Showing posts with label குழந்தைகளும் மலர்களும். Show all posts
Showing posts with label குழந்தைகளும் மலர்களும். Show all posts

Saturday, August 04, 2012

இரு மலர்கள்

நேற்றுப்
பூத்தது ஒன்று.
இன்று மலர்ந்தது ஒன்று.

கடந்த இரண்டு மாதங்களாகச் செடிகளை  நிறையக் கவனிக்கச்  செய்த சிட்டுகள் எங்கள் பேத்திகள்..
ஒரு  ஒரு செடிகளாக ஆராய்ந்து  மலர்களை செடிக்கு நோகாமல் பறித்து
இதை  அப்படியே உம்மாச்சிக்க வைக்காமல்  ஒரு கிண்ணத்தில் 
வாட்டர் விட்டு வை பாட்டி.
அப்போ   மூணு நாளுக்கு வாடாமல் இருக்கும்.
மஞ்சள் பூ,செம்பருத்தி,மாதத்துக்கு ஏழு பூக்கள் தவறாமல் கொடுக்கும் அடுக்கு மல்லி, ,டெம்பிள் ட்ரீ பூக்கள், மகிழம்பூக்கள் எதையும் விட்டு வைப்பதில்லை.

ஆனால் ஒன்று தலையில் வைத்துக் கொள்ள இருவருக்கும் அனுமதி இல்லை.

உம்மாச்சி பக்கத்திலியே இருக்கட்டும் பாட்டி. தே வில் பி மோர் ஹாப்பி:)

குழந்தைகளே இந்தத் தளிர் மென்மை எப்போதும்   உங்களிடம் இருக்கட்டும்.


எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Posted by Picasa

கோவிந்தா கோவிந்தா சரணம்.

வல்லிசிம்ஹன் எல்லோரும் நலமுடன் வாழ வேண்டும். திருப்பதியில் ஏன் 'கோவிந்தா... கோவிந்தா...' என்று விண்ணதிர முழங்குகிறார்கள் தெரியுமா? ஶ...