Blog Archive

Monday, February 28, 2022

கனவுகள் நிறைவேறவில்லை...மனம் திறக்கும் 'Sowcar Janaki' | Autograph |Suha...

துள்ளித் துள்ளி அலைகள்

வல்லிசிம்ஹன்

அனைவரும் என்றும் நலமுடன் வாழ வேண்டும்.

என் வாழ்வின் பெரிய அலையாக வந்து
சம்சார பந்தத்தில் என்னை இழுத்துக் கொண்ட
சிங்கத்துக்கு மாசி உத்ராடம் பிறந்த நாள் அதாவது
28 ஃபெப்ரவரி    .82 ஆவது வயது ஆரம்பிக்கிறது. எங்கேயாவது நலமாக இருப்பார்.அன்பு வாழ்த்துகளும் வணக்கங்களும் என் கணவருக்கு.
பிள்ளைகளை நலமாக வைக்க வேண்டும்.





 எஸ்பி பியின் இனிய குரலே துள்ளும். கேட்பவரின்
மனதில் 
 வாழ்வின் மேல் சலிப்பு வராது. இயக்கம் முடங்காது.
அந்தக் குரலுக்கு அத்தனை மகிமை.
பழைய படம். இனிமையான பாடல்.

  திரு மனோஹர் ரொமாண்டிக் ஆகக் கூட 
நடித்திருக்கிறாரா என்று இப்போது யோசிக்கிறேன்.
அப்போதெல்லாம் பாட்டு மட்டும் தானே தெரியும்:)
'' பாக்கு மர சோலையிலே
பளபளக்கும்   பாளையிலே
பறந்து பறந்து குருவி எல்லாம்
என்ன பண்ணுது.......
அது வாழ்க்கை தனை உணர்ந்து கிட்டு
மனசும் மனசும் கலந்துகிட்டு
மூக்கினாலே கொத்தி கொத்தி கூடு பின்னுது''

வாழ்க்கையின் முழு தத்துவம். 
வேண்டுவது ஒரு  வாசஸ்தலம்.
எலிப்பாழ் தனிப்பாழ் இந்த வசனமெல்லாம் கேட்டிருக்கிறோமே!!

 திருமணம் ஆன போதில் உலகமே 
கண்ணில் படாது.
கணவனுக்கு மனைவி மட்டும் தான்
கண்ணில் படுவாள்.
மனைவிக்கு  கணவன் மட்டுமே அகிலம்.

இது எத்தனை நாள் நீடிக்கும்?

குடும்பம் பெருகும். பெற்றோர் ஆதரவு தேவைப்படும்.

அதுவும் எங்களைப்போல இரண்டு வருடங்களுக்கு
ஒரு குழந்தை பெற்றுக் கொண்டால்:).....
நல்ல வேளை உதவிக்கு இரண்டு பெண்கள் இருந்தார்கள்,
சிங்கத்துக்குத் தன் உழைப்பை அவரது 
அலுவலகத்துக்குக்
கொடுக்க முடிந்தது.

திருமணமான பத்து வருடங்களுக்குள்
நிறைய சவால்களைச் சந்திக்க வேண்டி வந்தது.
இருவருமே இளவயதாக இருந்ததால் 
மகிழ்ச்சியாகவே  எதிர் கொண்டோம்.


பிறகு சென்னையில் எங்களுக்குப் பொறுப்பேற்கும் காலம் வந்தது.

பெரியவர்கள், அவர்களை விடப் பெரியவர்கள்
மிகப் பரந்த உறவினர்கள்.
தனி மரத்திலிருந்து ஆல மரத்துக்குக் 
குடி வந்துவிட்டோம்!!
நதி அலைகளைப் போல இல்லாமல் கடல் அலைகளானது வாழ்வு.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

இப்போது இன்னோரு துள்ளும் மனம்.





 


   கல்யாண பரிசு..... இல்லை இல்லை நடுவில் ப் கிடையாது.
ஏழு எழுத்து மாஜிக்:) டைரக்டர் ஸ்ரீதர் நம்பிக்கை.
மீண்ட சொர்கம் தான் க் நடுவில் கிடையாது!!

இந்தப் பாடலில் வரும் விஜய குமாரியைக் கண்டு எங்களுக்கெல்லாம்
அவ்வளவு கோபம் வரும்.
தங்கை வாழ்வை  இப்படிச் செய்து விட்டாரே என்று:)பதினோரு
வயதில் வேறென்ன தெரியும்:)

வாய் கிழிய பேசத் தெரியும். 
காதல் என்ற வார்த்தை கூட சொல்லக் கூடாது 
வீட்டில்.
பின்னே  எப்படி அத்தனை தொடர்கதைகளையும் 
படித்தேன்?
ஏன் திருமணம் என்றால் மேளம் நாதஸ்வரம்,
அலங்காரம் என்ற அளவில் மட்டும் நின்றது
அறிவு.

இன்னது என்று சொல்லி ,விழிப்பு உணர்வு 
கொடுக்க வேண்டாமா.?
வரும் கணவருக்கு இதனால் எவ்வளவு பெரிய
பொறுப்பு வருகிறது?????

ஆனால் உரம் மட்டும் கொடுத்திருந்தார்கள் 
பெற்றோர். 
எதை வேண்டுமானாலும் சமாளிக்கும்
பொறுமை, மீண்டு வரத் தேவையான தைரியம்,
விகல்பம் இல்லாத  அன்பு.  மகிழ்வுடன் வாழ்ந்து வளம் பெறத்  தேவையான உற்சாகம்   எல்லாம்

பெற்றிருந்தோம்.



வளம் பெறுவோம்.



Saturday, February 26, 2022

மனதுக்குப் பிடித்த பாடல்கள் சில


வல்லிசிம்ஹன்

  எல்லோரும் வளமாக வாழ வேண்டும்.

சில பாடல்கள் மனதை விட்டு மறைவதில்லை.எங்கள் குடும்பத்துக்குப் பிடித்த பாடல் 
Papa he loves mama. 
குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.1966.


பெரிய தம்பிக்குப் பிடித்த பாடல்
அவனை மண மேடை ஏற்றியது.







   சின்ன தம்பிக்குப் பிடித்ததெல்லாம் ட்ரம் பீட் 
இசைதான்.
 Song of Singam   அதற்குப் பின் எனக்குப் பிடித்தது.
இரண்டு பேருக்கும் பிடித்த பழைய க்ரீக் நாட்டுப்
பாடல்.

You know I can't smile without you
I can't smile without you
I can't laugh and I can't sing
I'm finding it hard to do anything
You see I feel sad when you're sad
I feel glad when you're glad
If you only knew what I'm going through
I just can't smile without you
You came along just like a song
And brighten my day
Who would have believed that you were part of a dream
Now it all seems light years away
And now you know I can't smile without you
I can't smile without you
I can't laugh and I can't sing
I'm finding it hard to do anything
You see I feel sad when you're sad
I feel glad when you're glad
If you only knew what I'm going through
I just can't smile
Now some people say
Happiness takes so very long to find
Well, I'm finding it hard
Leaving your love behind me
And you see I can't smile without you
I can't smile without you
I can't laugh and I can't sing
I'm finding it hard to do anything
You see I feel glad when you're glad
I feel sad when you're sad
If you only knew what I'm going through
I just can't smile without you.............


Mahalaya Paksham day - 1 | Arachi vitta Kuzhambu | Puratasi Maavilakku

" |என்.எஸ்.கே டி .ஏ.மதுரம் மணம...

Thursday, February 24, 2022

Sowkar Janaki அவரின் நினைவுகளுடன்.

ஏற்கனவே இந்தப் பாடலையும் , அந்தக் காட்சிக்காகத் தான்
எடுத்துக் கொண்ட முயற்சியையும் 
திருமதி .ஜானகி சொல்லி இருக்கிறார்.

அந்த பேட்டியும் மிக சுவாரஸ்யமானது தான்.

நேரில் அவரை தி நகரில் பார்த்த போது,
இந்த ஐந்தடி உருவமா அந்த ''இரு கோடுகளி''ல்
 அவ்வளவு பிரமிப்பை ஏற்படுத்தியது
என்று  சொல்லி இருக்கிறேன்.

பனகல் பார்க் காய்கறிக் கடைக்காரர்களுக்கு
எல்லா நடிகைகளையும் பார்த்து
பழக்கம் போலிருக்கிறது.
அவரவர் அவர்களின் வியாபாரத்தில் 
கண்ணாயிருந்தார்கள்.:)




   என்றும் வளமுடன் இருக்கட்டும் இந்த 91 வயது மங்கை.

Wednesday, February 23, 2022

பற்றுக பற்றற்று.....


வல்லிசிம்ஹன்
   எல்லோரும் வளமாக  வாழ வேண்டும்.
நாம  நினைப்போம் இன்னோருத்தர் நமக்கு 
சொல்கிறார். 
நன்றி திருமதி லக்ஷ்மி ஸ்ரீனிவாசன் நான் பெறாத அன்பு மகள்.

படித்ததில் பிடித்தது

*படிங்க ரொம்ப பிடிக்கும்!...*

*அந்த வீட்டு ஆண் எப்போதும் வேலைப்பளுவின் காரணமாகவும், குடும்ப உறுப்பினர்கள் பற்றிய அக்கறையினாலும் ஒரு பதற்றத்தோடேயே இருப்பார்..... எரிச்சலும் கொள்வார்.... ஆனால் ஒரு சில தினங்களாக பதற்றமோ, கோபமோ, எரிச்சலோ இன்றி அவர் அமைதியோடு காணப்பட்டார்!.....*

*ஒருநாள் அவரது மனைவி, .... "நான் நண்பர்களோடு சேர்ந்து  சுற்றுலா  போகிறேன்" .... என்று அந்த ஆணிடம் கூறினார்.... அவரும் அமைதியாக சம்மதித்தார்....*

*மகன் தனது தந்தையிடம் தயங்கியவாறு, "அப்பா நான் எல்லா பாடங்களிலும் பின் தங்கி இருக்கிறேன்" என்றான்.... அதற்கு அந்த ஆணும், "ஒழுங்காக படித்தால் உன்னால் முடியும்.... முடியவில்லை என்றால் மறுபடியும் அதே வகுப்பில் இருந்து படி" என்றார் அமைதியாக....*

*மகள் ஓடி வந்து, "அப்பா என் காரை விபத்துக்குள்ளாக்கி விட்டேன்" என்றாள் பதற்றத்தோடு.... அதற்கு, "கொண்டு போய் சரி செய்து விடு" என்றார்....*

*குடும்ப உறுப்பினர்கள் அவரின் அமைதியை கண்டு குழப்பம் கொள்ள ஆரம்பித்தனர். ஏதாவது மருந்துக்களை பாவித்து தன்னை அமைதிப்படுத்திக் கொள்கிறாரோ என்று கவலைப்பட தொடங்கினர்....*

*ஒருநாள் அவரே எல்லோரையும் அழைத்து அமர வைத்து பின்வருமாறு கூறினார்:- ....*
👌🏾 ⬇️ 👌🏽
*"சில உண்மைகள் புரிய எனக்கு நீண்ட காலம் எடுத்தது..... அதாவது அவரவர் வாழ்க்கைக்கு அவரவர் தான் பொறுப்பு....*

*என்னுடைய கோபம், என்னுடைய பதற்றம், என்னுடைய பயம், என்னுடைய மன அழுத்தம், என்னுடைய தைரியம் எதுவும் உங்கள் பிரச்சினைகளை தீர்க்க போவதில்லை.... அவை என் ஆரோக்கியத்தை கெடுத்து என் பிரச்சினைகளை தான் அதிகரிக்கும்.....*

*என் அன்பையும், தைரியத்தையும் மட்டுமே உங்களுக்கு என்னால் கொடுக்க முடியும்.... உங்களுக்கு தேவைப்பட்டால் என் அறிவுரைகளை நான் தருவேன்....* *உங்களுக்காக நான் பிரார்த்தனை செய்வேன். ஆனால் உங்கள் வாழ்க்கையை நான் வாழ முடியாது.....*

*ஏனெனில் என்னை சார்ந்து நீங்கள் இந்த பிறவியை எடுக்கவில்லை. இது உங்களுக்கு கிடைத்துள்ள வாழ்க்கை..... உங்கள் பிரச்சினைகளுக்கு நீங்களே பொறுப்பு கூறல் வேண்டும்.....* *உங்கள் பிரச்சினைகளை களைந்து உங்கள் சந்தோசத்தை நீங்களே தேடுமளவுக்கு நீங்களும் எல்லா அறிவையும் பெற்றுள்ளீர்கள். ஆகவே தான் நான் அமைதியாகி விட்டேன்."...*

*குடும்பமே வாயடைத்துப் போனது!!!.....*

*அவர்களின் செயல்பாடுகளுக்கு அவர்களே பொறுப்பு என்று அனைவரும் உணர்ந்து விட்டால் வாழ்க்கை அமைதிப் பூங்காவாக மாறும்....*
*💓...  *இதுவே இயற்கையின் நியதி..*.💓.
*வாழ்க வளமுடன்.*🙏🙏🙏

Tuesday, February 22, 2022

22/2/2022

வல்லிசிம்ஹன்






இன்று ஒரு புதுவிதமான நாள். முன்னால் ஒரு பதிவில்
சொன்னது  தான்.
நாம் சொன்னது ,கணினி திருப்பி சொல்கிறது என்பதைத் தான் மீண்டும்
சொல்ல வருகிறேன்.

அன்பின் கீதா சாம்பசிவம் முக நூலில் வாஷிங் மெஷின்
பற்றிய விவரங்கள் 
வந்ததையும். தான் புது வாஷிங்க் மெஷின் வாங்கியதையும் சொல்லி 
இருந்தார்.

நானும் பெரிய பேரனும் இதைப்பற்றிப்
பேசிக்கொண்டிருந்த போது,
நீ கூகிள்ள தேடினா  முக நூலிலும் வரும் என்றான்.

நேற்று மதியம் இன்னோரு அதிசயம் 
காத்திருந்தது. நாங்கள் திரு வேளுக்குடி ரங்க நாதனின் கீதாசாரம் வகுப்புகள்

பதிவு செய்து நற்செய்திகளைக் கேட்டுக் கொண்டிருந்தோம்.
அதுவும் பேரனின் கணினியில்...
போன சனிக்கிழமை காலையில்,
அவனுக்கு  விஸ்வரூபம் பற்றி விவரித்துக் கொண்டிருந்தேன்.

பார்த்தனுக்கும் ,த்ருதாஷ்டிரனுக்கும் கண்ணன் தன் விராட் ஸ்வரூபத்தைக்
காண்பிக்கிறான்.
என்று மற்ற சங்கதிகளைச் சொல்லி 
வேறெதோ செய்திகளுக்குச் சென்று விட்டோம்.

இன்னிக்கு வந்தது இன்னோரு அதிசயம்.
யூடியூபில் , திரு வேளுக்குடியின் உபன்யாசம்.
கண்ணனின் ஆரமுது. பொதிகையில் 
10 வருடங்கள் இருக்குமா?
இன்று எனக்கு வருகிறது. அதில்  அவர் கண்ணன் 
தரிசனம் விவரிக்கிறார். கூடவே நம் காஞ்சி வரதர் கோவிலும் பின்னணியில்.

இது தற்செயலா. இல்லை நம் செயல்களும் பேச்சுகளும்

எல்லா கணினிகளும் கவனித்துக் கேட்கின்றனவா. யாராவது 
தெரிந்தால் சொல்லுங்கள்.






எல்லோரும் வளமாக வாழ வேண்டும்.

Sunday, February 20, 2022

பழைய பாடல்கள்.

வல்லிசிம்ஹன்

அனைவரும் நலமுடன் வாழ வேண்டும்.

எத்தனையோ நினைக்கிறோம்.
பேசுகிறோம். 
இங்கே அலெக்ஸா. நாம் ஏதாவது சத்தமாகப் 
பேசிவிட்டால் நீ  சொல்வது புரியவில்லை. மீண்டும் கேள்
என்று சொல்லும்.

பெண்ணின் கணினி அதற்கு மேல்.
டவலே இல்லையே என்று மாடியிலிருந்து அம்மாவிடம்
 சத்தமாகப் பேரன் கேட்டால்
விசிட் பேப்பர் டவல்ஸ்.காம் என்று ஒரு குரல்
அங்கிருந்து வரும்:)

அதற்காகச் சுற்றும் முற்றும் பார்த்துப்
பேசமுடியுமா என்ன. 
இந்த யூ டியுபையே கவனிக்கலாம்.
இது நான் நினைத்தாலே அந்தப் பாட்டைப் போட்டு விடுகிறது!!

இது எப்படி என்று புரியவில்லை.
வாய்ஸ் அக்டிவேட் கூட செய்ய வில்லை.
முன்னால் தேடி இருக்கிறேனோ 
என்று பார்த்தால் அங்கேயும் இருக்காது.
கொஞ்சம் அதிர வைக்கும் இணையம் 
என்று தான் சொல்ல வேண்டும்.:)
அடுத்தது கை ராசி படப்பாடல்.
ஒரு வேளை முன்பு அன்பு மதுமிதா பேட்டியில் சொன்னதை 
இது 
ரெகார்ட் செய்திருக்குமோ:)


சின்னத்தம்பி விரும்பிக் கேட்கும் பாடல்களில் 
சிவாஜி கணேசன் கண்டிப்பாக இருப்பார்!!
அதுபோல அவன் கேட்கும் பாடல்கள் 
இரண்டு.
அம்மாடி பொண்ணுக்குத் தங்கமனசும்

சித்திரை மாதம் பௌர்ணமி நேரம் ........




அதன் பிறகு சுசீலா அம்மாவின் குரலில்
பாலும் பழமும் படப் பாடல்.
இந்த நாடகம் அந்த மேடையில் எத்தனை நாளம்மா??
மிக மிக அருமையான கவிதை வரிகளுடன்

உணர்ச்சி ததும்ப  அவர் பாட நாம் கேட்கும் 
இந்த அருமை கொடுத்த இறைவனுக்கு நன்றி.


தங்கப் பதுமை என்று சிவாஜி பத்மினி 
படம் ஒன்று வந்தது. பாடல்களும் சோகமும்
சிறந்த நடிப்பும் ஒன்று சேர்ந்த உணர்ச்சிக் கலவை:)

அதில் வரும் ஆரம்பம் ஆவது பாடலை தம்பி பாடுவான். 
அதை இங்கே பதியப் போவதில்லை:)

இன்னோரு சந்தோஷப் பாடலைப் பதிவிட்டு
இந்தப் பதிவைப் பூர்த்தி செய்கிறேன்,.
அனைவரும் வாழ்க வளமுடன்.




Saturday, February 19, 2022

பிடி கருணை துகையல் கனகா பாட்டி


 பிடி கருணை என்று சொன்னாலே ஒரு நடுக்கம்
வரும் எனக்கு:)
ஆஜிப்பாட்டிக்கு அதை தினம் சாப்பிட்டாலும்
போதாது.  அனேகமாக வருடத்தில் சில மாதங்கள்
நிறைய கிடைக்கும்.

மாட வீதி கடைகளில் சாக்கு நிறைய வைத்திருப்பார்கள்.
சின்ன மாமியாருடன் அங்கே போய் இறங்கும்போது

வேணு என்ற கடைக்காரர்  சின்னம்மா வாங்க,
பாட்டிம்மாவுக்கு பிடித்த கிழங்கு வந்திருக்கு.''
என்பார்.

சிறு கிழங்கு என்று ஒரு வகை, சேனை ஒரு வகை.
கருணை என்று ஒரு வகை.பிடி கருணை 
என்று ஒருவகை.
எல்லாமே மண்ணுக்குள் விளைவதால்
அந்தந்த மண்ணுக்கு ஏற்ற மாதிரி
இருக்கும். 
நம் வீட்டிலேயே சேனை நட்டு 
அந்த இலைகள் நல்ல விதமாக உபயோகமாகும்.
உள்ளே இருக்கும் கிழங்குகளும் நல்ல
சிவப்பு வண்ணத்தில் அடுக்கடுக்காக மண் வாசத்துடன் வெளியே
எடுப்போம்.








நம் கீதா சாம்பசிவம் கூட முன்பு 
இந்த  சேம்பு இலை அடை பற்றி 
எழுதியதாக நினைவு.

இந்தப் பாட்டியும் ( !!!! )பிடி கருணை பற்றி சொல்லி இருக்கிறார். 
தொண்டை அரிக்காமல் இருந்தால் சாப்பிடலாம்:)
இவர் என்னைவிட 4 வயதுதான் பெரியவர்.
அதனால் நானே பாட்டி என்று சொல்லக் கூடாது!!!

பிடி கருணை சாப்பிட்டால் இதயத்துக்குப் பலம் கொடுக்கும் என்பார்கள்.
ஆஜிப் பாட்டி 88 வயது வரை இதய நோய் இல்லாமல்
வாழ்ந்தார்.

அனைவரும் வாழ்க வளமுடன்.

Friday, February 18, 2022

நிலவும் நூதனும்.






வல்லிசிம்ஹன்

இசைக்கு மொழியில்லை.

மனமும் அதன் விசால நோக்கும் தான் அதற்குத் தேவை.

கண் வழியே அந்த நிலவின் கிரணங்களைக்
காட்டக் கூடிய  விழிகள்

அன்பு நிறை உள்ளங்களை என்றும் கவரும்.

அப்படிச் சில சிறந்த நடிகைகளில் நூதனும் ஒருவர்.

எந்த நடிகரோடு சேர்ந்து நடித்தாலும் அவர் சோபிப்பார்.

இங்கே பௌர்ணமி அன்று நிலவைக் காண முடியவில்லை.
இன்று வேர்டில் போடுவதற்கு முன்பே நிலா 
அம்மா தரிசனம்   கிடைத்தது.

நான் இங்கே தான் இருக்கிறேன்.
 மேகங்கள் சூழ்ந்து மறைத்தாலும் அவற்றுக்கு மேல்
நான் இருப்பேன் என்று நீ உணர்ந்தாலே போதும்
என்று சொல்கிறாள்.

அனைவரும் நலமுடன் வாழ்வோம்.



Post on February 28th 2020

வல்லிசிம்ஹன்


Showing posts with label எல்லையில் வந்திருக்கும் கொரோனா மிருகம் 2020Show all posts

Friday, February 28, 2020

எல்லையில் வந்திருக்கும் கொரோனா மிருகம் 2020

வல்லிசிம்ஹன்

இப்போது முடிவுக்கு வந்துவிடும் என்றே நம்புவோம்.



எல்லோரும் இனிதாக  வாழ வேண்டும்.

எல்லையில் வந்திருக்கும் கொரோனா மிருகம் 
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++\

அங்கே இங்கே  வாய் வைத்து விட்டு 
உலகம் முழுவதும் ஆட்களை அனுப்பிப் 
பரவ வைக்கிறது.
இதுவோ ஒன்றே உலகம்  என்றாகிவிட்டது.
ஆனானப் பட்ட வெறும் ஆள்   நான்,
 ஊர் உலகம் சுற்றும்   சுற்றும்போது,
எத்தனையோ வணிக சம்பந்தமாக  ஆண்களும் பெண்களுமாகப் பறந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

சுற்றி இருக்கும் இத்தாலி,ப்ரான்ஸ்   இவை 
நிறைய பாதிக்கப் பட்டு,
மெதுவாக மீள முயற்சிக்கின்றன.

அங்கிருந்து வெளியுர்களுக்குக் கிளம்பினவர்கள் 
தங்களை அறியாமலேயே இந்த   ஊருக்கும் கொண்டுவந்து விட்டார்கள்.

ஆனால் நல்ல பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டு மேற்கொண்டு என்ன செய்யலாம் என்று சமாளிக்கத் தயார் ஆகிறார்கள்.

இதோ நாளை கிளம்புகிறோம்.

எல்லோரும் நலமுடன் இருக்கப் பிரார்த்தனைகள்.

Wednesday, February 16, 2022

உருளைக் கிழங்கு சலாட்.

வல்லிசிம்ஹன்
எல்லோரும் நலமாக வாழ வேண்டும்.


வெகு நாட்களுக்கு அப்புறம் 
நல்ல சிவப்பு உருளைக்கிழங்கு  கிடைத்தது.
இப்போதெல்லாம்  நாம் இன்ஸ்டா கார்ட் டில் சொன்னதே
வரும் என்று சொல்ல முடியாது.
நம் ஆர்டரை எடுப்பவர் என்ன புரிந்து கொள்கிறாரோ
அப்படித்தான் வீட்டுக்கு வரும் பொருளும் இருக்கும்.

பக்கத்து வீட்டில் சொல்லி இருக்கும் 
மீன் கூட நம் வீட்டில் முழித்துக் கொண்டு இருக்க வழி உண்டு.
மகளுக்கு இதெல்லாம் பார்த்த்வுடனே
தெரிந்து  கொள்ளும் சாமர்த்தியம் இருப்பதால்
அந்த மாதிரி வருவதை குப்பை தொட்டியில் 
போட்டு விடுவாள்.!!!

மீனை ஆர்டர் செய்பவர்களுக்கு மீண்டும் ஒரு பாக்கேஜ் வந்து சேரும்.:)

நானாக இருந்தால் என்ன செய்வேன் 
என்று யோசிக்கிறேன்.
நம்ம வீட்டுக்கு ஒரு  பார்சல் வந்து விட்டால்

அது நமக்கானது இல்லை என்று தெரிந்தால் 
உடனே  அந்தப் பார்சல் ஆஃபீஸ்க்கு
தொலைபேசி இதை எடுத்துக் கொண்டு 
போக வேண்டும் என்று  கேட்டுக் கொள்வேன்.

இங்கே தூக்கிப் போடுவது தான் முறை 
போல இருக்கு:)
அதுவும் கொரோனா வந்தபிறகு contamination பயம் வேற:(


 நாம செய்யப் போகிற உருளைக் கிழங்கு சலாடுக்கு
இந்த ஊர்ல சிவப்பு உருளைக் கிழங்கு
உபயோகிக்கிறார்கள்.
ஆமாம் பல வண்ணங்களில் உ.கி வருகிறது.
சந்தனக் கலர், சிவப்பு, வெள்ளை என்று 
பல விதம். சிலது இனிப்பாகக் கூட இருக்கும்.:)
இல்லை இல்லை, சர்க்கரை வள்ளிக் கிழங்கு இல்லை.


    Sour cream.....yum
படங்கள் எல்லாம் இணையத்திலிருந்து எடுக்கப் பட்டவை.
சிவப்பு உருளைக் கிழங்கு.


பழுப்பு நிற உ.கி வறுப்பதற்கும் , வதக்குவதற்கும் ஏற்றது.

சிவப்பு உ.கி. வேக வைத்து மசித்து எல்லாம் சேர்த்து
சலாட் செய்துவிடலாம்.


அப்பாடி ,செய்முறைக்கு வந்துவிட்டேன்.
அப்பா வழிப் பாட்டி சொல்வது காதில் விழுகிறது.'
'' ஆண்டா!! ஏம்மா ஆதிகாலத்திலிருந்து சொல்ற.
சுருங்கச் சொல்லி விளங்கவை''ன்னு"" சிரிப்பார்.
நமக்கு வராத வழி!!!!!

அதனால் கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள்:))
தேவை 
++++++++++++++++++++++++++++++++++++++
உருளைக் கிழங்கு

தேவையான   பச்சைப்பட்டாணி
சீவிச் சேர்க்க வேண்டிய வெங்காயம், இஞ்சியும்,பச்சை மிளகாயும்.

ஒரு கிண்ணம் சவர் க்ரீம், கொஞ்சம் வெண்ணெய்,உப்பும்
கொஞ்சம் மிளகுப் பொடியும். அலங்கரிக்க
கொத்தமல்லி, வறுத்து உடைத்த நிலக்கடலை.

செய்முறை.
உருளைக் கிழங்கை    அரை வேக்காடாக  வேக வைக்க
வேண்டும். அப்போதுதான் கஞ்சி மாதிரி இல்லாமல்
இருக்கும்.

துருவின வெங்காயம், இஞ்சி,பச்சை மிளகாய் எல்லாவற்றையும்
வெண்ணெயில் வதக்கிக் கொண்டு  வைத்துக் கொள்ளவும்.
இங்கே கிடைக்கும் சவர் க்ரீம் நம்மூரிலும் கிடைக்கிறது.
நீல்கிரிஸில் வாங்கிய நினைவு.

உருளைக் கிழங்கை தோலுரித்து,
பாதியை மசித்து,  உப்பு சேர்த்து,
மீதியை ஒன்றிரண்டாக பிசைந்து
கொள்ள வேண்டும்.
இதன் தலையில் வறுத்த இ.வெ ப மி சேர்த்து மீண்டும் ஒரு கலக்கல்:)

வேக வைத்த பச்சைப் பட்டாணியையும்
சவர் க்ரீம்,வெண்ணெய் சேர்த்து
கரண்டியால் மசித்துக் கொண்டால்
வேலை முடிந்தது.:)

பார்ப்பதற்கே அழகாக இருக்கும்.
பிடித்திருக்கிறதான்னு சொல்லுங்கள்.






Tuesday, February 15, 2022

நடிகர் திலகம் சிவாஜியின் சில தனிப்பாடல்கள்







 வல்லிசிம்ஹன்,
எல்லோரும் வளமாக வாழ வேண்டும்.

60 களில் வெளியான  நடிகர் திலகம்
படங்கள் அனைத்தையுமே பார்த்திருப்போம் என்று நினைக்கிறேன்.

குடும்பமாகவோ ,நானும் அம்மா மட்டுமோ,
நானும் தோழிகள்  கூட்டமோ 
பார்த்துவிடுவோம். 60 பைசா  டிக்கெட்டில்,
அப்பா,அத்தை வந்தால் 2 ரூபாய் டிக்கெட்டில்
நல்ல மகிழ்ச்சியுடன் பார்ப்போம்.

தம்பி சிவாஜி அவர்களின் நடிப்பை 
அங்குலம் அங்குலமாக ரசிப்பான்:)
அவனுக்காக சிவாஜி ஸாரின் தனிப் 
பாடல்கள்.

இருவர் உள்ளம் படம் வந்த போது இரண்டாவது மாமாவுக்குத் திருமணம்
ஆகி இருந்தது. அவர் மனைவிக்கு என் மேல் அவ்வளவு பாசம்.
புத்மணத்தம்பதிகளாக அவர்கள் செல்லும் எல்லா
இடத்துக்கும் என்னையும் அழைத்துச் செல்வார்கள்.
விடாது அரட்டை அடித்து அவர்களுக்கு ஒரு
இணைப்புக் கொடுத்தேன் என்று நினைக்கிறேன்.:)
ஷாந்தி தியேட்டரில் படம் பார்த்துவிட்டு,
அன்று பௌர்ணமி என்று மெரினாவக்கும் போனோம்.
நான் அவர்களைவிட்டு தனியே கடலையும் நிலவையும்

நிலவின் ஒளிக் கிரணங்கள் கடலை நிறைப்பதை,

அந்த அழகில் மூழ்கியபடி  கரையில் உட்கார்ந்திருந்தேன்.
அது போல ஒரு இனிமையான தனிமை   பின்னாட்களில்

கிடைக்கவில்லை.:)














இத்தனை பாடல்கள் போதாது தான்.பின்னும்  ஒரு தடவைப் பார்க்கலாம். 
நடிகர் திலகம் என்றும் நம்முடன்.

  ஃபெப்ருவரி 15 மண நாள் காணும் மகளும்
அவள் குடும்பமும் மணம் சிறக்க , மனம் இனிக்க
நீடூழி வாழ வேண்டும்.






Friday, February 11, 2022

வாழ்வின் தத்துவங்கள் சில.

  அவரவர் சுவைக்கேற்ற படி அழகான தயிர் தனிதனியாக!!
சிங்கம் வரைந்த புலி 11 வருடங்களுக்கு முன்னால்.



வல்லிசிம்ஹன்

 எல்லோரும் வளமாக வாழ வேண்டும்.

மகனிடம் பேசிக் கொண்டிருந்த போதுதான்
இந்த இசை பற்றி நினைவு வந்தது.

ஒரு அறை நிறைய புத்தகங்களும்
பாடல்களும்  ,இருந்தாலும் வேலைப்பளுவின் காரணமாக

ஒன்றுமே செய்யமுடிவதில்லை என்று தோன்றியது.

இசைதான் என் வாழ்வுக்கே பல விதங்களில் ஆதாரம்.

எத்தனையோ இடங்களில் 
கணவர் வேலையிலிருந்து வரத் தாமதமாகும் போது,

வானொலியும், இசைத்தட்டுகளுமே என் தனிமையைப் 
போக்கி இருக்கின்றன.
எங்கள் பசங்களுக்கும்  அதே வழக்கம் 

வந்து இருக்கிறது.

தந்தைக்கும் எனக்கும் பிடித்த பாடல்களிலிருந்து இவர்களின்
விருப்புகள் மாறி இருக்கின்றன.

சின்னவனுக்கு தமிழ்ப் பாடல்கள்,பெரியவனுக்கு
பக்திப் பாடல்களும், மகளுக்கு ஒன்றையுமே
கேட்க முடியாதபடி வேலைப் பளுவும்

இப்படித்தான் செல்கிறது வாழ்க்கை.
என்னால் பாடல்கள் கேட்காமல் இருக்க முடிவதில்லை.

இப்போது மற்றவர்களுக்கு இடையூறு 
இல்லாமல் இருக்க ஹெட்ஃபோன்ஸ் உபயோகிக்கறேன்.

எல்லோருக்கும் ஒரே இசை பிடிக்க வேண்டும் 
என்பது நியதி இல்லை.:)





நான் கேட்க வேண்டும் என்பதற்காக சிங்கம் முதலில் வாங்கித் தந்த
புஷ் டிரான்சிஸ்டர்... 15 வருடங்கள் உழைத்தது.
எல்லா சமையறைகளிலும் என்னுடன் சேர்ந்து வசித்தது.

பெரியமகன் வாங்கித் தந்த டூ  இன் ஒன்,சின்னவன் வாங்கித் தந்த பாக்கெட்
ரேடியோ இன்னும்
 சென்னையில் உட்கார்ந்திருக்கிறது.
ரேடியோ மிர்ச்சி, சென்னை எஃப் எம் இன்னும் பல
சானல்கள்.

விட்டுவிட்டு வந்த எத்தனையோ 
நினைவுகளில் அதுவும் ஒன்று.
இங்கே  இருக்கும் இன்னோரு புதிய ரேடியோ
கேட்கப் படாமல் அலமாரியில் உறங்குகிறது.

இன்னோன்று கூடத்தில்  அவ்வப்போது தானே
இயங்குகிறது. எப்போதோ போட்டு வைத்த ஆணைப்படி!!!

குறை ஒன்றும் இல்லை கோவிந்தா.🙏🙏🙏🙏🙏🙏


Thursday, February 10, 2022

காக்கும் கடவுள்.

Vallisimhan
எல்லோரும் வளமாக வாழ வேண்டும்.

இந்த செய்தியில் சொல்லப்பட்டிருக்கும் வடமொழி எழுத்துக்கள்

கொடுக்கும் சாரம். ''கடவுள் ஒருவனே  நமக்கு கதி.
அவன் ஒருவனால் மட்டுமே நம்மைக் காக்க முடியும்''
என்பதுதான்.
அன்பின் தங்கை சுபாவுக்கு நன்றி.




4:49 AM, 2/8/2022] Subha.: 👌👌👌🙂
[1:43 AM, 2/10/2022] Subha.: ’காயேன வாசா மனசே ... நாராயணாயேதி சமர்ப்பயாமி' என்று நாம் சொல்லும்போது,


நாராயணன் நம்மை பற்றி என்ன நினைக்கிறார்? தெரிந்து கொள்வோமே!!

ஐந்து வயது குழந்தை 'கிணறு...' என்று எழுத ஆசைபட்டது..

எப்படியாவது எழுதி , தன் அப்பாவிடம் காட்டி, மகிழ வேண்டும் என்று  ஆசைபட்டது.

கொஞ்சம் முயற்சி செய்து, 'கிணறு'க்கு பதில்,"கனாரு.." என்று கஷ்டப்பட்டு தப்பாக எழுதி, தன் அப்பாவிடம் ஆசையோடு கொடுத்தது.

"தன் குழந்தை கஷ்டப்பட்டு எழுதி, அதை தன்னிடம் ஆசையோடு காட்டுகிறதே!!" என்று ஆனந்தம் அடைந்த தகப்பன், "தானே அதை சரி செய்து 'அம்மா.. அப்பா..' என்று எழுதி விட்டு... அது போதாதென்று, தன் குழந்தைக்கு 100க்கு 100 மதிப்பெண் போட்டு, தன் குழந்தையை கொஞ்சி மகிழ்ச்சிப்படுத்தினான்.
அது போல நாம்,

எந்த உலக காரியம் செய்தாலும், தவறாகவே செய்து இருந்தாலும், நமக்கு தாயாகவும் தகப்பனாகவும் இருக்கும், ப்ரம்ம தேவனையும் படைத்த நாராயணனிடம் காட்ட வேண்டும் என்ற ஆசையுடன், அப்பாவிடம் தான் செய்ததை ஆசையோடு காட்டிய குழந்தை போல, நாம் செய்ததை சமர்ப்பணம் செய்தால்,

தன்னிடம் ஆசையோடு சமர்ப்பணம் செய்யும் நம்மை கண்டு மகிழ்ந்து, நாம் செய்த காரியத்தில் குறை இருந்தாலும், தானே அதை சரி செய்து, நன்றாக செய்தது போல ஆக்கி, முழு பலனையும் தந்து விடுகிறார் பரமாத்மா நாராயணன்.

சந்தியாவந்தனம், சஹஸ்ரநாமம் என்று ஏதுவாக இருந்தாலும், முடிவாக, இந்த மந்திரம் சொல்வதற்கு காரணமும் இதுவே.

ஸ்லோகம், சந்தியாவந்தனம் செய்ததில் குறை இருந்தாலும், அப்பாவிடம் காண்பித்து, அவரே குறையை சரி செய்து, முழு பலனை கொடுக்கட்டும் என்ற 'புத்தியுடன்' இந்த மந்திரத்தை நாம் சொல்ல வேண்டும்.

எந்த காரியத்தை செய்தாலும், செய்த காரியத்தை, நம் அனைவருக்கும் அப்பாவாக உள்ள நாராயணனிடம், ஒரு குழந்தை தன் தகப்பனிடம் காட்டுவது போல காட்ட வேண்டும்.

உணவு செய்தாலும், பெருமாளுக்கு காட்டி விட்டு, பிறகு சாப்பிட வேண்டும்.

அப்படி செய்தால், உணவில் உள்ள தோஷங்கள் (தெய்வ சிந்தனை இல்லாமல் சமையல் செய்தது) நீங்கி விடும்.

ஹிந்துக்கள் அனைவரும் சொல்ல வேண்டிய மந்திரம்.

"காயேன வாசா மனசே இந்த்ரியர்வா புத்த்யாத்மனாவா ப்ரக்ருதே ஸ்வபாவாத் கரோமி யத் யத் சகலம் பரஸ்மை நாராயணாயேதி சமர்பயாமி"

அர்த்தம்:

நான் உடலாலும், மனதாலும், இந்த்ரியங்களாலும், புத்தியாலும் செய்த தவறுகள் அத்துனையையும் நாராயணனுக்கே அர்பணிக்கிறேன்.

மந்திரத்தின் அர்த்தம் தெரிந்து கொள்வதை விட, நாராயணனிடம் அர்பணித்தற்கு  காரணத்தை உணர்ந்து சொல்லும் போது, நமக்கும், பெருமாளுக்கும் உள்ள உறவு புரியும்.

நாம் செய்த காரியத்தில் இருந்த குறையை அவர் அப்பாவாக இருந்து சரி செய்து கொடுக்கிறார் என்ற அனுபவம் ஏற்படும் போது, இந்த மந்திரத்தின் பெருமை நமக்கு புரியும்..

நாராயணன் என்ற சொல்லுக்கு "மனிதர்களுக்கு (நர) ஆதாரமாக (அயணம்) இருக்கும் பரமாத்மா" என்று அர்த்தம்.

நமக்கு ஆதாரமாக இருக்கும் தகப்பனிடம், நாம் செய்த காரியத்தை காட்டும் போது, தகப்பன் என்ற உறவு இருப்பதால், நாம் செய்த காரியத்தில் குறை இருந்தாலும், சரி செய்து முழு பலனை கொடுத்து விடுகிறார்.

Wednesday, February 09, 2022

அம்மா 92. வாழ்த்துகள் அன்புடன்.






வல்லிசிம்ஹன்






  நடிகை  நூதனின் படங்களும் பாடல்களும் 
என்றும் மறக்க முடியாதவை.
அவர் முகத்தில் ஓடும் உணர்ச்சிகளும் 
நாகரீகத்தின் எல்லையை கடக்காதவை.

அவர் நடிப்பில் வந்த படங்களை அவ்வளவாகப்
பார்த்ததில்லை.
சுஜாதா என்ற படம் என் அம்மாவுக்கு மிகப் 
பிடிக்கும்.

அம்மாவின் பிறந்த நாள் 9 ஃபெப்ருவரி. 92 வயது நிரம்பி 
இருக்கும்.

அவள் ஒரு நல்ல மகள், நல்ல சகோதரி, நல்ல மனைவி
நல்ல தாய் , நல்ல பாட்டி, நல்ல கொள்ளுப்பாட்டி.

யாரையும் நோகாமல், யாரையும் எதிர் பாராமல்
இறைவனடி சேர்ந்தாள்.
அம்மா உன்னை அணைத்துக் கொள்கிறேன்.
உன் செல்வங்களுக்கு ஆசிகள் கொடு.

மறைந்த லதாஜிக்கும் உன் வயதுதான். அவர்களைக் கொண்டாடியது போல
உன்னையும் நினைத்திருப்பேனா?

ஆனால் அவர்கள் வாழ்வில் பொழுது போக்கு. நீ
எனக்கு வாழ்வு கொடுத்துக் காத்தவள். 
உன் பொறுமையில் அணுவளவாவது இருந்தால்
வெற்றி பெறலாம்.
உன் சிந்தனை வளம் இருந்தால் நூறு
புத்தகம் எழுதி இருக்கலாம்.

உன் புரிதல் இருந்திருந்தால் ,பச்சாத்தாபம்
இருந்தால் கோடி அன்புகளை நிலைக்க வைத்திருக்கலாம்.

நான் நீயாக முடியாது. எட்டிப் பிடிக்கப்
பார்க்கிறேன்.
ஹாப்பி பர்த்டே அம்மா.
,

Tuesday, February 08, 2022

"சும்மா"இருக்க முடியாமல்...

வல்லிசிம்ஹன்


[3:27 AM, 2/6/2022] Chandra P.S.: "சும்மா", "சும்மா"

தி.மு.க.வில் இருந்தபோது, நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள், ஒரு சொற்பொழிவில் "சும்மா" என்ற தலைப்பில் நீண்டநேரம் உரையாற்றினார். அந்த மலரும் நினைவுகளை இங்கே பார்ப்போம்...

சும்மா:-
               
"சும்மா இதைப் படியுங்கள், நிச்சயம் நீங்கள் அசந்துதான் போவீர்கள்!!

உலகில் தோன்றிய பல மொழிகள் அழிந்து, இருந்த இடமே தெரியாமல் போயிருக்கின்றன!

தமிழ் மட்டும் இன்றளவும் பேச்சிலும், எழுத்திலும் நீடித்து நிலைத்து தன்னையும், தான் சார்ந்த இனத்தையும் பெருமைப் படுத்திக்கொண்டிருக்கின்றது.

"சும்மா" சொல்லுவோம் தமிழின் சிறப்பை!!

அடிக்கடி நாம் பயன்படுத்தும் வார்த்தை தான், இந்த "சும்மா".

அதுசரி "சும்மா" என்றால் என்ன?

பேச்சுவழக்குச் சொல்லாக இருந்தாலும், தமிழ்மொழியில் உள்வாங்கப்பட்டுள்ள ஒரு வார்த்தை தான் இந்தச் "சும்மா".

"சும்மா" என்கிற இந்த வார்த்தைக்கு மட்டும் தமிழில் 15 க்கும் மேற்பட்ட அர்த்தங்கள் உண்டு என்றால் பாருங்களேன்...

வேறு மொழிகளில் இல்லாத சிறப்பினை, நாம் அடிக்கடி கூறும் இந்த "சும்மா" என்ற வார்த்தை அழகாக எடுத்துக்காட்டுகிறது...

1. கொஞ்சம் "சும்மா" இருடா?
(அமைதியாக / Quiet)

2.கொஞ்சநேரம் "சும்மா" இருந்துவிட்டுப் போகலாமே? (களைப்பாறிக் கொண்டு / Leisurely)

3.அவரைப் பற்றி "சும்மா" சொல்லக் கூடாது!
(அருமை / infact)

4.இது என்ன "சும்மா" கிடைக்கும் என்று
 நினைத்தாயா?
 (இலவசமாக / Free of cost)

5. "சும்மா" கதை விடாதே?
(பொய் / Lie)

6. "சும்மா" தான் இருக்கு. நீ வேண்டுமானால் எடுத்துக் கொள். 
(உபயோகமற்று / Without use)

7. "சும்மா", "சும்மா", கிண்டல் பண்ணுகிறான். 
(அடிக்கடி / Very often)

8. இவன் இப்படித்தான், சும்மா சொல்லிக்கிட்டே இருப்பான்.
(எப்போதும் / Always)

9.ஒன்றுமில்லை "சும்மா" தான் சொல்லுகிறேன்- 
(தற்செயலாக / Just)

10. இந்தப் பெட்டியில் வேறெதுவும் இல்லை "சும்மா" தான் இருக்கின்றது.
(காலி / Empty)

11. சொன்னதையே "சும்மா" சொல்லாதே.
(மறுபடியும் / Repeat)

12. ஒன்றுமில்லாமல்  "சும்மா" போகக்கூடாது .
(வெறுங்கையோடு / Bare)

13. "சும்மா" தான் இருக்கின்றோம்.  
(சோம்பேறித்தனமாக / Lazily)

14. அவன் "சும்மா" ஏதாவது உளறுவான். 
(வெட்டியாக / Idle)

15. எல்லாமே "சும்மா" தான் சொன்னேன்.
(விளையாட்டிற்கு / Just for fun)

நாம் அன்றாடம் பயன்படுத்தும் இந்த *"சும்மா" என்கிற ஒரு சொல், நாம் பயன்படுத்தும் இடத்திற்கு ஏற்றபடியும், தொடரும் சொற்களுக்கு ஏற்றபடியும் 15 விதமான அர்த்தங்களை, இங்கே கொடுக்கிறது என்றால், அது "சும்மா" இல்லை.

👍 Whatsapp  message from dearesr  P.S.Chandra  friend of 57 years.
[6:38 AM, 2/6/2022] Revathi Narasimhan: 😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁Summa  adhiruthilla:)

Sunday, February 06, 2022

Latha ji. Pranams.



வல்லிசிம்ஹன் என்ன சொல்லி இந்தக் குரலைப் 
போற்றுவது.!!

நம் செவியை நிறைத்த குரல் இப்போது இறைவனை
நோக்கிச் சென்று விட்டது.

அவர் தொடாத துறையில்லை.
தொடாத மொழியில்லை. பக்தி, காதல்,பாசம்,தேசம்
எல்லாமே அவர் குரலால்
மகிமை பெற்றன.

வெறும் வார்த்தைகளால் அவருக்கு அஞ்சலி 
செலுத்த முடியாது.
அவர் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்திருக்கிறோம்.

விவித் பாரதியும் ரேடியோ சிலோனும்
நம் தாகத்தை உணர்ந்து அவர் குரலைப்
பகிர்ந்து கொண்டே இருந்தன.

இன்னமும் நாம் கேட்போம்.
அன்புச் சகோதரி லதா மங்கேஷ்கர் என்றும் நம்முடன்.



30000 பாடல்கள். !!!!!
அத்தனையையும் மீண்டும் மீண்டும் கேட்கலாம்.

வாழ்வு வளம் பெற இசை நம்முடன்.










Saturday, February 05, 2022

ஒரு நாள்.....

வல்லிசிம்ஹன்

வாழ்வின் மொத்த நாட்களில் ஒரு நாள்
மிக முக்கியமாக அமைகிறது.

அதன் சிறப்பை உடனே புரிந்து கொள்ள
கொஞ்சம் முதிர்ச்சி வேண்டும்.

திருமணங்கள் பெரியோர்களால் நிச்சயிக்கப் பட்டாலும்
அதை முறைப்படி நடத்திச் செல்லும் அவசியம் தம்பதிகளுக்கே
அமைகிறது.

சரியாகப் புரிதல் நிகழும் ஒரு நாள்
வாழ்வின் சிறந்த நாள்.
அதுவரை மோகம், காதல் என்று என்ன சொல்கிறோமோ
அது நிலைக்க வேண்டும்.
மணத்துக்கு முன் வரும் காதலும், பின் வரும் காதலும்
ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுப்பதிலும்
இணைந்து சிந்திப்பதிலும்  தெரியும்.
அனைவருக்கும்  தோழமை அவசியம்.

யானைக் காதல் என்று தி.ஜானகிராமன் சொல்வார்.
அதுபோல மணவாழ்வு அமைந்தால் சொர்க்கமே.
எல்லோரும் நலமாக வாழ வேண்டும்.










   அன்பின் கோமதி அரசுவின் திருமண நாள்
ஃபெப்ரவரி ஏழாம் தேதி.

மனம் நிறைய இனிய நினைவுகளுடன்
ஸாரின் அன்புடனும் 
நல் ஆரோக்கிய வாழ்வு அமைய வேண்டும்.
சுற்றம், குடும்பம் என்று 
எல்லோரும் கோமதியின் மீது பரிவுடன் இருப்பதற்கு
அவரின் ஆழ்ந்த புரிதலே காரணம்.
வாழ்க வளமுடன்.

எழுதி வெளியிட்டப் பதிவுகளுக்குப் 
பதில் அளிக்கத் தாமதமாகிறது.
இடைவிடா தலைவலி. வீட்டைச் சுற்றி இருக்கும் பனி
சுவர்களில் ஊடுருவி,
தலையில் இறங்குகிறது.

ஆண்டொன்று போனால் வயதொன்று போகும் 
என்று பாடல்தான்  நினைவுக்கு வருகிறது.





அவரைக்காய் + பச்சை மிளகாய்ப் பொரியல்

Friday, February 04, 2022

கண்மணியே காதல் என்பது....

வல்லிசிம்ஹன்
எல்லோரும் நலமுடன் வாழ வேண்டும்.
பிப்ரவரி 4 ஆம் தேதி, சிறிது குளிருடனே விடிந்தது.
9 மணிக்கு முஹூர்த்தம்.அதற்கு முன் பெரிய தம்பிக்கு உப நயனம்.
காலையிலிருந்து வயிற்றுக்கு எதுவும் ஈயப்படவில்லை.
அது ஒரு மாபெரும் சங்கடம்.🙂 பாட்டியுடைய அக்கா
ரகசியமாக அழைத்துச் சென்று ஒரு டம்ப்ளர் பாலைக் கொடுத்தார்.
11,12 மணியாகும் சாப்பிட .உன் பின்னால் தான் நிற்பேன்.
எதுக்கும் என்னைத் திரும்பிப் பார்த்தியானால்
கொண்டு வந்து கொடுக்கிறேன் என்று நம்பிக்கை கொடுத்தார்.
அப்போதிருந்த பரபரப்பில் எதையும் கேட்கத் தோன்றவில்லை.
முதல் நாள் இரவே வீடு திரும்பிவிட்ட புக்ககத்தார்
சரியாக எட்டு மணிக்கு வர,தலை சந்திரப் பிரபை,சூரியப்பிரபை,
ராக்கொடி, ஆண்டாள் கொண்டை என்று இறுக்க,
தடுக்கிவிழாமல் மண்டப வாயில் ஊஞ்சல் அருகே
வந்தேன்.பின்னாலயே அம்மா,மன்னி,குட்டித் தங்கைகள்.
ஒரு சின்னப் புன்னகையுடன் மாலை மாற்றல் ஆரம்பித்தது.
"கொஞ்சம் நிமிர்ந்து உட்கார். எனக்கே நினைவிருக்காது நான்
யாரைக் கல்யாணம் பண்ணிக் கொண்டேன் " என்று சொன்னதும்
அங்கே சிரிப்பலை.ஜெயா மன்னி,அம்மா அருகில்
நின்று ஊஞ்சல் பாட்டுப் பாடியதும், அம்மாவின் தோழி சரோஜாம்மா,
கன்னூஞ்சல் ஆடி இருந்தாள் பாட்டுப் பாடும்போதே
புரோஹிதர் வரதன் கச்சேரி பண்ணாதீங்கோ. 9.10க்கு தாலி கட்டியாகணும்
என்று மிரட்ட உள்ளே விரைந்தோம்.
அக்னி வளர்த்து, ஹோமப்புகை கண்ணில் ஏற, நாத்தனார்
அணிவித்த பத்துகஜம் கூரைப் புடவையில்,
அப்பாவுக்கு வலிக்கக் கூடாதே என்பதில் கவனமாக
அவர் மடியில் உட்கார, சிங்கம் மங்கல முடிச்சுப் போட்டார்.
முறையாக சப்தபதி, தம்பி முரளியுடன் பொரியிடல்,
மைலாப்பூருக்கு கிரஹப்ரவேசம் என்று முடித்து
மண்டபம் திரும்பும்போது மணி ஒன்று.
இனிமையும்,மகிழ்ச்சியுமாக அன்பு வாழ்க்கை ஆரம்பமானது.
Kalyani Shankar, Tulsi Gopal and 90 others
102 Comments
Share






திருமண பந்தத்தில் எப்படி இணைகிறார்கள் இருவர் என்று
 பல நாட்கள் யோசித்திருக்கிறேன்.
 நிறைய தம்பதிகளைப் பார்த்திருக்கிறேன்.
எல்லோருமே  மனமொத்த முறையில் செயல்படுவதைத்தான் பார்த்தேன்.
  அது யாரையுமே தவறாகவோ தப்பாகவோ எடை போடாத பருவம்.
 என் மற்றத் தோழிகள்  மேல்படிப்புப் படித்துக் கொண்டிருந்தபோது
எனக்குத் திருமணம் கூடி வந்தது.
 இவர்தான் உனக்கு நிச்சயைக்கப் படப் போகிறவர் என்ற போது
மனதில் சட்டென்று பதிந்து விட்டது அந்த முகம்.
 முதன் முதலாகப் பார்த்த போதே இருவருக்கும்
புரிந்து விட்டது. ஒரு சிறிதளவு சந்தேகம் இல்லை.
 நடுவில் பெரியவர்களுக்குள் கடிதப் போக்குவரத்தில் 
சலனம் ஏற்பட்டாலும் சரியாகிவிட்டது இரண்டு பக்கமும் 
பெருந்தன்மையோடு நடந்து கொண்டதால்.
 மனமுதிர்ச்சியில் அவருக்குப் பெரிய பங்கு. என் 
சிறு தப்புகளை எல்லாம் பொறுத்துக் குடும்பத்தை
நடத்தினார்.
  குறை ஒன்றும் இல்லை. 47 வருடங்கள் 
சேர்ந்திருக்க விதிக்கப் பட்ட,வாழ்த்தப் பட்ட வாழ்வு.
சில தம்பதிகளுக்குக் கிடைக்காது.
எல்லோருக்கும் இனிய மணவாழ்வு அமைய வேண்டும்
 என்று இறைவனைப்
பிரார்த்திக்கிறேன்.
என் கணவர் எங்கிருந்தாலும் என்னைக் காப்பார்.
 குழந்தைகளுக்குத் துணை இருப்பார்
என்றே நம்புகிறேன்.
இணைந்த நாள்  தை மாதம் 22 ஆம் நாள் 1966.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
#திருமணம் நற்காரியங்கள் பிப்ரவரி 1
மாமா பாரிஜாதம்  மைலாப்பூருக்கு சென்று மாப்பிள்ளையின் பாத அளவு வாங்கி வந்தார்.
காசியாத்திரைக்கு செருப்பு வாங்கிக் கொடுக்க வேண்டுமே.
11 சைஸ் அளவு. கொஞ்சம் அதிசயமாக இருந்தது.
கூடவே பாய், கைத்தடி,குடை,ராமர் பட்டாபிஷேகப் படம் வெள்ளியில்,

எல்லாம் பாரீஸ் கார்னர் போய் வாங்கி வந்தாச்சு,.
என் புடைவைகளுக்கு ஏற்ற வகையில் வண்ண ரவிக்கைகள், மாமியார் வீட்டு வழக்கப்படி
கச்சேரி ரோடு நன்னுஜான் கடையில் தைத்து வந்தது. 
நூதன் ப்ளௌஸ் என்று நாங்கள் சொல்லுவோம். எல்லாம்
கல்யாண மண்டபத்துக்குப் போகும் பெட்டியில் குடியேறின.
எனக்கு வேண்டிய குடை ஜிமிக்கி,சாந்து புடவைக்கேற்ற வண்ண வளையல்கள்
புது செருப்பு எல்லாம் புரசவாக்கம் ஹைரோடு 
சென்று நானே வாங்கிக் கொண்டேன்.தோழிகளுக்கு என்னைவிட 
பரபரப்பு அதிகமாயிற்று.:))


மீண்டும் பார்க்கலாம்.
Aha! Movie last seen in Nagesh  theater :)

அன்பின் திருமதி கமலா ஹரிஹரன் அவர்களின்
 மகன் மருமகளுக்கு 3 ஆம் தேதி திருமண நாள் வாழ்த்துகள்.
என்றும் நலமுடன் வளமுடன்
குடும்பத்துடன் வாழ்ந்து அன்னை சொல் மிக்க மந்திரம் இல்லை
என்ற வேதத்தை அனுசரித்து சுபமாக இருக்க வேண்டும்.
இறை அருள் அனைவருடனும் கூட வேண்டும்.

தை மாதத் திருமண நாள் அதே வெள்ளிக்கிழமையில் வருகிறது.
57 ஆம் வருட ஆரம்பம். நாங்கள் பெற்ற செல்வங்களும்
அவர்கள் பெற்ற செல்வங்களும் 
மற்றும் சுற்றங்களும் நட்புகளும் செழித்தோங்க 
இறைவன் அருள்வான்.