Blog Archive

Wednesday, August 28, 2013

சின்னக் கண்ணன் வந்துவிட்டான்

Add caption
அச்சுதம் கேசவம்

Add caption
Add caption
Add caption
ஸ்ரீகிருஷ்ண விஜயம்
வெண்ணெய்க் கிருஷ்ணன்
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Monday, August 26, 2013

இன்று இணையம் வந்தது! நம் நாட்டுத் தொலைபேசியின் சேவையைப் பாராட்டியே
ஆக  வேண்டும்..வெள்ளி இரவு ஒரு தொலைபேசி இணைப்பு நின்றது.
ஒண்ணாம் நம்பரை அழுத்தவும். இரண்டாம் நம்பரை அழுத்தவேண்டும் என்ற கட்டளைகளைப் பூர்த்தி செய்து புகார் எண்ணூம் வாங்கியாச்சு.

என்ன அதிசயம்     யம் அடுத்தநாள் வந்துவிட்டார்  லைன்ஸ்மேன்.
எங்கமா தப்பு என்று என்னைக் கேட்டார்.தொலபேசிக்கு எங்கு நோய் வரும் என்று அவ்வளவாகத் தெரியததால்.வெளியே போய், அங்கே இருக்கும் கனெக்ஷனைக் காண்பித்தேன். நல்லாதானே இருக்கு.  ம்ம்ம்.. என்று மோவாக்கட்டையைச் சொறிந்து கொண்டே அந்த இடத்தைச் சுற்றி வந்தார்.
அம்மா.நான் இதோ போய் உடனெ வரேன் என்று வாசல் வழியே மறைந்தார்.
நாங்களும் கோவிலுக்குப் போகாமல் காத்திருந்தோம்.


இன்னோரு கம்ப்ளெயிண்ட் கொடுக்கலாம் என்று அடுத்த ஃபோனை எடுத்தால்  டயல் டோனே இல்லை.
ஆஹா,ஆவீன்றுவிட்ட்து. மழைபெய்கிறதோ என்று இணையத்துக்கு வந்து பார்த்தேன்.ஆ!
உயிருடன் இருந்தது.அவசரமாக அனுப்பவேண்டிய மெயில்களை அனுப்பி விட்டுக் காப்பி குடிக்கப் போனேன். பிடித்த சினிமா ஒன்று போய்க் கொண்டிருந்த்து தொலைக்காட்சியில். சரி அதைப்பார்க்கலாம்
 என்று உட்கார்ந்துவிட்டேன். நிமிர்ந்தபோது மணி நாலு.
சரி புதுபதிவுகள், தட்ஸ்தமிஷ்,தினமலர்,என்று  பார்த்துக் கொண்டு

வரும்போதே மோடத்தின் விளக்குகள் அணைய ஆரம்பித்தன.!

அடுத்தது மனையாள் பிரசவிக்க என்று வரும் என்று நினைவுக்கு வருகிறது.
மாமியார்  சொன்ன  வார்த்தைகள்:)

அவ்வளவுதான் வெளி உலகத் தொடர்பு துண்டிக்கப்பட்டது. கைபேசியில் ராஜ்ஜியம் செய்யலாம் என்று ஆரம்பித்தேன்

எல்லோரும் என்னை விட வயதானவர்கள்.
கைபேசியின் கரகரப்பு பிடிபடவில்லை.
பிறகுதான் தெரிந்தது மயிலையில் மட்டும்   100 இணைப்பு பழுதாம்.
பழைய லைன்ஸ் மேன் வந்து ஒரு நிமிடத்தில் சரிசெய்துவிடுவார்.
அவருக்கு எங்கள் தூண்(டெலிஃபோன் பில்லர்)  அவரது கைவிட்டுப் போய்விட்டதாம். பாவம். நல்ல மனிதர்.
நாளை தெரியும்.
இவர் இன்னும் வரவில்லை.

****************************************************
இன்று
வந்தார் பார்த்தார். முழுவதும் கேபிள் மாற்ற வேண்டும் என்று
சொல்லி 1500 ரூபாய் வாங்கிப் போயிருக்கார்.
இணையம் வந்துவிட்டது. ஆனால்   தொலைபேசி சத்தம் இல்லை.
இந்த மாத தண்டம் இந்த செலவு.:(
அடையாரில் மட்டும் தான் டெலிஃபோன் கேபிள் கிடைக்குமாம். போயிருக்கிறார்.

 எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Saturday, August 24, 2013

பந்தம் தரும் பாதுகாப்பு

Add caption
Add caption
என்னைக் காக்கும் அண்ணா உன் வாழ்வு சிறக்கட்டும்.
அண்ணன்  கை காண்பிக்கத் தங்கையின் கரம் பிடிக்கும் சொக்கநாதர்.

 ரக்ஷாபந்தன் விழா நடந்து  முடிந்திருக்கும்  இவ்வேளை.
வடநாட்டு வழக்கம்   என்றாலும்

இந்தப் பாசப் பிணைப்பு நம்மிடமும்  இல்லாமல் இல்லை.

கனுவுக்கும் கார்த்திகைக்கும்   தம்பியோ அண்ணாவோ கொண்டுவரும் சீர்....அது பத்தோ நூறோ ஆயிரமோ
புடவையோ   எதுவோ  கொண்டுவந்து கொடுக்கும்போது கிடைக்கும் ஆனந்தம் அளவற்றதுதான்.
கடைகளில் அலை மோதும் பெண்கள்  கூட்டத்தாஇப் பாஅர்த்து அதிசயித்தேன்.
நம்மூர்ப் பெண்களுக்கு   இத்தனை ஈடுபாட என்று அங்கிருந்த ஒரு குட்டிப் பெண்ணிடம் கேட்டபோது. ,நிறைய வாங்குகிறாயே அம்மா
உனக்கு இவ்வளவு சகோதரகளா என்று கேட்டேன்.
இல்லை ஆந்டி,
இது    தொந்தரவு செய்யும் கல்லூரி நண்பர்களிடமிருந்து
தப்பிக்க நாங்கள்   செய்யும் தொந்தரவு.
எங்களுக்கு வேண்டுவது நட்பு.
அவர்களுக்கு வேண்டுவது ஊர்சுற்றல்.கன்னாபின்னானு செலவு. இரவு நேரம் கழித்து வீடு திரும்புவது.

சிலசமயம் எங்கள் பாக்கெட் பணமும் செலவாகிவிடும்.
அதுதான்  முன்னேற்பாடாக  நல்ல  குணம்பொருந்திய
நண்பர்களை ராக்கி அண்ணாக்களாகப் பாவித்து அவர்களுக்கு இந்த ரட்சையைக் கட்டிவிடுவது.

எப்பொழுதும் உன்னைக் காப்பேன் துணை இருப்பேன்
என்ற உறுதி மொழி இதில்  முக்கியம்.
அதுவும்  இப்பொழுது  நகர்களில் பாதுகாப்பு குறையும் போது
நாங்கள் வேறு வேறு  இடங்களுக்குச் சென்று படிக்க நேரும்போது
அவர்களும் துணை வருவார்கள். வீடுவரை கொண்டுவந்து விட்டுச் செல்வார்கள்.
இதைக் கேட்டதும் என் பெண்படித்த காலம் நினைவுக்கு வந்தது.
அவளும் சி ஏ  படித்ததால் இரவு ஒன்பது மணியாகும் வீடு வர.

அவள் நண்பர்கள் இரு   சகோதரர்கள். மந்தைவெளியில் வீடு,. இருந்தாலும் இவளைத் தெருமுனை வரை வந்து விட்டுப் பிறகு பஸ் ஏறிப் போவார்கள்.
அந்தப் பையன்கள் இப்பொழுது வேறு வேறு நாடுகளில் இருந்தாலும் ரக்ஷாபந்தன் கடிதம் வந்துவிடும்.
தெருமுனையிலிருந்து வீட்டு அண்ணன் அழைத்துக் கொண்டு வந்துவிடுவான்!!

இப்பொழுது காலம் மாறிவிட்டாலும்,
ஏதோ துளி அளவு பாசமாவது  மிஞ்சியிருந்தால் பெரும்பாலான
குற்றங்கள் தவிர்க்கப் படும்.

இறைவந்தான் அருளவேண்டும். என் அன்பு இணைய சகோதரிகளுக்கும் சகோதரர்களுக்கும்  பந்தபாசம்  எனும்  சிறு நூலைக் கட்டிவிடுகிறேன்.
வாழ்க வளமுடன்.ராக்கி  கட்டிக்கொள்ள மறுத்து  ஓடும் நண்பர்களையும் பார்த்திருக்கிறேன்:)

 எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Friday, August 23, 2013

தேய் பிறையின் களங்கமில்லா அழகு

எத்தனை வண்ணம் எம்பெருமான்.
தங்க நிலவில் கெண்டை இரண்டு துள்ளித் திரிவதுண்டோ
வானத்தின் தீப மங்கள் ஜோதி
நீலகண்ட சிவனின் சிரசில் உறையும் பிறையோ
பூஜ்யத்துக்குள்ளே ஒரு ராஜ்ஜியத்தை ஆள் வந்துப் புரியாமலே  இருப்பான் ஒருவன். அவனைப் புரிந்து கொண்டால் அவந்தான் இறைவன்
தெருவிளக்குப் பூமியின் விளக்கை மங்க வைக்க முயற்சித்தாலும் தண்மை  வீசுகிறாள் நிலவன்னை
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Thursday, August 22, 2013

நாளை பௌர்ணமி ஆவணி நிலா

Add caption
எட்டிப் பார்த்துத் தேடி அலைந்து கண்ட நிலா
நிலவு  தெரிகிறதா:)
Add caption
மேகங்களோடு  நிலா அம்மா

இரண்டு மூன்று நாட்கள் மழை
இதற்கு நடுவில் முழுநிலா நமக்குக் காட்சி
தருமா. மறுபடி ஏமாற்றமா.
யோசித்தபடி  இருந்தேன் நாள் முழுவதும்.
 வெய்யில் அடிக்கும் போது
மழை வரும்.
இன்று நில்லாமல் வருமா நிலா  என்றபடி 7 மணிக்கு மேல்
வெளியே வந்த எனக்கு லேசான மஞ்சள் வர்ணம்கண்ணில் பட்டதும்
ஆஹா வந்துவிட்டாள்  என்ற பாட்டுதான் வந்தது.
பிறகென்ன ஆடாமல் நின்று படங்கள் எடுத்தாகிவிட்டது இங்கே பதிந்தும் ஆச்சு.
இன்று அவிட்ட நிலா  எப்படி வருகிறது பார்க்கலாம்.:) எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Tuesday, August 20, 2013

ஆவணி அவிட்டம் ஸ்பெஷல்

 
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

 ஸாஸ்திர சம்பந்தமாக  இன்று உபாகர்மா  செய்தவர்களுக்கு மனம் நிறைந்த
வாழ்த்துகள்.

எங்கள் வீட்டில் அப்பம் வடை ,இட்லி   இவைகளோடு
ஒரு கோதுமை  மாவு க்ஷீரா செய்வதும் வழக்கம்.

க்ஷீரா என்பது பெரிய விஷயமில்லை.
கோதுமை மாவை புளியம்பூவாக வறுத்து,
சர்க்கரையைக் கரைத்து மெல்லிய பாகு வைத்து இந்த வறுத்த மாவை அதில் சேர்க்கவேண்டியதுதான்.
மேற்கொண்டு ஏலப் பொடி,குங்குமப்பூ,முந்திரி,பாதாம், பச்சக் கற்பூரம் எல்லாம் சேர்த்து வாசனைக்கு  நெய்.
இந்தத் தடவை பலவித    தொந்தரவுகள் கல்யாணங்களுக்கு நடுவில் கோதுமை மாவு மட்டும் வீட்டுப் போச்சு.

மைதாமாவை ஒதுக்கி நாட்களாச்சு. ரவையில் செய்தால் கேசரி ஆகிவிடும்.
என்னய்யான்னு பார்த்தல் மகன் வாங்கி வந்த பாதாம்,வால்நட் எல்லாம் கண்ணில் பட்டன.
இதையெல்லாம் அரைத்தாலும்  ஒரு பைண்டிங்  ஏஜண்ட்  வேணுமே.
கண்ணில் பட்டது தகடு தகடாக அவல்.!
அதையும் கழுவி இந்த அரைத்த கலவையில்  கலந்து
அடுப்பில் ஏற்றியாச்சு.

அதன் தலையிலியே இரண்டு கப் சர்க்கரையைப் போட்டது, கொஞ்ச வெந்நீர்விட்டு நாலு கிளறு கிளறிவிட்டால் கமகம் அல்வா ரெடி
பிறகு மேற்சொன்ன அலங்காரங்கள் செய்ததும் நரசிம்மரின் செந்தூரவர்ணம் கிடைத்துவிட்டது.

பயப்படாமல் சாப்பிட்டுவிட்டு நல்லா இருக்குமான்னு ஷஷியே செர்டிஃபிகேட் கொடுத்துட்டாள்.

நீங்களுமே கூட எடுத்துக்கலாம்.

Posted by Picasa

Monday, August 19, 2013

அவர் டிஃபீட்டட் இல்ல?

எங்க வீட்டு மஹாலக்ஷ்மி

 மங்களகரமாகப் பண்டிகை   பூர்த்தியானது.
இனி வரிசையாக ஆவணி அவிட்டம், ஸ்ரீஜயந்தி ,பிள்ளையார் சதுர்த்தி என்று தொடரும்.

பெண்ணிடம் ஸ்கைப்பில் பேசிக்கொண்டிருந்தபோது,
பேரனும் வந்தான்.
யூ  நோ  வாட் பாட்டி?
என்ன செல்லம்.
ஐ   ஸா  யுவர் டிஃபீட்டட் ஃபாதர்.

??????????????????????????????????????
பெண்ணிடம் என்ன சொல்றான் உன் பையன் என்றால் அவள் சிரிக்க ஆரம்பித்துவிட்டாள்.

சின்னப் பேரனுக்கு அவள் சொல்லிக் கொடுத்திருப்பது. இறந்துவிட்டார்(டெட்)
என்ற வார்த்தையைப் பயன்படுத்தாம.
அவருக்கு வயதாகி விட்டது.
ஹி காட்    டிபீட்டட் பை  ஏஜ்.
ஸோ இது மாதிரி ரொம்ப வயசானவர்களுக்கு  இந்த மாதிரி ஆகலாம். என்று சொல்லி இருக்கிறாள். வீட்டில் மாட்டியிருக்கும் பெரியவர்கள் படம் எல்லாம் அவன் பார்த்துக் கேட்டக் கேள்விக்கு அவள் சொன்ன பதில்.

என் மாமாவுக்கு உடல் நலம் குன்றி சரியாக் வீட்டில்  மெதுமெதுவாகக் குணம் அடைந்து வருகிறார்.
அவளுடன் மாமா தேவலை  என்றதும்,
இந்த வாண்டு கூட வந்துவிட்டது. ''ஹூ பாட்டி?''
மை   அன்கிள்''

ஹி இஸ்  நாட் டிஃபீட்டட்?
நோ . பகவான் காப்பாத்திட்டார்.
திச் இஸ்  நாட் ரைட். வென் யுவர் மாமாஸ்          ஆர்     நாட் டிஃபீட்டட்
வொய் டிட்    my mom's  maamaa got defeated. it is not fair:(

அதில்லப்பா. சிலசமயம்   இது போல ஆகும் . நோ மோர் க்வெஸ்டியன்ஸ்னு

நான் அடக்கிவிட்டேன். இது எந்தப் பக்கமெல்லாம் போகும்னு எனக்கும் தெரியும்:)

இதெல்லாம் முடிந்து நேற்று சதர்ன்ஸ்பைஸ் கடைக்குப் போயிருக்கிறார்கள் அம்மாவும் பிள்ளையும்.
அங்கே தெரிந்த  இளஞரும் வந்திருக்கிறார்.

கிருஷ்ணா  என்னை ஞாபகம் இருக்கா  என்று சிரித்தபடி கேட்டு இருக்கிறார்.
ஆஹ்ன் ஊன்ஹ்  என்று யோசித்துவிட்டு  ஐ நோ  யூ. யூ ஆர் மை பாட்டிஸ்அப்பா.  என்று பளீர் பதில் . அவர் திணறி விட்டார்.
வாட் வாட் என்று அவர் கேட்க
இவன் மீண்டும் சொல்ல
அவர் முகமெல்லாம் சிவந்து விட்டதாம். ஏன்  .........உன் அப்பான்னு கூடச் சொல்லலை. உங்க அம்மாவோட அப்பான்னு சொல்கிறானே
என்று சிரிக்க ஆரம்பித்துவிட்டாராம்..

என் பெண்ணுக்கோதீராத சிரிப்பு ஒரு பக்கம். அவஸ்தை ஒருபக்கம். அவன் ஏதோ நினைவில் சொல்கிறான். மன்னித்துவிடுங்கள் என்று பாதிப் பொருட்களை அப்படியே வாங்காமல் விட்டுவிட்டு வீட்டூக்குச் செல்ல
வண்டியில் ஏறினாளாம்.
பாதிவழியில் இவள் அவனைக் கேட்பதற்கு முன் அவன்  பதில் சொல்கிறானாம்.
He looks exactly like paatti's appa. maybe paatti's appa  got successful  HERE!!!
இப்பொழுது சிரிப்பாக இருந்தாலும்
பிறகு   அவரிடம் மன்னிப்புக் கேட்டுக்கச் சொல்லி   இருக்கிறேன் . எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Thursday, August 15, 2013

வரலக்ஷ்மி வருவாயம்மா

தாயே  வரமருள்வாய்
வரலக்ஷ்மி வரும் நாள்  வரும் வெள்ளிக்கிழமை
மஹாலக்ஷ்மி அருட்கடாக்ஷம்

 ஆவணி மாதம் பவுர்ணமிக்கு முன்வரும் வெள்ளிக்கிழமையில் வரலட்சுமி விரதம் வருகிறது. கணவரின் ஆயுள்பலம் அதிகரிக்கவும், குடும்ப ஒற்றுமை சிறக்கவும் பெண்கள் இதனை அனுஷ்டிக்கின்றனர்.

இந்த விரதம் குறித்து ஒரு கதை கூறப்படுகிறது... மகத தேசத்தில் குண்டினா என்னும் ஊரில் சாருமதி என்ற பெண் லட்சுமிதேவியின் பக்தையாக இருந்தாள்.
 அவளது கனவில் தோன்றிய தேவி, தன்னை வரலட்சுமியாக வழிபட்டால், வேண்டிய வரங்களைத் தருவதாக அருளினாள்.
 சாருமதியும் தன் குடும்பத்தினரிடம் இதை தெரிவித்து, ஒரு வெள்ளிக்கிழமையில் வழிபாடு செய்தாள். மற்ற பெண்களும் இந்த விரதத்தை மேற்கொள்ளத் தொடங்கினர்.
 வரலட்சுமி விரதத்தன்று, வீட்டை சுத்தம் செய்து, பூஜையறையில் வாழையிலையில் பச்சரிசியைப் பரப்பி, கலசம் வைக்க வேண்டும்.
அதில் மஞ்சள் பூசிய தேங்காயை வைத்து மாவிலையால் அலங்காரம் செய்ய வேண்டும்.
 கலசத்தின் முன்புறம் வெள்ளி அல்லது தாமிரத்திலான லட்சுமி முகத்தை வைத்து ஆபரணங்களை அணிவிக்க வேண்டும்.
 லட்சுமி அஷ்டோத்திரம், சகஸ்ரநாமத்தை சொல்லி வழிபட வேண்டும். இனிப்பு பலகாரங்கள், பழவகைகள் நைவேத்யம் செய்து, தூபதீபம் காட்டி
சாஷ்டாங்கமாக வணங்க வேண்டும். வீட்டுக்கு வரும் சுமங்கலிகளுக்கு தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு கொடுத்து வழியனுப்ப வேண்டும்.

விரத பலன்கள்:

1. உயர்ந்த ஞானம் கிடைக்கும்.
2. மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும்.
3. மங்கல வாழ்வு அமையும்.
4. மனதில் உள்ள விருப்பங்கள் ஈடேறும்.
5. கல்யாணம் ஆகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.

அம்மனை பூஜை செய்ய பூஜாவிதானம் புத்தகங்களில் கூறப்பட்டுள்ள வழியையே பின்பற்றவும். அப்படிப் பின்பற்ற இயலாதவர்களுக்குச் சில எளிய பூஜா மந்திரங்கள் இதோ :

திருமகளே திருப்பாற்கடல் ஊடன்று தேவர் தொழ
வருமகளே உலகெல்லாமும் என்றென்றும் வாழவைக்கும்
ஒருமகளே நெடுமால் உரத்தே உற்று உரம்பெரிது
தருமகளே தமியேன் தலைமீது நின்தாளை வையே
(வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்)

மகாலட்சுமி காயத்ரீ :

ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே
விஷ்ணு பத்னீ ச தீமஹி
தன்னோ லக்ஷ்மீ : ப்ரசோதயாத்

ஸ்ரீ வேதாந்த தேசிகரின்   ஸ்ரீ ஸ்துதி  முதல் ஸ்லோகம்மாநாதீதப்  பிரபித விபவாம் மங்களம் மங்களானாம்
வக்ஷப் பீடீம் மதுவிஜயனொ பூஷயந்திம் ஸ்வகாந்த்யா
ப்ரத்யாக்ஷனு ஸ்ரவிக மகிமா பிரார்த்தனீனாம் பிரஜானாம்
ஸ்ரேயோ  மூர்த்திம்  ஸ்ரியாம்  அசரணஹ த்வாம் சரண்யாம் பிரபத்யே//***********88888888888888888*******************************

மங்களங்களையெல்லாம் அருளும் மஹாலக்ஷ்மி
திருமாலின் மார்பில் எழுந்து அருள் புரிபவள்
அவளைப் பார்த்துப் பிரார்த்தனை செய்யும் 
அருளையும் அவளே வழங்கி  பிரார்த்தனைகளையும் நிறைவேற்றுகிறாள்.

ஸ்ரியை எனும் அவள் பெயருக்கேற்ப மங்களங்கள் தருபவள்.
  திருமாலின் அகத்தாமரையில் வீற்றிருக்கும் தாயாரைச் சரணம் புகுந்துவிட்டால் வேறு எந்தத் தெய்வத்தைத் துதிக்கவேண்டும்.

பதிவில்   ஏதாவது பிழையிருக்குமாயின் மன்னித்தருளவேண்டும்.
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Monday, August 12, 2013

நினைவோ ஒரு பறவை

பழைய  இனிய நினைவுகள்        ஸ்ரீமதி அம்புஜம் கிருஷ்ணா,
என் மாமியார்,சிங்கத்தின் கஸின்                                                                                                                    
மங்கல வண்ணம்
ஏழுவண்ணங்களோடு வாழ்க்கை
ஆழிமழைக் கண்ணனின்  நிறம்
எனக்கும் இந்த மேதைக்கும் ஜாடை இருப்பதாகச் சொல்கிறார்கள்:)
என்ன எதிர்பார்ப்போ
பைகள்

ஒரே ஒரு பூ
ஆரம்பம் ஒரு தோட்டம்
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்