வல்லிசிம்ஹன்
எல்லோரும் வளமாக வாழவேண்டும்.
மார்கழியின்
17ஆம் பாசுரம் அம்பரமே தண்ணீரே....
நம் கோதை அவளது மனத்துக்குப் பிடித்த மணாளனை
அவனது இல்லத்திலேயே தரிசனம்
செய்ய வந்துவிட்டாள் .
இல்லத்தில் எல்லோரும் உறங்கி கொண்டு இருக்கின்றனர்.
முதலில் நந்தகோபனை தரிசனம் செய்கிறாள்.
அவனோ ஊருக்கே நல் நீர், உணவும் உடுத்த உடை எல்லாம் வழங்கும் வள்ளல்.
அவனைப் பெருமை கூறி ப் பாடிவிட்டு தாய் யசோதையை
எழுப்புகிறாள். வருங்கால மாமியார் அல்லவா. இத்தனை பெரிய
தலைவனின் மனையாட்டி.
பெருந்தனம் கொண்ட எம்பெருமாட்டியே என்று அழைக்கிறாள்.
அம்மா எழுந்திருங்கள்.
அவள் அருகில் உறங்கும் ஸ்ரீ கண்ணனை
எழுப்ப அவள் உபயோகிக்கும் இனிமையான சொற்கள் அவனது த்ரிவிக்கிர அவதாரத்தைபி புகழ்ந்துதான்.
வானத்தையே பிளந்து ஓங்கி உலகளந்த
தேவர்களின் தலைவனே நாராயணா உறங்காது எழுந்திருப்பாய்.
செம்பொன்னினால் ஆன கழல்களை அணிந்த மைத்துனர் பலதேவரே
உங்கள் இளவலும் நீங்களும் உறங்காமல் எழுந்து வரவேண்டும் என்று வேண்டுகிறாள்.
ஆண்டாளின் பக்தி பூர்த்தியாகும் நாள் வரப் போகிறது.
பயன் கிடைக்கும் நேரம் அவளுடன்
நாமும் இருப்போம்.
கண்ணனை தரிசித்து மகிழ்வோம்.