Blog Archive

Sunday, August 22, 2021

உருளைக் கிழங்கின் உலகம்




வல்லிசிம்ஹன்

உருளைக் கிழங்கு பெயர் சொன்னாலே போதும். 
சிங்கம் இரண்டு மடங்கு சாப்பிட்டு விடுவார்.
ஆனால் இங்கே பதிந்திருக்கும் 
வித வித உ.கி வகையறா ஒத்துக் கொள்ளாது.
பொடிசு பொடிசா நறுக்கி 
இரண்டு மேஜைக்கரண்டி எண்ணெயில் வதக்கின,( வறுத்ததில்லை)
ப்ரௌன் வண்ணத்தில் நல்ல பதத்தில்
செய்தால் உள்ளே இறங்கும். 
இதே உ.கியை பொடிமாஸ்செய்து விட்டால்.,

எல்லாம் சின்னவயசில சாப்பிட்டாச்சுமா.
இனிமேல் வேண்டாம்:) இது வழக்கமான பதில் .அதனால் இப்போது
இந்தப் பொரியல் வகைகளைச் செய்து பார்க்கிறேன்.
அதுவும் நிறைய சாப்பிட முடியாது.
வாயு வந்து நம்மில் மையம் கொள்வார்.
கொஞ்சம் இஞ்சித் துகையலையும் 
கூடவே  சாப்பிட வேண்டும்.
இங்கே நல்ல இஞ்சி பெரிது பெரிதாகக் கிடைக்கிறது.
தோலுரித்து, சின்னத் துண்டுகளாக்கி,
மெந்தியம், பெருங்காயம், கடலைப் பருப்பு, உ.பருப்பு,
சிவப்பு மிளகாய் என்று
வறுத்துக் கொண்டு,
இஞ்சித் துண்டுகளையும் வதக்கி, உப்பும் சேர்த்து 
அரைத்தால் சுவையான இஞ்சித் துகையல்
தயார்.

12 comments:

Geetha Sambasivam said...

இஞ்சித்துவையல் ஏப்ரலில் சமையல் மாமி பண்ணி வைச்சது இன்னமும் இருக்கு! சாப்பிடத்தான் ஆளில்லை. :))) உ.கி. இந்த காடரிங்காரங்க எல்லோரும் கொடுத்துக் கொடுத்து அலுப்பு வந்து விட்டது. இப்போதைக்கு உருளைக்குத் தடா!

ஸ்ரீராம். said...

ஒவ்வொரு வயதில் ஒவ்வொன்று பிடிக்கிறது.  எனக்கு உருளைக்கிழங்கு அவ்வளவு விருப்பமெல்லாம் இல்லை.  ஏதோ இரண்டு சாப்பிடுவேன்.  முன்பெல்லாம் சேப்பங்கிழங்கு சாப்பிட்டுக் கொண்டிருந்தேன்.  இப்போது அதுவும் பிடிபப்தில்லை.  சுவைகள் மாறுகின்றன - வயதையும், உடல்நிலையையும் பொறுத்து!

மாதேவி said...

உருளைரோஸ்ட்,காரப்பிரட்டல்,பொடிமாஸ்,சலட்எங்கள் வீட்டில் பிடிக்கும்.

கோமதி அரசு said...

உருளைக்கிழங்கு பற்றி மலரும் நினைவுகள் அருமை.

இஞ்சி துவையல் சொதி செய்யும் போது செய்வாள் மருமகள் இங்கு.
நானும் இஞ்சி துவையல் செய்வேன். தேங்காய் சட்னியில் ஒரு நாள் பொட்டுகடலை இஞ்சி சேர்த்து செய்வேன், ஒரு நாள் புளி வைத்து செய்வேன்.

நம் உடலுக்கு எது ஒத்துக் கொள்கிறதோ அதை மட்டும் இப்போது சாப்பிடுவது நல்லது .

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாமா,
உண்மைதான் மா. உ.கிழங்கு இப்போது
ரொம்பப் பேருக்கு ஒத்துக் கொள்வதில்லை.

உருளைக்கிழங்கு செழித்து வளர்ந்து
ஊட்டியில் இருந்து வந்த போதாவது
ரசிக்க முடிந்தது.
எனக்கு ஒத்துக் கொள்வது., சின்னச் சின்னதாக
நறுக்கினதுதான்.

இஞ்சித் துகையலும் நெஞ்செரிச்சல் தராமல்
இருக்க வேண்டும்.:)

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஸ்ரீராம்,

மிக மிக உண்மை. ஒவ்வொரு காய்க்கும்
ஒவ்வொரு காலம் உண்டு.
எங்கள் வீட்டில் ஒவ்வொருக்கு ஒவ்வொன்று
பிடிக்கும்.
எல்லோருக்கும் உ.கிழங்கு பிடிக்கும்..
இப்போது பெரியவன் உ.கிழங்கு சாப்பிடுவதில்லை.
மகள் செய்வதே இல்லை:) நான் தான் பேரன் களுக்காகச் செய்வேன்.

சின்னவன் வீட்டில் என்றும் உண்டு.

வல்லிசிம்ஹன் said...

ஆஹா, அன்பு மாதேவி,
உ.கிழங்குக்கு ஒரு வோட் விழுந்ததில் மகிழ்ச்சி:)

நலமுடன் உண்டு மகிழுங்கள் மா.
மிக நன்றி.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதிமா,
வாழ்க வளமுடன்.

சொதிக்கு, மாற்று இஞ்சித் துகையலா.
அட.!!
இஞ்சிப் புளி, இஞ்சி தேங்காய் பொட்டுக் கடலை
எல்லாமே மணம் தான்.
நன்றாக ருசியோடு இருக்கும்.
இதுவே தனி செய்முறையாக இருக்கிறது.

ஆமாம் அவ்வப்போது மாறும் உடல் நிலையைக்
கவனிக்கத்தான் வேண்டும். நன்றி மா.

திண்டுக்கல் தனபாலன் said...

பூரியுடன் மட்டுமே...

வெங்கட் நாகராஜ் said...

உருளைக்கிழங்கு - இங்கே அது இல்லாமல் பல சப்ஜி இல்லை!

இஞ்சித் துகையல் - ஆஹா. செய்து வைத்துக் கொண்டால் நல்லது தான். சமயத்துக்கு உதவுமே!

வல்லிசிம்ஹன் said...

அன்பு தனபாலன்,
மசாலா உ.கிழங்கு பூரியுடன் மட்டுமே இணையும்.
இப்பொழுது தான் பழைய மசாலா உ.கி எல்லாம் கிடையாது.
எல்லாம் வட இந்திய முறைதான்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் அன்பு வெங்கட்,
இப்போ குழந்தைகள் எல்லாம் பிறக்கும் போதே
வாயுத் தொந்தரவுடன் பிறக்கிறார்கள்.

பல வேறு உணவு சாப்பிடுகிறவர்களுக்கும்
பலவித தொந்தரவு.
இஞ்சியும் ,சுக்கும் எப்பொழுதும் வீட்டில் இருந்தால் நல்லதுதான்.
நன்றி மா.