Showing posts with label #மறக்க முடியாத சிலர்.. Show all posts
Showing posts with label #மறக்க முடியாத சிலர்.. Show all posts

Tuesday, August 25, 2020

இரு குரலிசை

வல்லிசிம்ஹன்
பாத காணிக்கை படத்தில் சாவித்திரியும் விஜயகுமாரியும் .

எங்க வீட்டுப் பிள்ளையில்  சரோஜாதேவி மற்றும் ரத்னா.
இரண்டு பாடல்களுக்கும் உயிர் கொடுத்தவர்கள் சுசீலாம்மாவும், எல்.ஆர். ஈஸ்வரி அம்மாவும்.

படித்தால் மட்டும் போதுமா 
படத்தில்  சிவாஜியும் பாலாஜியும்.
வெகு நாட்களாக மக்கள் மனதில் உலவி வரும் பாடல்.
பந்தபாசம் படத்தில் சிவாஜியும் ஜெமினியும்.
கவலைகள்  கிடக்கட்டும் மறந்துவிடு 
காரியம் நடக்கட்டும் துணிந்துவிடு
 எடுத்தவர் யாரோ மறைத்தவர் யாரோ 
இருக்குது நீதி சிரித்துவிடு 

நாவுக்கு மனதுக்கும் உள்ளவழி 
நான்கு விரல் கடை தூரவழி 
சொல்லுக்கும்  செயலுக்கும் காத வழி 
சுற்றமும் சுகமும்  வேறு வழி.

வந்ததில் எல்லாம் பொருளுண்டு 
வருவதில்  வெற்றியும் நமக்குண்டு 
நிச்சயம் இரவுக்கு  பகலுண்டு 
நீதியின் கண்களில் உண்டு .





Friday, August 21, 2020

சரோஜா சௌண்ட் சர்வீஸ். திருமங்கலம்.


வல்லிசிம்ஹன்

வினாயகனே வினை தீர்ப்பவனே
வேத முதற்கோனே ஞான முதல்வனே
குணா நிதியே குருவே சரணம்...
தென் இந்தியா, தமிழகத்தில் 
சௌண்ட் சர்வீஸ்கள் செய்யும் நலம், சத்தம் எல்லாம் நாம் அறிந்ததே.

எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் முதலில் 
சீர்காழியின் குரலும், பின்பு டி எம் எஸ் குரலிலும் பிள்ளையாரும் முருகனும் வந்து விடுவார்கள்.
அந்த ஒலிபெருக்கி மற்றவர்கள் காதுகளை வதைக்கா வண்ணம் கேட்ட நாட்களும் உண்டு.
திருப்பாவை  நாட்களில் ,சென்னையில் 
கோவிலில் வைக்கும் பாடல்கள் காதில் அதிரப் 
புகுந்ததும் உண்டு.

எங்கள் திருமங்கலத்தில் ,சரோஜா சவுண்டு சர்வீஸ் 
1957,58,59 என்று ஒலிபரப்பிய அத்தனை சினிமா வசனங்களும்
அனேகமாக எல்லாப் பசங்களும் சொல்லும்.

பொதுக்கூட்டமாக இருந்தால்  ''வாழ்க வாழ்க பாட்டாளி''
இடம் பெறும்.
மதுரை வீரன் சினிமா வசனம் ''பொம்மி ஈயீயீ'' என்று செல்லும்.
''வீரத்தின் சின்னமே'' என்று வீரபாண்டியக் கட்ட  பொம்மன் முடியும்.!!!

''அக்காளுக்கு வளைகாப்பு" பாடல் வந்தால் அந்த வீட்டில் அந்த விழா
என்று தெரியும்:)
அனார்கலி வசனம் சிவாஜி பேசியது ''அனார்,அனார்'' என்று அல்றும்.

எம் எல் வியின் எல்லாம் இன்ப மயம் பாடல் வந்தால் அது திருமண வீடு.
இன்னும் எத்தனையோ பாடல்களை ஒலி பரப்பிய சரோஜா
சௌண்ட் சர்வீஸ், இருந்த இடம் 
 எங்கள் பள்ளிக்கு செல்லும் வழியில் 
பக்கத்துத் தெருவில் இருந்ததாக ஒரு மங்கிய நினைவு.
அதை இரு இளைஞர்கள் நடத்தி வந்தார்கள்.
அந்தக் கடையைத் தள்ளி நின்று
பார்க்க அப்பா அனுமதிப்பார்.
நானும் தோழி பத்துவும் அங்கு சென்று
வாயில் ஈ புகுந்தால் கூடத் தெரியாமல்
பார்ப்போம்:)

இரண்டு ஸ்பீக்கர்கள், இரண்டு க்ராமஃபோன்கள்,
ஏகப்பட்ட பெரிய பெரிய இசைத்தட்டுகள்
மனதில் நிழலாடுகிறது.
பாப்பா ,பாட்டு போடட்டுமா கேட்கிறாயா
என்று அந்த கடைக்காரர் கேட்டாலும்
மறுத்து விட்டு வீட்டுக்கு ஓடி வந்து விடுவோம்.;)
 அப்போது ஆடி மாதப் பாடல்கள் எல்லாம் கிடையாது.
மீனாக்ஷி அம்மன் கோவிலில்
திருப்பாவை, திருவெம்பாவை, மற்றும் திருப்பள்ளி 
எழுச்சிப் பாடல்கள் டிசம்பர் 16 ஆம் தேதியிலிருந்து ஒலிக்க
ஆரம்பிக்கும்.
அவ்வையார், வேலனே என்று விளித்தபடி
ஆரம்பிக்கும் பாடலும், தொண்டர் தம் பெருமை 
சொல்லவும் அரிதே பாடலும் இன்னும் மனதில் ரீங்கரிக்கின்றன.
மனோரம்மியமான பாடல்கள் கேட்டே வளர்ந்தோம்.
இப்போது எனக்குத் தனிப்பட்ட  வானொலி நிலையமே கிடைத்தது போல 
யூ டியூபுக்கு நன்றி சொகிறேன்.
இப்போதும் திருமங்கலத்தில் அந்த சௌண்ட் சர்வீஸ் இருக்கிறதா
தெரியாது.
பாண்டி விளையாட்டு விளையாடியபடியே
"
சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா '' கேட்டது
ஒரு காலம். அனைவரும் நலமுடன் வாழ்க.


Friday, August 14, 2020

யார் என்ன சொன்னாலும் அஞ்சாதே ...


வல்லிசிம்ஹன்      மதுர மதுர மீனாக்ஷி

கலைஞர்களை அவர்களது குரலுக்காக மட்டும்
மதிப்போம்.
வேண்டாத சொற்களைச் சொல்லி
அவர்களது குடும்பத்தைத் துன்புறுத்த வேண்டாம்.

நம் கேட்கும் புலன் எல்லாம் தேன் வழியப்
பாடியவர்களைப்
பாடிக் கொண்டிருப்பவர்களை
எப்பொழுதும் போற்றுவோம்.

Friday, August 07, 2020

அஞ்சலி

வல்லிசிம்ஹன்

கீழநத்தம் வீர ராகவன்  கோபாலன்.
என்  மூன்றாவது மாமா,
81 வயதில்  இறைவனடி சேர்ந்தார்.

நல்ல  வாழ்வு வாழ்ந்து நற்கதி அடைந்திருக்கிறார்.

பல நல்ல நினைவுகள்.
அவரது  குண நலன் .
பிறருக்கு உதவும் நற்பண்பு,
என் அம்மாவைப் பார்க்க வரும்போது அவர் கொண்டு வரும் சீர்.
அக்காவிடமும் , அவள் குழந்தைகளிடம் அவர் வைத்திருந்த 
பாசம்   எல்லாமே   நினைவில் பதிந்திருப்பவை .

அவரது மனைவிக்கும் குழந்தைகளுக்கும் 
எங்களுக்கும்  பிரிவு சோகம் தவிர 
மற்ற வருத்தம் இல்லை. உலக  தொந்தரவுகளிலிருந்து அமைதி பெறட்டும் அவர் ஆத்மா.



Sunday, June 10, 2018

சந்தோஷப் பட வேண்டிய நினைவுகள்

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
ரயில் பயணங்கள் எப்பொழுதும் இனிமைதான்.
நிறை மாதத்துடன், கையில் இரண்டு சமத்துக் குழந்தைகளுடன்,
என்னை அம்மா வீட்டுக் கொண்டு போய் விட ஆள் வேண்டுமே.

சிங்கத்துக்கோ கோவையில்  மூச்சுவிட நேரம் இல்லை.
யாரை உதவிக்குக் கேட்கலாம்னு பார்த்தால்,
முரளி நினைவு வந்தது,
20 வயது முரளி 22 வயது அக்காவுக்குத் துணையாக
வந்தான்.
படிப்பு முடிக்கும் வருடம்.
குழந்தை அலுத்துக் கொள்ளவில்லை.

திருச்சியில் இறங்கி, காரைக்குடிக்குச் செல்லும்
வண்டியில் ஏற்றி விட்டுத் தானும் வந்தான்.
மறு நாளே சென்னை செல்ல வேண்டும்.
மீண்டும் போட் மெயில் ஏறிச் சென்னை வந்து சேர்ந்த
பையன்.இரண்டு நாட்கள் கழித்து கடிதம் போட்டான்.
தூக்கக் கலக்கத்தில் திருச்சியில் இறங்கி பங்கலூர் எக்ஸ்ப்ரஸ்ஸில் ஏறிவிட்டதாகவும்.
ஜோலார்பேட்டை வந்ததும், டிக்கெட் கலெக்டர் எழுப்ப,போட் மெயில் டிக்கட் இருக்கிறது
இந்த வண்டியின்
டிக்கட் இல்லாமல் விழித்திருக்கிறான்.
அந்தக் காலத்து நல்ல மனிதர்,
உடனே என் அப்பாவுக்கு, தந்தி கொடுக்க,
அப்பா பதறிப் போய் தந்தி மணி ஆர்டரில் பணம் அனுப்ப
சென்னைக்கு ஏற்றிவிட்ட அந்த நல்ல மனிதர்,காப்பியும் இட்லியும் வாங்கிக் கொடுத்திருக்கிறார்.
வாழ்க வளமுடன் .என்றும் நன்றியுடன் உன் அக்கா ரேவ்.

Add caption

Tuesday, April 04, 2017

மறக்க முடியாத சிலர்.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

களக்காட்டம்மை
++++++++++++++++++++
   நாங்கள் சென்னையில்  பாட்டி வீட்டுக்கு வரும்போதெல்லாம்
நான் எதிர்பார்ப்பது எதிர் வீட்டுக்கு வருகை தரும் விருந்தாளியான
களக்காட்டம்மை.
 ஒரு  சிரித்த முகத்தோடு,தன் கஷ்டங்கள் எத்தனையோ இருந்தாலும்
அதைப் பற்றி  முகத்தில் ஒரு துளி கூடக் காண்பிக்காமல்
கதைகள்  சொல்வார்.
 எதிர்வீடு  என்பது பெரிய குடும்பத்தைக் கொண்டது. அப்பா
ஒரு ஹோட்டல் வைத்து நடத்திக் கொண்டிருந்தார்.
மனைவி சிறிது நோயாளி.

வரிசையாகக் குழந்தைகள்  பெற்றதால் வந்த களைப்பு அது.
இந்தச்  சிரமமான நேரங்களில் களக்காட்டம்மை வந்து உதவி செய்வார்.
பெரிய பையன் கல்லூரியிலும் ,கடைசிப் பையன் ஒன்றாம் வகுப்பிலும்
 இருந்ததாக நினைப்பு. நடுவில் மூன்று பெண்கள்.. பாப்பா,தைலா,லக்ஷ்மி.  கையில் இரண்டு புடவைகள். தலை தோட்ட துண்டு  என்று  சிறிய பையில்  வைத்து  கூடவே  குழந்தைகளுக்கான  முறுக்கு, தட்டை  என்று ஏதாவது.  சூளையிலிருந்து வருவதால் சூளையம்மை  என்றும் கூப்பிடுவார்கள்.      அவரிடம் மிகப் பிடித்த   விஷயம் அவர்  இந்த   மடி, ஆசாரம்  எல்லாம் பார்க்க  மாட்டார்.   எப்பொழுது வேணுமானாலும் அருகில் போகலாம் . கதை கேட்கலாம். அவருடைய ஊரில் நடந்த திருமணம், மறைந்த தன் கணவர், ஊரின் செழிப்பு  என்று  ஏகப்பட்ட   கதைகள் அவரிடம் கேட்கலாம். எந்த   வீட்டில் அப்பளம் ,வடாம்  இடுவதாக இருந்தாலும் முதல் அழைப்பு அம்மைக்கு தான். அங்கே  நாங்களும் போய் விடுவோம்.  எண்ணி வைக்கப் பட்ட அப்பள  உருண்டைகள எங்கள எல்லோருக்கும் அளவோடு கிடைக்கும்.  மொட்டை  மாடியில் அப்பளம் உலர்த்த,  அதைத் திருப்பிப் போட, காகம் கொத்தாமல்  குடை  பிடித்துக் காவல் இருக்க  இந்த வேலைகளை  செய்ய எங்கள் பட்டாளத்தின் உதவி  அவர்களுக்கு வேண்டி இருந்தது.                      


வேலை முடியும்  நேரம்  அம்மையும் மற்றவர்களும்  வந்து விடுவார்கள். சொளகு, முறம்   இவைகளில் அப்பளங்களும், வேஷ்டியில் மடித்து வடாம் வற்றல் களும் கீழே  இறங்க,
நாங்களும் களக்காட்டம்மையோடு   வீட்டுக்கு வந்துவிடுவோம்.  ஒருவரும் அவரவர் வீட்டுக்குப்  போகமாட்டோம்.

அம்மை கையால்  வேகவைத்த நேந்திரம் பழம், புட்டு எல்லாம் கிடைக்கும். குறைந்த வெளிச்சமே இருக்கும் சமையல் அறையில் கிட்டத்தட்ட 10 குழந்தைகளுக்கு  பசி தணித்துவிடுவார்.

அந்த வெள்ளைச் சுருட்டமுடியும் ,கழுத்தின் அடியில் பம்மென்று  முடியப்பட்ட  கூ ந்தலும் வெகு அழகாக இருக்கும்.

நிதானமாகக் குளித்து குருவாயூரப்பன் படைத்து முன் விளக்கேற்றி. வணங்கும் பொது நாங்கள் வெளியே விளையாடப்  போவோம்.

இரவு இந்தப் பாட்டி வீட்டு முற்றத்தில்  அனைவருக்கும்
பெரிய கற்சட்டியில்  பிசையப்  பட்ட குழம்பு சாதமும்  சுட்ட அப்பளமும் உண்டு.
அது மாயமான வுடன் கெட்டி மோர் விட்டுப் பிசைந்த சாதம்
மாவடு, சாறு என்று தனித்தனியாக வாழைப்பூ  இதழில்
பாட்டி கொடுப்பார். அமிர்தமான கோடை நாட்கள்.

ஒருநாள் மதியம் அனைவருக்கும்  உணவு கொடுத்துவிட்டு
தலைக் கோசரக் கட்டையில் ஈரத்தலையை உலர்த்தியபடி இருந்த   அம்மைக்கு, நெஞ்சுக்குத்தும் வழியும். முதல் நாள் அப்பள மாவு இடிக்கும் போதே  நிறைய வியர்த்துக் கொட்டியதாம் .
 உடனே  ஆச்சார்யா டாக்டர் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று  ஜிஹெச்சிலும் சேர்த்தாச்சு.

எங்களுக்கெல்லாம் ஒரே பயமாக இருந்தது.
யாருக்கும் ஒன்றும்   செய்யத் தோன்றவில்லை.

ஆனால் நல்ல வேலையாக அம்மைக்கு ஒன்றும் ஆகவில்லை.  20 நாட்கள் கழித்து வீட்டுக்கு ஆம்புலன்சில் வந்துவிட்டார்.
பழைய குண்டுக்கு காட்டுது தேகம் மெலிந்து
 களைப்புடன் வந்தவர் முகத்தில் சிரிப்பு மட்டும் மாறவில்லை.
நாங்களும் அவரோட அதிகமாகப் பேச முடியவில்லை.

தான் சூளைக்குத் திரும்புவதாகவும்,களக்காட்டுக்கே
  ரயிலில்  சென்று விடுவதாகவும் பாட்டியிடம் சொன்னாராம்.

அதற்குள்  எங்கள் விடுமுறை நாட்களும் முடிந்ததால்.
நாங்களும் கிளம்பினோம்.
களக்காட்டம்மையைப் பிறகு பார்க்கவில்லை.

நான்கைந்து ஆண்டுகளில் என் திருமணம் நிச்சயிக்கப்பட்டபோது அவருக்கும் கடிதம் எழுதி போட்டேன்.
ஆசைகளுடன் 25 ரூபாய்ப் பணமும் மணி ஆர்டரில் வந்தது.




அஞ்சலி நம் ஜானகி அம்மாவுக்கு.

வல்லிசிம்ஹன் வாழ்வின் பொன்னான தருணங்களுக்குச் சொந்தமானவர்கள் இசைக்கலைஞர்கள். சுசீலா அம்மா, லீலா அம்மா, ஜானகி அம்மா,ஜிக்கி , ஜமுனா ராணி, குழந...