வல்லிசிம்ஹன் சுண்டைக்காய் மாடவீதியில் இறைபடுமே, இங்கே கிடைக்கவில்லையே என்று ஒரே விசாரம்:) என்னவோ அப்போதெல்லாம் வாங்கி வாங்கி அனுபவித்தது போல.:) இதெல்லாம் ஆவணியில் விற்கும் போது. சுண்டைக்காய்,மணத்தக்காளி, அரி நெல்லிக்காய் என்றும் ,மாங்காய் இஞ்சி, தஞ்சாவூர்க் குடமிளகாய் என்றும் ஊரிலிருந்து வரும். எல்லாம் புரட்டாசி வெய்யிலில் போட்டு எடுத்து உள்ளே வைக்க வேண்டும். மார்கழி மாசத்துக்குப் பிரயோசனப்படும் என்று பாட்டி வழி காட்ட நான் செய்து முடித்து அது அதற்கான ஜாடிகளில் போட்டு வைப்போம். இதற்காகவே வரும் பெண் வயிற்றுப் பேரன், "ஆஜி, ஊறுகாயெல்லாம் போட்டியா" நான் பாட்டில் கொண்டு வந்திருக்கேன் என்று எடுத்துப் போவார். பெரிய குடும்பம் அப்படி எல்லோரும் எடுத்துக் கொண்டது போக நமக்கு இன்னோரு தடவை போடுவோம்:) இது தவிர, சுண்டைக்காய் போட்டு சாம்பார், வத்தக் குழம்பு எல்லாம் திகட்டிப் போகும் அளவுக்கு செய்யப்படும். இதெல்லாம் எங்கள் மதுரை சுண்டைக்காய்க்கு ஈடாகாது என்று மனதில் முனகிக் கொள்வேன். மலை சுண்டைக்காயை ,அப்பா டவுன் சந்தைக்குப் போகும்போது வாங்கி வருவார்,. நல்ல பெரிதாகக் கசப்பில்ல...