Blog Archive

Showing posts with label சியாட்டிலின் இடண்டாம் நாள் ரெயினியர் மலைச் சிகரம்.. Show all posts
Showing posts with label சியாட்டிலின் இடண்டாம் நாள் ரெயினியர் மலைச் சிகரம்.. Show all posts

Friday, September 06, 2019

சியாட்டிலின் இரண்டாம் நாள், ரெயினியர் மலைச் சிகரம்.

நாங்கள்  மலையேறி ய இடம் 
மலை அடிவாரம் கிரிஸ்டல் மௌண்டன் 
மலைமேல் காப்பிக்கடை.

வல்லிசிம்ஹன்

எல்லோரும் வளமாக   வாழ வேண்டும்.

சியாட்டிலின் இரண்டாம் நாள் 
 ரெயினியர் மலைச் சிகரம்.
Image result for road to mount rainier from Seattle
Add caption

 சிகாகோவிலிருந்து  சியாட்டில் வந்து சேரும்போது
மதியம் இரண்டு ஆகி விட்டது.
விமான நிலையத்திலிருந்து பெல்வியு மாரியாட் பான் வாய்
 வந்து  சேர இரண்டு மணிகள் ஆயின.

வரும் வழியில் 19 வருடங்களுக்கு முன் அவர்கள் தங்கி இருந்த வீட்டிற்கு
மாப்பிள்ளை அழைத்துப் போனார்.
பையன் களுக்கு ஒரே உத்சாகம்.
அவர்கள் இருந்தபோது ஒரு பூகம்பமும் வந்திருந்தது.
அதிலிருந்து எப்படித் தப்பினார்கள் என்று
மகள் விளக்கிக் கொண்டு வந்தாள்.
இறைவன் எத்தனையோ கருணை காட்டி இருக்கிறான்.

இப்பொழுதும் மழைக்காலம் ஆரம்பித்து, கிழக்குக் கடற்கரையைத் தாக்கிக்
கொண்டிருக்கிறது. இந்த ஊரின் வித விதமான சீதோஷ்ணமே
வியப்புக் கொடுக்கக் கூடியது.
சியாட்டில் என்றால் எப்பொழுதும் மழை பெய்யும் என்று நினைத்துக்
கொண்டிருந்தேன்.நாங்கள் அங்கே இருந்த ஐந்து நாட்களும் ஒரே ஒரு மழை பெய்தது.
உலகம் முழுவதும் வானிலை  மாறி விட்டிருக்கிறது.

ஊர் சுற்றி விடுதி வந்து சேர்ந்ததும் ,விடுதியைச் சுற்றியுள்ள வீதிகளில் நடந்தோம்.

ஒரே கலகலப்பு.
எல்லா கணினி மென்பொருள் கம்பெனிகளும் இங்கே தான்
இருக்கின்றன.
அதில் வேலை செய்யும் வாலிப வாலிபிகள் தற்காலிகமாகத் தங்க
வைக்கப் படும் விடுதிகளில் இதுவும் ஒன்று.
காலையில் ஆறரை மணிக்கு அழகாக காலை உணவை முடித்துக் கொண்டு
விடுதி கொடுக்கும் வண்டியில் ஏறி, மைக்ரோசாஃப்டோ,  ஆமேசானோ,
ஆப்பிளோ, எல்லாவற்றிலும் வேலை செய்யும் முகங்களில் முழுவதும் உத்சாகம்.
அதில் முக்கால்வாசி இந்திய முகங்கள்.
அடுத்த நாள் நாங்கள் பார்க்க வேண்டிய இடம் எரிமலைகளில் ஒன்றான
ரெயினியர் மலை.
இப்பொழுது மௌனமாக இருக்கும் மலை பெருமூச்சு மட்டும் விட்டுக் கொண்டிருக்கிறது.
அதீத வெய்யிலினால் ஆங்காங்கே காட்டுத்தீ இருக்கும் செய்தி வந்ததும் கொஞ்சம்
தயக்கம் இருந்தது.
கடைசியில் வியூ பாயிண்ட் சிகரம் சென்று தொலைவிலிருந்து
ரெயினியரைப் பார்க்கலாம் என்று கிளம்பினோம்.
அலுக்காமல் சலிக்காமல் விரையும் வாகனங்கள்.
மரங்களுடே   கண்ணாமூச்சி ஆடிய சூரியன்.
Add caption
Cable cars or Gondolos to the top.




செல்லும் வழியில் முழுவதும் பசுமையான நெடு நெடுவென்று வளர்ந்த மரங்கள். எதோ  வனத்துல வந்து விட்டோமோ என்று திகைக்க வைத்தன . மாடுகள் மட்டும் இருந்திருந்தால் ஸ்விட்சர்லாந்து என்று நினைக்கலாம். வெய்யில்  நிறைய இருந்தாலும் மக்கள் கூட்டம் அதிகம் 
மலை முகட்டில்  நின்று  செலஃபி எடுக்கும் கும்பல். தடுப்பு சுவரின்  மீது விளையாடும்  கன்னியர் காளையர்.

Crystal mountain  என்று அழைக்கப் படும் இந்த மலையிலிருந்து சுற்றி இருக்கும் ஐந்து சிகரங்களைக்  காணலாம்.

சில்லென்று காற்று அடித்தாலும் சூரியனின் உஷ்ணமும் தெரிந்தது.
எங்களுக்கு ரெயினர் போகும் அவசரம் .
கீழே இறங்கி வந்ததும் காப்பி குடிக்க விரைந்தோம்.

 அங்கே  வந்த வானொலி அறிக்கை.  சில இடங்களில் காட்டுத்தீ 
அதிகமாக இருந்தததால் அனைவரும்  எச்சரிக்கையோடு இருக்கும் படி செய்தி வாசிக்கப் பட்டது. அப்பொழுதே மணி மூன்றாகி இருந்தது,.
ரெயினியர் போக வேண்டுமானால் இன்னும் ஒரு மணி நேரம்  ஆகும். திரும்பிப் போகும் நேரம் மூன்று மணி நேரக்  காட்டு வழி.


இருட்டில்  எங்கேயாவது அகப்பட்டுக் கொண்டால்  சிரமம்.
மான்கள்  ஏதாவது வண்டியில் அகப்பட்டால்   அதுவேற 
வேதனை .

அங்கிருந்து கிளம்பினாள் போதும் என்கிற  அவசரம் சிறு சலனமாகப் பரவியது.
அதை எல்லாம் மீறி ஆட்டம் பாட்டம் எல்லாம் அங்கே நடந்து கொண்டிருந்தன.
சுற்றி இருந்த மரங்களூடே   மினுமினுப்பாக பங்களாக்களில் 
விளக்குகளும் மெல்லிய இசையும்   ஆரம்பித்தன.
அவர்களுக்கு இந்த எச்சரிக்கை எல்லாம் பழக்கம் போல.

பேரனுக்கும் அவனுடைய வேலைக்கு அடுத்த நாள் 
போக வேண்டும்.  
அதனால், ரெயினியர் மலை அடிவாரத்துக்குப் போகும் 
எண்ணத்தைக் கைவிட்டு சியாட்டிலுக்குத் திரும்பும் சாலையில் புகுந்தோம்.
வழி நெடுக்கப் படங்கள் எடுத்துக் கொண்டே வந்தான் சின்னவன்.

அதில்தான் சில படங்களைப்  பதிவிட்டிருக்கிறேன்.
இத்துடன் இந்தப் பயணக்கட்டுரை இனிதே முடிந்தது.




.