முந்தைய பதிவில் போட்டிருந்த படம் ஒரு யானையின் பல்.
அதுவும் கடைவாய்ப்ப்பல்.
எங்கள் தந்தை முதுமலைக் காடுகளில் உள்ள தபால் அலுவலக விஷயமாகப் போயிருந்தபோது வாங்கி வந்த யானைப்பல்.
அம்மாவிற்கு முதல் முதலாக வாங்கிய தோல் பெட்டியில் இதுவும், ஒரு குட்டித் தந்தமும், ஒரு ஏலக்காய்ப் பையும் வெகு நாட்கள் இருந்தன.
எங்கள் சின்ன வயதில் ,இந்தப் பெட்டியைத் திறந்து வாசனை பிடிக்க எங்கள் மூவருக்கும் மிகப் பிடிக்கும்.
இங்க இருக்கும் பெண் சாமர்த்தியமாகத் தாத்தாவிடமிருந்து கேட்டு வாங்கி வந்துவிட்டாள்.:)
எத்தனையோ தடவை,
எங்கள் பல்வலிக்கு இந்தப் பல் உதவி இருக்கிறது. இதை ஒரு கலுவத்தில் அரைத்து,அந்த விழுதை அம்மா பல்லில் தடவி விடுவார்.
மரப்பாச்சி பொம்மையை உரைத்துக் கண்ணுக்குத் தடவுவார்.
தேங்காயெண்ணெயைக் காய்ச்சி,அதில் ஒரு பல் பூண்டைப் போட்டு,அதை நசுக்கிய சாறு காதுவலிக்குப் பயன்படும்.