Tuesday, August 28, 2007

கிரகண நேரப் பித்தம்

இன்று பௌர்ணமி. ஆவணி அவிட்டம்.ரக்ஷா பந்தன்
எல்லாம் சேர்ந்த நாள்.
பி4 யூ டிவி சானலில் ஒரே பாசமலராகப் பாடல்கள் வரும் என்று நினைக்கிறேன்.
உலகம் முழுவதும் உள்ள அத்தனை பேரும் சகோதர பாசத்துடன்
இருந்தால்.....
இன்று ஒருநாள் மட்டும் சகோதரியை நினைத்தால் போதுமா.
நம்ம ஊரில் கனு, கார்த்திகைக்கு அக்கா தங்கைகளுக்கு சீர் செய்வது வழக்கம்.
இதனாலெயே முரண்பாடுகளும் வர வாய்ப்பு இருக்கிறது.
'சீர் கொண்டுவந்தால் சகோதரினு' தூக்குத் தூக்கி படத்தில் ஒரு வசனம் வரும்
அது கேட்டதிலிருந்து எனக்கு ஒரு கோபம் வரும். அப்படி சகோதரிகள் இருந்தால்
அது யாருடைய தப்பு என்று.
காலா காலமாக அது வழக்கில் இருந்து வந்து இருந்தால் யார் ஏற்பாடு செய்தார்களோ
அவர்களைக் கேட்க வேண்டும் என்று தோன்றும்.
நாமெல்லாம் நம் அண்ணனையோ தம்பியையோ அப்படி எதிர்பார்க்கவில்லையெ
மாறுதலுக்கு நானே தம்பி வீட்டுக்குப் பரிசு கொண்டு போய்க் கொடுப்பேன்.
அம்மாவிடம் விளக்கம் கேட்ட போது சொன்னார்கள்.
வெகு காலமாக இந்த வழக்கம் ஏற்பட்டத்ற்குக் காரணம் இருக்கிறது.
அப்போது பெற்றவர்களுக்குப் பெண்ணைப் போய்ப் பார்க்க ஏதாவது சாக்கு வேண்டி இருந்தது.
கண்ட நேரத்தில் போய்ப் பார்க்க முடியாது. அவர்களுக்கு அதற்கு வசதியும் இருக்காது.
விவசாய வேலைகள், அதற்கு மேற்பட்ட பொருளாதர வசதிகள் எல்லாம் குறுக்கே நிற்கும்.
ஆடி,ஆவணி போய்க் கார்த்திகை வந்ததும், விளைச்சல் முடிந்து ஒரு அறுவடைப் பணம் கையில் வந்ததும்
பலவகைப் பலகாரங்கள்,துணிமணி எல்லாம் எடுத்துக் கொண்டு
பெண்ணின் வீட்டுக்கு எழுதி விவரம் எழுதி பதில் கிடைத்ததும்
வண்டி கட்டிக் கொண்டு போவார்களாம்.
மத்தியதரக் குடும்பங்களில் வருடத்திற்கு இரண்டு தடவை பெண்ணுக்கான
செலவு என்று அழகாக அனுமானித்து, அவள் வீட்டுக்கும் போய் அங்கு இருக்கும்
நிலவரத்தையும் அறிந்து கொண்டு இன்ப துன்பங்கள் பற்றி விசாரிப்புகள் செய்து
ஒரு ஃபாரின் மினிஸ்டருக்கு உண்டான கடமைகளைச் செவ்வனே செய்ய
இந்த மாதிரி ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது.:)))
சரி. இது ஓகே.
அவர்கள் பதிலுக்கு ஏதாவது சீர் செய்து அனுப்புவார்களா என்றும் அம்மாவைக் கேட்பேன்.
நீதான் ஆரம்பிச்சு வையேன் என்று அம்மா சிரித்தார்.
அது போதுமே. இதுவரை குறை வைக்கவில்லை என்றே நம்புகிறேன்.


பின் குறிப்பு:விழவில்லை என்று ரொம்பப் பெருமையாக இருந்தேன்.
முந்த நாள் இரவு இருட்டில், சிங்கத்துக்கு உதவி செய்யப் போய்
காலைக் கட்டிலில் பார்த்துக் கொண்டேன்.
கால் விரல்கள் கொஞ்சம் போண்டா அளவுக்கு வீங்கி,மினு மினு என்று இருக்கின்றன.
அதற்கு உண்டான கவனிப்புகளும்(கை,சாரி கால் வந்த கலையாயிற்றே)
போட்டு, ஒரு நாள் தமிழ்மணம் பார்க்காமல் இருந்தால் வரும்
பைத்தியத்துக்கு,
கீழே வந்து பதிவு போட்டாவது நம்ம வலி மறக்கலாம் என்று வந்துவிட்டேன்.
செக்யூரிடியிலிருந்து, ஒவ்வொரு கடைக்காரராக விசாரித்ததும், இப்பொ வலி ரொம்பவே குறைந்து விட்டது.:)))))))))))))))))))))0

வேற எங்க சிம்பதி கிடைக்கும்னு தேடிக் கொண்டிருக்கிறேன்!!!!
சகோதர சகோதரிகளுக்கு ரக்ஷா பந்தன் வாழ்த்துக்கள்.

23 comments:

ambi said...

ஓ! அதான் என் மாமனார், மாமியார் பெங்களூர் வந்து இருக்காங்களா? :)

சரி, சரி, நான் கொஞ்சம் நல்ல பெயர் எடுத்துக்கறேன்.

ஆக மறுபடியும் ஒரு கால் கட்டா?

நீங்க இடிச்சுண்டதுக்கு சிங்கத்துக்கு வேற குட்டா? அகப்பட்டவனுக்கு அஷ்டமத்துனு எதோ ஒரு மொழி வரும். :))

"நானும் இப்படி தான் கைலாயத்துல குதிரை மேலே இருந்து விழுந்து... நல்ல அனுபவம் வல்லி!னு கீதா பாட்டி பின்னூட்டம் குடுப்பாங்க பாருங்க. :p

அப்படியே அந்த குதிரை என்ன கதி ஆனது?னு சொன்னா கொஞ்சம் நல்லா இருக்கும். என்ன சொல்றீங்க வல்லி மேடம்? :)

அபி அப்பா said...

நம்ம அம்பிக்கும் கீதாம்மாவுக்கும் சமாதானம் பண்ண நோர்வே தூதரால கூட முடியாதுப்பா:-))

என்னாச்சு வல்லிம்மா இப்போ எப்படியிருக்கு, பேசினப்ப கூட சொல்லலையே? சீக்ரமா குணமானா கோபிக்கு மொட்டை போடுறேன்ன்னு வேண்டிகோங்க! இங்க துபாய்ல இதுதான் பழக்கம்:-)

வல்லிசிம்ஹன் said...

Abi Appa,
viralkaL evvaLavu avasiyamnu ippo nallaath theriyuthu.
chummathaan sollalai.
innikku adhaiye pathivaap pottutten.
nanRippa.

வல்லிசிம்ஹன் said...

Ambikkum Geethavukkum samathaanamaa. mhummm.
ippa sathikku nadakkaathu.:)))))

தி. ரா. ச.(T.R.C.) said...

வல்லியம்மா இரண்டு நாளா வலியம்மாவா. பாத்துபோகக்கூடாதோ.
ரக்ஷா பந்த்னுக்கு இந்த சகோதரனையும் நினைச்சுகோங்கோ.


அம்பியும் கீதாமேடமும் எண்ணயும் தண்ணீரும்போலத்தான் இரண்டும் சமாதனாமாக இருப்பதா?

துளசி கோபால் said...

அடடா................ வலி குறையணுமுன்னா இன்னும் ரெண்டு பதிவைச் சேர்த்துப்போடுங்கோ.
அப்புறம் மூணு வேளை பின்னூட்டம் மாடரேட் செஞ்சு பதில் கொடுக்கணும்.
நான் இப்படித்தான் செய்யறது வழக்கம்:-))))

ரக்ஷாபந்தனுக்கு இனிமே சகோதரிக்கும் நீங்கள் சீர் கொடுக்கணும், ஆமா.

நீங்க அபிஅப்பாவுக்கு எழுதின பீட்டரை, வைரக்கல்னு தப்பாப் படிச்சுட்டேன்:-))))

வைரக்கல் எவ்வளவு அவசியமுன்னு இப்ப நல்லாத் தெரியுது:-)))))

நேத்து இங்கே நியூஸியில் கிரகணம் தெரியுமுன்னு சொன்னாங்கன்னு
குளிரில் வெளியே போய் நின்னதுதான் மிச்சம். ஒரே மேக மூட்டம். இருட்டு(-:

Geetha Sambasivam said...

அபி அப்பாகிட்டே பேசும்போது கூடச் சொல்லலியா? ம்ம்ம்ம்ம்., சரி, இப்போ எப்படி இருக்கு கால் வலி? போண்டா மாதிரின்னு சொல்றீங்க? உ.கி. போண்டாவா? சாதாரண போண்டாவானு சொல்லலை, போகட்டும், இங்கே அந்த ஹிந்திப் படம் கிடைக்குமா தெரியலை, பார்க்கணும், ஹிஹி, முன்னாடி பதிவுக்கும் சேர்த்து எழுதி இருக்கேன்.

@அம்பி,
@அபி அப்பா,
@தி.ரா.ச. சார், என்ன மூணு பேரும் ஒண்ணாக் கட்சி கட்டிட்டு , ஒத்துப் பேசிட்டு வந்திருக்கீங்க போலிருக்கு? :P
@அம்பி, குதிரைக்கு ஒண்ணும் ஆகலை, அடிபட்டது எனக்கு, அனுதாபம் குதிரைக்கா? க்ர்ர்ர்ர்ர்ர்ர்., இதான் எதையும் ஒழுங்காப் படிக்கிறதில்லை. முதலில் எதையும் நல்லாப் படிச்சுட்டுப் பின்னூட்டம் கொடுக்கக் கத்துக்குங்க! :P

ambi said...

//நம்ம அம்பிக்கும் கீதாம்மாவுக்கும் சமாதானம் பண்ண நோர்வே தூதரால கூட முடியாதுப்பா//

ha haaaa :) ROTFL :)


//குதிரைக்கு ஒண்ணும் ஆகலை, //

@geetha paati, அதை அந்த குதிரைக்காரன் பின்னுட்டத்தில் சொல்லட்டும் நம்பறோம். :p

//என்ன மூணு பேரும் ஒண்ணாக் கட்சி கட்டிட்டு , ஒத்துப் பேசிட்டு வந்திருக்கீங்க போலிருக்கு?//

Great people think alike. :)))

வல்லிசிம்ஹன் said...

அம்பி, இன்னும் கொஞ்ச நாள்ல கீதா சென்னை வந்துடுவாங்க.
நாங்களும் அப்படியே.
ஸோ வாட்ச் அவுட்:)))
மறுபடி குட்டி கால் கட்டு.
ஆமாம் ஒரெ ஸ்டஃபியா இருக்கு. பான்(fan)போடுனு அவர் சொல்லப் போயி இருட்டில தட்டுத் தடுமாறி இருக்கிற இத்தனியூண்டு கட்டில் காலும் என் காலௌம் மோதிக்கிட்டதுனால எனக்கு அடி பட்டது.
அதனால சிங்கத்துமேலதான் பழி:))))
அகப்பட்டவனுக்கு அஷ்டமமா. இவர் உத்திராடம். என்ன கதையோம்மா. நமக்கு ஒண்ணும் புரியலை:)))

வல்லிசிம்ஹன் said...

வரணும் தி.ரா.ச..
பின்ன உங்களை நினைக்காமலயா.

அண்ணா ஆச்சே:))
அண்ணாதானே????

வல்லிசிம்ஹன் said...

தங்கச்சிக்கு வைரக்கல்தானே வேணும்.
வாங்கிடலாம்ம்மா.
இங்க ஜாய் அலுக்காஸ்னு ஒரு கடை இருக்கு. அதில 50% விலை குறைச்சு வைரங்கள் சேல்.
எத்தனை வேணும்னு சொல்லுங்கோ.....
அங்கெயே தெரியலையா.
இங்க கிரகணம் வந்தாலும் வராட்டாலும் ஒரே மாதிரிதான்.
வெளில வந்ததானே தெரியும்:))))
வலி நல்லாத் தேவலை. ரெண்டு வேளையும் சமைச்சா வலி போயிடும்னு வைத்தியர் சொன்னார்:)))

வல்லிசிம்ஹன் said...

அம்பி பார்த்து பார்த்து.....
அபி அப்பாவும் கீதாவும் அரட்டைல உங்களையும் என்னையும் நார் நாராக் கிழிச்சுடுவாங்க.
அபி அப்பா என்னை சௌகார் ஜானகி மாதிரி இருக்கேனு கீதாட்ட சொன்னாராம்.
எப்படி இருக்குப் பாத்தீங்களா.
நம்ம ஒரு அணியே ஆரம்பிக்கலாம் சரியா.:)))

ambi said...

//அபி அப்பா என்னை சௌகார் ஜானகி மாதிரி இருக்கேனு கீதாட்ட சொன்னாராம்.
எப்படி இருக்குப் பாத்தீங்களா.
//

ஹ ஹா. நான் கூட அப்படி தான் நினைத்தேன் உங்க போட்டோ பாத்துட்டு. :p

உங்க சிங்கத்தை பாத்தா ஆர்.வி.வெங்கட் ராமன் மாதிரி இருக்கு. என்ன ஆர்.வி கொஞ்சம் உயரம் கம்மி. சிங்கம் ஆறு அடினு நினைக்கிறேன். சரியா? :)

அபி அப்பா இன்னும் கீதா பாட்டியை நேரில் பாக்கலை. பாத்தா என்ன சொல்லுவார்?னு நினைச்சா என்னால சிரிப்பை கட்டுபடுத்தவே முடியலை. :))))

வல்லிசிம்ஹன் said...

adap paavame.
Ambi,
Savukkaar kovicchuttu aRikkai vidap poRAnggannu ninaikkiREn.:))

Singaththukitta solREn unga comment paththi.

இலவசக்கொத்தனார் said...

சிங்க பதி பக்கத்தில் இருக்காரே. அப்புறம் சிம்பதிக்கு ஏன் இப்படி ஊர் பூரா அலையறீங்க?

இப்போ கால் வலி சரியாப் போச்சா?

Geetha Sambasivam said...

நீங்க செளகார்னா, நான் ஜெயலலிதானு அபி அப்பா கிடே சொல்லிட்டேனே வல்லி, அவர் சொல்லலியா உங்க கிட்டே? :))))))))) சொன்னது நிஜம் தான்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் கொத்ஸ்.
சொல்ல மாட்டிங்களா. என்ன இருந்தாலும் அப்பானு வந்தா பசங்களுக்கு ஒரு கருணை. பாசம் வந்துடும்.
சிங்கத்து விசிறி..மின்
போடப்போயிதான் நான் இடிச்சுக்கிட்டதே.
அவர் என்ன்னடான உலகத்தில் காலுனு ஒண்ணு இருந்தா அடிபடத்தான் செய்யும். நல்ல வேளை கல் இருக்கேனு சிம்பதி கொடுப்பார்.
அதினாலதான் புலம்பினேன். அம்பி,அபி அப்பா எல்லாரும் சொல்றதுனால நான் சௌகார்ஜானகி மாதிரி இருக்க வேண்டாமா.
கால் பரவாயில்லை. இன்னிக்குப் பட்டியே போடவில்லை. வெறும் மூவ் தான். யாராவது பார்த்தால் மட்டும் சோகமா இருப்பேன்:000)))))

வல்லிசிம்ஹன் said...

வரணும் கீதா, அங்கெ சொற்போர் பிரமாதமாப் போயிட்டு இருக்கே.
ஹா, ஜயலலிதாவா.
சவுக்காருக்கு அவங்களை விட வயசு ஜாஸ்தியாச்சே.
எனக்கு சமமா ஒரு பானுமதினு சொல்லுங்கப்பா:000)))
மச் மச் தான்க்ஸ்பா.

மெளலி (மதுரையம்பதி) said...

ஆகா, இதென்ன கலாட்டா?....

இன்னைக்குத்தான் பார்த்தேன் இந்தப் பதிவினை....எப்படி இருக்கு கால் வலி?.......

போட்டோ எல்லாம் நான் பார்க்கல்லையே?, எனக்கும் கொஞ்சம் லிங்க் கொடுங்க வல்லியம்மா.....

வல்லிசிம்ஹன் said...

Welcome Mouli.
Am getting better. will be consulting the doctor today.:))

will send you the link.
thank you.

நானானி said...

லேசா கட்டிலில் இடிச்சதுக்கு இவ்ளோ
லபோ..லபோ..வா?ஹூம்? சிங்கம் 'ஏன் வல்லிகாலை இடிச்சே?' ன்னு கட்டில்காலை அடித்தாரா?
இல்லை கண்டுக்காமல் விட்டு.. நீங்கள் அக்கம்பக்கம் பார்த்துவிட்டு பேசாமல் நகண்டு விட்டீர்களா?
நம்ம வலி..நமக்கு மட்டும்தான் வல்லி! நோ சிம்பதி..சியரப்!!

நானானி said...

ராக்கி வாழ்த்துக்களுக்கு நன்றி..வல்லி!
இந்த வருடம் ரக்ஷா பந்தனுக்கு அடுத்தநாள் எங்கள் குடும்பத்தில் ஒரு கல்யாணம். பிலேடட் ஆனாலும் ப்ரவாநஹி..என்று என் அண்ணன்மார்
இருவருக்கும் ராக்கி கட்டி மகிழ்ந்தேன்.
கொண்டுவந்தாலும் வராவிட்டாலும் நான் சகோதரி!!!வந்தாலே மதி!சர்தானே?

வல்லிசிம்ஹன் said...

வரணும் நானானி.
நம்ம எல்லோரும் விலை ம்மதிப்ப்பில்லாத சகோதர்ர்க்கள்.
அண்ணன்மார்கள் நல்லா இருக்கணும்.

அதுவே போதும்..
சரித்தான்ன் போப்பா,
என் வலிக்கு ஒரு ப்ளாஸ்டர் வாங்கி அனுப்பாட்டாலும் பின்னூட்டமாவது போட்டீங்களே.

ஹ்ம்ம். என்னடா கலிகாலம்.
வலின்னா கூட த்சொ த்சோ சொல்ல மாட்டெங்கரங்களே:0))))))