Blog Archive

Showing posts with label தாலாட்டு. Show all posts
Showing posts with label தாலாட்டு. Show all posts

Tuesday, June 17, 2008

கண்ணே என் கண்மணியே கண்ணம்மா தாலேலோ

எப்பவோ ஜன்மங்கள் முன்னால் தூளியில் ஆடிய நினைவு உண்டு. அதுவும் மாமா' சின்னஞ்சிறு கிளியே பாடு





என்று சொன்ன நினைவும் இருப்பதால்,கொஞ்சம் இரண்டு வயதாவது ஆகியிருக்கும் என்று நினைக்கிறேன்



அதற்கப்புறம் எங்க குழந்தைகளுக்குத் தூளியெல்லாம் பழக்கப் படுத்தவில்லை.
பெரியவனுக்காவது தொட்டில் இருந்தது. அடுத்தது ரெண்டும் தரைதான்..
எப்படியோ தூங்கி வளர்ந்து இப்ப அவர்கள் குழந்தைகள் காலத்தில் க்ரிப்தான்
முழக்கம்.
அது விளையாடுவதை விடத் தூக்கிக்கோ அழுகை,சிணுங்கல் நிறைய.:)
ஸ்விஸ்ல இருக்கிறது ஓடி ஓடிக்களைத்து அப்புறம் தூங்குகிறது. இங்க இருக்கிறதுக்கு பாட்டு போடணும்,இல்லாட்டா தள்ளுவண்டியில் போட்டு பாடிக் கொண்டே நடக்கணும்.
எனக்கு நல்ல பயிற்சி ஒத்துக்கறேன்.
ஆனால் சில பாட்டுக்குத்தான் தூக்கம் வரது அதுக்கு. எம். எஸ். அம்மா பாட்டுக்களிலியே டோலாயாம், க்ஷீராப்தி கன்யககு இரண்டு பாடல்களுக்கும் கொஞ்சம் எஃபெக்ட் உண்டு. நர்சரி ரைம்ஸ் போட்டால் கொட்ட கொட்ட விழிக்கிறது.
நீ மாட்டு தள்ளு நான் மாட்டுக் கேக்க்கறேன் என்கிற மாதிரி முகத்தில எக்ஸ்ப்ரஷன்.
அங்க சிகாகோல இருக்கிற பேரன் பாம்ம்பே சகோதரிகளின் அற்புதமேன்னு தொடங்குகிற பாட்டைப் போட்டால் தான் தூக்கம் வருகிறது என்று மழலையில் சொல்கிறான்.
இன்னோரு வாட்டி போடுன்னு ஆறு தடவை இன்னோரு வாட்டி போட்ட பிறகுதான் கண் சொக்க ஆரம்பிக்கும்.
அதுவரை அம்மாவோ அப்பாவோ தூக்கிக் கொண்டு நடக்கணும்.
இதுக்காகவே தூக்கம் ஏன் வரலைனு இணையத்துக்குப் போய்ப் பார்க்கிறாங்க.
அதிலேருந்து என்ன விஷயம் பார்க்கிறாங்களோ படிக்கிறாங்களொ கொஞ்சம் சமதானம் ஆகும்.
நாம சொல்றதெல்லாம்'இப்படித்தானிருக்கும் ஒண்ணரை வயசானா எல்லாம் செட்டில் ஆகிடும்'
என்று சொன்னால் 'அப்படியெல்லாம் விடமுடியாதும்மா.
எல்லாத்துக்கும் ஒரு காரணம் இருக்கும்.கண்டு பிடிக்கணும்.''
சரிம்மா,சரிப்பானு விட்டு விட வேண்டியதுதான்.
போதாக்குறைக்கு பேரண்டிங்.காம் வேற இருக்கா.
அதில என் பொண்ணு,பையன் ராத்திரி தூங்க மாட்டேங்கறது என்ன பண்ணலாம் அம்மான்னு வேற கேள்வி போடுவாங்க. அதில ஒரு திருமதி படேலோ,அகர்வாலோ, ராஜலக்ஷ்மியோ வந்து ரெண்டு மூணு யோஜனையைக் கொடுப்பாங்க.
தூங்கறத்துக்கு முன்னால கொஞ்சம் பால் கொடுங்க.
எட்டுமணிக்குத் தொட்டில்ல போட்டுட்டு வெளில வந்துடுங்கோ. அது அழுதாலும் எட்டிப் பார்க்ககூடாதுன்னு இப்படிப் போகும்.
இவங்க பாலும் கொடுப்பாங்க. தொட்டில்லயும் போடுவாங்க.
ஆனா முணுக்னு அது சிணுங்கறத்துக்கு முன்னால போய் நின்னுடுவாங்க.:)
மடியில் போட்டுத் தட்டினாத் தானே தூங்கிடும்.அதுக்கு என்ன வேணும். டயப்பர் காய்ஞ்சு இருக்கணும்.வயிறு ரொம்பி இருக்கணும், அவ்வளவுதானே. !!! வயித்துவலியும் இருக்கக் கூடாது, அது ரொம்ப முக்கியம்.
இரண்டு வயது வரை இப்படித்தான் இருக்கும்.அதுக்கு அப்புறம் வேற மாதிரி
பேச்சு,பழக்கம்,சாப்பாடு மாறியதும் அதுவும் சமர்த்தாயிடும்:)
நம்புவோம்.





Aggregated by Thenkoodu.com - Tamil Blogs Portal