Blog Archive

Tuesday, January 31, 2012

தை மாத குத்தகை நாட்கள்.

நாங்க புதுசாக் கட்டிக் கிட்ட சோடிதானுங்க  46    வருஷம் புதுசு:)
கெட்டி மேளம் கொட்டுற கல்யாணம்.
இவ்வளவு பதியத் தான் நமக்கு நேரம் ஒதுக்கப் பட்டதுகண் புரை சிகித்சை முடிந்து ஏழு நாட்களே ஆகி இருப்பதால்......

கண்நலம் பேண  அவசியமாகிறது.
அனைவரிடமும் வாழ்த்துகள் வேண்டி
இருக்கிறோம்.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Posted by Picasa

Saturday, January 21, 2012

மின்சாரம் கையைக் கடிக்கும்

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
 மின் அளவி(!) நின்றுவிட்டது என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார் இரண்டு மாதங்களுக்கு ஒரு தடவை மீட்டர் படிக்கறவர்.எழுதறவர்:)
உடனே புது மீட்டர் வைக்கும்படி ஒரு மனு எழுதி நாற்பத்தைந்துபடி ஏறிக் கொடுத்துவிட்டுவந்தோம்.
ஒருநடவடிக்கையும் இல்ல்லை.
ஓடாத நாட்களுக்கு என்ன அபராதம் வருமோ என்ற கவலையில் தலைவலித்ததுதான் மிச்சம்
ஒருமாதம் ஆகி, தெரிந்த மின்வாரியத் தொழிலாளரைப் பிடித்தார் சிங்கம்.அவர் 1500 வாங்கிக் கொண்டு புது மீட்டர் வைத்தார்.
கணக்குப் போர்ட்டுச் சொல்லுங்க என்று எங்கள் இபி மேலாளரிடம் மீண்டும் கேட்டுக் கொண்டோம். ஆறுமாதங்கள் ஊரில் இல்லை என்பதையும் தெரிவித்தோம்.
அவரோ போட்டுவைக்கிற்றேன்.நாளைக்கு வரீங்களா என்றுசொல்லி விட்டார்


.மீண்டும் படியேறிப் போனால், பழைய ரிகார்டுகள் படி எங்கள் ஆவரேஜ் பார்த்து இவ்வளவு வருகிறது என்றார்.

ஒருவருடமாக மீட்டர் ரிப்பேராம்!! மாதாமாதம் பணம் கட்டினோமே அப்ப ஏன் சொல்லவில்லை என்றால், அவங்களுக்கு 200 வீட்டுக்குப் போகணும்மா. நினைவு இருக்காது என்றார்.
வேண்டுமானால் நான் அட்ஜஸ்ட் செய்து தருகிறேன். கொஞ்சம் கவனியுங்கள் என்றிருக்கார்!!!
.நம் டெபாசிட் பணத்தில் கழித்துக் கொண்டுவந்தாங்களாம்.
.இணைய வழியாகப் பணம் கட்டுவத்ற்கு ஒரு நண்பர் உதவி செய்ததால் தான் நாங்கள் வெளிநாடுக்குக் கிளம்பினோம்.:((

ஒருவழியாக நேற்று சமரசம் செய்து நேற்றுதான் முடித்தது. அவங்களைக் கேட்டால் இந்த வரிசையில் எல்லோருக்கும் அதே பிரச்சினைதான். நிற்பவர்கள் எல்லாம் 17000 வரை கொடுக்கணும்.
ஒண்ணும்சொல்கிறதுக்கு இல்லை.:(


:

Wednesday, January 11, 2012

ஜனவரி கொண்டாட்டம்!!

புத்தாண்டு வரவேற்பு
நீரின் கொண்டாட்டம்    இது நான் எடுத்த படம்தான்:)
இதுவும் நான் எடுத்த படம் இல்லை:)
சமீபத்தில் பார்த்த குழந்தை
போன வருடக் கொண்டாட்டம்  நியூயார்க்
அயல் நாட்டு வேடத்தில்  நம் நாட்டு தம்பதிகள்:)நான் எடுத்த படம் இல்லை.!!
மலரக் காத்திருக்கும் மொட்டுகளின் கொண்டாட்டம்
ஆர்ப்பரிக்கும் அமைதியான அலைகள். பல குழந்தைகள் சேர்ந்து விளையாடும் ஒரு தோற்றம்.
அனைவருக்கும் தைத் திங்கள்  பொங்கல்  நாள்
பாலாகிப் பெருகும் ஆநந்தத்தையும்
சகலவித செல்வங்களையும் நிம்மதியையும் தர
இறைவனை வேண்டி இனிய வாழ்த்துகளையும் இங்கே பதிகிறேன்.


எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Posted by Picasa

Monday, January 09, 2012

மாரிமலை முழைஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும்




எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
இன்று திருப்பாவை  23  ஆம் நாள். சீரிய சிங்காசனத்தில் இருந்து
யாம்  வந்த  காரியம்  ஆராய்ந்து  அருளச் சொல்கிறாள்..

 ஆண்டாளுக்கு கண்ணனின்  நடையழகு பார்க்க வேண்டுமாம்.
பாலும் சர்க்கரையும் சேர்ந்தது போலவாம் நரசிம்ஹ அவதாரம்.
நரனும் சிங்கமும் கலந்த அழகனாம்.

அவன் தீவிழித்துப் பார்ப்பது, கொடியவர்களை வீழ்த்த.
ஹிரண்யனை வீழ்த்தும் பார்வை. ராவணனை
அதிர வைத்த பார்வை.
துரியோதனன் சபையில்   கண்ணனை அவமதிக்கக்
காத்திருக்கிறான்.
கண்ணன் உள்ளே   நுழைகிறான். யாரும் எழுந்திருக்கவில்லை. அரசனுக்குப்
பயந்து.
கண்ணனின் கண்ணைப் பார்த்த அடுத்த கணம் துரியோதனனின் உடல் எழுந்துவிட்டதாம்.

அதனால்  அடியவர்களாகிய நாம்,சிங்கம் என்று பயப்படவேண்டாம்.
அது சீரிய சிங்கம்.
ஆண்டாள் பாவைக்காக இத்தனை நாள்     மாய உறக்கத்தில் இருந்த சிங்கத்தின்  உறக்கம் கலைந்து விழித்ததாம்.
இவர்கள் வந்துவிட்டார்கள்  என்று தெரிந்ததும் தாமரைக் கண்கள் சிவந்து விரிந்தனவாம்.
அடியவர்கள் அருகில் இருந்தால் பகவானின் கண்கள் தாமரைச் சிவப்பு கொள்ளுமாம். அவர்கள் சற்றே அகன்றாலும் அவர் கண்கள் வெளுத்துவிடுமாம்.!!

பூவைப் பூ வண்ணா,நீ உன் சிம்ம கதியில் நடந்து வந்து
எங்களுக்கு அருள வேண்டும் என்று சொல்லிவிட்டுப்  பிறகு சொன்னோமே என்று  வருந்தினாளாம்.

இந்தக் கண்ணன்  நடந்த நடை போதாதா. நான் வேறு நடக்கச் சொல்லிவிட்டேனே.

இந்தப் பாதங்களை குளிர்சந்தனம்  பூசிப் பூஜிக்க அல்லவா வேண்டும்.
என்று   உணர்ந்து அடுத்த பாசுரத்தில்(அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி ) போற்றிப் பாடுகிறாள்.

இன்றைய பாடல்

மாரிமலை முழஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்
சீரிய  சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து
வேரிமயிர் பொங்க எப்பாடும் பேர்ந்துதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போதருமா  போல நீ பூவைப் பூவண்ணா உன்
கோவில் நின்று இங்கனே  போந்தருளிக் கோப்புடைய
சீரிய சிங்காதனத்திருந்து  யாம் வந்த
காரியம் ஆராய்ந்து அருளேலோ எம்பாவாய்.!
ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.
மேலிருக்கும் படங்கள் ஸ்ரிவில்லிபுத்தூர்க்  காட்சிகள்.

உபயம் விஜய் டிவி.
எழுதியிருப்பது  உபவே. திரு.வேளுக்குடி கிருஷ்ணன் அவர்களின் திருப்பாவை உரையிலிருந்து  உணர்ந்ததை  எழுதினேன்.




Posted by Picasa

Thursday, January 05, 2012

ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி ஸ்ரீரங்கம்&திருவல்லிக்கேணி

அரங்கன் கைக்கிளி
கஸ்தூரி திலகம்
கிளிமாலை
பரமபத வாசல்
ஸ்ரீ பார்த்தசாரதி தேவியருடன்
இந்தப் படப் பதிவு, தொலைக்காட்சியில் அதிகாலை
ஒளிபரப்பாக  ஸ்ரீவைகுண்ட ஏகாதசி 
ஒளிபரப்பப் பட்டபோது எடுக்கப்  பட்டது.
 ஒளிபரப்பைப் பார்க்க முடியாதவர்களுக்காகப்
பதிந்திருக்கிறேன்.
முக்கியமாக வெளிநாட்டில் இருப்பவர்களுக்காக.
பொதிகை   சானலுக்கு மனம் நிறைந்த நன்றி.




எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Posted by Picasa

Monday, January 02, 2012

புத்தாண்டுக்கு அடுத்த நாள்

மழை,புயல் பயம்,நியூசியில் மீண்டும் பூகம்பம் எல்லாம் சேர்ந்து புத்தாண்டைக்
கொஞ்சம்  களையிழக்கச் செய்தாலும்,
மக்கள் மீண்டு வந்து மெரினாவில் புத்தாண்டை  ஆரவாரமாக வரவேற்றது
அதிசயமாக  இருந்தது எனக்கு.

ஆமாம்  கடலென்ன செய்யும். அதன் உள்ளே புகுந்து ஆட்டி வைத்த புயலுக்கு அது ஆட்டம் காட்டிவிட்டது.
கடலில் மீன் பிடிக்காது தவித்தவர்களுக்கு நிலக்கரி டன் கணக்கில் வலையில்
அகப்பட்டது  இன்னோரு  ஆச்சரியம்.

'தானே'' வரப் போகிறது. வந்து  விட்டது.  இல்லை புதுச்சேரி போகிறது. கடைசியில்
 கடலூருக்கு  அருகில் மைய்யம் கொண்டதாக,  செய்தி.
சென்னையில் மின்சாரம் போய் வந்தது. மழையும் காற்றும் விடவில்லை.

எங்களுக்கோ அவசரமாக , ஒரு நோய்வாய்ப்பட்ட
உறவினரைப் பார்க்க  வேண்டிய அவசியம்.

கொஞ்சம்  மழை நின்றதும்  ராதாகிருஷ்ண  சாலையில் பயணித்தோம்.
அவங்க வீடோ சாலை முடிவில் இருந்தது.
கடல் வரை சென்று சிடி செண்டருக்கு  அருகில் திரும்பி வரவேண்டும்..
சாலை  விதி அப்படி!
முக்கால் தொலைவு போனதுமே கடலின் வண்ணமும் அலைகளின் ஆக்ரோஷமும்
தெரிந்தது.
காணக்கிடைக்காத காட்கி.
கடலைக் கறுப்பு வண்ணத்தில் நான் பார்த்ததே இல்லை.
அதுவும் அந்தப் பத்தடி உயர அலைகளின் சீற்றம்... அதையும் பார்த்ததில்லை.
ஊழிக் காற்று இதுதாணனோ என்ற வண்ணம் மழையையும்
குடையையும் தூக்கும் காற்று..
கையில்  காமிரா இல்லையே என்றிருந்தது.
கூட வந்தவருக்கு   (சிங்கம்தான்)ப் பொறுமை இல்லை.
ஒரே சமயம் போல இருக்காது கிளம்பு என்று என்னைக் கிளப்பிவிட்டார்..
அடுத்த நாள் இங்கே  கமராஜர் சாலை வரை வந்த கடலும், புதுச்சேரியிலும், கடலூரிலும்
125,135  கிலோமீட்டர்  வேகத்தில்  நாசம் விளைவித்தது இதே "தானே".:(
 இன்னும் பத்து நாட்களாவது ஆகும் என்று  சொல்கிறார்கள். இல்லை ஓரிரு மாதங்களாவது
ஆகும் சாதாரண நிலைமைக்குத் திரும்ப என்றும் கூறுகிறார்கள்.

ஆண்டாள் அவள் தன் திருப்பாவையில் ஆழிமழைக் கண்ணனை அழைக்கையில்
தீங்கில்லாத மழையைத் தான் கொடுக்கச் சொல்லுகிறாள்.
''வாழ உலகினில் பெய்திடாய்''

இன்றைய  செய்தி யாரோ கிளப்பிவிட்ட பூகம்பம் பற்றியது.
கடலூர்  மக்கள்  இரவு  முழுவதும்   வீட்டுக்கு   வெளியே
தவித்தபடிக் காத்திருக்கிறார்கள்.

தானாக வரும் குழப்பம் , தீங்கு  நினைப்பவர்கள் செய்யும் குழப்பம் .
இதிலிருந்து  கடவுள் தான் நம்மைக் காப்பாற்றணும்.
இன்னொரு  அதிசயம்  என்  ப்ளாக்  ரான்க் 128  லிருந்து   69  ஆகியிருப்பதை நம் ராமலக்ஷ்மி சொல்லித்   தெரிந்து கொண்டேன். நன்றி ராமலக்ஷ்மி!

















எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Posted by Picasa

Sunday, January 01, 2012

இனிய புத்தாண்டு 2012

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

வந்து சென்ற 2011 க்கு
  நல விடை கொடுத்து வந்து கொண்டிருக்கும் புது வருடம் எல்லா நன்மைகளையும் எல்லோருக்கும் அளிக்க  இறைவனை வேண்டுகிறேன்.
 பதிவர்கள்  அனைவருக்கும் அவர்கள் குடும்பத்தாருக்கும்   எங்கள்
மனம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துகள். நன்மையே   வேண்டும். வளம் வேண்டும்.  ஆரோக்கியம் வேண்டும்.
இத்தனையும் அவன் அருள்வான் நாமும் அதற்காக உழைப்போம் என்ற எண்ணம்தான் இப்போது
அன்புடன்
வல்லிமா. நரசிம்ஹன்