வல்லிசிம்ஹன்
எல்லோரும் வளமாக வாழ வேண்டும்.
வரும்போது , அதுவரை இருந்த சிநேகமும் தோழமையும் விடைபெற்று ஓடிவிட்டன.
மோப்ப நாய் பர பரவென்று சுற்றி வர, சக்கர நாற்காலியில் நான் அமர ,மகன் பின் தொடர்ந்தான். அழைத்துப் போனவர் அண்டை நாட்டு நல்ல பெண்மணி.
மம், மம் என்று அன்புடன் விசாரித்தபடி,
பச்சைக் கணினி முன் எங்களை நிறுத்தி
படபட வென்று இமிக்ரேஷன் விவரங்களை பூர்த்தி செய்ய வைத்தார்.
அட இத்தனை சுலபமாக ஆகிவிட்டதே என்று நிமிரும் முன் ஒரு
ஆப்பீசர் முன் நாங்கள் இருந்தோம்.
எள்ளு கொள்ளு எல்லாம் வெடிக்க அவர் மகனைச் சாட ஆரம்பித்தார்.
''எத்தனை நாள் ''
மகன்
''4. நாட்கள்.''
''நீயும் உங்க அம்மா போல இங்கே இருக்கப் போறியா ''
''இல்லை என் நாடு வேறு.''
''என்னிக்கு திரும்பப் போற.''
''இத்தனாம் தேதி.''
''நம்பமுடியாது உங்க அம்மா இப்படி வந்துதான் அட்டை வாங்கிவிட்டாள் ''
''எனக்கு அவசியம் இல்லை.
என் குடும்பம் வேலை எல்லாம் அந்த நாட்டில் தான்.''
அவர் மேலும்
இந்த ரீதியில் அவர் கடுமை காட்டப்
பொறுமையாக நின்ற மகனைக் காண சகிக்கவில்லை.
எனக்காகத் தான் இத்தனை பாடுபடுகிறார்கள் இந்தக் குழந்தைகள்.:(
இவர்களுக்கு சீக்கிரமே என்னிடமிருந்து விடுதலை கொடு 🙏🙏🙏🙏
என்று இறைவனை வேண்டத் தோன்றியது .
எல்லாம் நன்மைக்கே.
இனி பயணம் கூடாது.
நம்பிக்கையோடு எதற்கும் ஆசைப் படாமல் ,
குழந்தைகள் வாழ்வு சிறக்கவும், அவர்கள் மக்கள் வாழ்வு சிறக்கவும் மட்டுமே
நம் பிரார்த்தனைகள் இருக்க வேண்டும்
என்ற நிலைக்கு
என்னைச் சிந்திக்க வைத்த
அந்த வேற்று கிரக வாசிக்கு
(ஆப்பு ஈசருக்கு)
மனத்தால் நன்றி சொல்லி வெளியே வந்து
இந்த ஊர்க் குளிரைச் சந்தித்தோம்.
இயற்கை தன வேலையைச் செய்வது போல் அந்த மோப்ப நாய் தன் வேலையைச் செய்ததைப் போல அந்த மனிதரும் தன் வேலையைச் செய்தார்.
என்னைத் திட்டி இருக்கலாம்.
அப்பாவி மகனைச் சினந்து சொற்கள் சிந்தி இருக்க வேண்டாம்.
''நாளை பொழுது என்றும் நமக்கென வாழ்க''

என்று கண்ணதாசன் வரிகளை மனதில்
சொன்னபடி, மகளை நோக்கினேன் .
அனைவரும் வாழ்க வளமுடன்.
இங்கு கொரோனா பூதத்தை எதிர் நோக்கி வால்மார்ட்,
செர்மாக் எல்லா இடங்களிலும் கூட்டம். 500$ வரைப் பொருட்களை வாங்கிச் சேமிக்கிறார்கள்.
நாம் கந்த சஷ்டி கவசம் சொல்லி முருகனை வழிபடலாம்.
.
கொரோனா பயமுறுத்தலில் வால்மார்ட்டும், செர்மாக்கும்
பொருட்களை விற்றுக் குவிக்கின்றன. மக்கள்
வாங்கி குவிக்கிறார்கள். ஒரு தும்மல் சத்தம் கேட்டால்
காத தூரம் ஓடுகிறார்கள். பார்க்கலாம் எப்போ விடிவுகாலம் என்று.