நல்லதொரு பழக்கம் இந்த ஊரில். சிறார்களுக்கு ஆசிரியர்களின் உழைப்பைப் பாராட்டச் சொல்லிக் கொடுக்க ஏற்பாடு செய்கிறார்கள். இந்தத் திங்கள்கிழமையிலிருந்து தன் வகுப்பு ஆசிரியையுக்குப் பிடித்த விஷயங்களைச் செய்வது. பழங்கள், சாக்லேட், என்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றாகக் குழந்தைகள் கொடுக்க வேண்டும். இன்று பல்வகை உணவு தினம். பேரன் எடுத்துக் கொண்டது பழங்கள். . அவனைப் பொறுத்தவரைப் பழங்களில் சத்து அதிகம். அதனால் அவன் அம்மா நேற்று கடைகளுக்குச் சென்று பைகள் நிறைய விதவிதமான பழங்களை வாங்கி வந்தாள். இரவு எல்லோரும் படுக்கச் சென்றபின் ஒரு மணி நேரம் மெனக்கெட்டு பழங்களை நன்றாகச் சுத்தம் செய்து ஒரே அள்வில் நறுக்கி வைத்து , குளிர்ப் பெட்டிக்குள் வைத்துவிட்டாள். ஆரஞ்ச்,ஆப்பிள், செர்ரி, திராட்சை, கிருணிப் பழம், ப்ளூபெர்ரீஸ் எல்லா வண்ணங்களும் கண்ணைப் பறித்தன. அவைகளைக் காலியில் எழுந்து நானும் அவளும் ஸ்கூவர் கம்புகளில் செரிகிவைத்து இரண்டு பெரிய தட்டுகளில் நிறைத்தோம். இன்னும் அலங்கரிக்க நேரமில்லை. ஏழரை மணிக்குப் பள்ளியில் வைத்துவிடவேண்டும்.. அவசரமாக வண்டியில் அலுங்காமல் வைத்து பள்ளிக்குச் சென்று வைத்து விட்டு வந்தாள். பேரன் அப்போதான் எழுந்து சீக்கிரம் செய்துட்டியாமா. ரியலி க்ரேட்னு அம்மாவுக்கு ஒரு கட்டி முத்தம் கொடுத்தான். ஏழு வயசுப் பெரியவனாச்சே.>}}} இந்த மரியாதை எல்லோரிடமும் நிலைக்க வேண்டும்.