Blog Archive

Saturday, August 31, 2019

பயணத்தின் மூன்றாம் நாள் Space Needle Seattle.

சியாட்டில்  துறைமுகம்  ,போர்ட் என்று அழைக்கப் படுகிறது.
பெல் ஹார்பர்  மெரீனா  Pier 66 Seattle.

Add caption

Add caption
வல்லிசிம்ஹன்

எல்லோரும் நலமாக வாழ வேண்டும்.
பயணத்தின்  மூன்றாம் நாள்    Space Needle Seattle.


 பயணத்தின் மூன்றாம் நாள், சியாட்டில் நகரம் சுற்றி வரலாம்
என்று  திட்டம்.
காலை உணவுக்கு நானும் சின்னப் பேரனும் முதலில் வந்து விட்டோம்.
எனக்குத் தேவையான ஓட்ஸ் கஞ்சி, பழங்கள் நிறைய இருந்தன.
சியாட்டில் காஃபிக்கு பெயர் பெற்றது.. தெர்மாஸ் எடுத்துப் போய்
இரண்டு மூன்று கப் எடுத்துக் கொண்டேன்.
பேரன் வாஃபிள்+ மேபிள் சிரப் , என்று அவனுக்குப் பிடித்த
மற்ற வகை எல்லாம் எடுத்துக் கொண்டு வந்தான்.

நமக்கு அதெல்லாம் ஒத்துக் கொள்ளாதே.. என்று சுற்றிப் பார்த்தால், சுடச்சுட
சாதம் கொண்டு வந்து வைத்தார்கள். கூடவே நிறைய வேகவைத்த
காய்கறிகள்.
இண்டியன் ஃபூட் மாம் என்று சிரித்தாள்
அந்த உணவுக்கூடப் பெண்.
நான் பார்த்துக் கொண்டே இருக்கும் போதே ,இந்த ஊர்க்காரர்கள்
நிறைய டப்பாக்களில் எடுத்துச் சென்றனர் .
காலை உணவு ஃப்ரி என்பதால் சீக்கிரமே காலியாகிவிட்டது..
நானும் எங்கள் அறைக்கு இரண்டு டப்பாக்கள் நிறைய எடுத்து
வந்தேன்.



 எல்லோரும்  கிளம்ப 11 மணி ஆகிவிட்டது.
முதலில்  சியாட்டில் ஹார்பருக்குச் சென்று  சுற்றி பார்த்தோம். விதவிதமான படகுகள் , Luxurious  yachts.
எல்லாவற்றையும் சுற்றிப்  பார்த்துவிட்டு,  ஜெயண்ட்  வீல் இருக்கும்
இடத்துக்கு வந்தோம்.

கொண்டு வந்திருந்த கலந்த சாப்பாட்டை முடித்துக் கொண்டு 
அந்த ரங்கராட்டினத்தில் சுற்றி வந்தோம். நம் ஊர் என்றால்

 ஒரு மாதிரி பயமாக இருக்கும். இங்கே கதவுகள் போட்ட கேபிள் கார் போல இருந்ததால் 
பயமில்லாமல் அரைமணி நேரம் நிதானமாகச் சுற்றி 
கீழே இறங்கினோம்.

Related image
சியாட்டில் ஸ்பேஸ் நீடில் .
மேலே இருப்பது சுற்றும் டவர். அங்கேயே  கண்ணடித்தளத்தில் படுத்து கீழே  பார்க்கலாம்.

கீழே வந்து   வரிசையில் நின்று  virtual Reality glasses 
அணிந்து கொண்டு  கோபுரத்திலிருந்து  கீழே  பார்ப்பது மிக 
த்ரில்லிங் .
நான் எடுத்த படங்கள் சரியாக இல்லாததால் 
கூகிள் அம்மா கிட்ட கேட்டு  எடுத்துப்  போட்டு இருக்கிறேன்.



Space Needle Seattle Tour, Elevator Ride & Views from the Top (HD)

வல்லிசிம்ஹன்

Thursday, August 29, 2019

பயணத்தின் நான்காம் நாள் ....பாகம் 5

வல்லிசிம்ஹன்
எல்லோரும்  நலமுடன் இருக்க வேண்டும்

பயணத்தின்  நான்காம்  நாள்  ....பாகம் 5
+++++++++++++++++++++++++++++++++++++++++++
பயணத்தின்  நான்காம் நாள்,  சியாட்டிலில் இருக்கும் பல இடங்களுக்குப் போக முடிவு.
பேரன் வேலைசெய்யும் டவுன் டௌன் போய் அவனை அழைத்துக் கொண்டு செல்ல முடிவு.

முதல் நாள் ஸ்பேஸ் நீடில் சென்று விட்டு வந்ததிலிருந்து

கால்கள் மிக வலிக்க, நான் அறையிலியே இருந்து கொள்வதாக முடிவைச் சொன்னேன்.
மிகவும் வற்புறுத்திய
பிறகு  அவர்கள் கிளம்பினார்கள்.
Amazing Race enbathu Amazon Prime இல கிடைத்தது.
ரொம்ப நாட்களாகப் பார்க்க நினைத்திருந்த வியக்க வைக்கும் தொடர்.

அமெரிக்காவின் இளைஞர்களும் யுவதிகளும்
பங்கு கொள்ளும் வியக்க வைக்கும் ஓட்டம்.
 மில்லியன் டாலர் பரிசு.
 பலவிதமான இக்கட்டுகள், Challanges, பல தேசங்கள், பல சீதோஷ்ணங்கள்
இவற்றில் ஓட வேண்டி இருக்கும்., நீச்சல், டைவிங்க், எல்லாம் தெரிந்திருக்க வேண்டும்.

நண்பர்கள், தோழிகள், அம்மா பெண், அப்பா மகன், கணவன் மனைவி,
வைத்தியர்கள்

என்று பலவிதமான நபர்கள் பங்கு கொள்கிறார்கள்.
11  பகுதிகளாக கிட்டத்தட்ட 35 இடங்கள் உலகத்தைச் சுற்றி
செல்ல வேண்டும். ஒவ்வொரு  நாட்டிலும் அந்த நாட்டுக்கான
பணத்தைக் கையில் கொடுக்கிறார்கள்.
தாராளமாக இருக்கும். உடல் உறுதி மன உறுதி எல்லாம் இருக்க வேண்டும்.
30 40 நபர்கள் முதலில் ஆரம்பித்து 24 நபர்கள் அதாவது 12 ஜோடிகளாக
வடிகட்டப் படுகிறார்கள்.
11 ஆவது பகுதி வரும்போது மூன்று ஜோடிகள் மிஞ்சுவார்கள்.
அதில் முதலாவதாக ,தீர்மானிக்கப் படுபவர்கள்,  புத்தியை
உபயோகிக்கத் தெரிந்த வேகம் நிறைந்த ஜோடியாக
இருப்பார்கள்.

சாப்பாடை முடித்துக் கொண்டு, பார்க்க ஆரம்பித்தவள்
தொடர்ந்து 4 மணி நேரம் சென்றதே தெரியவில்லை.
 அறையைச் சுத்தம் செய்ய  பெண் வந்ததும் நிறுத்தினேன்.

இவர்கள் எல்லோரும்  போயிங்க் விமானம் செய்யும்
இடத்துக்குச் சென்று  நாலு மணி நேரம் இருந்து
 முடிந்த படங்களை எடுத்து வந்தார்கள்.
நல்ல வேளை நீ வரலம்மா. ஏகப்பட்ட இடங்களுக்கு நடந்தே
போக வேண்டி இருந்தது. நாங்கள் சாப்பிடப்
போகிறோம் , உனக்கு பீட்சா வேண்டுமா என்று கேட்டாள்
மகள்.
  எனக்கு கத்திரிக்கய்ய் ஊறுகாயும் தயிர் சாதமும் இருக்குமா.
பீட்சா வேண்டாம் என்று சொல்லிப் படுக்கச் சென்று விட்டேன்.
ஆ, மிச்ச எட்டு எபிசோட் எட்டையும் பார்த்து விட்டே
படுக்கப் போனேன் என்று சொல்ல மறந்து விட்டேனே.



போயிங்    விமானக்கூடத்தின்   டூர்  யூ டியூப்

Wednesday, August 28, 2019

இரும்புத்திரை படம்,என் விருப்பம்

வல்லிசிம்ஹன்

எல்லோரும் நலமாக வாழ வேண்டும் 

இரும்புத்திரை  படம். அதில் சில காட்சிகள்.  என் விருப்பம் 
ஒரு பாடல் 








       2





இந்தப் படத்தை மதுரை தங்கம் தியேட்டரில் ,பள்ளி சுற்றுலா 
போனபோது பார்த்த ஞாபகம். 1959 ஆம் வருடம் என்று நினைவு.

நல்ல பாடல்கள். சுப்பையா, சிவாஜி, வைஜயந்திமாலா, சரோஜாதேவி , ரங்கா ராவ், வசுந்தரா தேவி என்று நட்சத்திர பட்டாளம்.

ஜெமினி  ஸ்டுடியோவின் தயாரிப்பு.
இந்தியிலும் வந்தது என்று  நம்புகிறேன். 


எல்லோரும் உணர்ச்சிகளைக் கொட்டி நடித்திருப்பார்கள். கொஞ்சம் கூட 
செயற்கையாகவே இருக்காது.   நல்ல கதை.

கொஞ்சம்  பொதுவுடமைக் கருத்தும் கலந்து,குடும்ப  வாழ்வோடு  ஓட்டிப் 
போவது ம், 
இடையூ டும் தங்கவேலு, சரோஜா அவர்களின் 
இணைந்த  நகைச்சுவைக் காட்சிகள்  எல்லாமே அருமை.



Tuesday, August 27, 2019

சியாட்டிலிலிருந்து கனடா வான் கூவரை நோக்கி.

பெருமரத்தின்  அடிப்பாகம் பாதுகாக்கப் பட்டு வருகிறது.
இருபது அடிகள் விட்டம்
இது போல மரங்கள் இங்கே இருந்திருக்கின்றன. ஆயிரம் வருடங்கள் இந்த மரத்தின் வயது. தீயினால் பாதிக்கப் பட்ட மரத்தை  வெட்டி 😊வேறு இடத்தில் வைத்தார்களாம்.
இந்த அடிமரத்தை சீர்  செய்து இங்கே கொண்டுவந்து வைத்திருக்கிறார்கள்.

மரத்தோடு படங்கள் எடுத்துக் கொண்டே இருந்தார்கள்.
Add caption
வழி நெடுக்காக கூ டவே வந்த    கடல்
மதிய சூரியன்  , காற்றுடன் இதமாக வந்தான். சூடு இல்லாத சூரியன்.
Image result for Road to Vancouver from Seattle
சியாட்டிலில் இருந்து  வான்கூவர் சாலை.
வல்லிசிம்ஹன்  எல்லோரும்  நலமாக வாழ  வேண்டும்
சியாட்டிலிலிருந்து கிளம்ப மதியம் ஒரு மணி ஆகிவிட்டது.
நல்ல  சாப்பாட்டின் மகிமையில்  உறக்கம் வந்தாலும் வழி நெடுக்க
பச்சை மரங்கள் கண்ணுக்கு குளுமையாக இருக்கவே
உறங்கவில்லை.
நடுவில் இந்த மரம் ஒரு பிட்ஸ்  ஸ்டாப். //காப்பி நேரம்.
ஒரு நல்ல வரலாறு கிடைத்தது  சிங்கம் இருந்தால் ஒரு மணி நேரம் ஆராய்ச்சி செய்திருப்பார்.
என்ன மனுஷங்கப்பா.
இயற்கையை நேசித்தால் அது நம்மை நேசிக்கும் என்று உணர்ந்தவர்கள் என்று சொல்லி மகிழ்ந்திருப்பார்.
சியாட்டிலிலிருந்து கிளம்புகிறோம். பயணம் கனடா நாட்டு வான் கூவரை நோக்கி.
அன்றுதான் எல்லோரும்  கனடா செல்வது போல சாலை இருபுறமும் 
வண்டிகள். வழி நெடுக  நீர் நிலைகள். கனடா  எல்லையை  நெருங்கும் போது ஆறு வரிசைகளில் வண்டிகள் நின்று கொண்டிருந்தன. கிட்டத்தட்ட  ஒரு மணி நேர காத்திருப்பு.
ஒவ்வொரு வண்டி திருப்பி அனுப்பப்பட்டது.
சரியான பாஸ்போர்ட், அடையாளம், பச்சை அட்டை இல்லாவிடில் கடினமாகி இருக்கும்.
எனக்கு மட்டும் கிறீன் கார்ட். மற்றவர்களுக்கு இந்த ஊர்க்  குடியுரிமை
பெற்றவர்கள்.
அடிக்கடி ஒலி  பெருக்கியில்   வண்டியின் சாளரங்களை இறக்கச் சொல்லி, பாஸ்போர்ட் எடுத்து வைத்து ஜன்னல் அருகில் 
காண்பிக்கும்படி   உத்தரவுகள் வந்து கொண்டே இருந்தன.

கைகளில்  ஐந்து பாஸ்போர்ட்டுகளையும் வைத்திருந்த மருமகன், உள்ளே ஒருவரோடு ஒருவர் 
 வார்த்தைகளால்  மோதிக்கொண்டிருந்த  பேரன்களை  அடக்கிக் கொண்டிருந்தார். 
வெளியேயும் உள்ளேயும் உஷ்ணம் தெறித்தது.

மகள்  முன் இருக்கையிலிருந்து  செயலிழந்து போன ஜிபிஎஸ் ஐ உயிர்ப்பித்துக் கொண்டே,

இந்த க்ஷணம் நிறுத்தாவிடில் இருவரும் இறங்கி கொள்ளலாம் 
என்று எச்சரிக்கை விடுத்ததும் 

என்ன அம்மா. வெறும் விளையாட்டுதான் என்கிறான் சின்னவன்.
அரைமணி நேரம் ஒரே அமைதி.

எங்கள் வண்டி அந்த ஜன்னல் அருகே வந்ததும்,
ஒரு போட்டோ எடுத்துக் கொண்ட அதிகாரி 
போகச் சொல்லி விட்டார்.

அடச்சே  , இதுக்குத்தான் இத்தனை ஆர்பாட்டமா . 
அம்மா  தே  ஆர் நைஸ் பீப்பிள்  மா.  என்று பெரியவன் 

சின்னவன் பக்கம் திரும்பி கிருஷ்ணா  எப்பப் பார்த்தாலும் என்னோட சண்டை 
போடாதே . 
ஆ ஃப் டர்  ஆல்  நான் தான் பெரியவன். நீ வீட்டுக் கொடுக்கணும் என்று 
சொல்ல  ,இவன் தன்  தமிழில்  மறு  மொழி சொல்ல,
இனிதே மாரியாட் விடுதிக்கு வந்து சேர்ந்தோம்.😃😃😃😃😃😃😃😃
இரண்டு  மணி நேர பயணம் ,காத்திருப்பு இரண்டு மணி நேரம்  பிரிட்டிஷ்  கொலம்பியா மாகாணம்  வந்து சேர்ந்த பொது நேரம்  மாலை 6 மணி .



Monday, August 26, 2019

நேயர் விருப்பம்

வல்லிசிம்ஹன்
நேயர் விருப்பம் .

தீன் தேவியான் 
படம்  தேவ் ஆனந்த் ,நந்தா நடித்த படம்.  மும்பைக்கு, நாங்கள் சென்று வந்த காலங்களில் பழைய  தியேட்டர் ஒன்றில் 
பார்த்த படம்.
சிங்கத்துக்கு தேவ் ஆனந்த்  என்றால் ஒரு  பரவசம்.
மிகவும் பிடிக்கும். 
இது வெகு நீளமான  படமாக இருந்தது,.
தன்னுடைய இருபதுகளில் இந்தப் படைத்த ரசித்தவருக்கு நிறைய நேரம் உட்கார முடியவில்லை.

பாடல்கள் மிக இனிமை யாக இருக்கும்.
என்னிடைய  சென்னை விடுமுறை பொது விவி த பாரதியில்  கேட்டிருக்கிறேன்.
அட...இந்தப் பாட்டு கூட இந்தப் படத்தில் தானா 
என்று ஆச்சரிய பட்டேன் .

//வாம்மா ,போகலாம், இந்த சத்தம்  எனக்கு ஒத்துக்கவில்லை.
மெ து மெதுவே நடந்து பாந்த்ரா   போகலாம் என்று வெளியே வந்தோம்.

 எனக்கோ கதா நாயகன் தன்னைக் காதலிக்கும் மூவரில் யாரைத் தேர்ந்தெடுக்கிறான் என்று தெரியவில்லையே 
என்றிருந்தது.

அப்பொழுது இணையம் எல்லாம் அவ்வளவு  பழக்கம் இல்லை.1996
என்று நினைக்கிறேன்.

பிறகுதான் மகன் கணினி வாங்கி கொடுத்து ஈமெயில் எல்லாம் கற்றுக் கொடுத்தான்.

வெளியே வரும்பொழுது  மழை பிடித்துக் கொண்டது.
கடற்கரைச் சாலையில் விற்ற நிலக்கடலையை வாங்கி கொறித்தபடி 
தான் மும்பையில் இருந்த பொது பார்த்த படங்கள்,
அப்பாவின் மிரட்டல், அம்மாவின் ஆதரவு எல்லாம் சொல்லிக் 
கொண்டே வந்தார்,

இந்தப் படத்தில்  தேவ  ஆனந்த் 
முதலில்  நந்தாவைச் சந்திக்கிறார். மோதலில் ஆரம்பித்து 
நல்ல தோழியாக அமைவார் நந்தா. படத்திலும் அதே பெயர் தான்.

ஒரே இடத்தில் குடியிருப்பதால நந்தாவுக்கு தேவ் ஆனந்த் மீது ஈர்ப்பு 
ஏற்படுகிறது.
தொழில் முறையில்  அவர் சிமியையும்,கல்பனாவையும் சந்திக்க நேர்கிறது 

இருவரின்  சோகப் பின்னணி  அவரைச்   சிறிது 
சஞ்சலப் படுத்துகிறது.

ஆனால் வெற்றி பெறுவதென்னவோ நந்தாதான் .

இதே பாடலை என்  நாத்தனார் மகளுக்கும் மிகப் பிடிக்கும்.
அவள் கேட்டதற்கு இணங்க இங்கே பதிகிறேன்.


உங்களுக்கும் பிடிக்கிறதா என்று பார்க்கிறேன் 
எல்லோரும் வளமுடன்  வாழ என் பிரார்த்தனைகள்.

இரு பாடல்களையும்  யூ டியூப்பில்தான்  கேட்க வேண்டும்.

இரண்டாவது பாடலில் நந்தா, ஆனந்தைக் கேள்வி கேட்டுத் திணறடிக்கிறாள். 
உன்புத்தகத்தில் ஒரு பெயரை எழுதி இருக்கிறாய்.  நேரெ
பார்க்கும்போது வேறு மாதிரி பேசுகிறாய்.
உன் எண்ணம் தான் என்ன என்று.
நீயீ கண்டுபிடி என்று சவால் விடுகிறான்.
ஏன் எல்லாப் பெண்களும் உன்னிடம் சுற்றி வருகிறார்கள்
என்று கேட்க, எனக்கு உதவி செய்யப் பிடிக்கும் என்றதும் 

இப்போது உன்னைத் தெரிந்து விட்டது என்று சிரிக்கிறாள். இனிமையான படம்.
ஐசே  தொ ந தேகோ// பாடலில்  கதாநாயகியின் பார்வை தன்னை 
மயக்குவதாகச்  சொல்லி,அப்படிப் பார்க்காதே என்று சொல்வது 
அழகு.



Friday, August 23, 2019

கண்ணா வா

வல்லிசிம்ஹன்  கண்ணா வா 


Image result for Sri Krishna
Add caption

கண்ணன் வரும் நாள்   நலமாகட்டும்
 இடையே புகுந்து

கண்ணன் வரும் நாளுக்கு வாழ்த்துகள் சொல்கிறேன்.
அமைதியையும், ஞானத்தையும் கொடுக்க வேண்டும்.

கிளம்பும்பொழுது முழங்காலுக்குக் கீழே அடிபட்டதைச் சொன்னேன்.
அது ஒருவாரம் கழித்து ஒருவித கறுப்பு, நீல சிவப்பு
வரிகளாக நேற்றுக் காலை
பயமுறுத்தியது.
ரத்த ஓட்டம் தளர்ந்திருக்கிறது.
சரி இந்த மாசம் வைத்தியருக்குக் கொடுக்க வேண்டியதைக்
கொடுக்க  வேண்டிய நாள்  என்று நினைத்துப் போனோம்.

அவரை காலை  அழுத்திப் பார்த்து  நாடித்துடிப்பு நன்றாக இருக்கிறது.
கால் பற்றிப் பயம் இல்லை.


3 வாரத்தில் வடுக்கள் மறைந்து விடும் என்று சொல்லி , டயபெடிஸ்
 இப்படித்தான் செய்யும் என்று விட்டார்.

அத்தோடு விட்டாரே சாமி வணக்கம் என்று வந்து விட்டோம்.

அதனால் தான் நேற்று ,இந்தத் தோட்டப் பதிவு சுருங்கி விட்டது.

ஆடத்தெரியாமல் மேடை சரியில்லை என்று சொன்ன அம்மையார்
நினைவு வந்தால் அடியேன் பொறுப்பில்லை.ஹாஹ்ஹா.


நானும் புட்சார்ட் தோட்டமும்

Image result for butchart gardens history
Rross Fountain

ஈச்ச மரம் 
திடீர் மழைக்கு குடைகள் இலவசம் 
Image result for butchart gardens history
என்ன பாட்டுப் பாட 
Image result for butchart gardens history
Add caption
வல்லிசிம்ஹன், எல்லோரும் இன்பமாக  வாழ வேண்டும்.

Image result for butchart gardens history






. .

Thursday, August 22, 2019

கனடா பயணத்தின் ஆறாம் நாள். Butcharts Gardens Victoria.

😃😃😃😃😃😃😃😃😃😃😃
ஒரு பூவின் பெயரும்  எனக்குத் தெரியாது 
நத்தையாரின்  தோட்டம்.
புட்சார்ட்  அவர்களின் தோட்டம் 
காப்பிக் கடையின் வெளிப்புறம்.
லாவண்டர் பூக்களும்  இளஞ்சிவப்பு  மலர்களும் 
வல்லிசிம்ஹன்
எல்லோரும்  வளமாக  வாழ வேண்டும்.

கனடா பயணத்தின் ஆறாம் நாள். Butchart Gardens,Victoria.
Add caption
வாசனை ரோஜாக்கள் 
இத்தாலிய தோட்டம் 
Add caption
Gardens Victoria.
இது  என்ன பூ 



Robert Pim Butchart (1856–1943) போர்ட்லண்ட் சிமெண்ட் உற்பத்தி செய்தவர்.
முதன் முதலாக  விக்டோரியா மாகாணத்துக்கு
வந்த போது அங்கு கிடைக்கப் பெற்ற சுண்ணாம்பு
படிமங்கள் அவரை ஈர்த்தது. சிமெண்ட் கலவையை உற்பத்தி 
செய்ய மிக முக்கியத் தேவை சுண்ணாம்பு என்பதை 
உணர்ந்து அங்கேயே தனது இருப்பிடத்தை மாற்றிக் கொண்டார். 
அவரும் அவரது மனைவியும் அவரது தோழராக இருந்த ஜப்பான் தேசத்தவரை
ஒரு சிறிய தோட்டம் வைத்துக் கொடுக்கச் சொன்னதும்
அவர் தங்கள் தேசத்து முறையிலான ஒரு
sunken garden அமைத்துக் கொடுத்தார். அதைத் தொடர்ந்து இங்கிலாந்து
ரோஜாக்களும், இத்தாலிய பூக்களின் தோட்டமும் 
உருவாகின.
50 வருடப் பூர்த்திக்கு ஒரு அழகான நீரூற்றும் வடிவமைக்கப் பட்டது.
அவரது பேரன்  தன் அன்பளிப்பாக Ross நீர் வீழ்ச்சி அமைத்தார்.
இப்போதும் இந்தத் தோட்டம்
இவர்களது சொத்தாக எல்லோருக்கும் மகிழ்ச்சி கொடுக்கும்

மகாப் பெரிய இடமாக அமைந்திருக்கிறது.


புற்களினால் ஆனா  மலைசிங்கம் தெரிகிறதா.


Tuesday, August 20, 2019

பயணத்தின் ஏழாம் நாள் பகுதி 3

Sea to Sky Highway



வல்லிசிம்ஹன்
எல்லோரும் வளமாக  வாழ வேண்டும் 

பயணத்தின் ஏழாம் நாள்   பகுதி 3
 Vancouver லிருந்து  கிளம்பி  பிரிட்டிஷ் கொலம்பியாவின் 
கடலோரமாகச் செல்லும்  கடற்கரை  சாலை புகழ் பெற்றது.
ஏழாம்  நாள்   காலை 
விடுதியின்  காலை உணவை முடித்துக் கொண்டு 
கிளம்பினோம். கனடா நாட்டின் இயற்கைக்கு காட்சிகளும்  மிதமான உஷ்ணமும் எல்லோருக்கும் பிடித்திருந்தது.
காலையிலே மதிய உணவுக்கான  ஏற்பாடாக கத்திரிக்காய்  சாதமும்  பலவிதமான  நொறுக்குத் தீனிகளும்    கூ டவே ஏறின. 
மாப்பிள்ளையும், பெரிய பேரனும் பழவகைகளை  சிறிய அளவில் நறுக்கிக் கொண்டு  ஐந்து பைகளில் போட்டு வைத்தார்கள்.
Image result for sea to sky highway
இரு வழிச்சாலை கள் நிறைய விரையும்  பலவித  வண்டிகள் 

முதல் நிறுத்தம்  இந்தப் பாலம். கண்ணுக்கெட்டிய  வரை  நீல நிறம் தான்.
நீல நிறம் வானுக்கும் கடலுக்கும்  நீல நிறம் பாடல் நினைவுக்கு வந்தது.
   ஊசி இலைக்காடுகள் கடலின் காட்சியை  மறைத்தாலும்  வெண்மேகங்கள் பலவித வடிவங்களில்  எங்களைத் தொடர்ந்தன.

Image result for sea to sky highway
ஒரு  இடத்தில்  நிறுத்த பலமைல்கள் போக வேண்டி இருந்தது 
மலையும்  மடுவும்
பாறைகளாகச் சில மலைகள்.  பச்சை வண்ணம் போர்த்திய சில மலைகள். தூரத்தில் தெரிந்த நீலமலைகள்  என்று கண்கொள்ளாக்காட்சிகள். மேலே  போகும் சாலையிலிருந்து 

கீழே  தெரியும்  சாலை. என்று  பல காட்சிகளை 
காமிராவில் பாதி ,மனதில் மீ தி என்று இருத்திக் கொண்டோம் 

Sunday, August 18, 2019

பயணத்தின் ஒன்பதாம் நாள்......சியாட்டில், வான்கூவர், விக்டோரியா...2

வல்லிசிம்ஹன்

எல்லோரும் நலமாக வாழ வேண்டும்.


   பயணத்தின் ஒன்பதாம் நாள்......சியாட்டில், வான்கூவர், விக்டோரியா...2
தங்கியிருந்த  விடுதியின் ஜன்னலிலிருந்து.
 பயணம்  முடிந்து  கிளம்பும் நாள் வந்தது.

அன்புத் தோழி திருமதி.பானுமதி வெங்கடேஸ்வரனின் கணவர் பூரண குணம் பெற  வேண்டும். நம் எல்லோருடைய  பிரார்த்தனைகளும் அவர்களுடன் தான்.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
 ஆரம்பித்திலிருந்து ஆரம்பிக்காமல் ஒரு மாறுதலுக்காக
பூர்த்தியான பயண நாளிலிருந்து எழுதுகிறேன்.

காலை 8 மணிக்கு சியாட்டிலிலிருந்து கிளம்ப வேண்டும்.
நான்கு  அனைவரும் எழுந்தாகி விட்டது. 
இந்த எட்டு நாட்கள் , அருமையான சாலைகளில்,
சொகுசான வண்டியில்  அமர்ந்து பயணம் செய்தாலும் சென்ற இடங்கள்

200 மைல்கள் தூரத்தில் அமைந்திருந்ததால்
முதுகும் ,காலும் தங்களைக் கவனிக்கச் சொல்லி வற்புறுத்தின.
சின்னப் பேரனே, கால் வலி சொன்னான் என்றால்
பார்த்துக் கொள்ளுங்கள்.
பெரிய பேரன் கொண்டுவந்த டிராலியில் பெட்டிகளை
அடுக்கி வைத்தான். அவன் இந்த ஊரில் மூன்று மாதங்களாகத்
தொழில் பயிற்சி மேற்கொண்டிருந்ததால்,
அவன் பெட்டிகள் இரண்டு எங்கள் நால்வருக்கும் ஏழு நாட்களுக்கான
 உடைகள் நிரம்பிய பெட்டிகள் மூன்று என்று அந்த 
தள்ளு வண்டி நிரம்பியது.
காப்பி தயாரித்துக் குடித்துவிட்டு, ஹில்ட்டன் அளிக்கும் 
விமான நிலையத்துக்கான பெரிய வண்டியில் ஏறத்தயாரானோம்.
மற்ற பயணிகள் ஏறியதும் என் முறை. உயரமாக இருந்த அந்த வண்டியின்
படியில் ஏற முயற்சி செய்து முழங்காலில் அடி வாங்கியதுதான் 
மிச்சம்.
பிறகுதான் அந்த ஓட்டுனர் ஒரு ஸ்டூலைக் கொடுத்து உதவினார்.
அதன் மேல் கால் வைத்து ஏறுவது சுலபமாக இருந்தது.
இதை அப்பவே கொடுத்திருக்கக் கூடாதோ
இந்த மனிதர் என்று சுணங்கிய வண்ணம் காலைக் கதிரின் உதய நேரம் விமான நிலையம்
வந்தடைந்தோம்.

Sea/tac Airport , Seattle Tacoma, வசதி நிரம்பியது. ஆர்ப்பாட்டம் இல்லாமல் 
சக்கிர நாற்காலி ஏற்பாடு செய்துகொண்டு 
உதவிக்கு வந்த மரியாவுடன் முன்னேறினோம்.
American Airlines விமானம் தயாராகிக் கொண்டிருந்தது.
பக்கத்திலிருந்த  நம்மூர்க்காரர்களுடன் பேச்சுக் கொடுத்ததில்,
கல்கத்தாவிலிருந்து பயணம் மேற்கொண்டவர்கள் என்று 
தெரிந்தது. 
இரண்டு தம்பதிகள் .60 வயதுக்காரர்கள். ஒரு மாத பயணத்தில்
நியுஜெர்சியில் ஆரம்பித்து பத்து இடங்கள் சுற்றி, இங்கு
வண்டி ஏறுகிறார்கள்.மீண்டும் நியுஜெர்சி சென்று இந்தியா திரும்பப்
போவதாகவும் சொன்னார்கள்.

நல்ல உற்சாகம், உடல் தெம்பு எல்லாம் இருந்தது.
அடுத்த பயணமாக ஜப்பான் முதலிய நாடுகளுக்குச் செல்லப் போவதாகத் திட்டம்
போட்டாகிவிட்டது.
விமான முன்னறிவிப்பு வந்ததும் கிளம்பினோம்.
நான்கு மணிகள் கடந்து சிகாகோ வந்துவிட்டோம்.
என் கைப்பையைத் தான் காணவில்லை.
சக்கிர நாற்காலியில் உட்கார்ந்த போது இருந்தது.
  வெளி லௌஞ் வந்த போது காணோம். 
பெண்ணும் மாப்பிள்ளையும் மீண்டும் உள்ளே ஓடினார்கள்.
என் க்ரெடிட் கார்ட், வங்கி கார்ட் எல்லாம் 
அதில் இருந்தன.
கடவுளைப் பிரார்த்தித்தபடி இருந்தேன்.
பெண்ணும் மாப்பிள்ளையும் கவலை தோய்ந்த முகத்தோடு விமானத்திலிருந்து வெளியே
வர ,கலங்கி விட்டேன்.
அடுத்த நிமிடம் விமானத்தைச் சுத்தம் செய்யும் பெண் 
இதுதான் உங்கள் பையா என்று நீட்டினார்.
சென்ற மூச்சு திரும்பி வந்ததும் நன்றி சொல்லி இடத்தைக் காலி செய்தோம்.
உள்ளிருக்கும் பர்சைத் திறந்து பரிசோதனை செய்தேன்.
அட்டைகள் இருந்தன, மாலை ஒன்றும், பேத்திகளுக்காக வாங்கிய
மணிகள் கோர்த்த வளையல்களையும் காணோம்.
அவைகளையும்   கையில் கொண்டு சேர்த்து விட்டார் . அந்தப் பணிப்பெண்.
என்றும் வளமுடன் வாழ வேண்டும் அவரது நேர்மை.

கடவுளுக்கு நன்றி சொல்லிய படி, வாடகை வண்டியில் ஏறி
ஒரு மணி நேரத்தில் வீடு வந்து சேர்ந்தோம். தொடரும்


Friday, August 16, 2019

பயணம் போய் வந்த கதை ///1

வல்லிசிம்ஹன்

எல்லோரும் வளமாக வாழ  வேண்டும்

பயணம் போய் வந்த கதை  ///1






இது எங்கள் எட்டாம் நாள் பயணத்தின் விவரம்.

இது  பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் இருக்கும் ஒரு  கனிமச்  சுரங்கம் 

இங்கே இங்கிலாந்து முதலாளிகள் ஆரம்பித்த   கம்பெனி  காட்சியகமாக 
இன்னும் இருக்கிறது.
பிரம்மாண்டமான கட்டிடம்.
அதில் வேலை செய்த  சுரங்கத் தொழிலாளியின் பாடல்.

ஒவ்வொரு  நாளும் 16    டன் கரி அள்ளும் அவனுக்கு கிடைத்ததெல்லாம் இந்தக் கம்பெனி ஸ்டோருக்குப் போய்விடுகிறது.

வாழ்வின் இறுதி வரும் வேளையில் என்னிடம்  ஒன்றும் இருக்காது,
என்று சொர்க்கத்தின் செயின்ட்    பீட்டரிடம்  சொல்கிறான்,
அவனது ஆத்மாவும் அந்தக் கம்பெனிக்குச் சொந்தமாம்.

நாங்கள் இங்கே சென்ற பொது அங்கிருந்த 
விற் 
பனைப் பெண்கள் எத்தனை வற்புறுத்தியும் எனக்கு அங்கு செல்ல மனமில்லை,.

எத்தனை ஆயிரம் தொழிலாளிகள் இங்கே பாடுபட்டிருப்பார்கள்.
ஒவ்வொரு நாட்டிலும் ,உயிரைக் கொடுத்து  உழைத்து பகைவகைக் கனிமங்களை  வண்டிகளில் தள்ளிக் கொண்டு மேலே வந்து நல்ல காற்றை சுவாசிப்பார்கள்.



//சித்திரச்சோலைகளே பாடல் தான் நினைவுக்கு வந்தது.//
அந்தப் பெண்களிடம்  Sixteen tonnes பாடலைப் பற்றிச் சொன்ன பொது 
பாடியே காண்பி த்தார்கள். 
அங்கு வந்த ஓரிரு முதியவர்களும் தலையாட்டி ரசித்தார்கள்.
இங்கே  எடுத்த படங்களை இன்னும் வலை  ஏற்ற வில்லை.

இந்த மியூசியம் குழந்தைகளை அழைத்துச் சென்று காண்பிக்க வசதியாக
இருக்கிறது.

வெளியே  பார்த்த படங்களே  பிரமிப்பூட்டின.

எனக்குக்  கிடைத்த இனிமையான அனுபவம்  சிங்கத்தோட பாடலை இங்கே கேட்க முடிந்தது தான். கீழே இருப்பது அந்த மியூசியம் பற்றிய காணொளி.





Monday, August 05, 2019

பொறுமையின் பலம் 5

வல்லிசிம்ஹன்

எல்லோரும் வளமாக  வாழ வேண்டும்.


++++++++++++++++++++++++++++++++++++++++++
 பொறுமையின் பலம் 5



உப்பிலி அப்பனைத் தொழுது , தம்பிகளும் ,மனைவிகளும் ,அவர்களது செல்வங்களும்   மனம் நிறை மகிழ்ச்சியுடன்
பந்தல்குடிக்குத் திரும்பினர் .
 காலையில் கிளம்புவதற்கு முன் ,தம்பிகள் இருவரும்
அக்காவிடம் கேட்டார்கள். ஏன் மைலி, நாங்கள் தானே திருமாங்கல்யம் வாங்கணும்.
நீ யேன் வாங்கினே என்றதும் ,மைதிலி விளக்கினாள். நம் அம்மாவுக்கு
பெற்றோர் இல்லைடா. நான் அந்த ஸ்தானத்துல செய்கிறேன்.
செய்யச் சொன்னது உங்க அத்திம்பேர்தான் என்று சிரித்தாள்.

ஓ. அப்போசரி. என்றபடி வெற்றிலை,பாக்கு, மஞ்சள் ,மஞ்சள் வாழைப் பழங்களை
வைத்து அக்கா அத்திம்பேர் இருவரையும் வணங்கி,
ஒருவாரம் முன்னயே வந்து நடத்தி வைக்கணும் என்று
சீரியசாக முகத்தை வைத்துக் கொண்ட தம்பிகள் அணைத்துக் கொண்டாள்
மைதிலி.

வந்துடறோம் டா. நீங்கள் பத்திரமாகப் போய் வாருங்கள்
என்று அனுப்பி வைத்தாள்.









வாரிஜாவின் அடுத்த பக்கத்தைப் பார்க்கலாம்.
பிடிவாதம் உண்டு தான். ஆனால் பாசம் வைப்பதிலும் சளைத்தவள் இல்லை.
மைதிலி அம்மாவை விட மங்கா பாட்டியையும், விஜயராகவன் தாத்தாவையும் மிகவே
பிடிக்கும்.

அம்மாவின் கண்டிப்பு இல்லாமல் சொகுசாகப் பாட்டி வீட்டில் வளைய வரப் பிடிக்கும்.
பாட்டியின் திருநெல்வேலிப் பழக்கங்கள் பிடிக்கும்.
தாத்தாவின் சாமர்த்தியம் பிடிக்கும்.
மாமாக்களின் செல்லம் சற்றே அதிகம்.
 இதோ இப்போது நடக்கப் போகிற விழாவில்  ராஜகுமாரியாக வளைய வரப் போவதும் அவள தான். இரண்டு குடும்பங்களுக்கும் ஒரே  பேத்தி .
மற்ற குழந்தைகள் எல்லாம் பசங்களாகப்
போனதில் அப்பாவின் பெற்றோருக்கும்,
அம்மாவின் பெற்றோருக்கும் அவள்தான் முக்கியம்.
அவளுக்குத் தெரியாததது  மங்காப் பாட்டியின் கண்டிப்பு.
அதைப் பந்தல்குடிக்கு வந்த அடுத்த நாளே உணர்ந்தாள்.

பொண்ணே அங்க இங்க நிக்காதே. நிறைய பேர் வருவா போவா. 
நீ உங்க அம்மா, மாமிகள் நிழலை விட்டுப் போகாமல் உதவி செய்ய வேண்டும்.
வாசல் பக்கம் பந்தல் பக்கம் அலைய வேண்டாம்.
என் பிறந்து வீட்டு மனிதர்களும் வந்திருக்கிறார்கள்.

என் அக்கா,திருவேங்கடம் அவள் பேத்தியை அழைத்து வந்திருக்கிறாள்.
இன்னோரு தங்கை அவள் பேரனை பாம்பேலிருந்து அழைத்துக் கொண்டு வந்திருக்கிறாள்.

இந்தக் கோமளம் அத்தைகள்ட்ட வாயாடாதே.
இதோ பாரு வரானே  திருமலை அவந்தான் 
பாம்பே பெரியம்மா பேரன். சட்டம் படித்துக் கொண்டிருக்கிறான்
\என்றதுமே வாரிஜாவின் கவனம் திரும்பியது.
22 வயது இளங்காளையாக ,நெடு நெடு உயரத்தோடு
அங்கு வந்து தன் பாட்டியோடு பேசியவனிடம் உடன் அவள் மனம் ஒன்றியது.

16 வயது  சிம்முவும் , எட்டு வயது ஆண்டாளும்  ஆமாம்  அப்பொழுதே என்னைக் கண்டு கொண்டதாகப் பின்னாளில் கேலி செய்வார்.எனக்கு நினைவில்லை.//அவள் கண்ணில்
படவே இல்லை.
திருமலை மற்றவர்கள் கவனம் தன்னிடம் இல்லாத போது
வாரிஜாவின் அழகை ரசித்தான். அவளின் அமரிக்கையான பேச்சு பிடித்திருந்தது. // ஓ வாரிஜாவைன் துடுக்கு வால்  எங்கே போச்சு என்ற கேள்வி வரும். அவள் சிந்தை முழுவதும் திருமலையிடம் போய் விட்டது.

அவள் அவனிடம் பாம்பே பற்றி விசாரிக்க, அவன் கும்பகோணமும், காவிரியும், கோவில்களும் தன்னைப் பிடித்துக் கொண்டதைச் சொல்ல 
அடுத்து வந்த நாட்கள் பறந்தன.

மங்காப் பாட்டிக்கும் விஜயராகவன் தாத்தாவுக்கும் முறையோடு
வேதமந்திரங்கள்  ஒலிக்க, திருமங்கல்ய தாரணம் ஆயிற்று.
பளிச்சென்று பாரம்பரிய உடையில் அனைவரும் மிளிர்ந்தார்கள்.
ஆசீர்வாதம் சொல்லிக் குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப் படும்போது
மைதிலிக்கும் உப்பிலிக்கும்  பட்டுப்புடவை, வேஷ்டி , சிகப்புக் கல் பதித்த
நெக்லஸ்  தந்தை தாயை இருவரும் வணங்கினார்கள்.


அடுத்த சம்பந்திகள் சம்பாவனையாக எல்லா சம்பந்திகளுக்கும்
புடவை வேஷ்டி.
மைதிலியின் தம்பிகளுக்கும் மனைவிகளுக்கும் நகையும் பட்டும் வேஷ்டியுமாகக் 
கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.

பேத்தி பேரன் களை அருகில் அழைத்து அவர்களுக்குப் பொருத்தமான பரிசுகளை வழங்கினார்
தாத்தா. வாரிஜாவுக்கு தனியாக கெட்டியான சங்கிலியில் அன்னப் பட்சி கோர்த்த செயின்.
அதைப் போட்டுக்கொண்ட அடுத்த நிமிடம் வாரிஜாவின் கண்கள் திருமலையைத் தேடின.

அவன் முகத்தில் தெரிந்த ஆமோதிப்பைப் பெருமையாக
ஏற்றுக் கொண்டாள். இதை யெல்லாம் பார்க்க வேண்டிய கண்கள் கவனித்துக் கொண்டன.


உப்பிலி, மைதிலி அருகே வந்து //நாடகம் எல்லாம் கண்டேன் உந்தன் ஆடும் 
விழியிலே.// என்று சிரிக்காமல் சொல்ல, //சட்டப் படிப்பு என்னாச்சு என் அருமை 
மாமா// மைதிலி  கேட்க அது கல்யாணத்தில் வந்து முடிந்தது //.

உங்க பெண்ணின் வீராப்பு என்று வினவ, அது சொக்கன் கண்ட மீனாட்சி
போலக் காற்றோடு போச்சு என்று பலமாகச் சிரிக்க
மச்சினர்களும் வந்து கலந்து கொண்டார்கள்.

எப்பொழுது திருமணம். /இதோ திருவேங்கடம் பாட்டியிடமும் 
ஸ்ரீனிவாசன் தாத்தாவிடமும் கேட்டு விடலாம்.

மதிய பூரண உணவுக்குப் பின் அனைவரும் உட்கார்ந்து பேச
அன்றே சம்ப்ரதாயமாகப் பாக்கு வெற்றிலை 
மாற்றிக் கொண்டாகிவிட்டது.
 வரப்போகும் தை மாதத்தில்  இதே பந்தல் குடியில்
 திருவாளர் உப்பிலியின் மகளும், பந்த நல்லூர் சாரங்கபாணி அய்யங்காரின் பௌத்திரியுமான 
வாரிஜா என்கிற விஜயவல்லியை, திருநெல்வேலி ஸ்ரீனிவாச அய்யங்காரின் தௌஹித்ரனும்
ஸ்ரீ சுந்தரராஜனின் புத்திரனுமான திருமலை என்கிற அழகிய நம்பிக்குத்
திருமணம் நடத்த உப்பிலியப்பன், திருக்குறுங்குடி நம்பி ஆசிகளுடன்
நிச்சயிக்கப் பட்டது.
வாரிஜாவின் வாய்த்துடுக்கு எல்லாம் எங்கே போனது என்று தெரியவில்லை.
மும்முரமாகச் சமைக்கக் கற்றுக் கொண்டாள். 
பாம்பே தபாலாபீஸும், கும்பகோணம் தபால் ஆபீசும்
உறங்கவே இல்லையாம்.அவ்வளவு கடிதங்கள்.

மங்காப்பாட்டி 


கதை முடிந்தது. வாரிஜா வின் ஆசையான பட்ட படிப்பும்  பூர்த்தியானது.
பாம்பேயில் திருமணம் முடித்த கையேடு கல்லூரியில் சேர்க்கப் பட்டாள் .

                                         ++++++சுபம்+++++

.