Blog Archive

Monday, April 20, 2015

சுவிஸ் மங்கைகள் என் பார்வையில்

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்


முதல் முறை  இந்த சுவிஸ்  நாட்டுக்கு வந்தபோது பார்த்து அதிசயித்தது இங்கிருக்கும் பெண் களின்  உடல்வாகையும், சுறுசுறுப்பையும் தான்.

வயசு  என்ன என்றே  சொல்ல முடியாது.  முதுகு வளைந்த  வயதான அம்மாவும் ...90 ஆவது இருக்கும் தனியே வண்டியைத் தள்ளிக் கொண்டு எதிர்  வரிசையில் இருக்கும் கோ ஆபரேடிவ்க்கு   வருவார் .நிதானமாக விலை பார்த்துப் பழங்கள், காய்கறி, வைன்,  ப்ரெட்,  SPINACH ,முட்டைகள் என்று ஒருவருக்குத் தேவையானவற்றை வாங்கிக் கொண்டு அளவான பணத்தை எண்ணிக் கொடுத்துவிட்டு வெளியே வருவார். அங்கே ஏற்கனவே காத்திருக்கும்   இன்னொரு பாட்டியோடு  வரிசையாகக் கிடக்கும் BENCH  ஒன்றில் உட்கார்ந்து  ஒரு பானத்தை அருந்தியபடி நேரம் செலவழிப்பார். தனக்கான TRAM  வந்ததும் CIYAO  சொல்லிவிட்டு நகர்ந்து விடுவார்.

இரண்டாவது   விஷயமாக   ஆச்சரியப்பட்டது,  இந்த  ஒல்லியான ஸ்லிம்  தேகக் கட்டு. இதோ இப்பொழுது நான்  மகனுடன்   நடை ப் பயிற்சிக்குப் போய் வரும்போது   இன்னொரு 60  வயது அம்மா தன மகனுடன் சைக்கிளில்   வெளியே கிளம்பிக் கொண்டிருந்தார். இன்று  ஞாயிற்றுக் கிழமை என்பதால் போக்குவரத்து அவ்வளவாக  இருக்காது. தேகப் பயிற்ச்க்கு முக்கியத்துவம் கொடுக்கும் இவர்கள் வெய்யில் வந்த அடுத்தகணம்  வீ தியில் இருப்பார்கள்.

மூன்றாவது அதிசயம். இந்த இளம்பெண்களின் தேகவலிமை.. அழகு.
முகத்துக்குப் போட்டுக் கொள்ளும் அளவான அழகான  அலங்காரம்.
டிப் டு TOE   கச்சிதமாக இருக்கிறார்கள்.
 முதல்வாரம் பக்கத்திலிருக்கும்  பூங்கா ஒன்றுக்கு  போயிருக்கும்போது பிறந்து மூன்று நான்கு நாட்கள் இருக்கும் குட்டிப் பாப்பாவை அப்பாக்காரர்  தன உடம்போடு கட்டிய துணியில் புதைந்தபடிக் கொஞ்சிக் கொண்டே  வர,பக்கத்தில் அந்தக் குழநியைப் பெற்ற   அம்மா தன ஒன்னரை வயசுக் குழந்தையைத் தளிர் நடையோடு அழைத்துவருகிறாள்.!!!!

பெண்களில் 75%  வேலைக்குப் போகிறார்கள். ஐந்து  நாட்கள் நல்ல உழைப்பு. மற்ற  இரண்டு நாட்கள் வெளியில் சாப்பாடு. நடை. தோழர்களோடு  சந்திப்பு, பியர் பார்ட்டி என்று போகிறது.
ஒன்றே ஒன்று பிடிக்கவில்லை. சகட்டுமேனிக்கு எல்லோரும் புகை   பிடிக்கிறார்கள் .  ஒரு சில பெண்களைத் தவிர,.  TRAM  ஏறுவதற்கு முன் பார்த்தால் அந்தத் தண்டவாளமே தெரியாத அளவு சிகரெட் துண்டுகள் இருக்கும்.:(

நல்ல உயர்தரக் கவனிப்பு  எல்லோருக்கும் அரசாங்கம் தருகிறது  பள்ளிப் படிப்பு இலவசம்.

படிக்கும் குழந்தைகள் படிக்கின்றன. படிக்காதவை வேலைக்குப் போகின்றன.  16 வயதுக்கு மேல் சுதந்திரம் தான்.
அம்மா அப்பாவை அவ்வப்போது வந்து பார்த்துக் கொள்

கிறார்கள். 
பெண்கள் அறுபது 70 வயதிலும் திருமணம் செய்து  கொள்

கிறார்கள். விவாகரத்தும் செய்கிறார்கள் 

மூத்த தாரத்தின் பையனும் வீட்டோடு இருந்து தன சித்தியின் குழந்தைகளிடம் அன்பாக இருக்கிறான். அந்தச் சித்தியும் அவனைக் கவனித்துக் கொள்கிறாள் .
மொத்தத்தில்  சுவிஸ்   மங்கையர். அழகு,வலிமை ,திடம்  கொண்டவர்கள்   மற்ற ஊர்க்காரர்களோடு ஜாக்கிரதையாகப் பழகுவார்கள். 
பிடித்துவிட்டால் திருமணமும் செய்வார்கள்.  நல்ல ஊர்தான்நான் உன்னை நினைத்தேன்

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

வெள்ளை ஆர்க்கிட்  நான்  உன்னை நினைத்தேன்
சிங்கத்தின் காதலி 


Add caption

இளஞ்சிவப்பு temple  tree   பூக்கள் 

மஞ்சளாக மாறிய பச்சை இலை 

அடுக்கு செம்பருத்தி பாரிஜாதத்தில்   எப்படி இருக்கிறாயோ 
சுதந்திர தேவியும் நாங்களும் 
ரெயின் நதி வீழ்ச்சி.

Wednesday, April 15, 2015

டிகேசியின் கம்ப சித்திரம்

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

இராமன் ஜடாயுவைக் கண்டு   பதைக்கும் நேரம்.

சீதையைத்தேடி ராமனும் லக்ஷ்மணனும்  வரும் பாதையில் குற்றுயிராகக்  கிடக்கும்  ஜடாயுவைக் கண்டு வருந்திக் கைகளில் ஏந்திக் கொள்கிறார்கள்.  அப்போது இவாறு நடப்பதற்கு க்  காரணமான வானவர் ராக்கதர் அனைவரையும் அழிக்கிறேன் என்று கோபாவேசப் படுகிறான் ராமன்.
அவன் சினத்தைத் தணிக்க ஜடாயு கைகொள்ளும்  வசனங்கள் இவை."ராமா நீயும் இலக்குவனும் சீதையைத் தனியே விட்டு மான் பின்னே போனதல்லவா தவறு. அது அவ்வாறு இருக்க  மற்றவர்களை நோவதில் என்ன பயன் என்று பெரியவன் ஸ்தானத்திலிருந்து  ராமனைக் கேட்கிறான். 
ராமனுக்கு இந்த வார்த்தைகள்   சுருக்கென்று தைத்தாலும் தன நிலை அடைகிறான்.


"வம்பிழை கொங்கை வஞ்சி வனத்திடை தமியள் வைத்துக் 
 கொம்பிழை மானின் பின்   போய்க் குலப பழி கூட்டிக் கொண்டீர்  
அம்பிழை வரிவில் செங்கை ஐயன்மீர்! ஆயுங்காலை 
உம்பிழை என்பதல்லால் 
உலகம்செய் பிழையும் உண்டோ ??
திரு டிகேசி அவர்களின்  "சொல்லமுடியாதல்லவா போய்விட்டது"  கட்டுரையில் ஒரு பகுதி.

இவ்வாறு உரைத்த களைப்பில் ஜடாயுவின் உயிர் பிரிகிறது.

Tuesday, April 14, 2015


எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
மகிழ்ச்சியும்,ஆரோக்கியமும்,இயற்கை வளங்களும் பெருகி அனைவரும் இனிதாக  இருக்க வாழ்த்துகள் . மன்மத ஆண்டு அனைத்தையும் வழங்க இறைவனைப் பிரார்த்திக்கிறேன் .

Monday, April 13, 2015

Lugano 2

Add caption
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்


மலைகளில்  வீடுகள் .
மடுக்களில் படகுகள்
எங்கும்   எதிலும்  மக்கள் .
ஆரவாரங்கள்
 கதிரவனின்  வெப்பம்,மலைச்சாரலின் குளிர்
இரண்டும் கலந்த ஏப்ரில் மாதம் லுகானோவில்
Add caption

Tuesday, April 07, 2015

லுகானொ ஒரு பாரவை

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்  இந்த ஊர் சுவிஸ் நாட்டிற்குள் இருந்தாலும் இத்தாலி  எல்லையில் அமைந்திருப்பதால்    ஜெர்மனும் இத்தாலிய மொழியும் கலந்தே பேசுகிறார்கள்.   கடையில்  தன பென்னிர்காகப் பெரியவன் வாங்கிய பூனைக்குட்டி கள்   அழகாக வரைந்த தட்டிற் காக ,,,,அவன் பேரம் செய்ய எடுத்துக் கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.    :))  


யும் கொண்டு வந்திருந்தேன்.

படிகள் படிகள்  வசதிதான்.
ஏரிக்கரையில்    ஊற்று.அழகான சிற்பங்களுடன் 
நாங்கள் கிளம்பிய வண்டி  சரியாக  மதியம் 1  மணிக்குப் போய்ச்சேர்ந்தது.   முன்பு போல   வெளியே சாப்பிடுவது அவ்வளவாக ஒத்துக்  கொள் வதில்ல. கையில் கட்டுச் சோறாகத தயிர்சாதமும்  ,தோசைகளையும்  கொண்டு வந்திருந்தது    வசதியாகப் போய்விட்டது.
தங்கிய விடுதி ஹோட்டல்  FEDERALE


எங்கள் மூவருக்குமாக  ஒரு அரை  பதிவு செய்திருந்தார் பெரிய பையன். நல்லவசதியான படுக்கைகளும் ,குலுக்கும் அரை வசதி ,FRIDJE  என்று இரு நாட்களுக்குத் தங்க அருமையான இடம். எங்கள் அரை விடுதின் பின்பக்கம் ஏரியைப் பார்த்த வண்ணம் இருந்தது. எரிக்கும் விடுதிக்கும் இடைப்பட்ட மழைப் பகுதியில் வில்லாக்களும் வீடுகளும்  மாதாகோவில்களும் அங்குல இடைவெளியின்றி நிரம்பி இருந்தன. .ஒருபக்கம் சரேல் என்று இறங்கும் சாலை. மறுபக்கம் படிகள். அங்கு இருப்பவர்கள் யாருக்கும் வியாதியே வராது என்று நினைக்கிறேன். இத்தனை படிகள் ஏறி இறங்கினால்  தேகப் பயிற்சி முடிந்துவிடுகிறது இல்லையா.
மலையின் உச்சியில்  வீடு 

Sunday, April 05, 2015

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
வெண்ணிலாவைக் கூட இறக்குமதி செய்யும் நாட்களாகிவிட்டது.
வானம் ஒன்றுதான்.அதனால் அமெரிக்க நிலவை கே கணினியில் பதிவு செய்வதில் தப்பில்லை என்றே நினைக்கிறேன்.

லுகானோ   என்னும் பெயர் பழைய  ஹாட்லி சேஸ் புத்தகத்தை நினைவு படுத்துகிறதே  என்று நினைத்தபடி,  4 மணீ நேரப்பயணத்தில்   தாங்கும் விடுதிக்கு வந்தோம்.
மலை உச்சியில்  ரயில் நிலையம். மலை அடிவாரத்தில்  பிரம்மாண்டமான  ஏரி.  ஏனோ திருப்பதி நினைவுக்கு வந்தது.  இந்த இடம் ஸ்விஸ் எல்லையில்   இத்தாலிய  ஜாடையுடன் இருக்கிறது. பேசும் மொழியும்   இத்தாலியன் தான்.  படங்களைப் பதிவேற்றியதும்   இந்தப் பயணத்தைப் பற்றி எழுதுகிறேன்.  அனைவருக்கும் ஈஸ்டர் தின வாழ்த்துகள்.
Add caption


Add caption