Showing posts with label Appaa May 30TH.. Show all posts
Showing posts with label Appaa May 30TH.. Show all posts

Wednesday, June 01, 2022

என்றும் அப்பா.

வல்லிசிம்ஹன்



Thursday, May 30, 2013

அப்பா 1921- மே 30 பிறந்த நாள்

தெய்வமான அப்பா




வணங்கிய தெய்வம்

 தன்னைப் பற்றியப் புகழோ  பேச்சோ விரும்ப மாட்டார்.
எப்பொழுதும் கீதை.
இல்லாவிட்டால்   குழந்தைகளுக்காக நல்ல விஷயங்களை

எழுதிவைப்பார்.
அபார்ட்மெண்டில் குடியிருந்ததால்  பொக்கிஷதார்  பொறுப்பும் கொடுக்கப் பட்டிருந்ததால் அந்தக் கணக்குகளைச்  சரி   பார்ப்பார்.

பேத்தியை ஹோலி ஏஞ்சல்ஸ்  பள்ளியில் கொண்டு போய் விடுவார்.

வீட்டுக்கு ஏதாவது வாங்கி வரவேண்டிய
பொருட்களை  பட்டியல் போட்டுக் கொள்வார். கடைக்குப் போவதும்
கோவிலுக்குப் போவதும் மிகவும் பிடித்த விஷயங்கள்.

பாண்டிபஜார் வழியே   நான் ஏதோ வேலையாகப் போய்க் கொண்டிருப்பேன் பஸ்ஸில். திடிரென்று அப்பா பண்டியன் காஃபிப் பொடி
கடையிலிருந்து வெளியே  வந்துகொண்டிருப்பார்.''அப்பா'' என்று வாயோட முணுமுணுப்பதோடு  பஸ்ஸில் போய்விடுவேன்.


வீட்டுக்குப் போகும் வரையிலும் அப்பாவின் உருவம் கண்ணிலேயெ நிற்கும்.

வீட்டுக்கு வந்து சமையல் ஏற்பாடுகளைக் கவனிக்கும் போது
தொலைபேசி  கூப்பிடும். மகள் எடுத்துவிட்டு,அம்மா.....தாத்தா
ஃபோன்ல.

அவசரமாக வருவேன். ஏம்மா  பாண்டிபசார்வழியாப் பஸ்ஸில போனியா?
அதிர்ச்சியை மறைத்துக் கொண்டு ஆமாம்பா. ஜோசியர் வீட்டுக்குப் போய்
வந்தேன்.
ஜன்னலில் உன் முகம் மாதிரி தெரிந்தது.
நீதானா  என்று சந்தேகம். இவ்வளவு தூரம் வந்த பொண்ணு
வீட்டுக்கு    வருவியேன்னு நினைச்சேன்.

குற்ற உணர்வை மறைத்துக் கொண்டு
இரவு சமையலுக்கு நேரமாகிவிட்டதுப்பா.
 சாரி.!!
அடடா  இல்லம்மா.இவ்வளவு சாயந்திர வேளையில் தனியாகப் போகிறாயே.
உன் வேலைகளில் பாதி எனக்குக் கொடேன்.
நானும் நன்றாகச் செய்து கொடுக்கிறேன்.

இனிமேல் உங்கள் வீட்டுக்கு வந்து....
ஏன்மா இது உனக்கும் வீடுதான்...அப்பா சிரிக்கும் சத்தம் கேட்கும்.

சரிப்பா நம்ம வீட்டுக்கு வந்து,  உன்னையும் அழைத்துக் கொண்டு

ஜாதகங்கள் விஷயமாக நாம் யோசித்து   முடிவு செய்யலாம்.

ஆமாம்  இரண்டு ஜீனியஸ் சேர்ந்தால்  செய்ய முடியாத வேலையா
ஒரு கல்யாணம்:)

குறுக்கே  அம்மா குரல். பொண் குரல் கேட்டால் அப்பாவுக்குத் தனி உற்சாகம்.

ஏம்மா நீயும்   சேர்ந்துக்கோயேன். உனக்குத்தான் எல்லாவற்றிலும் ஆசைகள்  நிறைய. நான் அம்மாவைக் கிண்டலடிப்பேன்.

அம்மாவை ஒண்ணும் சொல்லாதே ஆண்டாள்.
அவளுக்குத் தெரியாததே கிடையாது.

இந்த அப்பா  இயங்குவது அம்மாவுடைய சக்தியால்தான்!!!

சாமி. உங்க     வைஃபை  ஒண்ணும் சொல்லலைப்பா.

நாம் எல்லாம் சேர்ந்து இந்தத் திருமணத்தை முடிக்கலாம்
என்பதோடு அந்தத் தொலைபேசி  சம்பாஷணை முடியும்.

இப்பொழுது நினைக்கிறேன்  பாண்டி பசார் பக்கம் போகும்போது
அம்மாவீட்டுக்கும் போயிருக்கலாமோ.

இன்னும் நிறைய சமாசாரங்களைப் புரிந்து கொண்டிருக்கலாமோ என்று.
அதற்கென்ன செய்வது.
அந்த நேரம் அப்படி. இப்பொழுது அப்பாவுக்கு மரியாதை சொல்லி அன்போடு நினைக்க வேண்டிய    நேரம்.

அப்பா  உன்னை மாதிரி தந்தை   இனிப் பிறக்கப் போவதில்லை.
எங்கே இருந்தாலும் நன்றாக இருப்பாய்.
அடுத்த பிறவி ஒன்று இருந்தால் உனக்கு அம்மாவாக இருக்கவேண்டும். உன்னைச் சீராட்ட வேண்டும்.

வணக்கங்கள் நமஸ்காரங்களுடன்
உன் குடும்பம்.



எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

அஞ்சலி நம் ஜானகி அம்மாவுக்கு.

வல்லிசிம்ஹன் வாழ்வின் பொன்னான தருணங்களுக்குச் சொந்தமானவர்கள் இசைக்கலைஞர்கள். சுசீலா அம்மா, லீலா அம்மா, ஜானகி அம்மா,ஜிக்கி , ஜமுனா ராணி, குழந...