எல்லோரும் வளமாக வாழ வேண்டும்.
மூன்றாவதாகப்
பையன் உருவாகிக் கொண்டிருந்தான்.
திடீரென்று உடம்பு பூராவும் சிறு சிறு சிவந்த புள்ளிகளாக
வலியுடன் கூடிய கொப்பளங்கள்.
எதோ ஒரு பூச்சி கடித்திருக்கிறது. நாங்கள் குடியேறியிருந்த
வீடு மிகப் பெரிய நவீனமான அமைப்பு.
ஏதோ இத்தாலியன் வீட்டு அமைப்பைக் கொண்டது. முதலில் வரவேற்பறை. அதிலிருந்து படிகள் இறங்கும். 7 படிகள். அதன் முடிவில், மூன்று வாசலில் ஒன்று சமயலறை , சாப்பாட்டு அறை, மற்றொன்று தோட்டத்துக்குப் போகும் கதவு,
மார்ச் 1969 சேலத்திலிருந்து மாறி கோயம்பத்தூருக்கு வந்தோம். மூன்று வயது பாபுவும் ஒன்றரை வயது மகளும்
ஆடி ஓட நிறைய இடம் இருந்தது.
பழைய கதையை ஆரம்பித்து எங்கோ சுற்றி இதோ வந்து விட்டேன். அப்போது பெரிய தோட்டம் இருந்தது. குழந்தைகள் வ்ளையாடும் போது நானும் அவர்களோடு விளையாடுவேன். அந்த நேரம் ஏதோ ஒரு பூச்சி கடிக்க கைகள் உடம்பு முழுவதும்
சிவந்து அரிக்க ஆரம்பித்தது. சிங்கம் வந்ததும் (ராத்திரி 11 மணி)
பயந்து போய் நாம் சென்று வைத்தியரிடம் காண்பிக்கலாம். ரிஸ்க் வேண்டாம்னு ஆரம்பித்த உடன், அவரித் தூங்கச்
சொல்லிவிட்டு எப்பொழுதும் கையில் இருக்கும், பழனி விபூதியைப் பூசிக் கொண்டு தூங்கி விட்டேன்.
காலையில் என்னைப் பார்த்தவர் அசந்துவிட்டார்.
பசங்க இரண்டும் என்னை வினோதமாகப் பார்க்க
நானும் கண்ணாடியில் பார்த்துப் பயந்தேன்.
நால்வருமாக கம்பெனி வைத்தியரிடம் சென்றோம்.
அவர் பயப்பட ஒன்றும் இல்லை. மூன்று நாட்கள் உப்பு காரம் வேண்டாம். வெய்யில் வேந்டாம் என்று லிஸ்ட் கொடுத்து அவில் மாத்திரை எழுதிக் கொடுத்தார்.
கூடவே சிங்கத்துக்கு அவர் இட்ட கட்டளை,
அவில் மாத்திரை தூக்கம் வரும். நீங்க வீட்டில் இருப்பது நல்லது
என்று வேறு சொல்லி விட்டார். அப்படியே தன் தலையில்
பாரமே இறங்கி விட்ட மாதிரி ஒரு உணர்ச்சி அவர் முகத்தில்:)))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))
ஶ்ரீ ஸாயி சரணம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏



No comments:
Post a Comment