Follow by Email

Tuesday, August 28, 2007

கிரகண நேரப் பித்தம்

இன்று பௌர்ணமி. ஆவணி அவிட்டம்.ரக்ஷா பந்தன்
எல்லாம் சேர்ந்த நாள்.
பி4 யூ டிவி சானலில் ஒரே பாசமலராகப் பாடல்கள் வரும் என்று நினைக்கிறேன்.
உலகம் முழுவதும் உள்ள அத்தனை பேரும் சகோதர பாசத்துடன்
இருந்தால்.....
இன்று ஒருநாள் மட்டும் சகோதரியை நினைத்தால் போதுமா.
நம்ம ஊரில் கனு, கார்த்திகைக்கு அக்கா தங்கைகளுக்கு சீர் செய்வது வழக்கம்.
இதனாலெயே முரண்பாடுகளும் வர வாய்ப்பு இருக்கிறது.
'சீர் கொண்டுவந்தால் சகோதரினு' தூக்குத் தூக்கி படத்தில் ஒரு வசனம் வரும்
அது கேட்டதிலிருந்து எனக்கு ஒரு கோபம் வரும். அப்படி சகோதரிகள் இருந்தால்
அது யாருடைய தப்பு என்று.
காலா காலமாக அது வழக்கில் இருந்து வந்து இருந்தால் யார் ஏற்பாடு செய்தார்களோ
அவர்களைக் கேட்க வேண்டும் என்று தோன்றும்.
நாமெல்லாம் நம் அண்ணனையோ தம்பியையோ அப்படி எதிர்பார்க்கவில்லையெ
மாறுதலுக்கு நானே தம்பி வீட்டுக்குப் பரிசு கொண்டு போய்க் கொடுப்பேன்.
அம்மாவிடம் விளக்கம் கேட்ட போது சொன்னார்கள்.
வெகு காலமாக இந்த வழக்கம் ஏற்பட்டத்ற்குக் காரணம் இருக்கிறது.
அப்போது பெற்றவர்களுக்குப் பெண்ணைப் போய்ப் பார்க்க ஏதாவது சாக்கு வேண்டி இருந்தது.
கண்ட நேரத்தில் போய்ப் பார்க்க முடியாது. அவர்களுக்கு அதற்கு வசதியும் இருக்காது.
விவசாய வேலைகள், அதற்கு மேற்பட்ட பொருளாதர வசதிகள் எல்லாம் குறுக்கே நிற்கும்.
ஆடி,ஆவணி போய்க் கார்த்திகை வந்ததும், விளைச்சல் முடிந்து ஒரு அறுவடைப் பணம் கையில் வந்ததும்
பலவகைப் பலகாரங்கள்,துணிமணி எல்லாம் எடுத்துக் கொண்டு
பெண்ணின் வீட்டுக்கு எழுதி விவரம் எழுதி பதில் கிடைத்ததும்
வண்டி கட்டிக் கொண்டு போவார்களாம்.
மத்தியதரக் குடும்பங்களில் வருடத்திற்கு இரண்டு தடவை பெண்ணுக்கான
செலவு என்று அழகாக அனுமானித்து, அவள் வீட்டுக்கும் போய் அங்கு இருக்கும்
நிலவரத்தையும் அறிந்து கொண்டு இன்ப துன்பங்கள் பற்றி விசாரிப்புகள் செய்து
ஒரு ஃபாரின் மினிஸ்டருக்கு உண்டான கடமைகளைச் செவ்வனே செய்ய
இந்த மாதிரி ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது.:)))
சரி. இது ஓகே.
அவர்கள் பதிலுக்கு ஏதாவது சீர் செய்து அனுப்புவார்களா என்றும் அம்மாவைக் கேட்பேன்.
நீதான் ஆரம்பிச்சு வையேன் என்று அம்மா சிரித்தார்.
அது போதுமே. இதுவரை குறை வைக்கவில்லை என்றே நம்புகிறேன்.


பின் குறிப்பு:விழவில்லை என்று ரொம்பப் பெருமையாக இருந்தேன்.
முந்த நாள் இரவு இருட்டில், சிங்கத்துக்கு உதவி செய்யப் போய்
காலைக் கட்டிலில் பார்த்துக் கொண்டேன்.
கால் விரல்கள் கொஞ்சம் போண்டா அளவுக்கு வீங்கி,மினு மினு என்று இருக்கின்றன.
அதற்கு உண்டான கவனிப்புகளும்(கை,சாரி கால் வந்த கலையாயிற்றே)
போட்டு, ஒரு நாள் தமிழ்மணம் பார்க்காமல் இருந்தால் வரும்
பைத்தியத்துக்கு,
கீழே வந்து பதிவு போட்டாவது நம்ம வலி மறக்கலாம் என்று வந்துவிட்டேன்.
செக்யூரிடியிலிருந்து, ஒவ்வொரு கடைக்காரராக விசாரித்ததும், இப்பொ வலி ரொம்பவே குறைந்து விட்டது.:)))))))))))))))))))))0

வேற எங்க சிம்பதி கிடைக்கும்னு தேடிக் கொண்டிருக்கிறேன்!!!!
சகோதர சகோதரிகளுக்கு ரக்ஷா பந்தன் வாழ்த்துக்கள்.

Monday, August 27, 2007

DOR, THE MOVIE

இந்த துபாய்க்கு வந்ததில் மிக அருமையான படங்கள் பார்க்க முடிகிறது.
கீழே உள்ள வீடியோ கடையில் உள்ள நல்ல படங்கள் மருமகளுக்கு
அத்துப்படி.
அவங்க டெல்லிப் பொண்ணு ஆகையினால, இந்தி ரொம்ப நல்லாப் பேசுவாங்க.
அவங்க சிபாரிசு செய்து நிறைய சினிமாக்கள் பார்க்க முடிகிறது.
அதில் ஒன்று தான் இந்த 'டோர்' படம்.

வெகு எளிமையாக அதே சமயம் அற்புதக் கவிதை போல எடுத்திருக்கிறார்கள்.

ஒரே சமயத்தில் இரு இளைஞர்கள் தங்கள் மனைவிகளைப் பிரிந்து சவுதி அரேபியாவுக்குப் பிழைக்க வருகிறார்கள்

பணம் சம்பாதித்து கொஞ்ச மாதங்கள் கழிந்த நிலையில்
ராஜஸ்தான் பெண்ணின் கணவன் மாடியிலிருந்து விழுந்து இறந்து விடுகிறான்.

அதற்குக் காரணம் என்று, அவனுடைய அறையில் தங்கியிருந்த காஷ்மீரி
இளைஞன் கைது செய்யப் படுகிறான்.
மரண தண்டனை விதிக்கப் பட்ட நிலையில்,
அவன் மனைவிக்கு, அவனைக் காப்பாற்ற ஒரு வழி கிடைக்கிறது.
இறந்தவனின் மனைவி மனிப்புக் கடிதம் கொடுத்தால் அவன்
மன்னிக்கப் பட்டு வீடு திரும்புவான் என்று இந்தியத் தூதரக அதிகாரி, கஷ்மீரிப் பெண்ணிடம் சொல்கிறார்.

அவளும் ஆள், அடையாளம் தெரியாமல் அங்கிருந்து புறப்பட்டு,
ராஜஸ்தான் வந்து சேருகிறாள்.

என்னவொரு வித்தியசம். ஹிமாசல் பிரதேஷுக்கும், ராஜஸ்தான் மானிலத்துக்கும்!!
இந்தப் பெண்ணின் உறுதியைப் பார்ப்பதா, இல்லை ராஜஸ்தான் பெண்ணின் பரிதாபத்தைப் பார்ப்பதா.
கதையை ஆச்சரியப் படும் விதத்தில் இயக்குனர் எடுத்துச் செல்லுகிறார்.
இறந்த இளைஞனின் மனைவியாக வரும் ஆயேஷாவும், குற்றம் சாட்டப்பட்டவனின் மனைவியாக வரும் குல் என்னும் நடிகையும்
பாத்திரங்களாகவே வாழ்கிறார்கள்.

பாலையின் கடுமையான அழகும், இமாசலப் பிரதேச்சத்தின் செழுமையும்,
கௌரி என்ற இந்தப் பெண்ணின் நடிப்பும், பொதுவாக ராஜஸ்தான்பிரதேசத்தின் மணவினைக் கோட்பாடுகளும்

பெண்களின் அவல நிலையும் என்னை மிக்கவும் பாதித்தன.
நம்ம ஊரில் இல்லையா என்று கேட்கலாம்.

உண்டு.
ஆனால் இந்த இயக்குனர் சொல்லிய்யீருக்கும் விதம் அருமை
முடிந்தால் பாருங்கள்.
Aggregated by Thenkoodu.com - Tamil Blogs Portal

Tuesday, August 21, 2007

வெய்யில்க்கேற்ற நிழலுண்டு....2

இன்று பிறந்த நாள் காணும் சக வலைப்பதிவர் தேசிகனுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
அவர் வழியாகத் தான் வலைப்பதிவுகள் பற்றி அதிகம் கற்றுக்கொண்டேன்.
நன்றி தேசிகன்.

தண்ணீரும் தீர்ந்தாச்சு.
வெய்யிலும் உக்கிரமாகக் காற்றோடு தாக்குகிறது..
சரி இனிமேல் தேடிப் பயன் இல்லை, என்று
நாங்கள் திரும்பவும் வந்த வழியே திரும்பினோம்.
இங்கே புது மெட்ரோ சிஸ்டம் வரப்போவதால்
அது வரப்போகும்
இடங்களிலெல்லாம் வெட்டி வைத்து இருக்கிறார்கள்.
அப்படி ஒரு பாதையில் போய்
நங்கள் பஸ் நிறுத்தம் எங்க இருக்கும் என்று தேடி வந்தோம்.
சிங்கத்துக்கு பஸ் ரூட்டெல்லாம் மனப்பாடம்.
போன தடவை இங்கே வந்த போது குளிர்காலமாக இருந்த்தால்
நிறைய இடங்களை சிறப்பாக நாசர் ஸ்கவேர் என்ற இடம் நன்றாக அலசி இருக்கிறார்
அங்கே இவருக்கு வேணும் என்கிற ஹார்ட்வேர் எல்லாம் கிடைக்கும்.
அப்படியே இதோ வந்தாச்சு அதோ வந்தாச்சு என்று புர்ஜுமான் ஷாப்பிங் செண்டர் வரை வந்துவிட்டோம்.
நல்ல வேளையாக அங்கே ஒரு பஸ் நிறுத்தம் தென்பட்டது.
அங்கிருந்து டாக்ஸி பிடிக்கலாம் என்று கை காண்பித்தால் ஒரு வண்டியும் நிற்க மாட்டேன் என்கிறது.
சிங்கத்துக்கு உண்மையாகவே என்னைப் பற்றிக்கவலை வந்து விட்டது.
பசி வந்துவிட்டால் அதற்கு அப்புறம் ஒரு அடி எடுத்து வைப்பது கூட சிரமம்.
கையிலோ ரஸ்க், பிஸ்கட் என்று ஒண்ணும் இல்லை.
டாக்ஸி நிற்காத போது அழகான துபாய் போக்குவரத்து ஏசி பஸ் ஒன்று வந்து நின்றது.
எனக்குத் தயக்கம் ,இது நம்ம வீடு வரை போகுமா, என்று. பக்கத்துக் கடையில் தண்ணீர்
வாங்கப்போன சிங்கம் அங்கிருந்தே பஸ்ஸில் ஏறும்படி கைகாட்டுகிறார்.
எனக்கு முன்னபின்னத்(நம்பர்) தெரியாம எப்படி இந்த பஸ்ஸீல எப்படி ஏற என்று தயங்கும்போது,
'' அம்மா, ஏறுங்க. ஐய்யா வரவரை நான் பஸ்ஸை எடுக்கலை''ன்னு குரல் கேட்கிறது.
எந்த சாமிடா இப்படிக் குரல் கொடுக்குது , அதுவும் தமிழ்ல!! என்று யோசித்தபடி உள்ள எட்டிப் பார்த்தேன்.
சிரித்தபடி அந்த ஓட்டுனர் மீண்டும்,''உள்ள வாங்கம்மா, மயக்கம் வந்துடும்''
என்றார்.
ஏன்மா இப்படி வெய்யில்ல வந்தீங்க. எந்த ஊரு. எனக்குத் தஞ்சாவுர்.
இதோ சாரும் வந்துட்டார்.
உக்காருங்க. முதல்ல தண்ணீர் குடிங்க. அப்புறம் டிக்கட் எடுக்கலாம் என்று வரிசையாக
கட்டளைகள் அன்பாகப் போடுகிறார்.
நாங்களும் உட்கார்ந்ததோம் ஒரு வழியாக. கூட்டம் இருந்தாலும்,
டிரைவர் இருக்கையிலிருந்து பேச்சு தொடர்ந்தது.
அம்மா நம்ம ஊருக்காரங்க நேரம் பார்த்து வெளில வரணும்.
இந்தாங்க இந்த டிக்கட்டுகளை வாங்கிட்டுப் பணம் அந்த ஆளுகிட்ட அனுப்பங்க.
எங்க கராமா போறீங்களா?
என்றார். இல்லப்பா இன்னும் தள்ளி என்றதும், வீட்டுக்கு எவ்வளவு பக்கமோ
அங்க இறக்கி விடறேன். என்று சிரித்தார். இறங்கும் வரை எங்க பூர்வீகம்,தன் ஊர் என்று
அழகாகத் தமிழில் பேசி வந்தார்.
அவர் பெயரைக் கேட்டுக்கொள்ளவில்லையே என்று வருத்தமாக இருக்கிறது.
அந்த வெய்யிலி பஸ்ஸின் குளுமை என்ன ஆஸ்வாசப்படுத்தியது.
எங்கே எல்லாமொ சுற்றிவிட்டு வீட்டு அருகில் உள்ள ரஷீத் ஹாஸ்பிட்டல் பக்கம்
வண்டியை விட்டு
இறங்கினோம்.
தஞ்சாவூர்க்காரருக்கு நன்றி சொல்லித்தான்:)
அவர் மீண்டும் நம்ம பஸ்ஸீல நீங்க ரெண்டு பேரும் வரணும்மா. பார்க்கலாம்
என்று வண்டியைக் கிளப்பிச் சென்றார்.
இந்ததமிழ் எப்படி ஒரு சோர்வான சமயத்திலிருந்து
நம்மை மீட்டது பார்த்தியா என்று யோசித்தேன்.
அதன் பிறகு வெளி வெய்யிலுறைக்கவில்லை.

Aggregated by Thenkoodu.com - Tamil Blogs Portal

திரு.கி.ரா ஐயாஅவர்களின்பிறந்த நாள் விழா

முந்திய பதிவில் அய்யாவின் பீறந்தநாள் பற்றீக் குறிப்பிட்டிரூந்தேன்.

இன்று அவரிடம் பேசிய போது,
அம்மாவும் அவரும்,
அய்யாவின்ன் எண்பத்து ஐந்தாவது பிறந்த நாள் ,விழாவாகக் கொண்டாடப் பாடுவதாகச் சொன்னார்கள்.

உயிர்மைப்பதிப்பகத்தார் வெளீயிடும் புத்தகம்உம்
ஆன்று வெளியிடப்படும் என்றும் செய்திகொடுத்தார்கள்.
செப்டம்பர் 16ஆம் தேதி சென்னையில் அண்ணா சாலை பிலிம் சேம்பர்
கட்டிடத்தில்,
விழா ந்ட்க்கும்
என்றும் ஐய்யா சொன்னார்.
கீழே ஐய்யாவின் விலாசமும்,, போன் நம்பரும்
அவர் அனுமதி பெற்று,, பிறகுகொடுத்து இருக்கிறேன்.
இத்தனை நிறைவான பெரிய மனிதரை
வ்ணங்கவும் கொடுத்து வைத்துஇருக்க வேண்டும்.

வணக்கங்களும் வாழ்த்துக்களும் சொல்லி அடிபணிகிறேன்..

THIRU.RAJA NARAYANAN.K.,
2251506 phone # .

திரு.இராஜநாராயணன் அவர்கள்,
2251506
GOVT.QRS., LAWSPET,
LAWSPET,

PONDICHERRY.

அய்யொ பாவம்னு சொன்னா ஆறு மாசம் பாவம்

இந்த ஊருக்கு வந்தவுடன் வெளியில் போகும் வரும் ஆட்களைப் பார்த்து ரொம்பக் கவலையாய் இருக்கும். அதுவும் வீடு இருக்கும் பகுதியில் நிறைய பள்ளிக்கூடங்கள்.
வேலை செய்பவர்கள்.
இந்தியாவுக்குத் திரும்பி அனுப்பப்படும் தினக்கூலியாட்கள், எல்லொரும் அவஸ்தைப் படுவதை வீட்டுக்குள்ளிருந்தே பார்க்க முடியும்.

என்ன விடிவு காலம் வருமோ ,பாவமே என்று சொல்லிக் கொண்டிருப்பேன்.
அடுத்த நாள் நானே மாட்டிக் கொள்வேன் என்று நினைக்கவில்லை.:))

வீட்டில் மருமகளுக்கு புது ஆடைகள் எடுத்துக் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்து,
நானும் சிங்கமும் சாயந்திரம் ஒரு நான்கு மணி வாக்கில்
கிளம்பினொம்.
நாங்க போக நினைத்த இடம் ஃபாப் இந்தியா எனும் இந்திய அரசின் விற்பனைக் கூடம்.
அங்கு நம் ஊருத்துணிகள், படுக்கை விரிப்புகள், ரெடிமேட் உடைகள் எல்லாம் வெகு நேர்த்தியாகக் கிடைக்கும்.

அழகாகவே இருக்கும்.
அது இருக்குமிடம் மன்கூல் ரோடு என்ற இடம்.
அதுவும் தெரியும்.
பையன் கிட்டச் சொல்லாமல்,மருமகளிடம் மட்டும் சொல்லிவிட்டு
நாங்கள் கீழே இறங்கி வெளியே வந்தோம்.
முகத்தில் ஓங்கி அறைந்தது போல ஒரு அனல்காத்து சூழ்ந்தது. வெய்யில் சுள்ளென்று உறைக்கவும், டாக்சியைப் பிடிக்க அருகிலிருந்த ப்ளாட்ஃபார்Mஇல் நின்றோம்.

அப்பவே கையிலிருந்த பாதி பாட்டில் தண்ணீர் காலி.
இப்படி ஒரு உஷ்ணமா, சாமினு நினைத்தபடி நல்ல வேளையாக அங்கே வண்டியை (டாக்சி)நிறுத்தின மகானுபாவனை ஆசீர்வதித்தபடி, நாங்க போக வேண்டிய மன்கூல் ரோட் பற்றிச் சொன்னோம்.
எங்க சிங்கத்துக்கு வழக்கமாக எல்லா இடமும் அத்துபடி.
அன்று மட்டும் அவருக்கு....வெயில் காரணமோ என்னவொ இறங்க வேண்டிய இடம் வந்துவிட்டதாகச் சொல்லி, பணத்தைக் கொடுத்துவிட்டு

இறங்கச் சொன்னார்,
இறங்கின இடம்,ரோடு எல்லாம் சரிதான்.
அந்தக் கடையைத்தான் காணவில்லை.
'' I am sure ma. this is the place.
they must have pulled the building down'' என்றவாறு நடக்க ஆரம்பித்தார்.
வழக்கம்போல பின் தொடர ஆரம்பித்தால் வெய்யிலும், காற்றும் காலையும், உடலையும் சுடுகின்றன.
தண்ணீர் தீர்ந்து,அது வேற எனக்குக் கடுப்பாக இருந்தது.
உங்களுக்கு எப்படித் தெரியாமல் இருக்கும்.
நாந்தானெ ரெண்டு பேரில தொலைந்து போற டைப்.. நீங்க எப்படி மறக்கலாம்னு முணுமுணுத்தபடி போனேன்.
இதோ இவரைக் கேட்கிறேன் அவரைக் கேட்கிறேன் என்று எல்லாரையும் கேட்டு, ஒரு கறுப்புக் கண்ணாடி பதித்த பெரிய அபார்ட்மெண்ட் பக்கம் நின்றோம்.
இப்போது இறங்கின இடத்திலிருந்து ஒரு கிலொமீட்டராவது வந்திருப்போம்.
சரி. இத்தோடு இன்னிக்கு உண்டான ஒரு மணி முடிகிறது. மீண்டும் நாளை பார்க்கலாம்.:)

பாடம்.......... கண் போன போக்கில் கால் போகக் கூடாது.
போகாத இடந்தனிலே போக வேண்டாம்.
மனம் போன போக்கெல்லாம் போக வேண்டாம்......;0)))


Aggregated by Thenkoodu.com - Tamil Blogs Portal

Sunday, August 19, 2007

அனல்தான்,...இருந்தாலும் அழகு

வெய்யீ வாட்டினாலும் இந்த ஊர்ரின் செழிப்பைப் பாராட்டாமல் இருக்க மூடிய.வில்லை

அப்ரா எனப்படும் போக்குவரத்தூஉ படகு.
ப்
துபாய் பார்க்


அரபுக் குதிரை.one of the apartment hotels
thanga varavanga inggeeyum vaadakaikku irukkalaam.Saturday, August 18, 2007

திரு.கி.இராஜநாரயணன் ஐயா....பகுதி.2

முன் பதிவில் அய்யா திரு.ராஜநாரயணனைச் சந்திக்க நேர்ந்த
விவரம்,காரணம் அனைத்தும் எழுதி இரூந்தேன்.
இப்போது ஒரு ஆறு மாதங்களாக அய்யாவிடம் பேசவில்லை.

அமெரிக்காவிலிருந்து ,பேரன் பிறந்ததைப் பற்றி,அவருக்கு செய்தி சொல்லப் போன் பேசியபோது குழந்தைகள் விவரம் கேட்பது போல அவ்வளவு
விஷயங்களையும் கேட்டுக் கொண்டார்.
இதோ தொடரும் ......மீள்பதிவு

அய்யாவும் போனுக்கு வந்து யார் என்று விசாரித்து விட்டு பேச ஆரம்பித்தார். அவ்வளவு எளிமையான பேச்சை நான் இதுவரை கேட்டது இல்லை. எங்க அம்மா அப்பா ஊரு பேரு எல்லாவற்றையும் விசாரித்தவர் விவரத்தைக் கேட்டு வருத்தப்பட்டார். அதற்கப்புறம் அடிக்கடி கதை கேட்பதற்கே நான் போன் செய்வதும் அம்மாவும் அவரும் நடந்த நிகழ்ச்சிகளைக் கோர்வையாக சொல்வதும் மிகப் பழகிப்போன ஒன்றாகிவிட்டது.அதன் பயன் ,அதுக்கப்புறம் நடந்த புத்தகக் கண்காட்சியில் அகரம் பதிப்பகத்தில் அய்யவுடைய நான்கு புத்தகங்களை வாங்கியதுதான். எல்லாவற்றையும் இன்னும் படித்துக் கொண்டுதான் இருக்கிறேன். அம்மாவும் அய்யாவும் ஒரு நாள் மதியம் போன் செய்து அடுத்த நாள் அவர்கள் சென்னைக்கு முத்தமிழ் விழா ஒன்றில் கலந்து கொள்ள வருவதாகவும், எங்க வீட்டுக்கு அப்படியே வரலாமா என்று கேட்டதும், எனக்குப் பேச்சே வரவில்லை. இவ்வளவு பெரிய ம்னிதர்களோடு நிறையப் பேசிப் பழகி இருந்தால்தானே வார்த்தைகள் அருமையாக வெளியே வரும்?


வாங்க, கட்டாயம் வரணும் எனறு சொல்லி விட்டு மறுநாள் காலையிலிருந்து காத்துக் கொண்டிருந்தோம் நானும் எங்க வீட்டுக்காரரும்.. காலையில் தொலைபேசியில் உறுதி வேறு செய்து கொண்டேன். மனசு மாறிவிடப் போகிறதே என்றூ. வந்தார்களம்மா இருவரும் . ஒரு வழக்கமான, அம்மா அப்பா வருகை போலத்தான் இருந்தது. கணவதி அம்மாவின் பாசம்,அய்யாவின் வீட்டை சுற்றிப் பார்க்கும் அழகு எல்லாம் எனக்கு அதிசயமாக இருந்தது.


அவர்கள் என்ன சாப்பிட்டார்களோ என்னவோ என்று விசாரித்தேன். அய்யாவுக்கு நல்ல காப்பி போதும் சக்கரை கம்மியா என்று அம்மாவும், அவளுக்கு நல்ல பால் போரும் சக்கரையே வேண்டாம் என்று அய்யாவும் சொல்லி விட்டார்கள். அதற்குப் பிறகு எங்க வீட்டு மீனாட்சிதான் பேச்சைத்தன் பக்கம் இழுத்துக் கொண்டது. இப்படிக்கூட தனிமையாக ஒரு பிறவி உண்டா என்று சிரிப்பு. எல்லாவற்றிற்கும் சிரிப்புதான்.வாங்கின புத்தகங்கள் எல்லாவற்றிலும் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தார்,. தான் பழகின சக எழுத்தாளர்கள் பற்றின சுவையான சம்பவங்களைச் சொன்னார். அம்மாவும் அப்போதைக்கப்போது கலந்து கொண்டார்கள். என் பிரமிப்பு நீங்கவே மேலும் ஒரு மணி நேரம் ஆனது அவர்கள் பாண்டிக்குப் பயணம் புறப்பட வேண்டும். வீட்டுக்குப் போய் தோசை சுட வேண்டும் என்று பழகின ரொடீன் அன்றாட வாழ்க்கைக்கு வந்து விட்டார்கள்.
நானும் புத்தகங்களிருந்து கேட்க நினைத்து இருந்த ஒரு சந்தேகத்தைக் கூடக் கேட்கவில்லை. அவர்களைப் பார்த்ததே பெரிய புண்ணியம் தான். அந்த இரண்டு மணி நேரமும் இரு வயது முதிர்ந்த இளமை நிறைந்த வாழ்க்கையின் ரகசியம் தெரிந்த இரு நல்ல மனிதர்களைப் பார்த்துப் பழகியதுதான் எங்கள் வீட்டில் நிரவி இருந்தது.

எத்தனை முரண்பாடுகளை இருவரும் சந்தித்து இருக்கிறார்கள்!! வாழ்வின் கரடு முரடான பாதை எங்கும் பயணம் செய்து அலுப்புக் காட்டாமல் வாழ்க்கயை ரசித்து ருசிப்பதே தலையாய கடமையாக, ஒரு தவமாக இயங்கும், யாரிடமும் தப்பையே கண்டுபிடிக்காமல் நிறைவையே காணும் இரு அற்புத மனிதர்களைச் சந்திக்கும் பாக்கியம் கிடைத்ததுமீண்டும் அவர்களைப் பார்த்துப் பேசும் நாளுக்காகக் காத்து இருக்கிறோம். அய்யா அவர்களிடம் அவரைப் பற்றி எழுதப் போகிறேன் என்றதும் உடனே மீனாட்சியைப் பற்றிய தன் எண்ணங்களை எழுதிக் கட்டுரையை ஆரம்பிக்கலாம் என்று சிரித்துக் கொண்டெ ஐடியா கொடுத்தார். ஒரு நல்ல மனிதரையும் அவரது குடும்பத்தையும் அடையாளம் காண்பித்துக் கொடுத்த எங்க அம்மாவுக்கு நன்றி..

ADI UTHSAVAM


நம்மைக் காப்பாற்றும் அன்னை மகா சக்தி, மஹா காளி, மஹாலக்ஷ்மி என்று பெண் உருவில்,
கண்டு நாம் போற்றும்
பூஜிக்கும் அம்மாவுக்கு
ஆடி மாதம் முடிந்து இன்று ஆவணி பிறந்த அன்று ஒரு சமர்ப்பணப் பதிவு போடுகிறேன்.
நல்லது நடக்கும் போது அவளை வெறும் கும்பிடு போட்டு,
வழக்கமாகச் சொல்லும் போற்றிகளைச் சொல்லி அருச்சனை செய்வது,
மலர்கள் சூட்டுவதும் துபாயில் கொஞ்சம் சிரமமாகிவிடுகிறது.
நாம் தமிழ்ச்சந்தை கடைக்குப் போகும்போது பாதி நேரம் பூக்கள் விற்றுப் போகின்றன.
வாடிய மலர்களைப் பார்க்க வருத்தமாக இருக்கிறது. அவைகளைச் சமர்ப்பிக்கவும் தயக்கமாக இருக்கிறது.
மனதில் கோவில் கட்டிக் கும்பாபிஷேகம் செய்தார் ஒருவர்.
நான் வெளியூர் போகிறேன், நீயும் உன் பைனாகப் பாயைச் சுருட்டிப் புறப்படு என்றார் இன்னொருவர்.
இவர்களைப் பற்றியெல்லாம் படித்துக் கேட்டும் புத்தி வருவதில்லை.
இருக்குமிடம் வைகுந்தம்னு சொல்லும் விசால மனப்பான்மையும் இல்லை.
இதோ கண்ணன் பிறந்த நாள்,ஆவணி அவிட்டம் என்று வரிசையாகத் திருநாட்கள் வந்து விடும்.
எல்லா நாட்களும் நல்ல நாட்களாக அமைந்து உலகம் முழுவதையும்
அன்னை பாதுகாக்கவேண்டும்.
Thursday, August 16, 2007

THIRU.KI.RAAJANARAYANAN

எனக்கு ஆன்மீக நம்பிக்கைகள் முன்பிறப்பு இவைகளில் நம்பிக்கை இருந்தாலும்அய்யா கி.ராசநாரயணனைச் சந்திக்க நேர்ந்ததுஒரு அதிசயத்திலும் பெரிய அதிசயம்தான்.

இப்படியும் நடக்குமா என்று இன்றுவரை எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. இதை ஆரம்பித்து வைத்தவர் என் அம்மா..அம்மாவுக்கு தமிழ் மேல் ஆர்வம். அவரும் அப்பாவும் எப்போதும் புத்தகங்களுக்குச் செலவு செய்வதை மறுக்க மாட்டார்கள்.4 அணா ஆனந்தவிகடன் எப்போதும் உண்டு.

கலைமகள் 8அணா,.மஞ்சரியும் அதே விலை.அக்கம்பக்கம் கிடைக்கும் கல்கியும் குமுதமும்..ஒரு பக்கம் வீணாகாமல் படிப்போம். படித்தபிறகு, புத்தகங்கள் பேப்பர் வியாபாரியிடம் போகாது. அப்பவின் ஞாயிறு விடுமுறைகள் வாரைதழ்களைப் பிரிப்பது. கட்டுவது.தொடர்கதைகளை அடுக்குவது.


ஒரு வாரம் கூட விட்டுப் போயிருக்காது.சிறுகதைகள் தனியாகப் பிரிக்கப் படும். எல்லாம் இப்போது போல் பைண்டிங் கடைக்குப் போகாது. கோணி ஊசி என்று ஒன்று எப்போதுமே இருக்கும் வீட்டில்.பொறுமையாக உட்கார்ந்து ஒரு ஒரு தொடர்கதையையும் டtவைன் நூலால் சேர்த்துத் தைப்பார். அப்படி சேர்த்த, தில்லானா மோகனாம்பாள், சேவற்கொடியோனின் உன் கண்ணில் நீர் வழிந்தால்,,சுப்பு சார் (RAO BAHADHUR SINGARAM)நாவலில் வரும்சிங்காரம், செங்கமலம் எல்லோரும் எங்களுக்கு உயிரோடு உலாவிய பாத்திரங்கள்..செங்கமலத்தின் சீரும், அவளின் சீறிய காளையும் அவர்கள் வெட்ட வெளியில் அமைக்கும் குடிசையும் கோபுலு சார் கைவண்ணththil வாரவாரம் நடமாடிப் புத்தகத்தில் புகுந்தார்கள்.

காலப்போக்கில் அந்தப் புத்தகங்கள் காணாமல் பொனதுதான் எங்கள் வருத்தம். அதன் பிறகு புதிய நாவல்களை ( Appa )அம்மாவுக்கு லெண்டிங் லைபிரரியில் இருந்து எடுத்துக் கொடுக்க ஆரம்பித்தார்.அப்பாவும் திருநாட்டுக்கு(ELIYAPOTHU) சென்றபோது அம்மாவுக்கு நானும் தம்பிகளும் புத்தகங்கள் பரிசளிக்க ஆரம்பித்தோம். அம்மாவுக்கு ரொம்ப பொறுமை.

எங்கள் விருப்பத்திற்காக வாங்கிய புத்தகங்களை அவள் படிப்பதை நிறுத்த 4 வருடம் ஆனது.


பிறகுதான் வாய் திறந்து எனக்கு ராஜநாரயணன் கதைகள் பிடிக்கும் வாங்கித்தர முடியுமா என்றாள்!!! ஏம்மா இதை முன்னாடியே சொல்லலை என்று கேட்டால் நீங்களும் நல்ல புத்தகங்கள் தான் கொடுத்தீர்கள்.எனக்கு இப்போது அவைகள் வேண்டி இருக்கவில்லை.எளிமையாகப் படிக்க ஆசையாக இருக்கிறது என்றார்..

அப்போது அரம்பித்தது இப்போது நான் எழுதும் பதிவு.அம்மாவுக்கும் படித்து முடித்து இனிமேல் கையில் புத்தகம் பிடித்து படிக்க முடியாத பலவீனம் வந்தது,.என்னைக் கூப்பிட்டார். நான் வாங்கிப் பரிசளித்த திரு. அய்யா அவர்களின் " கதைகள்" புஸ்தகத்தைஎன்னிடமே கொடுத்துவிட்டார்.


சில நாட்களில் அம்மாவும் அப்பாவை சேர வேண்டிய நாள் வந்தது.அப்போதுதான் அவர் கொடுத்த புத்தகத்தை பார்த்தேன்.அதில் சில குறிப்புகள்,சில தகவல்கள் எழுதி வைத்திருந்தார்.கடைசி பக்கத்தில் தன் மணீயான கையெழுத்தில் திரு ராஜநாரயணனுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று எழுதி இருந்தது. இதை எப்படி நிறைவேற்றுவது என்று பார்த்தபோது புத்தக முதலிலேயே அவர்கள் குடியிருக்கும் இடமும், தொலைபேசி எண்ணும்கொடுத்து இருந்தார்கள்.அய்யாவைப் பற்றீப் பத்திரிகைகளிலும் படித்து இருக்கிறேன். அவருடைய சில கதைகளை விகடன், குமுதம் இவைகளில் வெகு ரசனையுடன் வெலிவந்தன. அதனால் அவரது உயர்வும் பெருமையும் கொஞ்சமாவது தெரியும்.அதனால் அவரிடம் பேச பயம்தான். நாட்களைத் தள்ளிப் போட்டேன்.பிறகு ஒருவாறு முனைப்புடன் அவர்கள் வீட்டுக்கு டெலிபோன் செய்தும் விட்டேன்.

அய்யாவின் வீட்டுஅம்மாதான் எடுத்தாரகள். யார் தெரியுமா, அய்யா அவர்களின் சில கதைகளில் வரும் அவருடைய இல்லத்து அரசி. அம்மா கணவதி. அருமையான இல்லாள்.அய்யாவைத்தவிர வேறு எதுவும் அம்மாவுக்குத் தெரியாது. நல்ல படிப்பாளி.நிறைய சொல்ல வேண்டும் அவர்களைப் பற்றி,, நான் இன்னார் , அய்யாவுடன் பேச வேண்டும் என்றதும், "அதுக்கென்ன இதோ பேசுங்க." என்னாங்க யாரோ சென்னையிலிருந்து ஒரு பொண்ணு பேசுது' என்று அய்யா அவர்களிடம் கொடுத்து விட்டார்......தொடரும்...

Tuesday, August 14, 2007

Monday, August 13, 2007

213,Interlaken,Grindelwald trip.

I have to publish this post in english.
the reason to do so will be like writing a leave letter. so I would rather spare you that torture.:))

Wednesday, August 08, 2007

வெய்யிலோ வெயில்


அதிகம் பழக்கம் இல்லாவிட்டாலும் திரு ஆஸீஃப் மீரான்


மனைவி இறந்ததைப் பற்றிக் கேள்விப்பட்டபோது மிகவும் வருத்தமாக இருக்கிறது.


இத்தனை சின்ன வயசில் எவ்வளவு பெரிய இழப்பு.


அபி அப்பா விவரம் சொல்லும்போது மனது மிகுந்த பாரமாகிவிட்டது.


மீரான் அவர்களுக்கும், குழந்தைகளுக்கும் மிகுந்த தைரியத்தாஇயும் பொறுமையையும் கடவுள் அளிக்க வேண்டும்.
பஸ் நிறுத்தத்தில் நிற்கும் கணக்கில்லாத தினக் கூலி ஆட்களைப் பார்க்கும்போதும்,


இந்த வெயிலுக்குப் பயந்து அவர்கள் நான் இப்போது


உட்கார்ந்து இருக்கும்


இந்த நெட் கார்னர் இருக்கும் maalஉக்குள் உலவிக் கொண்டிருப்பவர்களைப் பார்க்கும்பொது,


நம் சென்னையைத்தான் நினைத்துக் கொள்கிறேன்.


அடடா, எத்தனை தர்பூஸ் வண்டிகள். எத்தனை இளநீர்க் கடைகள்.


ஒன்றுமில்லாவிட்டால் ஒரு வீட்டு வெளிக் காம்பவுண்ட் நிழலாவது கிடைக்கும்.
இந்த ஊரில் கட்டிடங்கள் கட்டிடங்கள். மேலும் கட்டிடங்கள்.


அதற்கு இவர்கள் கொடுக்கும் விலை, மின்சாரம், தண்ணீர்க் கட்டணங்கள் உயர்வு.
ஊர்ருக்குப் பேச வேண்டுமானால் சொத்தையே எழுதி வைக்கவேண்டும்.
நம்ம வீட்டுக்கு உதவிக்கு வரும் பெண் இங்கே வந்து 15 வருடங்கள் ஆ கிறதாம்.


அசராமல் நான்கு வீட்டில் வேலை செய்கிறார்.


கணவன் இறந்து இங்கே வேலைக்கு வந்து இருக்கிறார்.


ஒரு பெண்ணுக்குத் திருமணம் ஆகி விட்டது.


அவரது மகனும் வண்டி ஓட்டிப் பிழைக்கிறார் சொந்த ஊரில்.
இன்னும் ஒரு பெண் திருமணத்துக்குக் காத்து இருக்கிறாள்.


நான்கு வருடங்களுக்கு ஒரு முறைதான் ஊருக்குப் போவாராம்.
இனி நான் ஒரு நொடி கூட சென்னை வெயிலைப் பற்றிக் குறை சொல்ல மாட்டேன்.


இங்கே இருக்கும் உழைப்பாளிகள் அனைவரையும்


நலமாக வைக்கும்படி இறைவனை வேண்டிக்கொள்ளுகிறேன்.
Tuesday, August 07, 2007

இளைத்தேன் நன்றாய் நூறுவயது

இப்போது ஒல்லியாக,ஸ்லிம்மாக, தின்னாக, எதையுமே தின்னக்கூடாத உடம்பு வாகுதான் கொண்டாடப்படுகிறது.

ஒரு மணியன், ஒரு சேவற்கொடியோன்,கொத்தமங்கலம் சுப்பு சார், சாவி சார் கதைகளில் வளர்ந்த எனக்கு அப்போது இருந்த வருத்தம் நாம் எப்போது அந்த மாதிரி இருப்போம் என்று ஒரே கவலை. எந்த மாதிரி? ஜயராஜ் சார் படம் போடுவாரே,, அதாவது வடிவோடு, அழகாக,பார்க்கிற மாதிரி!! அதுவும் கோபுலு சார் போடும் படங்கள் பார்த்துவிட்டு நானும் சூடு போட்டுக்கும் பூனை போல், வரைந்து பார்த்ததில்( கை வளைந்தால் உடம்பும் வளையும் என்று யாரவது சொல்லி இருப்பார்கள்) எங்க அம்மா அப்பாவுக்கு ஒரு மாதிரி சந்தேகம் வந்து விட்டது.ஓஹோ நம்ம பொண்ணுக்கு சின்னக் கண்ணாக இருப்பதால் இந்த வில் போன்ற புருவம் வரைந்து மனதைத் தேற்றிக் கொள்ளுகிறாளோ, ஒட்டடை குச்சி என்று அழைக்கப்படுவதால் இந்த மிஸ் நிம்புபானி ஓவியங்கள் நோட்டுபுக் தாள்களில் நிரம்புகிறதோ என்று சீக்ரெட்டாகக் கவலை. அப்பா அம்மாவிடம் கலந்து பேசி, ஒரு இரவு சாப்பாட்டுக்குப் பின்னர் எங்கள் மூன்று பேரையும் அழைத்துப் பொதுவாக உடல் ஆரோக்கியக் குறிப்புகளைக் கொடுக்க ஆரம்பித்தார். சின்னதம்பிக்கு தூக்கம் வந்தாலும் ஏதோ கதை போல என்று தலையை ஆட்டினான். பெரிய தம்பி அப்பாவிடம் நிறைய மரியாதை, அதனால் உன்னிப்பாக கேட்டுக்கொண்டான். எனக்கு as usual புரியாததால் ஜெனெரலாக ஆமாம்பா சொல்லிக் கொண்டு இருந்தேன்.
"ஆகையினாலே மனசு ஹெல்தியாக இருக்கணும்னால் நிறையப் படிக்கணும்,பேசணும், இதோ நீ கூட படம் வரயறே. உனக்கு நல்ல ஓவியராக வர ஆசைனு தெரியரது. ஆனால் ஏன் கண் மாத்திரம் போடறே?" என்ற கேள்விக்குறியொடு நிறுத்தினார். ( அவரிடம் எனக்கு சொல்ல சாமர்த்தியம் போதவில்லை,, அப்பா எனக்கு கண் வரைக்கும் தான் ஒழுங்காக வரது அதுக்கு அப்புறம் கோணல் மாணலாப் போகிறதுனு) அம்மாவும் அன்னை படத்தில் வரும் சந்திரபாபு பாட்டுப்போல்,புக்கைக் கண்டா கண், ஹிண்டு பேப்பரில கண், ஆனந்தவிகடன்லெ கண்ணு, மளிகை சுத்தி வர பேப்பரில் கண்ணு கண்ணு என்று பாடாத குறையாகச் சொன்னார்.திடீரென முழித்துக் கொண்ட என் தம்பி, அப்பா அதே கண்கள் சினிமாப்பா என்றான். பெரியவனும் ஆமாம் மா,எல்லா கண்களும் நம்மையே பாக்கிற மாதிரி இருக்கு, ஜேம்ஸ்பாண்ட் மூவி மாதிரி. எனக்கு வந்த கோபத்தில் ஏதாவது ரூமில் போய் விழுந்து அழலாம்னா தனி பெட் ரூம் கூட இல்லியே என்றுதான் தோன்றியது. அப்புறம் ஒரு மாதிரி எனக்கு ஒருவிதமான கோளாறும் இல்லை என்று சாதித்து கொஞ்ச காலம் பென்சில், ரெட் பென்சில் ஒன்றும் தொடவில்லை.(அப்போதெல்லாம் கலர் கலராகப் பென்சில் வாங்கித்தர மாட்டார்கள்.)அதனால் நான் வரையும் பெண்கள் எல்லாம் சிவப்புப் புடவையும் கருப்பு டிசைனும் போட்ட ப்ளௌசுமாகத் தான் இருப்பார்கள். இவ்வளவு ஸ்தூலமான பாடிலைனைத் தேடி நான் அலைந்து மேலும். இளைத்தேன்.

இவ்வளவு கதை இப்போது எதற்கு/ தெரியுமா? இரண்டு நாட்கள் முன்னால் நடந்த எங்க வீட்டு விழாவில் என்னைப் பார்த்த என் மாமி ஏன் நீ இளைக்கவே இல்லை? வாக்கிங் போறியோ? சாப்பாடிலே கட்டுப்பாடு வேணும்மா. வயசாயிடுத்து பார்த்தியா.... என்றெல்லாம் அடுக்கவும், (அவங்களுக்கும் என் வயசுதான்.அது வேற கடுப்பு. அவங்க இன்னும் ஸ்லிம் ஜேன். அதுக்கு வித்தியாசமான காரணங்கள் உண்டு.)

(அதற்காக நான் காலை எழுந்தவுடன் காப்பி, பின்பு கனிவுடன் ஆறு தோசை, மதியம் முழுதும் தூக்கம் ,இரவில் கலந்த சாதங்கள் என்று பூந்து வெள்ளாடலியே.அடடா எப்படி இருக்கும் அந்த லைஃப்?) எனக்கு வந்த வெறியில் என் சுகர் கட்டுப்பாட்டையும் மீறி, அங்கே இருந்த மைசூர் பாகு, தட்டை, முறுக்கு ஜாங்கிரி எல்லாவற்றையும் கல்யாண சமையல் சாதம் பண்ண ஆசை வந்தது.


பிறகு தான் என் உரிமையான இந்த ப்ளாக் பதிவில் போட்டு மனதை சமாதானப் படுத்திக்கொண்டேன். 48 கேஜி இருந்தவங்க 74கேஜி ஆவதற்கு 40 வருடம் ஆச்சு. அதனாலே இங்க சொல்ல வரது எல்லாம் இப்படி இருந்தவங்க அப்படி ஆவதும் உண்டு. அப்படி இருந்தவங்க இப்படி ஆவதும் உண்டு. எல்லாம் காலம் செய்யும் கோலம்.


எனக்கு இப்பொ கூட ஆசை தான் கச்சேரி பண்ண,அதிர்ஷ்டம் என்னவோ டிரெட்மில் மேய்க்கறபடிதான் இருக்கு. பரவாயில்லை நான் வெகு சந்தோஷமாகக் குண்டாகவே இருக்கிறென். யாருக்கு என்ன நஷ்டம்?

Sunday, August 05, 2007

தமிழ் எழுத இப்போதுதான் முடிந்தது

இரண்டு நாட்கள் பயணத்தில் ஓடி விட்டன.
கீபொர்டில் தமிழ் பயன்படுத்த முடியவில்லை.
இப்போது ஒரு நெட்கஃபே கண்டுபிடித்ததில் தமிழ் எழுத முடிந்த
சந்தோஷம் இருக்கே.
சொல்லி முடியாது.
ஆனாலும் வீட்டில் உள்ள சுதந்திரம் இங்கே இல்லாத்தால் கற்பனை
அது குதிரையா கழுதையானு நீங்கள் தான் சொல்ல வேண்டும் ...
தடுமாறுகிறது.

மீண்டும் பார்க்கலாம்.
இணைய நண்பர்கள் அனைவருக்கும் தோழர்கள் தோழியர் தின வாழ்த்துக்கள்.

Thursday, August 02, 2007

ஆனந்தம் ஆனந்தமே ஜயாநாராயணன் கல்யாணம் சுபமே

நடுவில் கடிதங்கள் ,கேள்விகள் மாப்பிள்ளைக்கு சூட்,


பெண்ணுக்கு எத்தனை பட்டுப்புடவை,நாத்தனார்களுக்குச் சீர்,
கல்யாண சாப்பாடு மெனு எல்லாம் விவாதிக்கப் பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.
மாப்பிள்ளை வீட்டாருக்கு வேண்டிய அப்பளம் வடகம்,வடாம் எல்லாம் பெண்வீட்டார் கீழநத்தம் வந்து இறங்கிய அடுத்த நாளிலிருந்து தயாரிக்கப்பட்டன.
அவர்கள் ஒரு மாதம் முன்னதாகவே எம்.சி.எம் ஸ்கூல் விடுமுறை நாட்கள் ஆரம்பித்ததுமே திருநெல்வேலி எக்ஸ்பிரசில் வந்து இறங்கிவிட்டார்கள்.
ஸ்ரீவீரராகவனின் சகோதரசகோதரிகள், திருமதி ருக்குமணியின் அக்கா,தங்கைகள்,பெற்றோர்,பெண்ணின் நான்கு குட்டி சகோதரர்கள் (12,10,6,4)எல்லோரும் வெய்யில் வீணாகாமல் கிராமத்துக்கு வந்தார்கள்.


திருமதி ருக்குமணி...எங்க அம்மா வழிப்பாட்டி..சீனிம்மாவின் மூத்த சகோதரியும் இளளய சகோதரியும் சமையல் பொறுப்பு ஏற்றுக் கொண்டார்களவாசலை அடைத்து அழகான பந்தல் போடப்பட்டது. பிள்ளைவீட்டார் வீட்டு முன்பாகவும் பந்தலும் கோலங்களும் போடப்பட்டன.


பிள்ளைவீட்டார் வரும் நாளும் வந்தது.அவர்கள் வீட்டு மனிதர்களாக ஐம்பது நபர்கள் தான் வரமுடிந்தது. மற்றவர்கள் பெண்ணை திருநெல்வேலியில் பார்த்துக் கொள்வதாகச் சொல்லிவிட்டார்கள்.
வந்திறங்கியதும் உபசாரக்காப்பி,கேசரி,போண்டாஎல்லாம் முடிந்தது.

மாப்பிள்ளைக்குத் தோழனாக அவர் சகோதரரே இருந்ததால் அநேகமாக அவர் திருமணமும் அப்போதே நிச்சயமானதாக அம்மா சொல்லுவார்.

அடுத்த நாள் ஜானுவாசம் . காலையிலிருந்தே பரபரப்பு. திருநெல்வேலியிலிருந்து ஏற்பாடாகி இருந்த சாரட் வண்டிக்காரன் திடீரென உடல்நலமில்லை என்று ஆளனுப்பிவிட்டான். அவன் குதிரைகள் நலமாக இருந்தன நல்லவேளை:)))

அதனால் வேறு ஆள் ஏற்பாடு செய்ய பெண்ணின் மாமா விரைந்தார்.
கையோடு இன்னோரு குதிரைக்காரனோடு அந்த சாரட்டிலேயே கீழநத்தம் வந்துவிட்டார். அதுவே பெரிய அதிசயமாகிவிட்டது அந்தத் தெரு மக்களுக்கு. எட்டாம் வீட்டுக் கல்யாணம் அமர்க்களப்பட்டது. எட்டாம்வீடு என்று அழைக்கப் படுவது பெருமாள் கோவிலுக்கு எட்டாம் இடத்தில் இருக்கும் வீடு.

இப்பவும் இருக்கும் என்று நினைக்கிறேன்.


ஸ்ரீவேணுகோபால ஸ்வாமி சன்னிதியிலிருந்து ஊர்வலம் புறப்படுவதாக திட்டமகோவிலில் சர்க்கரைப்பொங்கல் ஏற்பாடு ஆகீஇருந்தது.
பெண்வீட்டாரும்,மாப்பிள்ளைவீட்டாரும் ஒரு எட்டில் கோவிலுக்கு வந்து விட்டனர். அலங்கரம் செய்யப்பட்ட சாரட்டும் ஒரு ஒல்லிக் குதிரைக்காரரும்
அவரைவிடச் சுமாரான வெள்ளளக்குதிரைகளும் நின்றுகொண்டிருந்தன.
அதில் ஒரு குதிரைக்கு வயிறு சரியில்லை. எந்தப் புல்லைச் சாப்பிட்டதோ.


ஸ்ரீவேணுகோபல சுவாமிக்கு அர்ச்சனை செய்து சர்க்கரைப் பொங்கல் வினியோகம் செய்து, மாப்பிள்ளைக்கு வேஷ்டி,ஷர்ட்,சூட் எல்லாம் வெற்றிலை பாக்குத் தட்டில் வைத்து சம்பிரதாயமாகக் கொடுக்கப்பட்டது.

சி.நாராயணனுக்கு குதிரை வண்டி பழக்கம் என்றாலும் இது போல ஓப்பன் ஊர்வலம் வந்ததில்லை.
தயங்கியவாறு தன் அக்காபிள்ளைகளையும் துணைக்கு அழைத்துக் கொண்டு ஏறி அமர்ந்தார். நான்கு பசங்களும் உற்சாகக் கோஷமிட ஊர்வலம் கிளம்பியது.
நான்கு தப்படி போயிருக்காது.,அதற்குள் பாண்டு வாத்தியக்காரர், ஒரு யானை பிளிறன மாதீரி ஒரு நோட் வாசிக்கவும் குதிரை மிரண்டது.

ஒரே தாவல், அடுத்த குதிரையும் மிரள நான்கு கால்களும் மேலே தூக்க சாரட் கவிழ்ந்தது.

அனைவரும் ஆ என்று அலறுவதற்கு முன்னாலேயே மாப்பிள்ளையும் குழந்தைகளும் வெளில வந்தாச்சு. ஒரு சிராய்ப்பு கூட இல்லை.

அப்பாவின் சித்தி கொஞ்சம் கடுபிடு பண்ணினாராம்.

சகுனமே சரியில்லையே.அது எப்படி இந்த மமதிரி உலகத்த்திலே இல்லாத குதிரை கொண்டுவந்தார் உங்க சம்பந்தி என்றெல்லாம் பேச்சு வர,
மமப்பிள்ளை அசராமல் இருந்ததால் மேற்கொண்டு சிரிப்புகளுடன்

ஒரு வழியாக நடந்தே ஜானுவாசம் நடந்து முடிந்தது.

சாயந்திர நிச்சயதார்த்தம் எல்லாம் நிறைவேறி, பந்திக்கு அமர்ந்தபோது மீண்டும் ஒரு சின்ன பிரச்சினை.

மாப்பிள்ளையின் மாமாவைச் சரியாக உபசாரம் செய்து சாப்பிடக் கூப்பிடவில்லை என்று. உடனே ஒரு வயதானவர்கள் படை பிள்ளை தங்கியிருக்கும் வீட்டீற்குக் காசி அல்வாவோடு போய் அழைத்துவிட்டு வந்தார்கள்.

அல்வா செய்த வேலையோ என்னவோ அவர் பிறகு வாய் திறக்கவில்லை.

இலைகள் போடப்பட்டு உட்கார்ந்தவர்களுக்கு நல்ல விருந்துபசாரம் நடந்தது.

திரட்டிப்பால், மைசூர்பாகு அன்றைய இனிப்பு. வழக்கம்போல கதம்ப சாதம்,சித்திரான்னம்,தயிர்ப்பச்சடி,உருளைக்கிழங்கு பொடிமாஸ்,வாழைக்காய் வறுவல் ,திருக்கண்ணமுது என்று எளிமையான சமையல் தான்.

அடுத்த நாள் விடிந்து காலையிலேயே முகூர்த்தம்.

மாப்பிள்ளையை நல்ல படியாகக் கவனித்துக்கொள்ள இங்கிருந்து இரண்டு பேர் பக்கத்திலேயே இருந்து வென்னீர் வைத்துக் கொடுத்து உண்மையயன அன்பில் திக்கு முக்காட வைத்ததாக அப்பா பின்னாட்களில் சொல்வார்.


இப்படியாகத்தானே சௌபாக்கியவதி ஜெயலட்சுமிக்கும் சிரஞ்சீவி நாராயணனுக்கும் இனிதே கல்யாண வைபவம் நடந்து முடிந்தது. மேற்கொண்டு எந்த வித சங்கடமும் இல்லாமல் கட்டுசசதத்துடன், ஏகப்பட்ட பொரித்த பொரிக்காத அப்பளக் கூடைகள்,முறுக்கு சம்புடங்கள்,திரட்டிப்பாலோடு வெள்ளிக்குடம், என்று பலவித சீர் செனத்தியோடு புக்ககம் புகுந்தாள் சேச்சிப் பாப்பா என்கிற புஷ்பாவாக இருந்து மாறிய ஜெயலட்சுமி நாராயணன். சுபம்.
மேற்கொண்டு 1943ல் திருமணம் நடந்தாளும் அவர்கள் தனிக்குடித்தனம் வைக்கப்பட்டது 1945ல் தான். சென்னையில் மிச்சப் படிப்பை முடித்து 15 வயதில்தான் அப்பாவும் அம்மாவும் அப்பாவுக்குப் போஸ்டிங் ஆன கயத்தாறுக்குத் தனிக்குடித்தனம் வைக்கப் பட்டார்கள். அது தனிக்கதை.:)))


Wednesday, August 01, 2007

லக்ஷ்மிகல்யாண வைபோகமே...2

புஷ்பா என்கிற பாப்பாவுக்கு ஜாதாகம் கணிக்கவில்லை. ஸ்ரீ வீரரரகவனுக்கும் அவரது மனைவி திருமதி.ருக்குமணிக்கும் வயது வித்தியாசம் கொஞ்சம் நிறைய.
ருக்குமணி அம்மா ஆயில்ய நட்சத்திரமானதால் திருமணம் தடைப்பட்டு
12 வயதில்தான் தன்னைவிட 14 வயது மூத்த ஸ்ரீ வீரராகவனைத் திருமணம் செய்தாராம்.
அதுவும் அவருடைய அப்பா ,அம்மா இருவரும் ஏற்கனவே காலமாகிவிட்டதால்தான் இந்தத் திருமணம் நடந்ததாக எங்க கொள்ளுத் தாத்தா செவல் ராமய்யங்கார் சொன்னதாக புஷ்பா என்ற பாப்பா அதான் எங்க அம்மா ஜயலக்ஷ்மி நாராயணன் சொல்வாங்க.
அதனால்தான் பெண் பிறந்ததும் ஜாதகம் குறிக்கவில்லையாம்.

குழப்பிட்டேனா. சரி, ஒரிஜனல் கதைக்கு வரலாம்.
இந்த மாதிரி ஜாதகம் இரண்டுபேருக்குமே இல்லைன்னதும்
திருநெல்வேலிலேருந்து தாத்தா ஸ்ரீனிவாசன் சென்னைக்கு கடிதம் போட்டாராம்.

எல்லாம் பகவான் விருப்பம் சங்கல்பம்.
Wஅராயணனுக்குப் பெண்ணைப் பிடித்தால் பூக்கட்டிப் போட்டு கோவிலில் சம்மதம் வாங்கலாம் என்று சொன்னாராம்.
அதன் படி 22 வயது சிரஞ்சீவி நாரயணன் தன் அக்காவோடும் அத்திம்பேர் இன்னும் என் வருங்கால மாமியார் திருமதி கமலா சுந்தரராஜன் இவர்கள் சகிதம் ஒரு டாக்ஸியில்,
அந்த வரிசை ஸ்டோர்வீட்டில் பெண் பார்க்க வந்தார்களாம்.

சேச்சிப்பாப்பாவும் தூக்க முடியாத ஒரு பட்டுப்புடவை கட்டி,கழுத்து நிறைய நாலு வடம் சங்கிலி போட்டு, புதிதாகத் தைத்த பஃப் ஸ்லீவ் ரவிக்கை போட்டு, ஜயதி ஜயதி பாரத மாதா பாடிக் காண்பித்துக் குரல்வளம் உண்டு என்று நிரூபிக்க,

தலை கூட நிமிராமல் உட்கார்ந்திருந்த மாப்பிள்ளை சாரும் சரின்னு சொல்லிட்டாராம்.
மேற்கொண்டு சம்பந்தம் பற்றிப் பேச, பெண்ணின் அப்பா திருநெல்வேலி வந்து சேர்ந்தார். அங்கு காருகுறிச்சியில் ஏற்கனவே சகலை இருந்ததால்
அவரையும் அழைத்துப் போய் லௌகீகம் பேசி முடித்தனர்.
திருமணம் வரும் வைகாசி மாதம்,மே 17 நடக்க நிச்சயம் செய்தனர்.
கீழநத்தத்தில்தான் திருமணம் என்பது உறுதியானது.

அப்போது இரண்டாம் உலகப்போர் நடந்த சமயம்.விலை வாசிகள் உயர்ந்த பட்ச விலையில் இருந்ததால் கிராமத்தில் திருமணம் நடத்த ,இப்படித்தீர்மானம் செய்திருக்கவேண்டும்.

திருநெல்வேலியிலிருந்து கீழநத்தம் வரும் வண்டி செலவை பெண்ணின் அப்பா ஏற்றுக்கொண்டார்.
மூன்று நாட்கள் திருமணம். பிள்ளைவீட்டாருக்குத் தனி வீடு அமைத்துக் கொடுத்து சமைக்க ஆளும் ரெடி.
வெள்ளைக்குதிரைகள் பூட்டின சாரட் வண்டியில் மாப்பிள்ளை அழைக்க வேண்டும்,
புஷ்பா என்கிற படு நாகரீகமான பேரை (!) ஜெயலக்ஷ்மி என்று மாற்ற வேண்டும், இதெல்லாம் திருமதி திருவேங்கடவல்லி ஸ்ரீனிவாசன், பையனோட அம்மா போட்ட கண்டிஷன்.:)))
ஆனால் இந்த வெள்ளைக் குதிரை வேற நினைத்து விட்டது.
எங்கள் வீட்டு காமெடி டைம் நிகழ்ச்சி அப்பாவின் குதிரைவண்டி சவாரியும்
குதிரை தறிகெட்டு ஓடினதும்தான்.:))))

The Secret Language of Trees