கவலைப் படாதடா. இத்தனை சுறுசுறுப்பா இருக்கிற அண்ணா, சீக்கிரம் எழுந்து நடப்பார்மா.
சைல்ட் ஜீஸஸ்ல தான் டெஸ்ட் எல்லாம் எடுத்தது.
ஒரு சின்ன ப்ள்ட் க்ளாட் தான். உடனே பார்த்ததால் அவசர சிகித்சை செய்து காப்பாற்றிவிட்டார்கள்.
இன்னும் கொஞ்ச நாளுக்குக் கண்ணும் கருத்துமாப் பார்த்துக்கணும். அவ்வளவுதான்.
சிரிச்ச முகத்தோட வா,என்றபடி ராதையையும் கோவிந்தனையும் மட்டும் அழைத்துக் கொண்டு
வரவேற்பரை பக்கத்தில் இருக்கும் படுக்கை அறைக்கு அழைத்துக் கொண்டு போனாள் பாமா.
ஏன் நீ முன்னாலியே சொல்லலை பாமா என்று வருத்தத்தோடு கேட்டாள் ராதாஅ. சொன்னால் நீ மட்டும் வந்து
உதவிக்கு என்ற பிரமேயத்தில் ,உழைத்துக் கொட்டுவாய்.
அவருக்கோ யார் என்ன செய்தாலும் தன் இயலாமையால் கோபம் வருகிறது. அதுவும் உன்மேல் உயிரையே வைத்திருப்பவர்.
தங்கையிடமே சார்ந்திருப்பது அறவோடு பிடிக்காது.
அதனால் ஒருவாரம் கழித்து வரச் சொல்லி உனக்கு மெயில் அனுப்பினேன்.
என்றாள், பாமா.
எதையொ எதிர்பார்த்து கண்களில் தளும்பி விழக் காத்திருக்கும் கண்ணீரோட அந்த விசாலமான,தோட்டத்தைப் பார்த்து அமைந்திருந்த அறைக்குள் நுழைந்தாள் ராதா.
அங்கே அதே கம்பீரத்தோடு வெள்ளை வேஷ்டியும் வெள்ளை கதர் ஜிப்பாவுமாக அண்ணா, கட்டிலில்,
பளிச்சென்று சாய்ந்து உட்கார்ந்திருக்கும் அண்ணவைப் பார்த்து,ஒரு பக்கம் நிம்மதியும்,மறுபக்கம் பாசமும் போட்டி போட
என்ன அண்ணா, உன்னைத்தான் முதலில் ஸ்டேஷனில் தேடினேன். நீ என்னடா என்றால் சாவகாசமாக
இங்க இருக்க, என்றபடி அண்ணாவின் தோள்களை மெலிதாக அணைத்தபடி கேட்டாள்.
அவர், ஸ்ரீநிவாசன்,சிரிக்க முடியாமல் சிரித்தார்.அப்போதுதான்,ராதா அந்த முகத்தில்
ஒருபக்கம் பாதிக்கப் பட்டு இருப்பதையும் பார்த்தாள்.
உலகத்திலியே தன் அண்ணா தான் நிறைந்த அழகன் என்று நினைப்பவள் ராதா.
அவருக்கு இப்படியா என்று மனம் பொங்கியதும்,உடல் தளர்ந்துவிட்டது.
ஒரு நிமிஷம் அண்ணா, கைகளைக் கழுவிவிட்டுத்தான் நோயாளியைப் பார்க்கவேண்டும் என்பதையே மறந்துவிட்டேன் 'என்றவாறு அந்த அறையிலிருக்கும் அட்டாச்டு பாத்ரூமிற்குள் போய்க் கதவைத் தாளிட்டுக் கொண்டாள்.
முகத்தில் தண்ணீரை வாரி அடித்து,தன்னை நிலைப் படுத்திக் கொண்டு
அந்த அறையில் இருக்கும் துவாலையை எடுக்க வந்த போதுதான்
பிடிப்புக்காகச் சுற்றிப் போடப் பட்டிருக்கும் கம்பிகளையும் பார்த்தாள்.
பாமாவின் முன்னேற்பாடுகளை மனதில் மெச்சியபடி
தெளிந்த மனத்தோடு வெளியே வந்த ராதா,மீண்டும் அண்ணன் அருகில் உட்கார்ந்து
கைகளைத் தடவிக் கொடுத்தாள்.
கைநுனியின் அருகில் இருந்த பஸ்ஸரை அழுத்தியதும்,
அவரைப் பார்த்துக் கொள்ளும் ஃபிசியோதெரபிஸ்டும், அட்டெண்டர் சம்பத்தும் வந்தார்கள்.
சைகையினால் தன்னை அங்கிருந்த சக்கர நாற்காலிக்கு மாற்றச் சொன்னார்.
செயல்படும் இடது கையால் ராதாவையும் கோவிந்தனையும் அருகே உட்கார வைத்து,
சம்பத்திடம் ஏதொ சொல்ல,அதை அவர் புரிந்து கொண்டு,''அண்ணா தனக்கு வந்திருப்பது பெரிய தொல்லை என்றாலும்
ஒரு வாரத்தில் தன்னைச் சரிசெய்து கொள்ளமுடியும். கவலை வேண்டாம். உங்கள் சந்தோஷமே எனக்கு மருந்து என்று விளக்கினார்.
குழந்தைகளிடமும் சரியாக எடுத்துச் சொல்லுங்கள்.அவர்கள் என்னைப் பார்த்துப் பயப்பட வேண்டாம் உள்ளெ வரப் போக இருக்கலாம்.என்று சொல்லிவிட்டு முகத்தில் கேள்விக் குறியோடு ராதாவைப் பார்த்தார்.
அண்ணாவின் அசராத நம்பிக்கை கண்டு ராதாவுக்கும் பலம் வந்தது.
''இதோ அவர்களை அழைக்கிறேன் ''என்று வெளியே சென்றாள்.
எல்லோரும் வாழ வேண்டும்.






