யாணப் பரிசு சரோஜாதேவி மாதிரி நடந்து கொண்டா, அது தெரிந்து (அவளுடைய) பாட்டி அவளைப் பள்ளிக்கூடத்துக்குப் போக வேண்டாம்னு சொல்கிறார் என்று முடித்தேன்.
எல்ல்லாத்தையும் கேட்டுவிட்டு, சு இவ்வளவுதானா. என்பது போல் எங்க பாட்டி மட்டும்தான் முகத்தை வச்சுக்க முடியும்:)
நீ என்ன சொல்றே பாட்டி. அவ ஸ்கூலுக்குப் போலாமா வேண்டாமா என்றதும்,
பாட்டி வினோதமாப் பார்த்தார்.
இது என்ன உலக அதிசயமா. பசங்களுக்கும் பொண்களுக்கும் இப்படித்தான் இருக்கும்.
எங்களை மாதிரி எட்டு வயசில கல்யாணம் ஆனா ஒண்ணும் தெரியாது.
நீங்கள்ளாம் குமுதம்,சாண்டில்யன் படிச்சே கத்துண்டாச்சு. அப்புறம் இப்படித்தான் நடக்கும்.
நீங்க எல்லோரும் ஒத்துமையா ஒரே குருப்பா போய் வந்தா யாரும் வாலாட்ட மாட்டான்.
ஒரு தடத்தை விட்டு இன்னோரு வழியாப் போங்கொ.
அப்படியும் பின்னால வந்தா என்னடானு அதட்டுங்கொ.
நாங்களும் இப்படி அப்படி யெல்லாம் பார்த்து இருக்கோம்.எங்களுக்கும் தெரியும் என்று மறுபடி அதே நக்கல் சிரிப்பு.
'போ பாட்டி உனக்கு ஒண்ணும் புரியலை'' என்று எழுந்து விட்டேன்.
இப்பவெல்லாம் நிலைமை மாறிவிட்டதாக் கேள்வி.:)
,
இன்னோரு டிஸ்க்ளெய்மர்..
அதே பையனை இந்திரா கல்யாணமும் பண்ணிக் கொண்டார்கள். ஏன்னா அது அவளுக்கு அத்தை பையன்.:)

Sunday, June 01, 2008

துபாயில் காலைப் பொழுது


















Posted by Picasaசென்னையில் இருந்து கிளம்பி இங்க வந்ததிலிருந்து காலையில் சரியாக நான்கு மணிக்குக் கண்விழித்துவிடுகிறது. அருகாமையில் இருக்கும்
பல மசூதிகளில் தொழுகைக்கு அழைப்பு விடுக்கும் குரல் இனிமையாகக் காதில் விழும்.
அப்படியே ரெயின்பொ பாலையும் காய்ச்சி, ஜயா டிவியையும் போட்டு விட்டு,
பெர்கொலேட்டரில் வடித்த டிகாஷனையும் பாலையும் அளவாக் கலந்து, சர்க்கரையிலாத சர்க்கரையைப் போட்டு அப்படியெ அந்தக் காபியைக் கப்பில் கொண்டுவந்து , வராந்தாவில் உட்கார்ந்தால், ம்ம்ம்
போதும் .
வரும் போகும் புறாக்களுக்கும்,குருவிகளுக்கும் வாசனை போய், வந்து எட்டிப் பார்க்கும்.
தூரத்தில் அந்து நிமிடங்களுக்கு ஒரு விமானம் தரையிறங்கிக் கொண்டு இருக்கும்.
அப்படியே ரசித்துக் குடித்து முடித்தால் சரியாக ஐந்து மணி 15 நிமிடங்களில் எல்லாம் சூரியன் சார் பந்தாக மேலே வந்து விடுகிறார்.
அந்த அருமையைத் தான் படம் பிடித்து இங்கே பதிவிட்டு இருக்கிறேன்.
சென்னையில் வராத சூரியனா என்று கேட்கக் கூடாது. அங்கே ஏது நேரம்?
அதுவும் இல்லாமல் சுற்றிவர உயரமான கட்டிடங்கள் வந்து விட்டன. இனிமேல் மொட்டைமாடிக்குப் போய் பார்க்கணுமென்றால் 9 மணி வரை காத்து இருக்கணும்.
இங்க கண்ணாடிக் கதவைத் திறந்தால் வானம் தான்.
அதில் சிங்கம் வேறு சின்னத் தோட்டம் வைத்திருக்கிறார்.
பார்த்துட்டுப் படம் எப்படி இருக்குனு சொல்லுங்கப்பா.