| Add caption |
| Add caption |
| Add caption |
| தெய்வ அருள் |
![]() |
| நிலவளமை இயற்கை அருள் |
நான்கு மணிக்கே ஆஜிப்பாட்டி எழுந்தாகி விட்டது.
முதல் நாள் என்னிடம் சொல்லி இருந்ததால் நானும் எழுந்து சத்தமில்லாமல் மாடி குளியலறையில் சுத்தபத்தமாகக் குளித்துவிட்டு கீழெ வந்து காப்பி பில்டரில் முதல் டிகாக்ஷனில் ஆஜிக்குக் காப்பி கொடுத்துவிட்டு
என் மாமியாரை எழுப்பப் போனேன்.
மாமிக்குச் சர்க்கரை நோயிருந்ததால் சீக்கிரம் எழுந்து வருவதும் காரியங்கள் செய்வதும் சிரமம். உணவு உள்ளே சென்றுவிட்டால்
அப்புறம் ஆளைப் பிடிக்க முடியாது.
மாவிலை கட்டிடுமா. வாசலில் துளி மஞ்சள் கலந்த தண்ணீரைத் தெளித்து
நல்ல மணக்கோலம் போடு.
என்னென்ன நல்ல காரியம் செய்கிறாயோ
அத்தனையும் உன் அக்ஷயம்.
அக்ஷயம் என்றால் என்ன என்று கூடத்தெரியாத மடம் நான்.
மாமியார் விளக்கினார். நீதான் தமிழ் படிச்சிருக்கியே . மணிமேகலையின் அக்ஷய பாத்திரம் தெரியுமா.
தெரியும்.
அதில் எடுக்கக் குறையாத அன்னம் வரும். அவளும் பிட்சை இடுவாள்
நீ படித்திருக்கிறாய் இல்லையா.
ஆமாம்மா.
அதுதான் இந்த நாளின் குணமும்.
இன்னிக்கு நம் வீட்டுக்கு வருபவர்களுக்கெல்லாம்
முடிந்த அளவு தர்மம் செய்யவேண்டும்.
வீட்டில் இருக்கும் கடவுளர்களுக்கு அர்ச்சனை ஆராதனம் செய்து
எல்லோரும் வளமோடு இருக்க வேண்டிக் கொள்ள வேண்டும்.
குழந்தைகளுக்குப் புத்தகங்கள் வாங்கிப் படிக்கச் சொல்லணும்.
நல்லவார்த்தைகள் பேசவேண்டும்.'
இந்தவிதத்தில் இனிமையாக இந்த நாளைக் கழித்தால்
ஆண்டு முழுவதும் அட்சய பாத்திரம் போல ஆநந்தம் பெருகும்.
வீடு முழுவதும் சந்தன வாசனை. சாம்பிராணி மணம்.
கோவில்களிலிருந்து வரும் பிரசாதங்கள்.
பாட்டியை நமஸ்காரம் செய்து புத்தாடை வாங்கிச் செல்லும்
கிராமத்திலிருந்து இதற்காகவே வந்திருக்கும் குடியானவர்கள்.
முந்தைய ஆண்டுகளில் ஆஜிப் பாட்டியே அங்கே போய் வேண்டும் என்பதைச் செய்துவிட்டுவருவார்.
இந்த 88 வயதில் அதெல்லாம் முடியவில்லை.
விருந்துக்கு வரும் பேரன்கள் பேத்திகள்.
அவர்களுக்கும் தாம்பூலமும் ரவிக்கைத் துண்டும் உண்டு.
அருமையான அந்த நாள் இப்போது எங்கே போனது,.
ப்ளாட்டினமும்,சில்வர் மைனும் தொலைக்காட்சியில் மின்னுகின்றன.
எனக்கு அடுத்த மாதம் என்ன மின் கட்டணம் வருமோ என்ற பயம் மட்டுமே;)
எல்லாமே அட்சயதிரிதையை அட்சயம் மாதிரி விலைகள் தான் உச்சத்தில் இருக்கின்றனவே!!!
அனைவருக்கும் எல்லா நாளும் மங்கலம் பொங்க வாழ்த்துகள்.

