Showing posts with label சங்கீத ஸ்வரங்கள் 2. Show all posts
Showing posts with label சங்கீத ஸ்வரங்கள் 2. Show all posts

Tuesday, October 08, 2019

சங்கீத ஸ்வரங்கள் 2

வல்லிசிம்ஹன்

எல்லோரும்  வளமாக  வாழ வேண்டும் 

சங்கீத ஸ்வரங்கள்  2


இரண்டு நாட்கள் பயிற்சியிலும்  சிறு தூக்கத்திலும் சென்றது.
ஹரன்,மஹி இருவருக்கும்  அமெரிக்க சூழல் 

பொருந்த அந்த நாட்கள் தேவைப்பட்டன. சிபா இயக்கம் அனைத்து இசைக்கலைஞர்களை யம் அரவணைத்து நிகழ்ச்சிகளைத் தொகுத்திருந்தது.

     உள்ளுர்க்  கலைஞர்கள் ஒரு நேரம், இந்தியக் கலைஞர்கள் , பெரிதாக  வளர்ந்துவிட்ட  பிரபலங்கள் என்று வித விதமாக 
கச்சேரிகள் தொடர்ந்து கொண்டிருந்தன .
LA TO SFO     வந்தடைந்த குழுவில்  மஹியுடன்,
பரணிகுமார், அவன் தங்கை  மானசி  இருந்தனர்.

மானசி , அமெரிக்க வளமையுடன், மிக அமைதியான குணத்துடன் எல்லோரையும் ஈர்க்கும் பாங்கு கொண்ட  மங்கையாக இருந்தது அவளது நடனத்தை  மிகவும்  அலங்கரித்தது .
அவளது பெற்றோரும்  இசை,நடனக் கலைஞர்களாக 
இருந்தது ஒரு கூடுதல்  ஆதரவு.

நன்றாக அறியப்பட்ட நடனமணியாக  விளங்கினாள்.
சான்ப்ராசிஸ்க்கோ  கலை  அரங்கம் 

மிகுந்த கலை நயத்துடன்  அலங்கரிக்கப்பட்டு    விசாலமான மேடையில் 

நடனமாடுபவர்களுக்கு  இசைவாக அமைந்திருந்தது.


இசைக்கலைஞர்களுக்கும்   எதுவாக   Acoustics arrangement  அமர்க்களமாக 

அமைந்திருந்தது.





அனைவரும்   அந்த  நகரத்தின் முக்கிய பிரமுகர் வீட்டில் தங்க ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது . 
மிகப் பிரபலமான தெலுங்கு  தொழிலதிபர்.

எனக்கென்னவோ இந்த இடத்தில் மதன் பூ ர்  மஹாராஜா அரண்மனை நினைவுக்கு வந்தது.:)
மஹி,ஹரன் புதிய இடத்தில் மிக ஆனந்தமாக வளைய வந்தனர்.

இங்கேயே இருக்கலாம்  போல இருக்கு என்று 
சொன்னவனை மறுத்துப் பேசினாள்  மஹி. எல்லாமே ஒரு மேல்பூச்சு    போலத்  தோன்றுகிறது எனக்கு. 

என்றவளை மறுத்துப் பேசினான்  ஹரன் . உள்ளன்போடு தானே இருக்கிறார்கள்.

நாம் எடுத்துக் கொள்ளும் வகையில்  அது இருக்கும் என்றான்.
ம்ம்ம்.யூ  மீ பி ரைட்  என்று பேசியபடி அந்த வீட்டின் மெயின் ஹாலுக்கு வந்தார்கள்.
அங்கே சுருதி சேர்த்தாலும், தபலா மிருதங்க ஒலி யும், வயலின் 
தம்புரா  ,சலங்கை என்று பலவித   ஓசைகள்  கலந்து ஒலித்தன.


வீட்டின் உரிமையாளர் ,அவர்களின்  கலைநிகழ்ச்சியை ஏற்பாடு செய்யும் வெங்கட் 

மனைவியுடன் அங்கே இருந்தார்.
வாங்க வாங்க எல்லோரும் அவரவரது  திறமையை இங்கே அரங்கேற்றுங்கள் என்றதும்.
சிரிப்பலை படர்ந்தது.

முதன் முதலாக  பரணி புல்லாங்குழல் வாசிக்க, அப்பா மிருதங்கம் வாசிக்க, அம்மா பதம் பாட  மாநஸியின்  நடனம் ஆரம்பித்தது.



இனிமையான  திருமதி.எம்.எல்.வசந்தகுமாரியின் பாடலுக்கு எளிமையாக முத்திரைகளை நளினமாக அபிநயித்த மானசிக்கு 
கரகோஷம் எழுந்தது.

பரணியின் குழல் அனைவரையும் கட்டிப் போட்டது.

அடுத்து வந்த மஹி, தனக்கு மிகவும் பிடித்த ,  எம்.எஸ் அம்மாவின் "வானத்தின் மீது மயிலாடக் கண்டேன்" பாட, சுற்றி இருந்தவர்கள் சொக்கிப் போனார்கள்.

ஹரனின்   இறைவன் புகழ் பாடும்  பஜன்  அனைவரையும் 
மீண்டும் கேட்கத்  தோன்ற,,, மீண்டும் பாடினான். அவன் குரல் மகிமை அப்படி.




மானசி    ஹரன்   குரலில் மயங்கியே போனாள் .
ஹரன்   மனமும்  அவள் நடனத்தில் வெகுவாக லயித்ததை மஹி கவனித்துப் புன்னகை செய்தாள் .

அடுத்த நாள் வெவ்வேறு நேரங்களில் நடை 
பெறப்போகும்   தங்கள்   இசை,நடனப் பயிர்ச்சுக்குத் தயாராக எல்லோரும்  அவரவர்  அறைக்குச் சென்றார்கள்.

நாமும் காத்திருக்கலாம்.













  








விடுதலை எப்போது?

வல்லிசிம்ஹன்  அனைவருக்கும்   இனிய காலங்களுக்கான வாழ்த்துகள். நம்மை விடுவிக்க நாம் தான் முன்வரவேண்டும். இளமைக்காலங்களில்  கணவன், குழந்தைகள், ...