ஸ்ரீ ருக்மிணி தேவி தாயார்
கீதையின் நாயகன் கடத்திப் போய்க் கலயாணம் முடித்த நங்கை ருக்மிணி. கண்ணனைப் பார்த்ததில்லை அவள். காணாமலே , கேட்டே, காதல் கொண்டாள். அவனில்லாமல் தன் வாழ்வு இல்லை என்ற தீர்மானத்துக்கு உடனே வநதாள். இது , இந்த முறை நடப்பது வழக்கம்தான். பத்து வயதோ ,அதற்கு முன்னால் திருமணம் செய்யும் நாட்கள் அவை. பத்து வயதில் காதல் வருமா. வரும். வந்து காதலித்த பெண்களையும் நான் பார்த்திருக்கிறேன் பேதைப்பருவம் என்று சொல்லப்படும் என்று அழைக்கப்படும் அந்தக் காலங்களில், அதை மகனும் மாமன் மகளும் அறிமுகம் செய்து கொள்வதே கணவனும் மனைவியாகத்தான். இப்போது எங்களுக்கு அடுத்த தலைமுரையில் அனைவரும் சகோதர சகோதரியாகவே அறியப்படும் அழகும் இருக்கிறது. இப்போது, இந்தப்பதிவில் ருக்மிணியின் காதல் நிறைவேறப்போகும் நேரம்! அது ஒரு கனவுகளில் சஞ்சரிக்கும் காலங்களாக இருக்கத் தேவை இல்லை. உணர்வுகள் மட்டுமே அறிந்து தேர்ந்து தன் துணையை அடையாளம் கண்டு கொள்ளும்.அந்த துவாபரயுகத்தில் அரசுகளும் அரசுகளும் திருமணம் செய்து கொண்டன. ருக்மிணியின் தந்தைக்குக் கண்ணன் மேல்தான் நினைவு தன் சிறு மகளுக்கு ஏற்ற காளை அவன் என்று தீர்மானம். செய்து ஆண்டுகளாகிவிட்டன. நடுவ...